பேருந்தில் ஜன்னலோரத்தில்
அமர்ந்திருந்த அவள்
ஜன்னல் கம்பியில் கையை ஊன்றி
வெளிப்பக்கமாகவே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பக்கத்தில் அமர்ந்திருந்த
கணவனிடமிருந்து ஏனோ
விலகியே அமர்ந்திருந்தாள்.
கணவனிடம் ஆசையாக பேசிவர
எவ்வளவோ... இருக்கும் பயணத்தில்
எதுவும் பேசாது
மௌனமாக வெளிப்பக்கமே
பார்த்து வரும் அவளும்...
ஜன்னலிலிருந்து அவள் கொஞ்சம்
நகர்ந்து கையை எடுக்கும்
தருணத்திற்காக
என் ஜன்னல் கண்ணாடியை
நகர்த்த முடியாத அவஸ்தையில்
புழுக்கமாக நானுமாக...
தொலை தூரப் பயணம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.