விளக்குப் பூச்சிகளை
விழுங்கிப் பிழைக்கும்
பல்லிகளின் நடுவே
வழி தொலைத்த
வண்ணத்துப் பூச்சியன்று
கடக்க எத்தனிக்கையில்
விழிகளை விரிய வைக்கும்
அதன் அழகின் திசையில்
பல்லிகளின் நாக்குகள் நீண்டன.

தப்பித்தலின் கணமொன்றில்
வண்ணத்துப்பூச்சியின்
வானத்தில் ரத்தம் தெறித்தது.

கிழிந்து கிடந்த சேலையை ஒத்திருந்த
மிஞ்சிக் கிடந்த
வண்ணத்துப்பூச்சியின் சிதறல்களைச்
சுமந்து திரிகின்றன எறும்புகள்.

- அதங்கோடு அனிஷ்குமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.