எச்சை ராஜாவின் தந்தை என்று சொல்லப்படும் ஹரிஹர சர்மா என்பவர் எழுதிய தமிழ்- சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் காஞ்சி விஜயேந்திரன் உட்கார்ந்திருந்தது ஒட்டுமொத்த தமிழ்மக்கள் மத்தியிலும் மிகப் பெரிய ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை ஓட்டுமொத்த தமிழர்களும், தமிழ்த்தாய்க்கு வந்தேறி பார்ப்பனக் கும்பலால் திட்டமிட்டு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதியாக, அவமானப்படுத்தும் செயலாக நினைத்து மனம் குமுறிக்கொண்டு இருக்கின்றார்கள். தமிழர்கள் தங்களின் உயிரினும் மேலாகக் கருதும் அவர்களின் தாய்மெழியை, அதன் வடிவான தமிழ்த்தாயை துச்சமென நினைத்து உதாசீனப்படுத்திய விஜயேந்திரனையும், அவனை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்திய எச்சை ராஜாவையும் இனியும் தமிழ்நாட்டில் நிம்மதியாக நடமாட விடலாமா, கூடாதா என ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மானமுள்ள தமிழனும் தன்னை பார்ப்பன எச்சை ராஜாவும், காஞ்சி விஜயேந்திரனும் செருப்பால் அடித்துவிட்டது போலவே உணர்கின்றார்கள். இதற்கு சரியான புத்தி புகட்டவில்லை என்றால் அது தமிழ்த்தாய்க்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகப் போய்விடும் என்று எண்ணி மனம் புழுங்குகின்றார்கள்.

vijayendran 560

தமிழ்நாட்டு மக்களின் பணத்தில் வயிறு வளர்க்கும் இந்த வந்தேறி பார்ப்பனக் கும்பல், தொடர்ச்சியாக தமிழர்களை 'சூத்திரர்கள் (பார்ப்பானின் வைப்பாட்டி மகன்)' என்றும், அவர்களது மொழியை 'நீச பாசை' என்றும் மிகவும் இழிவுபடுத்தியும் தரம்தாழ்த்தியும் அசிங்கப்படுத்தி வருகின்றது. தமிழர்கள் என்றுமே வாழ்க்கையில் தன்மானமுள்ளவர்களாக, சுயமரியாதை உள்ளவர்களாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக செயல்பட்டு வருகின்றது. தமிழன் கட்டிய கோயிலுக்குள் போய் உட்காந்துகொண்டு, தமிழில் பாடினால் கடவுளுக்கு கேட்காது என்று சொல்வதும், கடவுள் தீட்டாகிவிடுவார் என்று சொல்வதும், தமிழர்களை கருவறையில் நுழையவிடாமல் பார்ப்பன நீதிபதிகளின் துணையுடன் தடுப்பதும் இன்றும் நடந்து வருகின்றது. பார்ப்பனக் கும்பல் எப்படி தமிழர்களையும் தமிழ்மொழியையும் அசிங்கப்படுத்தினாலும் யாரும் கேட்பதற்கு வரமாட்டார்கள் என்ற தைரியம்தான் இவர்களை இப்படி எல்லாம் திட்டமிட்டு நமது மொழியையும், இனத்தையும் அசிங்கப்படுத்த வைக்கின்றது. ஆனால் இந்த முறை அப்படி தமிழ்மக்கள் மங்குனித்தனமாக இருக்கமாட்டார்கள் என்பதைத்தான் எச்சை ராஜாவுக்கு எதிராகவும், காஞ்சி விஜயேந்திரனுக்கு எதிராகவும் நடக்கும் போராட்டங்கள் தெரியப்படுத்துகின்றன. தமிழகமே கொந்தளித்துக் கொண்டு இருக்கின்றது.

தமிழ் இனத்தின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் மீட்டெடுக்க தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் பல்வேறு பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகள் களத்தில் இறங்கிவிட்டன. இன்னும் தமிழ் மக்களின் மான மரியாதையில், அவர்களின் கெளரவத்தில் கொஞ்சமாச்சும் அக்கறை உள்ள அனைத்து அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கின்றோம். அப்படி வராதவன் எல்லாம் சங்கரமடத்தின் கைக்கூலி என்பதையும், பார்ப்பனியத்தை நக்கிப் பிழைக்கும் நாய்கள் என்பதையும், தமிழினத் துரோகிகள் என்பதையும் இப்போது மிக எளிதாக மக்கள் கண்டுகொள்ளலாம். விஜயேந்திரனும், அவனை அழைத்துவந்த எச்சை ராஜாவும் திருவள்ளுவர் சிலைக்கு முன்னால் வந்து மண்டி போட்டு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் மனோன்மணீயம் சுந்தரனார் சமாதியில் வந்து சாஸ்டாங்கமாக விழுந்து, தான் செய்த செயலுக்கு கண்ணீர்விட்டு கதறி மன்னிப்பு கேட்க வேண்டும். இதைச் செய்யும் வரை மானமுள்ள தமிழ்மக்கள் இந்தப் பார்ப்பன வந்தேறிக் கும்பலுக்கு எதிராக தனது போராட்டத்தை இடைவிடாமல் நடத்துவார்கள்.

தேவதாசி ஆண்டாள் சன்னதிக்கு வைரமுத்து வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று 97 சதவீதமுள்ள திராவிடர்களுக்கு எதிராக 3 சதவீதம் உள்ள பார்ப்பனக் கும்பல் கட்டளை இடும் என்றால், நம்முடைய இனத்தையும், மொழியையும் கீழ்த்தரமாக எண்ணி அசிங்கப்படுத்திய இந்தப் பார்ப்பன எச்சை ராஜாவும், செக்ஸ் சாமியார் விஜயேந்திரனும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் கட்டளை இடுவது எந்த வகையிலும் தவறான செயலாகாது. அதுவும் “காஞ்சி பீடாதிபதி கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அமர்ந்த நிலையில் தியானத்தில்தான் இருப்பார்” என்று திமிர்த்தனமாக அறிக்கைவிட்ட இந்தப் பார்ப்பன கொழுப்பெடுத்த கும்பலுக்கு எதிராகப் போராடுவது எந்தவகையிலும் தவறான செயலாக இருக்காது. மடங்கள் என்ற பெயரில் விபச்சாரம் செய்து கொண்டு இருக்கும் இந்த மானங்கெட்ட கும்பலுக்கே இவ்வளவு தைரியம் என்றால், பெரியார் ஊட்டிய தன்மானமும், சுயமரியாதையும் நாடி நரம்புகளில் இரண்டறக் கலந்திருக்கும் நமக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்பதை நாம் காட்டவேண்டும்.

rsyf beats vijayendran

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மண்ணில் நடந்து கொண்டிருந்த ஆரிய திராவிடப் போர் அதன் உச்சத்தை எட்டியிருக்கின்றது. தமிழர்களை குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும்,வேசிமகன்கள் என்றும் முத்திரைகுத்தி அவர்களை பார்ப்பனக் கடவுள்களின் பக்தர்களாக மாற்றி, அவர்களின் செல்வங்களை எல்லாம் கொள்ளையிட்டு, இன்றளவும் உழைக்காமல் திருடித் தின்னும் இந்தக் கும்பலுக்கு சரியான புத்திபுகட்டும் நேரம் வந்துவிட்டது. தமிழ் மொழியை அழிக்க நினைத்த ஆரிய சமஸ்கிருதம் கடைசியில் செத்து சுடுகாட்டிற்குப் போனது. அதனால் தான், "ஆரியம் போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!" என்று மனோன்மணீயம் சுந்தரனார் அவர்கள் பாட்டெழுதினார். அந்த ஆத்திரம்தான் இந்தப் பார்ப்பன கிரிமினலை எழுந்து நிற்கவிடாமல் செய்திருக்கின்றது. தேசிய கீதத்திற்கு எழுந்து நின்ற கால்கள் தனக்கு சோறு போட்டு உயிர்வாழ அனுமதித்த மண்ணின் மொழிக்கு எழுந்து நிற்க மறுத்து அதை உதாசினப்படுத்துகின்றது என்று சொன்னால், அந்தக் கால்கள் தமிழ்நாட்டு மண்ணில் அதுவும் பெரியார் மண்ணில் நிம்மதியாக நடமாட விடலாமா என்பதை தமிழ்மொழியின் மீதும், தமிழர்கள் மீதும் பேரன்பு கொண்டிருக்கும் தன்மானமும், சுயமரியாதையும் உள்ள மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

சங்கர மடமும், கமலாலயமும் தமிழர்களின் அவமானச் சின்னம், சாதிய சனாதன தர்மத்தின் குறியீடு. அதனோடு தொடர்புள்ள அனைவருமே தமிழின விரோதிகள் என்பதை இப்போது மக்கள் பட்டவர்த்தனமாக தெரிந்துகொண்டு இருக்கின்றார்கள். இந்தக் கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கும் வரை தமிழர்கள் அவமானப்படுத்தப்படுவதும் சிறுமைப்படுத்தப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கும். தமிழர்களையும், தமிழ்மொழியையும் அவமானப்படுத்துவது என்பது அவர்களின் டிஎன்ஏவிலேயே இருக்கும் குணங்களில் ஒன்று. “பார்ப்பனர்களுக்கு சாஸ்திரப்படி எந்தவிதமான அதர்மமும், குற்றமும் செய்ய உரிமை உண்டு என்றாலும், அது பாவமாகவோ, குற்றமாகவோ கருதப்பட மாட்டாது என்று எழுதி வைத்துத்துக் கொண்டு உள்ளார்கள். இதன் காரணமாகவேதான் பார்ப்பனர்களை குற்றப் பரம்பரையினர் என்று கூறி வருகின்றேன்” என்று பெரியார் சொன்னார்.

தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்பது சங்கர மடத்தின் மரபல்ல என்று இப்போதும் பார்ப்பனக் கும்பல் சொல்வதில் இருந்து இதை நாம் புரிந்துகொள்ளலாம். அவன் மடத்தை விபச்சார விடுதியாக மாற்றினாலும், மடத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் வல்லுறவு கொண்டாலும், கூலிப்படை வைத்து கொலை செய்தாலும் தமிழர்கள் தங்களின் உயிரினும் மேலாகக் கருதும் தமிழ் மொழியை கொச்சைப்படுத்தினாலும், இதை எல்லாம் செய்துவிட்டு அதை நியாயப்படுத்த அவனது சாஸ்திரம் அவனுக்கு அதிகாரம் வழங்கி இருக்கின்றது. இதை இப்படியே அனுமதித்தால் நாளை எச்சை ராஜாவும், விஜயேந்திரனும், இன்னும் தமிழ்நாட்டில் உள்ள விஷ நாக்குப் பார்ப்பான்களும் தமிழர்கள் முகத்தில் காறி உமிழ மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இதை இந்தக் கும்பலை தமிழர்கள் என்று சொல்லி சொம்பு தூக்கும் தமிழ்த் தேசியவாதிகளும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளும் பார்ப்பான் தமிழனாக முடியாது. ஒட்டு மொத்த தமிழகமும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய நேரம் இது. நிச்சயம் தன்மானமும், சுயமரியாதையும் உள்ள தமிழர்கள் இதைச் செய்வார்கள் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.

- செ.கார்கி

Pin It