சேறு நிறைந்து அடர்பாசி
வீச்சமெடுக்கும் குட்டைக்குக்
குருவாக தவளையொன்றைக்
கொண்டன குஞ்சுமீன்கள்.
 
எல்லையின்றி பிரவாகம்
உய்ய ஓடும் நதியின்
போக்கில் கடலில் கலந்தால்
மோட்ச விருட்சங்கள்
தென்படுமென விளிம்பிற்று குரு.
 
கரை உடைத்து நதியின்
திசை நோக்கும் பயணத்தில்
சுருண்டு சாகும் குஞ்சுகள்
மீது வெறுப்பை உமிழ்ந்து
பெருக்கிக் கொண்டன
பயண உந்துதலை.
 
குஞ்சுகளை உள்ளிளுத்துக்
கொண்ட நதி பாறை
பவளமீது இடையறாத
விபத்துக்குள்ளாக்கியது
எஞ்சிய சிலவற்றை
ஆறு அரவணைத்தது.
 
ஓட்டத்தின் இறுதியில்
மீசை முளைத்த விறாலும்
பருவமெய்திய பெட்டை
மீன்களும் இழந்த
எண்ணிக்கை மீட்டெடுக்க
இணைகளைத் தேடி
கடல் பிரவாகம் செய்து
கொள்ளத் தொடங்கின
 
எல்லையில்லா கடலின்
முகத்துவாரம் வாய் பிளந்து
அயரும் திமிங்கலங்களின்
கோரைப்பற்களுக்கு இரைகளைப்
பிடித்துக் கொண்டிருந்தது
குட்டையின் குரு
மன்னனாக முடி தறித்தது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.