மூத்திர வாடையைவிட
மோசமாய் இருக்கிறது
மருந்து வாடை

காற்றுகூட ரத்த முலாம்
பூசியசைகிறது

அவசரப்பிரிவுக்கு
வெளியே காத்திருக்க
வைத்திருக்கிறது இத்தனை இதயத்தின்
துடிப்பையும் ஒரே அளவில் நிறுத்தி
உள்ளே போராடுகிற இதயம்...

கதவு திறக்கையில்
காரை பெயர்கிறது அதிர்வில்
மனச்சுவர்களில்...

எல்லாம் முடிந்து
மார்ச்சுவரியில் அறுபடும்
தருணங்களில் டீக்கடைகளில்
வாயுறுஞ்சும் வெப்பத்தில்
எல்லாம் அடங்கும்
எல்லாம் அடக்கி...

0

வலிக்கையில்தான்
வழி பிறக்கிறது
எனும் ஆறுதல்களில்
எல்லா வலிகளையும்
ஏற்று ரணப்படுத்துகிற
வழியே சாத்தியப்பட்ட
வாழ்க்கையில்தான்
நீயும் வழி மாறிப்
போகிறாய்...

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.