இருக்கைகள் தேடியலையும் இதயம்
யாருமற்ற இருக்கையொன்றில் அமரும்
சன்னல்கள் வழி
உலகில் பிரவேசிக்கும் கணமொன்றில்
பக்கத்து இருக்கை நிரப்பப்படும்.

நெடுஞ்சாலைகளில்
கைநீட்டி அழைக்கும் குழந்தைகளென
நிறுத்தங்கள்.

விருப்பப்பட்டு இறங்குவதும்
தனக்கான குழந்தையைத் தேடும் தவிப்புமாய்
கடந்துகொண்டே இருக்கின்றன
நிறுத்தங்கள்.

யாராவது நிரப்புகிறார்கள்
பக்கத்து இருக்கைகளை
இன்று நிரப்பியவர்
நாளை நிரப்பாமல் போகலாம்.

யாரேனும் நிரப்பக்கூடும்
நாளை மறுநாள்
என் இருக்கையை.

- அதங்கோடு அனிஷ்குமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.