தொடர்புடைய படைப்புகள்

நானும் எனது நண்பரும் சென்னை திருவான்மியூரில் நடந்த ஹிந்து ஆன்மிக மற்றும் சமுக பணிகளின் கண்காட்சிக்கு (Hindu spiritual and service fair 2009) சென்றிருந்தோம்.

நுழைவுவாயிலில் வித்தியா மந்திர் பள்ளிக் குழந்தைகளின் அழகிய வரவேற்புடன் கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்தோம். தினமலர் தனது ஆன்மிக மலர் சிறப்பு இதழ் வெளியீடுகளை வருகையாளர்களுக்கு இலவசமாய் தந்துகொண்டிருந்தது. அருகே பிரிட்டானியா(Britannia) நிறுவன‌ம் இலவசமாக குளிர் பான‌ங்களும், பிஸ்கட்சும் கொடுத்துக் கொண்டிருந்தது. பரத நாட்டிய நெளிவுடன் கரம் கூப்பி வருகையாளர்களுக்கு சந்தன‌மும், குங்குமமும் கொடுத்துக் கொண்டிருந்தனர் இரண்டு இளைஞர்கள்.

முதல் காட்சியகதில் ஒன்று முதல் ஏழு வகுப்பு படிக்கும் சிறு குழந்தைகளுக்கான நன்னெறி புத்தகங்களும் மற்றும் ஆசிரியர் கையேடுகளும் ஆங்கிலத்திலும், தமிழிலும் பரப்பி வைக்கப்பட்டு, பாடத்திட்டங்கள் பற்றிய விளக்கங்களை வருகையாளர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர்.

ஹிந்து கடவுளர்கள் பற்றியும், ஹிந்து, பாரத கலாச்சாரப் பெருமை பற்றியும் குழந்தைகளுக்கான நன்னெறி பாடத்திட்டங்கள் எந்தெந்த பள்ளிகளில் நடைமுறையில் உள்ளன போன்ற விளக்கங்கள் தர‌ப்பட்டிருந்த‌து. 20 நாட்களில் ஸமஸ்கிருதம் இலவசமாக கற்றுத் தருவதற்கான காட்சியகம் ஒன்று விறுவிறுப்பாக முன்பதிவு செய்து கொண்டிருந்தது. 

குழந்தைகளுக்கான பாடத்திட்டங்கள் எனத் தொடங்கி பல்வேறு சேவை அமைப்புகளின் அரும் பணிகள், கல்விப் பணி, பெண்கள் அமைப்புகள், மதச்சடங்குகள், செத்துப் போனவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய காரியம் செய்யும் அமைப்புகள் என பல அமைப்புகள், மடங்கள், ஸமிதிகள், பத்திரிக்கைகள், திருக்கோயில்கள், பல்வேறு ஆன்மிக குருக்களின் ஆன்மீக சொற்பொழிவுகள், போதனைகள் என இந்து அமைப்புகளின் பொதுவான எல்லா முரண்களையும் கடந்து நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் காட்சியகம் வைத்திருந்தனர்.

பல 'ஆனந்தா' சாமிகளின் தொடற்சொற்பொழிவுகளுடன், உலகலாவிய ஆசிரமங்களின் சேவைகளும் காட்சிகளாக வைக்கப்பட்டிருந்தது. இந்து முண்ணனி, பஜ்ரங்தள், சிவசேனா, ராம் சேனா, ஆர்.எஸ்.எஸ் போன்ற தீவிரவாத நம்பிக்கை அமைப்பினர்களின் காட்சியகம் எதுவும் இல்லை.

ஆர்.எஸ்.எஸ்- ன் பெண்கள் பிரிவின் காட்சியகத்தில் வரலாற்றுச் சுவடுகளின் இந்து பதிப்புகள் ஹிந்து ராஜ்ஜியத்தின் ஆதாரங்களாக எடுத்து வைக்கப்பட்டிருந்தன.

பர்மா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை என எல்லைக் கோடுகள் நீண்ட அகண்ட பாரத்தின் வரைபடங்கள், அந்த நாடுகளின் பழங்காலப் பெயர்கள், முகலாயர்களினால் எத்தனை கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது என்ற ஒரு நீண்ட பட்டியல், அதை மீட்டெடுப்பதற்கான ஆயத்தங்கள், திட்ட வரைவுகளின் விபரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. சென்னையில் இன்னும் எத்தனை கோயில்கள் மீட்டெடுக்க வேண்டும் என்ற பட்டியலில் சாந்தோம் சர்ச் இருந்தது கண்டு கொஞ்சம் கலக்கம் வந்தது. அது ஒரு காலத்தில் மாரியம்மன் கோயிலாக இருந்தது என்ற இந்து நம்பிக்கை ஆதாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆர்.எஸ்.எஸ்-ன் பெண்கள் சமிதியின் ஸாகா போர்ப் பயிற்சியின் விளக்கத்தில் என்ன என்ன தற்காப்பு கலைகள் கற்றுத் தர‌ப்படுகிறது, தமிழ்நாட்டில் நடந்த வால், சிலம்பம் ஸாகா பயிற்சிகள் பற்றியும் அதில் கலந்து கொள்ளும் ஆர்வமிக்க பெண்கள், மாணவிகள் பற்றியும் வருகை புரிவோரின் இந்து உணர்வுகளைத் தூண்டும் விதமாக இளம் பெண்கள் மூலமாக விளக்கம் தரப்பட்டது. மத மாற்றத்தின் கொடுரத்தைப் பற்றியும் அதனை முறியடிக்க வேண்டிய முன் திட்டங்கள் பற்றியும் விளக்கப்பட்டது.

இஸ்லாமிய, கிருஸ்துவ, நாத்திக எதிப்பும், காழ்ப்புணர்ச்சியும் ஒவ்வொரு காட்சியகத்திலும் காண முடிந்தது. இந்த மாநாட்டிற்கு பொதுமக்களிடம் ஆர்வம் இல்லாவிட்டலும் புகழ் பெற்ற முண்ணனி திரைப்பட நட்சத்திரங்களின் கூட்டங்களைப் பார்க்க முடிந்தது. இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பர்மா, நேபாளம் ஆகிய நிலப்பரப்புகளை உள்ளடக்கிய அகண்ட பாரத இந்து ராஜ்ஜியம் காணப்படுமாம் அதற்காக இங்கு உள்ள எல்லா மக்களும் மதங்களைக் கடந்து இந்துக்களாக வாழ வேண்டும், இராமனை வணங்கி ஒவ்வொருவரும் இராமனாகவே வாழ வேண்டும் என்று உணர்வுடன் இந்த மாநாட்டு அரங்கினை விட்டு வெளியில் வரும்படியாக அமைக்கப்பட்டிருந்தது.

 இந்த மாநாட்டினை நடத்தியவர்கள் GFCH (Global foundation for civilization ) என்ற அமைப்பினர். இதன் தொடக்க விழா கடந்த 2008 ஆம் ஆண்டு, ஜனவரி 22 ல் நடத்தப்பட்டது. இது புத்த மதம், இஸ்லாமிய மதத்தலைவர்கள், கிருஸ்துவ தலைவர்கள், இந்து தலைவர்கள் என எல்லா மதத்தின் ஆன்மிகத் தலைவர்களின் சமய நட்புறவு சங்கமமாக தொடங்கப் பெற்றது. முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கூட கலந்து கொண்டிருந்தார். ஆனால் அதன் அப்பட்டமான உள் நோக்கம் தெளிவான தேசிய நீரோட்டத்தில் இந்துத்துவா எனும் நச்சினை கலக்கும் முயற்சியேயன்றி வேறொன்றும் இல்லை.

கடந்து வந்த ஒரு காட்சியகத்தில் கூட விஞ்ஞானத்துடன், சம காலத்துடன் ஒத்துப் போகின்ற விசயங்கள் ஒன்று கூட இல்லை. ஒரு காட்சியகத்திலும் சமய நல்லுறவு சொல்லப்படுவது மாதிரி எந்த விசயமும் இல்லை.

சமுக,பொருளாதார தத்துவரீதியான விசயங்கள் ஒன்றுகூட இல்லை. எங்கு திரும்பினாலும் பார்ப்பன‌ வாடை, கற்காலத்திற்கும் முற்காலத்திற்கும் கூட்டிச் சென்றிருந்தது. வரலாற்றுச் சான்றுகள், விஞ்ஞானச் சான்றுகளுக்குப் பதில், பெரும்பாண்மையோரின் நம்பிக்கை என்று நம்பிக்கைவாதங்களை மட்டுமே மேற்கோள் காட்டியது. இந்த நம்பிகைகள் எல்லாம் பார்ப்பனர்களின் உற்பத்தியே. அதைத் தான் பெரும்பான்மையினரின் நம்பிக்கை என்ற உறையிட்டு பரப்பி வருகின்றனர்.

இந்த நம்பிக்கைவாதங்கள் எல்லாத்தரப்பு மக்களிடமும் நேரடியான, மறைமுக பாதிப்புகளை உண்டு பண்ணுவது இந்திய துணைக்கண்டத்தில் பார்ப்பன ஆரிய ராஜ்ஜியம் காண்பதற்கான ஒரு வேலைத்திட்டமே.

வருணாசிரம கட்டமைப்புகள், சாதிய பேதங்கள், குலம் கோத்திர வர்க்கப் பிரிவுகள், தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என சாதியத்தின் பெயரால் மக்களைப் பிரித்து ஒதுக்கிய இதே பார்ப்பணர்கள் 'இந்து' எனும் மாய நூல் கொண்டு தேவைக்கேற்ப எல்லா இந்துக்களையும் இணைப்பது என்பது ராஜதந்திரமே. போதைக்கு அடிமையானவன் கூட போதை தெளிந்தவுடன், சுயநினைவு கொண்டு எதிரியின் பிடியிலிருந்து தப்பிக்க நினைப்பான். ஆனால் எந்த ஆரிய பார்ப்பான் தன் சமுக மனிதர்கள் மீது சாதிய அவமான அடையாளம் இட்டு தன் நிழல் கூட தனக்குப் பகையென சுயமரியாதையை இழக்க வைத்தானோ அவன் காலடியில் மிதிபடுவது பெரும் புண்ணியமாகக் கருதும் அவலம்.

தன் தேவைக்கேற்ப இணைப்பதும், அறுத்து ஒதுக்குவதும் தான் உண்மையில் “ஆரிய வித்தை”.

மானத்துடனும், வீரத்துடனும் வாழ்ந்து வந்த நம் மண்ணின் சொந்தங்களை மதத்தின் மயக்கம் கொடுத்து, சாதிய வண்ணம் பூசி சூழ்ச்சி செய்து நம் சகோதர‌ர்களுக்கிடையே பகை வளர்த்து கடைசியாய் ஆரியனின் காலிலே விழவைத்து விட்டான்.

இந்து மாநாட்டில் நாடார் சமுக அமைப்பும் தன் பங்கிற்கு ஒரு காட்சியகம் வைத்து பார்ப்பனர்களின் நம்பிக்கைவாதத்திற்கு தனது பங்கினை செய்தது. ஒரு சமுகத்தினை தொட்டால் தீட்டு என்று சொன்ன பார்ப்பனன், இதே நாடர் சமுக மக்களை பார்த்தாலே தீட்டு என ஒதுக்கி வைத்ததை ஆரிய போதை மறக்கச் செய்துவிட்டது.

கல்விக் கண் திறந்த கர்ம வீரரை உயிருடன் கொளுத்த சதி செய்த இந்த பார்ப்பன உயர் காவிகளிடம் எப்படி இவர்கள் உறவு கொள்ளமுடிகிறது? ஆரிய தந்திரம் அதன் வேலையை திட்டமிட்டபடி செய்கிறது.

கொஞ்சம் வசதி உள்ள குப்பனும், சுப்பனும் கருப்பனும் தான் யார் என்பதை மறந்து ஒரு விசுவாசமுள்ள அடிமையாய் ஆரிய பார்ப்பனுக்கு சேவை செய்வதில் பெருமை கொள்கிறான். மொத்ததில் அவன் ஒரு பூணூல் போடாத பார்ப்பானாய் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறான்.

ஆரிய மூடப்பழக்கங்களையும், பார்ப்பனிய‌ சாதிகட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளையும் மறுத்த வரலாற்று நாயகர்களை எல்லாம் தேசியவாதம் என்ற பெயரால் இந்துத்துவாவின் நாயகர்களாக்கும் முயற்சியை இந்துத்துவா அமைப்பினர் காலம் காலமாக செய்து வருகின்றனர்.

வாழ்நாள் முழுவதும் தீவிர மத எதிர்ப்பாளராக இருந்து தனது மரண காரியங்களில் கூட மதச் சடங்குகள் இருப்பதை விரும்பாத மாவீரன் பகத்சிங், சுதந்திரத்திற்கான முன்னோடி நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், ஏறத்தாழ‌ எல்லா தேசியத் தலைவர்களையும் ஹிந்துத்துவத்தின் காவி இளைஞர்களுக்கான அடையாளமாக்கிவிட்டனர். ஆர்.எஸ்.எஸ்ன் உறுப்பினர் அடையாள அட்டை மட்டும் தான் இல்லை, ஆனால் அவர்களின் புகைப்படங்களை எல்லாம் மிகவும் தாராள‌மாக அகண்ட பாரத கன‌வுக்குப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

தேசப் பக்தியாளர்களை மதப் பற்றாளர்களாகவும், சுயராஜ்யத்திற்காகப் போராடியவர்களை எல்லாம் ராம ராஜ்ஜியத்தின் நாயகர்களாகவும் காண்பிப்பது எத்தனை அராஜகம். தன் வாழ்நாள் முழுவதும் சாதி எதிர்ப்புக்காகவும் தலித் மக்களின் விடுதலைக்காவும் பார்ப்பனிய இந்துத்துவத்தை எதிர்த்துப் போராடிய, சாதியக் கொடுமை தாங்காமல் தன்னுடன் சேர்த்து பல இலட்சம் தலித்களை இந்து மதத்தை விட்டு வெளியேறச் சொன்ன அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படங்களையும் இந்து ஆன்மிக மாநாட்டு காட்சியகத்தில் வைத்திருந்தது தான் மிகவும் கொடுமை.

பொதுக் குள‌ங்களில் நாய், ஆடு மாடுகள் கூட தாகத்திற்காக தண்ணீர் குடிக்கலாம், ஆனால் ஒரு தலித் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொல்லும் இந்தப் பார்ப்பனர்கள் வாழும் நாட்டில் நான் ஒரு மிருகமாக பிறந்திருக்கக் கூடாதா என புலம்பிய அண்ணல் அம்பேத்கரின் படங்கள் இந்துத்துவதின் அடையாளமாக்கப்படுகிறது.

ஒரு தலித் பஞ்சாயத்து தலைவி சுதங்திர தினத்தில் தேசிய கொடியேற்றினாள் என்ற ஒரே காரணத்துக்காக அந்த ஊரின் பல உயர் ஜாதி இந்துக்களால் கொடூரமாக பாலியன் வன்புணர்வுக்கு ஆளாக்கப்ப‌டுகிறாள்.

தேசப் பற்று என்பது உயர் ஜாதியினருக்கு மட்டும் இருக்க வேண்டியதாம். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு உயர் சாதிக்காரன் எவனும் அப்படி செய்திருக்க வாய்ப்பு இல்லை எனத் தீர்ப்பளித்த சாதியப் பார்ப்பனர்கள் வாழும் நாட்டில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தலித் ஒருவனின் காலடி பட்டால் அந்த இடமே அசுத்தமாகிவிட்டது என ஹோமம் செய்யும் பார்ப்பனர்களும் இந்த நூற்றாண்டிலும் தலித்தாக பிறந்த காரணத்திற்காகவே, திண்ணியத்தில் மலம் திண்ண வைத்த கொடூர சாதிய வர்க்கவேறுபாடுகளும் நிறைந்த ஒரு நாட்டில் தலித் மக்களையும் தங்களின் ராம ராஜ்ய கன‌வுக்காக இணைக்கிறார்கள்.

‘இந்த உலகை ஆளப்பிறந்தவன் ஆரியன்' என்ற உலகப் பேரழிவாளன் ஹிட்லரின் இரத்த வாரிசுகள் தான் இன்று நம் நாட்டிலும் அகண்ட பாரத, இராம இராஜ்ஜிய வேலைத் திட்டங்களுடன் சதி செய்து வருகின்றனர். நாமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சதிகளுக்கு ஆளாகிவருகின்றோம்.

அதைத்தான் இன்று L.K அத்வானி(L.K Advaநி) "அடுத்த தேர்தலின்போது கட்சியின் நிலை என்னவாகுமோ என்பது போன்ற குறுகிய எண்ணங்கள் எங்களது திடமான கண்ணோட்டத்தை குலைக்காது. மாறாக நூறு வறுடங்களுக்குப் பிறகும், ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் ஒன்றுபட்ட அகண்ட பாரதமாக காணப்பட வேண்டும் என்ற கண்ணோட்டம் எங்களுடையது” என்று கூறுகின்றார்.

செயல் திட்டங்கள் என்றோ தீட்டப்பட்டுவிட்டது. அதை அடைய சதி வேலைகள் மட்டும் நடந்த வண்ண‌ம் உள்ளது. இன்னும் சம நிலை அடையாத தலித், இசுலாமிய மக்களை முழுமையாக அழித்துவிட துடிக்கின்றன‌ இந்த சங்க பரிவார அமைப்புகள்.

ஆரிய பார்ப்பன பண்டாரங்களின் சதிகள் எல்லைக்கோடுகளை தாண்டி இன்று பகுத்தறிவாளன் பெரியாரின் தேசத்தையையும் விட்டு வைக்கவில்லை. ஒரு காலத்தில் விந்தியமலையைத் தாண்டாத ஆரியம்தான் இன்று பெரியாரின் அரசியல், சமுதாய வாரிசுகளையும் விட்டு வைக்கவில்லை. எல்லாம் ஆரியமாகி விட்டது.

இன்று நேரடியாக ஆரியம் என்ற அலை தலைகாட்டாவிட்டாலும் அது அரசியல், கல்வி, பொருளாதார, மதச் சடங்குகள் என மக்களிடம் ஆழமாகப் பதிந்து விட்டது. நம்மையும் அறியாமல் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இன உணர்வினை மறந்து, ஆரியத்தின் சூழ்ச்சிகளுக்கு இரையாகின்றோம். இதில் நேரடியாக பாதிக்கபடுவது தலித்துகளும், இசுலாமியர்கள் மட்டுமே. எல்லா அரசியல் கட்சிகளாலும் நேரடியாகவே கூறுபோடப்படுவது இந்த இனங்கள் மட்டும் தான்.

தேர்தல் நேரங்களில் இதை நாம் நேரடியாகவே காணலாம். ஒன்றாய்ச் சேர்ந்தால் பெருங்கடலாகி இருக்கும். ஆனால் சிறுசிறு கால்வாய்கள் மூலமாய் எதிர் எதிராய் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கும் உதவாமல் வற‌ண்டு போய் கிடக்கிறது. பல நூறு ரப்பர் ஸ்டாம்ப் கட்சிகளாய் தேசிய, மாநிலக் கட்சிகளின் காலடியில் பணப்பெட்டி வாங்க நாய்போல கிடக்கிறார்கள் இந்த இரு இனங்களின் போலித் தலைவர்கள்.

தலித் அமைப்புகளுக்கும், இசுலாமியர்களுக்கும் பொதுவான எதிரிகள் இருந்தபோதும், அவைகள் அடித்துக் கொண்டு அழிந்துபோவது தன் சொந்த இன மக்களுடனே என்பது தான் மிகவும் வேதனையான விசயம். இந்த லட்சணத்தில் எப்படி சமுக விடுதலை வாங்க முடியும்?

சமுகத்தில் புறக்கணிக்கப்பட்டு, இன்றும் இரண்டாம் தர மக்களாய் வாழும் இந்த இரு இனங்களும் குழு அரசியல் புரிவதில் இருந்து விலகி ஒன்றாக இணையவிடாமல் தடுப்பது எது? அது நம் அறிவுக்கு புலப்படாத ஆரிய சூழ்ச்சிதான்.

அரசியல் வல்லுனர்களின் கணிப்பு, தேர்தலின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்கள் தலித்துகளும், இசுலாமியர்களும் தான் என்கிறது. இந்த சூத்திரஙகள் தெரிந்து கொண்டு காங்கிரசும், கம்யூணிஸ்டுகளும், இன்னும் மாநிலக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு இந்த இரு இனங்களையும் கூறு போட்டுக் கொண்டு கட்டி அணைக்கின்றன‌.

போதாக் குறைக்கு தேர்தலில் மரணத் தோல்வி அடைந்த‌ பி.ஜே.பியும் கூட இராகுல் காந்தி ஸ்டைலில் தலித் வீடுகளுக்கு விசிட் அடிப்பது, சாப்பிடுவது போன்ற புது யோசனைகளை தனது மனுதர்ம கொள்கைகளுக்கு மாறாக, தயங்கியபடி ஓட்டுப் பிச்சைக்காக செய்ய வேண்டியுள்ளது. இன்னும் ஒரு படி மேலே போய் வாழ்நாள் எதிரியான இசுலாமியர்களை பி.ஜே.பி எதிரியாகப் பார்க்கவில்லை என்றும் அறிக்கை விடும் நிலை உள்ளது.

ஆனாலும் வாங்கிய ஓட்டுகளுக்காவது இந்த இரு சமுக மக்களுக்கு ஏதாவது செய்தார்களா என்றால் எதுவும் இல்லை. மணி மண்டபம் கட்டுகிறேன், சிலைகள் வைத்து கவுரவிக்கிறோம், சாலைகளுக்குப் பெயர் வைக்கிறோம். அவ்வளவுதான். நாமும் திருப்தி கொள்கிறோம்.

ஈரோட்டுப் பள்ளியில் பகுத்தறிவு கற்றவர்களின் வீடுகளில் இன்று பார்ப்பன‌ உறவுகள். திராவிடம் பேசி ஏமாற்றியது நின்று போய், அரசியல் சதுரங்கத்தில் குடும்பக் காய் நகர்துவதில் முழு நேரம் செலவிடபடுகிறது.

தன் மரணம் வரைக்கும் தொடர்ந்து சாதிய, ஆரிய எதிர்ப்பு செய்தது மட்டுமல்லாமல் மரணத்திற்குப் பிறகும் திராவிடப் பிரச்சாரங்கள் தொடர உருவாக்கப்பட்ட தந்தை பெரியாரின் சொத்துகள் இன்று வாரிசுடமையாக்கும் முயற்சியில் இருப்பதால், யாருக்கும் பெரியாரின் கொள்கைளைப் பிரச்சாரம் செய்ய விருப்பம் இல்லை. அப்படி பெரியாரின் கொள்கைகள் பரவலாக்கினால் நாடு முழுவதும் தீவிர இளைஞர்கள் திராவிட கலகங்களுக்குள் வருவர், அப்படி வந்தால் கொஞ்ச நாளில் கேள்விகள் கேட்பார்கள், இத்தனை கோடி சொத்துகளை நாம் ஆள‌வே முடியாது என்பதால் பெரியாரின் கொள்கை பிரச்சாரங்களே வேண்டாம் என விட்டுவிட்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. சொத்துகளை காக்கும் பெரியார் இயக்கம் இனி சமுக உரிமைக்காக போராடவா போகிறது?.

கொஞ்சமாவது சமுக அக்கறை கொண்ட முற்போக்காளர்களுக்குள்ளே இப்பொழுது பெரும் பிள‌வுகள். புலி ஆதரவு, ஈழ எதிர்ப்பு, நக்சல் ஆதரவு ,எதிர்ப்பு, திராவிட ஆதரவு, எதிர்ப்பு, தமிழ்த் தேசிய ஆதரவு, எதிர்ப்பு என்ற கடுமையான வாதங்களுக்குள் சிக்கி.. மாறி, மாறி காரித் துப்பிக் கொள்வதிலேயே தங்களின் எழுத்துக்களையும், சிந்தனைகளையும் வீணடிக்கும் அவலம் இருக்கின்றது.

இவர்கள் மட்டும் தான் அக்கறை கொண்ட விசயஙகளில் பிரச்சனைகளின் அடிப்படையில், முரண்களை மறந்து ஒன்றிணைந்தால் எத்தனை மாற்றங்கள் காணலாம். ஆனால் சும்மா விடுமா ஆரிய விசம்? இணைய தளங்களிலும், ஊடகங்களிலும் முற்போக்காளர்கள் மத்தியில் நடக்கும் ஒவ்வொரு கருத்துப் பரிமாற்றங்களும், விவாதங்களும் கடைசியில் கடும் சண்டையிலும், தனி நபர் தாக்குதல்களிலும் மிகவும் தரம் கெட்டு ஒருவரையொருவர் தூற்றிக் கொள்வதிலும் தான் முடிகிறது. அங்கும் முகம் தெரியாத ஆரிய நாகம் ஒழிந்து இருக்கும்.

இப்படியே இன்னும் 100 ஆண்டுகள் கழிந்தாலும் தலித்துகளும், இசுலாமியர்களும் சமுக, பொருளாதார வாழ்வியலில் எந்த முன்னேற்றமும் காண முடியாமல் பின்தங்கியே இருக்கக் கூடிய அச்ச நிலை உள்ளது. உண்மையில் இந்த இரண்டு சமுகங்களும் இணைந்தால் ஆட்சி அதிகாரங்கள் மாறிவிடும், தலித் இசுலாமிய அரசியல் நாடாளும். ஆனால் ஆரியத்தின் கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் இது நடைபெறாமல் பார்த்துக் கொள்வார்கள்.

கல்வியும், பொருளாதாரமும் சமுக உரிமையும் இந்த இரு இனங்களுக்கும் தூரத்து கன‌வாக்கி வைப்பதின் மூலம் என்றுமே அடிமையினமாகவே வைத்திருக்க முடியும் என்ற ஆரிய மனுக் கொள்கை வீரியமுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இனிமேலும் குழு அரசியலினை நம்பி வீண் போவதை விட்டு, ஒவ்வொரு தலித், இசுலாமியர்களும் தங்களின் குழந்தைகளுக்கு தனது உயிரை கொடுத்தாவது மேலான கல்வியையும், சமுகக் கலாச்சாரத்தையும் அவர்களுக்கு கிடைக்கச் செய்வதால் மட்டுமே உண்மையான சமுக, பொருளாதார மாற்றங்களைக் காண முடியும். 

சாதிய, மதக் குழு அரசியலை தூரமாய்த் தள்ளி விட்டு, உண்மையில் பின் தங்கிய சமுக மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சியில் அர்ப்பணித்துப் போராடும் அமைப்புகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும். முற்போக்காளர்களும் பிரச்சனைகளின் அடிப்படையிலாவது இணைந்து இடைவெளியில்லா தொடர் கொள்கைப் போராட்டம் காணவேண்டும்.

பொதுவான எதிரியை அடையாளம் கண்டு தலித் இசுலாமியர்கள் இணைந்து நின்று போரடுவது காலத்தின் கட்டாயமாகும்.

- மால்கம் X இராசகம்பீரத்தான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

39 comments

39
ராஜசங்கர்
ஆரியர்களை, பார்பனர்களை திட்டுவது இருக்கும். கீற்றுவில் கொஞ்ச காலத்திற்கு முன்னால் ஒரு கட்டுரை வந்திருந்தது. கீழே அதன் சுட்டியை தருகிறேன்
http://www.keetru.com/puthiyakaatru/jul07/zaheer_raja.php

கட்டுரையாளர் மேற்கண்ட கட்டுரையை படித்து விட்டு பதில் சொல்லுவாரா?
உதாரணததிற்கு கொஞ்சம்

//அரபுத் தோற்று வாயிலிருந்து வந்த முஸ்லிம்களான சையத்துகள் ஷேக்குகள் அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண் அஜாமி முஸ்லிம் பெண்ணை மணந்து கொள்ளலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண் அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்கலாகாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன் ஜுலாஹா(அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இணப் பெண்ணை மணந்து கொள்ளலாம். ஆனால் அன்சாரி, ராயின், மன்சூரி, குரைஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்த ஒரு ஆணும் பத்தான் முஸ்லீம் பெண்ணை மணக்க முடியாது.//

சையது, தங்கள் என்றெல்லாம் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வது என்ன வென்றும் விளக்குவாரா? பெரியாரின் வழியில், கான்களும், மிர்சாக்களூம், மரைக்கயர்களூம் அவைகளை பெயரின் பின்னால் இருந்து எடுத்தெறிவார்களா?

இன்னும் ஒரு கேள்வி,

ஜாகிர் நாயக் நடத்தும் பீஸ் கண்காட்சியிப் என்ன இருக்கும் என்றாவது கட்டுரையாளர் போய் பார்த்திருக்கிறாரா? அதைப்பற்றி இப்படி ஒரு கட்டுரை எழுத முடியுமா?

இந்து அமைப்பு ஒரு பிரச்சாரக்கூட்டம் நடத்தினாலே இப்படி வயிறு எரிகிறதே, முசுலீம்கள் நடத்தும் பிரச்சாரக்கூட்டங்கள் கண்ணுக்கு தெரியாதே?

ராஜசங்கர்.
Agilan
Ivargal soozhchiyea idhu thaan....

They will only keep beating a dead snake. No guts to talk about real issues. Which Brahmin has ever forced stool into a dalits mouth..??

The real issue is indian society for centuries has been casteist. Just as Chinese were clan based and Arabs were Tribes. The Clan and tribal strucutre is still intact even with advent of communism in china and Islamic rule in Arabia. So what is the use of blaming a Religion or sect. There is NO use blaming any Religion for it. The way Islam and Christianity is practised in india is not how the semitic religions are practised in their places of origin. In india both these religions have their casteist orientation much like anyother religion in India. In china a christian or muslim still retains his Clan name like Tan, Lim, Ling etc....the problem is this structure that fails to be forgotten by ppl, either in india or Arab or china. Infact there are arabs who will not even treat an Afgahn as a human being...!!

The only way out is to relate to a common National identity as Indian..! and do away with all Religious and strucutral limitations. The Govt should be Atheist in orientation but one that accepts that ppl can have their own believes and practice that peacefully. its not enough to say untouchability is a sin...You have to make it legally punishable..!! that is the only way to empower..!

This is the only solution for the people who are at the bottom of the pyramid like Adivasis, dalits and tribals. There is NO other way for their emancipation...! And we must ALL fight for that whether or not we are in the bottom of the pyramid..!
S. Emmanuel
An excellent article. Very realistic and informative. Thanks.
balamurugan
unmaithaan. ithE thinamalar 'ungal paPer ibgu chella vEndumaa allathu ingu chella vENdumaa enRu oru muRai viLambaram chethathai yaarum maRanthirukka iyalaathu. cheththa paampu enRu chollum agilan pOnRavargaL maththiya arachu maRRum pothuththuRai niRuvanangaLil paarththaal theriyum. chaathivaarik kaNaggeduppai niraagariggum uyar chaathi arachu athigaarigaLin choozchchiyai amapalappaduththa innum oiRpaduththappatta thaazththappatta makkaLaal mudiyavillai. periyaar maRRum ambEthgar avargaLin goLgaigaL intha piRpaduththappatta thaazththappatta thamizhaga makkaLidam neerththup pOnathum, maRRa paguthigaLil innum vizhippuNarvE illaathiruppathumthaan inathak kodumaigaL thodarak kaaraNamaayuLLathu.
Malcom X
சகோதர்களுக்கு,

மதங்களை தூக்கிபிடிப்பது என் வேலையல்ல,

நூற்றாண்டுகளாய் சாதிய வர்ணாசமம் கொண்டு அடிமைபடுத்திய, இன்னும் அடிமை படுத்த துடிக்கும் சூழ்சிகளை சுட்டிகாட்டுவது என் கடமையாகும்.

எந்த மதத்தில் இது இல்லை, அந்த மதத்தில் சாதியம் இருக்கிறது என்பதை பற்றிய கவலையும் எனக்கு இல்லை,

எந்த மதம் கட்டிய சாதியமாயினும் அது ஒரு சிலரின் சமுக உரிமையை, வாழ்வுரிமையை பறிக்குமாயின் அதை முழுமூச்சாய் எதிர்கபட வேண்டியது ஒவ்வொரு நடு நிலையாளர்களின் கடமையாகும்.

நான் வாழும் இந்த பூமியின் மேல் நடக்கும் சாதியத்தின் பெயரால், மதத்தின் பெயரால் நடக்கும் வண்மங்களுக்கு
எந்த இனம் ,எந்த மதம் காரணமோ அது வெட்கி தலைகுனிய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அந்த சாதிய வர்ணாசமத்தை, மத வண்முறையை தூண்டி விட்டு, தூக்கி பிடித்தவர்கள் குற்ற உணர்வுடன் துடிப்பது உறுதியே. அந்த மதத்தில் இல்லையா இதில் இல்லையா என குற்ற உணர்வுகளை மறைக்க முயல்வதும் இயற்க்கையே.

நீங்கள் பார்பாணியத்தை மதிப்பவர்களாயிருந்து, ஆனாலும் அது ஏற்படுத்திய வண்மங்களை நினைத்து வருந்துவர்களாயின் , அதனால் பாதிக்கப்பட்ட தலித், இசுலாமிய இனங்கள் வாழ்வுரிமை பெற உங்கள் வாழ்கையின் சில பகுதியை தியாகம் செய்வதுதான்,
நீங்கள் செய்ய போகும் பிராய்சித்தமாகும்.

அதைவிட்டு விட்டு நீங்கள் கொடுக்கும் மலுப்பல்கள்
உங்களின் குற்ற உண்ர்வுகளை அதிகமாக்கி உங்களின் நிம்மதியை பறிக்கும்.
Abdul Rahman - Dubai
மிகச் சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை. வாழ்த்துகள் ...
Bama Faustina
what Agilan has written above is 100% true. The Christian and Islamic religions in india also discriminate against Dalits even after conversion. This is very well documented by many Dalit scholars, how can the author then say Muslims and dalits have common enemies..?? no one needs to trouble muslims, they are causing enough trouble for themselves throughout the world. in India there is a silent war between sufis and wahhabist, which the wahhabists are winning. Name one country where Muslims are happy? India atleast has neutral observers across caste and communal divide who are ready to lend a voice against the dalit oppression in an islamic country you can't even express an opposing view. Don't you know about the killings in an Ahmedia mosque in Pak? write with some honesty and don't spread lies...
Suresh
I agree with the article 100%.
But I am not able to digest the fact that those who vehemently oppose Brahminism with regard to caste descrimination conveniently forget the attrocities by BC and MBC communities against Dalits.
Be it vanniyars in North TN, Pillai, thevar and nayakkars in Madurai and the districts around, Gounders and Nayudus in the Kongu region and Nadars in southern districts, they treat dalits no better than animals. Keeripatti, papparapatti, melavazhavu and uthapuram are sad reminders and proof to my point.
In fact, these communities made Brahmins far far good people. Is it not hypocracy to cry about Brahminical descrimination while treating the dalits even worse at the same time
ஊடகங்களில் நாம் பார்த்து சில நிமிடங்களில் மறக்க கூடிய செய்திகள் போல அல்ல அடக்கபட்டவர்களின், ஒடுக்கபட்டவர்களின் வாழ்வாதார உரிமை பிரச்சனைகள்.
அதிக பட்சமாய் சாலையில் சற்று முன் நடந்த விபத்திற்காக சில நிமிடம் பரிதாப பட்டு கடந்து போகும் நடு நிலை மனிதர்களின் உணர்வுகளும், வேதனைகளும், விபத்தில் மரணிக்கப்பட்டவனின் இழந்தவர்களின் சொந்தங்களின் உணர்வுகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. முந்தையது டி.வி சீரியலை பார்த்து கண்ணீர் வடிப்பது போன்றதாகும்.
ஒரு தலித் படும் சாதிய கொடுமைகளை பற்றிய நடுனிலையாளர்களின் பார்வை எல்லை கோடுகளுக்கு வெளியே அதுவும் இன்னொரு சாதிய அடையாளத்துடன் நின்று பார்ப்பது என்பது ஒரு டீ.வி சீரியல் பார்பது போன்றது தான். இந்த நாட்டில் ஒரு இசுலாமியன் தாடியுடன், தொப்பியுடன் திரிந்தால் அவன் தீவிரவாதியக்கபடுவதும் , ஊடகங்களின் வெறிபிடித்த ஊடக பசிக்கு அவன் குடும்பம் முழுதும் வாழ்க்கை இழந்து ,கடைசியில் கரும்பு சக்கையாய் மாண்டுபோவது அன்றாட நிகழ்சியாகிவிட்ட்து,
தேவை பட்டால் ,போலி என்கவுண்டர் மூலமாக கூட அவன் உயிரை பறிப்பது என்பது நம் நாட்டில் அன்றாடம் நடக்க கூடியதாகிவிட்ட்து. இது போன்ற சமுக அவலங்களை வெறும் வார்த்தைகளாகவும், விவாதங்களோடும் நின்று விடுவது என்பது ஒரு சமுகத்தினை முழுமையாக புறக்கணிப்பதாகும்.
உண்மையில் பிரச்சனை என்பது ,உன் மதம் சிறந்த்தா, இல்லை என் சாதி சிறந்ததா என்ற மத பெருமைக்கான விசயங்கள் இல்லவே இல்லை.

இது வாழ்வாதரங்கள் புரக்கணிக்க படுகிற, இரு பெரும் சமுகங்களின் பிரச்சனையாகும். பிரச்சனையின் அடிப்ப்டையில் மட்டுமே பார்க்க பட வேண்டிய அவலங்கள்.
இன்றைய பெரும்பாளான இசுலாமியர்கள் ஒரு காலத்தில் மதம் மாறியவர்களே, அது சாதிய கொடுமைகளுக்கு எதிராய் வெளி வந்தவர்கள்.
சாதிய கொடுமைகளும் ,சிறுபாண்மை இன அழிப்பும் ஒருவனுக்கு ஏற்பட்டாலும் அதற்கு மூல காரணமான ஆரிய –பார்பண சாதிய அடக்குமுறையையாளர்களையே சாரும். அதுவரையிலும் இந்த கொடுமைகளுக்கான பொருப்பு பார்பாணியம் தான்.
மலத்தை எந்த சாதிகாரன் ஊற்றினான் என்பது தேவையில்லை. அந்த வக்கிரத்தை விதை போட்டு கட்டி காத்து இன்றலவும் வளர்த்து வரும் பார்பணர் ஆரியன் தான் காரணம்.

இசுலாமியானும் ,திராவிடனும் இனத்தால் ஒன்றே, இனம் இனத்தோடுதான் சேரும் என்று சொன்ன அறிஞர் அன்னாவின் வார்த்தை போல்.
அடக்கபட்டவனும், ஒடுக்கப்பட்டவனும் பிரச்சனை அடிப்படையில் இனைவது உறுதி, எங்களை எத்தனை சூழ்சி செய்து பிரித்தாலும், ஒரு நாள் விடியல் வரும்.
மாரிமுத்து
கொடுமையான கட்டுரை. இதில் எதற்காக இந்த நபர் தலித்துகளையும் முஸ்லீம்களையும் சேர்த்துகொள்கிறார் என்று தெரியவில்லை. இப்படித்தான் பார்ப்பனரல்லாத மேல்ஜாதி கும்பல் பார்ப்பனர்களை எதிர்க்க தலித்துகளை துணைக்கழைத்துகொண்டார்கள். பார்ப்பனர்களை எதிர்கள் என்று காட்டி காட்டியே தங்களது செல்வாக்கையும் பணபலத்தையும் வளர்த்துகொண்டார்கள். ஆனால் தலித்துகளின் மீது நடக்கும் வன்கொடுமைகளை மட்டும் நிறுத்துவதில்லை. ஏதாவது ஒரு தேவரோ வன்னியரோ தலித்தின் வாயில் மலம் திணித்தாலும் பார்ப்பானை காரணம் காட்டி தப்பித்துகொள்கிறார்கள். அதே வேலையை இப்போது முஸ்லீம்களும் ஆரம்பித்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
இந்த எழுத்தாளருக்கு இந்துமதத்தின் மீது இருக்கும் வெறுப்பு கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது.
1990களில் இந்த கும்பலைச் சேர்ந்த பழனிபாபா மாரியம்மன் கோவிலளை உடைப்பேன் என்றெல்லாம் விரவசனம் பேசித்திரிந்தார். இப்போது இவர் ஆரம்பித்திருக்கிறார். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மாரியம்மன் கோவில்களை எல்லாம் உடைக்காமல் விட்டுவிடுவார்களா? காஷ்மீரில் எல்லோரையும் கட்டாயமதமாற்றம், அடி உதை கற்பழிப்பு என்று இந்துக்களை எல்லாம் துரத்தி கோவில்களை உடைத்து மசூதியாக்கியவர்கள் இங்கே தலித்துகளோடு கூட்டு சேர்கிறார்களாம்.
மற்ற கோவில்களில் பங்கு கேட்டால் பிரச்னை வருகிறது. உண்மைதான். ஆனால் நாங்களே கட்டிய கோவில்களை மற்ற ஜாதிகள் இடிப்பதில்லை. இடித்த வரலாறே இல்லை. இன்னும் பல ஊர்களில் நாங்கள் கட்டிய கோவில்களுக்கு எல்லா சாதிகளும் வருகிறார்கள். பெரிய கோவில்களில் ஒரு காலத்தில் பிரச்னை இருந்தது உண்மைதான். ஆனால் இன்று எந்த கோவிலில் தலித்துகள் உள்ளே நுழைவதை மறுக்கிறார்கள். ஆனால், இஸ்லாமியர்களில் பாதி இருக்கும் முஸ்லீம் பெண்களுக்கு மசூதிகளுக்கு போக உரிமை இல்லை. இவர்கள் மற்றவர்களுக்கு உரிமை வாங்கித்தரபோகிறார்களாம். வேடிக்கைதான். எங்களுக்கு எந்த மாநிலத்திலும் கேள்வி கேட்காமல் 18 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது. முஸ்லீம்களை விட நல்ல நிலையில் நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு எங்களை பார்த்துக்கொள்ள தெரியும்.

தலித்துகள் என்ன இளிச்சவாயன்களா ஆளாளுக்கு இப்படி சவாரி ஏறுவதற்கு?
ரஹிம் மரைக்காயர்
//இன்றைய பெரும்பாளான இசுலாமியர்கள் ஒரு காலத்தில் மதம் மாறியவர்களே, அது சாதிய கொடுமைகளுக்கு எதிராய் வெளி வந்தவர்கள். //

வாசகர்கள் இது பொய் என்று தெரிந்து கொள்ளவேண்டுகிறேன். மரைக்காயர்கள் லெப்பைகள் ஆகியோர் தூய அரபியர்கள். அவர்களில் சிலர் இங்கே பெண்ணெடுத்திருக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் நாங்கள் தூய அரபியர்களே. இங்கே மதம் மாறுபவர்கள் அவரவர் ஜாதிப்பெயரிலேயே அறியப்பட வேண்டும் என்பதே இஸ்லாமிய நியதி. மார்க்க அறிவும், இறையச்சமும் இல்லாத ஒரு கும்பல் அரசியல் ஆதாயத்துக்காக இப்படி பொய்களைச் சொல்லுகிறது. நம்ப வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அறியப்பட்டிருந்த குரேய்ஷி, அன்சாரி ஆகிய சாதிகள் இன்னமும் இருக்கின்றன. ஆகவே இன்றிருக்கும் சாதிகளும் அப்படியே இருப்பதுதான் இஸ்லாமிய நியதி. நாங்கள் தலித்துகளிலிருந்தோ அல்லது சாதிக்கொடுமைகளாலோ மதம் மாறியவர்கள் அல்ல. ராவுத்தர்கள் துருக்கிய போர் வீரர்கள் என்று என் ராவுத்தர் நண்பர் தெரிவித்திருக்கிறார். அவர்களும் இந்தியர்கள் அல்ல. ஆகவே நாங்கள் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்கள் என்ற பொய்யை தயவு செய்து நம்பவேண்டாம். நன்றி
Agilan
@மால்கம் X இராசகம்பீரத்தான் - நண்பர்களுக்கு,

நடுநிலை! நடுநிலை!! என்று கோஷம் போட்டால் மட்டும் பொறாது, உங்கள் எழுத்தில் அது வெளிப்பட வேண்டும். நான் நடுநிலையில் நிற்கிறேன் ஆனால் உன்னை பற்றி மட்டும் தான் விமர்சிப்பென் என்பது மறைமுக பாசிசமே தவிர புரட்சி ஆகி விடாது. இந்து மதத்தின் வர்ணாசாரமத்தை நாங்களும் தான் கண்டிக்கிரோஅம். ஆனால் நாங்கள் அதை தலித் மக்களுக்கு வழ்வுரிமயும், சமூக அந்தஸ்த்து வர வேண்டும் என்று எதிர்கிறோஅம். ஆனால் நண்பர்கள் எழுத்து அதையும் தாண்டி இந்து மதத்தின் மீதான கழ்புணர்ச்சியின் வெளிப்பாடஆகவே தெரிகிறது.

இந்து மதம் கொடியது அதை ஒழித்துவிட்டால் பிரேச்சனை தீர்ந்து விடுமா என்றால் இல்லை. இஸ்லாமிலும், கிரிஸ்தவதிலும் இதே அடக்கு முறைகள் இன்னும் அப்பட்டமாக இருப்பது பல தலித் அறிஞர்களின் கூற்று. இதை சுட்டி காட்டி நாம் இதை வெறும் ஒரு மதத்தின் பிரசநயக அணுக கூடாது....இது ஒரு இந்திய அளவிலான சமூகத்தின் பிரச்னை என்றால் உடனே எங்கள்லுக்கு குற்ற உணர்வு என்று பூசி மொழுகும் தந்திரத்தை என்ன சொல்வது..!!

குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் இந்து மதத்தை மட்டும் குறை சொல்ல உங்களுக்கு கடிவாளம் கட்டியது யார்? வாஹ்சாபிஸ்டுகளா? இல்லை போப் தரும் சம்பளம்ஆ? இல்லை மத வெறி அரசியள??

முஸ்லிம்களால் தலித்துகளுக்கு ஏற்படும் கொடுமையை ஏஸீ ரூமில் உட்ட்கர்ந்து திசை திருப்பும் திறமை என்று வேண்டும் ஆனால் ஒத்து கொள்கிறோம்...இதில் நடு நிலை என்கிற கண் துடைப்பு வேண்டாம்...!!
Karl
When it comes to religious matter, I am fed with the attitude of not blaming minority religious fanatism. I studied in a christain school and I was forced to read bible and do prayer (for saying I am an aethist). Today, I realisedl it is a abuse.

So, pls stop praising minority group fanatism, just because they are minorities. Infact, if one take % of stupid practice within a religion, I thing it might equally high in all religion.

A QUESTION to the author of this article:
Have you ever talked to a muslim or christian regarding god, humanism, superstitious habits etc?
வன்னிஅரசு
மாரிமுத்து எழுதியுள்ளதை ஆதரிக்கிறேன். நான் வன்னிய ஜாதியில் பிறந்திருந்தாலும், வன்னியர்கள் தலித்துகள் மீது வன்கொடுமைகள் செய்துவிட்டு பார்ப்பனர்களை குற்ற்வாளியாக ஆக்கிவிட்டு தப்பித்துக்கொள்வதை எதிர்க்கிறேன். அவரவர் செயல்களுக்கு அவரவர்களே பொறுப்பாளிகள் என்று வந்தால்தான் இந்த வன்கொடுமைகள் நிற்கும். இங்கே எழுதியிருக்கும் பரூக் என்னும் மால்கம் எக்ஸ் முஸ்லீம்களோடு தலித்துகள் சேர்ந்துகொண்டு மற்றவர்களை எதிர்க்கவேண்டும் என்று எழுதியிருக்கிறார். தலித்துகள் இந்தியாவில் எந்த வன்முறையிலும் இறங்கவில்லை. இறங்கப்போவதும் இல்லை. தங்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்களே அன்றி, வன்னியர் வீட்டை கொளுத்துவதோ அல்லது தேவர்களது பெண்களை கற்பழிப்பதோ செய்ததில்லை. ஆனால், முஸ்லீம்களோ பொது ரயிலில் குண்டுவைப்பது, கோவில்களில் குண்டு வைப்பது, சந்தையில் குண்டு வைப்பது என்று இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ், ஈராக், என்று எல்லா நாடுகளிலும் நடந்துகொள்கிறார்கள். காஷ்மீரில் இந்துக்களை கொன்று சூரையாடி இந்து பெண்களை கற்பழித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலங்களிலிருந்து துரத்தினார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஏன் தலித்துகளோ அல்லது வன்னியர்களோ ஆதரவு தந்து தங்கள் மீதும் பழி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று புரியவில்லை. தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் பிரச்னைகள் இல்லாமலில்லை. அதனை தீர்ப்பது பேச்சுவார்த்தைகள், நல்லிணக்க திருவிழா போன்றவைகளால்தான் நடக்குமே தவிர வெட்டுகுத்து கொலைகளால் நடக்காது. பழனிபாபா போன்றோர்கள் கோவில்களை இடிப்பேன், என்று ஜ்காத் கமிட்டி பண்ணியதையும் பேசியதையும் நாங்கள் மறக்கவில்லை. அவருக்கு முஸ்லீம்கள் பெருத்த ஆதரவு அளித்தார்கள். அப்படிப்பட்ட நிலை இருக்கும்போது முஸ்லீம்கள் மீது எப்படி நல்ல மதிப்பு எங்களுக்கு வரும்? முஸ்லீம்கள் தங்களது வழிகளை திருத்திகொண்டு அவர்களின் நடுவே இருக்கும் புல்லுருவிகளை களைய வேண்டும். இல்லாமல், அவர்களின் மத்தியில் இருக்கும் வன்முறையாளர்களை கொண்டாடி ஷஹீத் என்று திருவிழாகொண்டாடினால், முஸ்லீம் சமூகத்தை மற்றவர்கள் ஒதுக்கி வைப்பதுதான் தொடரும். முஸ்லீம் சமுதாயத்தை திருத்த வழி பாருங்கள் மால்கம் எக்ஸ். பிறகு மற்றவர்களிடம் உங்கள் புலம்பலை தொடரலாம்.
கட்டுரையின் நோக்கம் திசை திருப்ப படுகிறது. இது எதிர் பார்த்தது தான். எனினும் பதில் கொடுக்க வேண்டியது என் கடமை.

முசுலீம்களின் மீதி ஏன் இத்தனை கோபம் என்று தெரியவில்லை.

இசுலாத்தில் சாதியம் இருக்கிறதா என்ற கேள்விக்கு
இசுலாத்தை நோக்கி வரும் சகோதர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

நேற்றைய பெரியார் தாசன், கொடிக்காள் அவர்கள், நீங்கள் சொன்ன பழனிபாபா.. மறைந்த இலக்கியவாதி
கமலாதாஸ், தான்சென்.. இன்னும் லட்சம் லட்சம் பேர்களிடம் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

சாதியம் எனும் நோய் தீர்க்க இசுலாம் ஒன்றே அரும் மருந்து என்று சொன்ன பெரியாரின் கொள்கை வாரிசுகளிடம் கேளுங்கள் உங்களுக்கான கேள்விகளை.

உலகம் எல்லாம் தீவிரவாத முத்திரை குத்தபட்ட, குற்றவாளி சமுகமாக பார்க்கபடும் இசுலாம் இன்று உலகில் மிகவும் அதிகமாய் வளர்ந்து வரும் மார்கமாக இருக்கிறதே என தோன்றினால் அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் தான் ஆராய்சி செய்ய வேண்டும்.

சரி இசுலாமியர்கள் தலித்துகளை ஆதரிக்காவிட்டால் என்ன ? நல்லது தான் இனியாரும் இசுலாமிய மதத்திற்கு மாற மாட்டார்கள்.

தலித்துகள் உங்களின் சகோதர்கள் தானே. அவர்களும் இந்துகள் தானே நீங்கள் இத்தனை நூற்றாண்டுகள் அவர்களை எப்படி நடத்தீனீர்கள், அவர்களை தலையில் வைத்து கொண்டாடின்னீர்களா?.. இல்லை ஒரு மனித இனமாகவாது பார்த்ததுண்டா?..சரி போனது போகட்டும்.
பரவாயில்லை, இனியாவது தலித்துகளுக்கு உங்கள் வீடுகளில் பென் கொடுத்து, பென் எடுத்து இந்து உறவுகளை புதுபித்து கொள்ளுங்கள், அவர்களுக்கு நிலங்கள் வழங்கி உங்களின் உயர்வான இந்து மதத்தின் புணிதத்தை பாதுகாத்து கொள்ளுங்கள், தமிழகத்தின் ஆட்சி அதிகாரங்களை கொடுத்து அழகு பாருங்கள். கோயில்களில் அர்சகராக்குங்கள் பொருளாதாரத்திலும் சமுக அந்தஸ்து கொடுத்து உங்கள் சகோதரனாக்கி கொள்ளுங்கள். நினைத்து பார்தாலே எவ்வளவு மகிழ்சியாய் இருக்கிறது. இந்த புரட்சிகள் இந்து மதத்தில் நடந்தால் மிகவும் மகிழ்ச்சியான விசயம் தான்.

மேலும் இது மதம் மாறியவர்ளை திரும்பவும் இந்து மதத்திற்கே வரவைக்க சரியான விசயமாக இருக்கும்.

இந்த சம நிலை சமுகம் இந்து மதத்தில் இருந்தால் ஏனைய மதத்தில் இருந்தும் கூட்டம் கூட்டமாய் வந்து இந்து மததிற்கு மாறலாம்.

ஆகவே இதன் முதல் தொடக்கமாக இங்கு இசுலாத்தின் மீது எதிர் விமர்சணங்கள் இருப்பவர்களே இந்த அரும் பணிகளை துவங்கினால், காலம் உங்களை கொண்டாடும். ஒரு தலித் சமுகமே உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கும்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

மால்கம் X இராசகம்பீரத்தான்
முகவை மைந்தன்
சரி உங்களின் பார்வையின் படி எல்லா தீவிரவாதங்களும் இசுலாமியர்கள் தான் என்று பார்போம்.

உடனடியாக செய்ய வேண்டியது என்னவென்றால்
இது வரை நடந்த எல்லா குண்டு வெடிப்புகளுக்கும் காரணமானவர்களை சட்டத்தின் மூலம் நிருபிக்கபட்டு உடனடியாக தூக்கிலட வேண்டியது தான்.

இதை செய்து முடிப்பதால் இனி வரும் காலங்களிம் இந்த குண்டு வெடிப்பு கலாச்சாரங்கள் இல்லாமல் போகும். மகிழ்ச்சி தான்.

அப்படி சட்டம் விரைவாக நீதிமன்ற நடவடிக்கை எடுத்தாலாவது சிறையில் இருக்கும் நிராபராதிகளாவது கொஞ்சமாவது வாழ்ந்து விட்டு சாவான்.
15 வயதில் உள்ளே போனவன் , திரும்பி வருகையில் 40 வயதை கடந்து வெளியே யாருமற்ற அனாதையாய் தெருவில் நிற்கும் அவல நிலை வராமலாவது பார்த்து கொள்ளலாம்.

எங்காவது குண்டு வெடிக்கும் கண்ணை மூடிகொண்டு
அது லக்சரே தொய்பா, ஜெய்சி முகமது , என புதிது புதிதாய் பெயர்களோடு பாகிஸ்தான், பங்களாதேச்ல் பயிர்சி பெற்ற தீவிரவாதிகள் என உடனடியாக ஊடகங்கள் எல்லாம் ஒப்பாரி வைக்கும்.
உளவு துறையிருந்துஉள் துறை அமச்சகமும் தொடங்கி, உள்ளூர் போலிசு வரை இதையே உருதி செய்யும்.\

எந்த கோணத்திலுமே பார்காமால் உடனடியாகவே இசுலாமிய தீவிரவாதம் தான் என உருதிசெய்யும் நிலை இருக்க பிறகு என்ன மயிருக்கு விசாரானை ,போலிசு, இராணுவம். இருக்கிற எல்லா இசுலாமியனையும் கொன்று புதைத்து விட்டு போக வேண்டியது தானே..

கோயிலில் குண்டு வெடித்தாலும், மார்கெட்டில் வெடித்தாலும், சொந்த பள்ளிவாசலில் வெடித்தாலும் எல்லாம் பாகிஸ்தான் பயிற்சி பெற்ற இசுலாமிய தீவிரவாதிகள் தான். நாட்டில் இத்தனை தாக்குதல்களும் பாகிச்தான் துனையுடன் தான் நடத்தி இருந்தால்
ஏன் ஒரு போர் நடத்தி முழுமையாக அடக்கிவிடலாமே.

பாவம் இந்திய அரசு ரொம்பவும் தாய்மை உள்ளம் கொண்டது என்று அமைதியாக இருக்கிறதோ??

அதுதான் பார்கிறோமே இலங்கையில் என்ன நடக்கிறது என்று. லட்சம் லட்சம் கொன்று குவிக்கும் காட்சிகளை.

எல்லோருக்கும் பழைய செய்திகள் “ ஹைதராபாத் மக்கா மஸித் குண்டு வெடிப்பு” அது நிழந்த உடனே ஊடகங்களும் ,உளவு துறையும் சொன்னது என்ன ....?? அதே இசுலாமிய தீவிரவாதம்.. சரி இன்றைய செய்தி தெரியுமா? குண்டு வெடிப்பில் சம்பந்த பட்ட (இந்துத்துவா) இளைஞர்களை (பெயர் சரியாக தெரியவில்லை)கண்டு பிடித்து தருபவர்களுக்கு லட்சம் ரூபாய் சண்மானமாம்..

இப்ப இவர்க்ள் எல்லாம் தீவிரவாதிகள் இல்லை! இவர்கள் வெறும் இளைஞர்கள் அவ்வள்வு தான்.

இந்த வெளக்கமாத்து ஊடகங்கள் எந்த மூஞ்சியை வைத்து கொண்டு இப்பொழுது எழுதும் என தெரியவில்லை.

புனே குண்டு வெடிப்பு , மாலேகான், இராஜச்தான் , அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு என இந்துத்துவா பட்டியல் நீண்டு கொண்டே போகிறதே.. இது வரை எத்தனை ஊடகங்களில் இந்துத்துவா தீவிரவாதிகள் என வெளிச்சம் போட்டு காட்டினார்கள்?..

காசுமீரின் வரலாறினை முழுவதுமாய் படித்து விட்டு பிறகு அதை பற்றி பேசுஙகள். அதை பற்றி பேசுவதற்கு ஒரு இந்தியனாக நமக்கு தகுதி இல்லை.

பொது மக்களுக்கு எவன் தீங்கு விளைவிக்கிறானோ அத்தனை பேரும் தீவிரவாதிகள் தான். அவன் எந்த மதம் ஆனாலும் சரியே சட்டங்களும் , இறையாண்மையிம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கட்டும்.
ஊடகத்தின் ஆட்டுவிப்புக்கு ஆடி கொண்டே இருந்தால்
எப்பொழுதுதான் சுயமாக சிந்திப்போம்?

உங்களின் மேன்மையான அறிவுக்கு நீங்கள் அஃப்சல் குருவையும் கணக்கில் சேர்த்து கொள்ளலாம்..இனி நீங்கள் மூச்சு முட்ட தீவிரவாதம் பற்றி பேசலாம்
வன்னிஅரசு
மால்கம் எக்ஸ் என்ற பரூக், எனக்குத்தான் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாங்கள் தலித்துகளை சமமாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். ஒப்புக்கொள்கிறேன். எங்கள் மூதாதையர்கள் தலித்துகளின் மூதாதையர்களை சமமாக நடத்தவில்லை. உண்மைதான். அதற்காக இன்றுதான் பரிகாரம் செய்யமுடியுமே அல்லாமல், கடந்தகாலத்துக்கு செல்லமுடியாது. தலித்துகள் தங்களது நிலங்களை பெறுவதற்கும், அவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதையும் வன்னியர்களோ, தேவர்களோ ஏன் பார்ப்பனர்கள் கூட எதிர்க்கவில்லை. தலித்துகள் அல்லாத இந்துக்கள்தான் கூடி, தலித்துகளுக்கு 18 சதவீத இட ஒதுக்கீட்டையும் வேலை வாய்ப்பையும் சலுகைகளையும் உறுதி செய்தார்கள். அதை எடுக்கவேண்டும் என்றோ குறைக்க வேண்டும் என்றோ இதுவரை பார்ப்பனர்களோ வன்னியர்களோ தேவர்களோ நாடார்களோ கூறியதில்லை. அவர்களுக்கு எந்த தொகுதியிலும் பெரும்பான்மை இருக்காது என்ற காரணத்தால் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் அவர்களுக்கு தொகுதிகளை உறுதி செய்ததும் தலித்துகள் அல்லாத இந்துக்கள்தான். இதில் எங்களுக்கு பெருமை நிச்சயமாகவே உண்டு. கிராமப்புறங்களில் தலித்துகள் மீது வன்கொடுமை நடக்கிறது என்பது உண்மைதான். அதனை தடுக்க சட்டம் போட்டதும் தலித்துகள் அல்ல. மற்ற இந்துக்கள்தான். தலிதுக்கள் கிறிஸ்துவ மதத்துக்கு வந்தால் அவர்களுக்கு சலுகைகள் கொடுக்கக்கூடாது, ஏனென்றால், கிறிஸ்துவத்தில் சாதி இல்லை என்று 1947இல் கிறிஸ்துவ பாதிரிகள் சொன்னார்கள். அதனால், கிறிஸ்துவ தலித்துகளுக்கு சலுகைகள் இல்லாமல் போயின. பின்னர் அவர்கள் தற்போது சலுகைகளை கேட்கிறார்கள். அதனால் பெரும்பாலான இந்துக்கள், தலித்துகள் மற்றமதத்துக்கு போனாலும் தலித்துகளுக்கு சலுகைகளை நீடிக்க முயற்சி செய்கிறார்கள். வன்னியர்கள் கேட்டதெல்லாம் வன்னியர்களுக்கு சில சலுகைகள் வேண்டும் என்பதே. அதற்காக தலித்துகள் மீது வன்முறையை நாங்கள் ஏவவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஒரு சில கிராமங்களில் தலித் வன்னியர் வன்முறை நடந்தது என்பது உண்மைதான். அதனை தலைவர்கள் கூடி சுமுகமாகவே தீர்த்து வைக்க முயன்றிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் தேவர் வன்னியர் தலித்துகள் என்று சண்டைகள் நடக்கலாம். ஒரு சில புல்லுருவிகள் தூண்டிவிட்டு நடக்கின்றன என்பற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. பிஜே தேவர் சிலைக்கு செருப்பு மாலை போட சிலரை தூண்டிவிட்டு தலித் தேவர் சண்டையை தூண்டிவிட முயன்றார் என்று அவருடன் முன்னால் இருந்த சில முஸ்லீம்களே குற்றம் சாட்டியுள்ளனர். அதுவும் உங்களுக்குத் தெரியும். தலித்துகளை தலையில் வைத்து கொண்டாடுங்கள் இழிவாக எழுதுகிறீர்கள். ஆமாம், எங்களது பாமக கட்சியில் தலைமைப்பதவியில் பல முறை தலித் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அதற்காக பெருமைப்படுகிறோம். இன்னொரு விஷயம், கிராமங்களில் இப்போது பார்ப்பனர்களே இல்லை. இதனால், கோவிலுக்கு பூசாரிகளாக பார்ப்பனர்கள் கிடைப்பதும் கிடையாது. ஆகையால் வன்னியர்களது கோவிலில் வன்னியர்களே பூசாரிகளாக இருக்கிறார்கள். இது மால்கம் எக்ஸ் என்ற பருக்குக்கு தெரியுமா? இதே போல தலித்துகள் கட்டும் கோவில்களில் தலித்துகளே பூசாரிகளாக இருக்கிறார்கள். அந்த கோவில்களுக்கும் நாங்கள் போயிருக்கிறோம். ஆகவே இன்று பார்ப்பனர்களை வைத்துகொண்டு பிலிம் காட்ட வேண்டாம். மேல்மருவத்தூர் கோவில்களில் எந்த பார்ப்பன பூசாரியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? அந்த கோவில்களுக்கு பார்ப்பனர்களிலிருந்து தலித்துகள் வரை எல்லா மதத்தினரும் வேறு பாடின்றி வருகிறார்கள். எந்த் பெண்ணுக்கும் (மாதவிடாய் இருந்தால் கூட) தடை கிடையாது. நீங்கள் பெண்களை மசூதிக்குள் அனுமதிப்பீர்களா? நான் இஸ்லாத்தின் மீது விமர்சனம் வைக்கவில்லை. அது பற்றி எனக்கு தெரியவும் தெரியாது. நான் சொன்னது, உங்கள் சமூகத்தில் உள்ள வன்முறையாளர்களை கொண்டாடுவதை நிறுத்துங்கள் என்பதுதான்.மதானி, அபசல் குரு, இமாம் அலி, பழனிபாபா என்று எந்த வன்முறையாளர்கள் உங்களது சமூகத்தில் இருந்தாலும் அவர்களை ஒதுக்காமல் கொண்டாடுகிறீர்கள். அவர்கள் அப்பாவிகள் என்று கூட்டம் போடுகிறீர்கள். அவர்களுக்கு இந்திய அரசு அநீதி இழைக்கிறது என்று கூறுகிறீர்கள். அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஊர்வலம் போகிறீர்கள். இதனால், இந்திய சட்டத்தை மதிக்கக்கூடாது என்பது போன்ற உணர்வை அப்பாவி முஸ்லீம்கள் மனதில் ஏற்றுகிறீர்கள். நன் சொல்லுவதெல்லாம், அப்படிப்பட்ட வன்முறையாக பேசுபவர்களை ஒதுக்குங்கள் என்பதுதான். இந்துக்களை கொல்லவேண்டும் ஜிகாத் செய்யவேண்டும் என்று மதானி மலையாளத்தில் பேசியது யூடியுபில் இருக்கிறது. அப்படிப்பட்டவரை விடுதலை செய்யவேண்டும் என்று ஏன் நீங்கள் ஊர்வலம் போகிறீர்கள்? ஏதோ முஸ்லீம்கள் ஓட்டு அவர்களுக்கு வரும் என்று இந்து அரசியல்வாதிகள் வன்முறையாளர்களான முஸ்லீம் தலைவர்களுக்குக் கூட ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் சாதாரண மக்கள் ஏமாளிகள் அல்ல
முகவை மைந்தன்
பழனி பாபா இந்து மதத்திலிருந்து இசுலாத்திற்கு வந்தவர்,
அவரின் பின்னால் சில பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சென்றதும் உன்மைதான்.

வண்ணியர்களுடன் அவர் எந்த அளவிற்கு நட்புடன் இருந்தார் என்பதும், இசுலாமியர்களைவிட வண்ணீயர்கள் எந்த அளவிற்கு அவரை ஆதரித்து வந்தார் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதே மருத்துவர் இராமாதாசு அய்யா அவர்களும் பழனி பாபாவும் எப்படி ஒருவருகொருவர் தோழமையுடன் இருந்தனர் என்பதற்கு பழனி பாபா அவர்கள் நடத்தி வந்த முக்குல முரசு பத்திரிக்கைகளை பார்த்தாலே புரியும்.

அவர் இசுலாமியர்களால் மட்டுமல்லாமல் வண்ணிய தலித் தலைவர்களாலும் ,இளைஞர்களாலும் கொண்டாட பட்டவர்தான்.

பழனி பாபா தீவிரவாதி என்றால் அவருடன் நட்பு கொண்டு கொள்கை கூட்டணி கொண்ட மருத்துவர் யார் மற்றும் வண்ணிய அமைப்புகளை என்ன வென்று கூறுவீர்கள்?..

ஒரு சில விதி விலக்குகளை எப்படி முழுமையான அடையாளமாக காட்ட முடிகிறது?..

இசுலாமிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும், சொத்துகள் அழிக்க ப்ட வேண்டும் என்று ஊர் தோறும் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவா காலி களுக்கு பழனி பாபா போன்ற இசுலாமிய போர்குணம் உள்ளவர்கள் சாமணம் வீசுவார்களா?..
அவர் பின்னால் கோபம் கொண்ட இளைஞர்கள் திரண்டது உண்மை என்றாலும் அதற்கான காரணம் அவசியம் என்ன வென்று பார்பது தான் சரியான அனுகு முறையாகும்.

தீவிரவாதிகள் உருவாக்கபடுகிறார்கள்.

சுதந்திர காலத்தில் ஆங்கிலேயர்களால் பகத்சிங், திப்புசுல்தான், நேதாஜி எல்லோருமே தீவிரவாதியாய் பார்க படுகிறான்.

ஏனென்றால் ஆங்கிலேயனின் பிரச்சாரங்கள் அப்படி காந்தியவாதிகள் முதற்கொன்டு அப்படித்தான் நம்பி வந்தனர்.

இப்பொழுது ஆதிவாசிகளுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தால் எல்லோரும் நக்சல்கள்.

காசுமீரின் இராணுவ அடக்குமுறைக்கு எதிரானவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள்.

ஆயிரமாயிரம் முசுலீம்களை கொன்று குவித்த போது இந்த நாட்டில் கேட்பார் இல்லை.

இன்னும் பதவிகளில் அமர்ந்து ஜன நாயகம் காக்கிறார்கள்.

இது போதாதென்று எல்லோருக்கும் தீவீரவாத முத்திரை வேறு குத்தி சமுக ஒதுக்கள்.

இசுலாமியன் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவன் நேரடியாகவோ இல்லை மறைமுகமாக பாதிக்கப்படும் போது, இந்த ஜன நாயகத்தை புகழ்ந்து வந்தே மாதரம் பாட வா முடியும்?..

பெரும்பான்மை இசுலாமியர்களின் சகிப்புத்தன்மையால் தான் இன்னும் இந்த நாட்டில் அமைதி நிலவுகிறது என்பதுதான் உண்மை.

ஒரு சில தீவிர போக்கு உள்ள இசுலாமியர்களையும்
அந்த சமுகம் தொடர்ந்து புறக்கணிக்கின்றது உண்மை.

ஆனால் தொடர்ந்து, ஊடகங்களின் மூலமும், ஆதிக்கவர்கத்தினாலும், சாதிய கட்டுமானத்துன் மத துவேசங்களாலும் நாளுக்கு நாள் பாதிப்போரின் எண்ணிக்கை கூடுமாயின் .. நாடு நாசமாய் போவது உறுதி.

ஒவ்வொரு குண்டு வெடிபிற்கு முன்னால் ஒரு மதக்கலவரம் வருகிறதே எப்படி?

யாரினால் நடத்தபடுகிறது?.. இங்கு மததின் பெய்ரால் தான் ஆட்சி அதிகாரங்கள் நடக்கிறது?..

திட்டமிட்டு கலவரங்கள் நடக்கிறது, மதக் கலவரங்கள் நடக்காத பத்தாண்டுகளே இல்லை என்ற அளவிற்கு கலவரங்கள் நடக்கிறது ?.. அதை தூபம் போடுவது யார்?..

எல்லாமே இசுலாமியர்கள் தானா?..

சுதந்திரத்திற்காக மூன்றில் ஒரு பங்கு உயிரை கொடுத்த முசுலீம்கள் இன்று தீவிரவாதிகள்..

காட்டி கொடுத்தவனும் கூட்டி கொடுத்தவனும் தேச பக்தியாளர்கள்.

தீவிரவாதங்கள் இங்கு ஆட்சியாளர்களால் , சாதிய மத துவேச கட்டமைப்புகளால் உருவாக்கபடுகிறது.

தீவிரவாதத்தை மட்டுமல்ல அதன் மைய கருவையும் அழிக்க வேண்டும்.

-முகவை மைந்தன்
வன்னிஅரசு
பழனிபாபா என்ற அஹமது அலி முன்பு இந்துவாக இருந்தவர் என்று சொல்வது பொய். பழனிபாபா அவர்களின் தந்தை பெயர் முஹம்மது அலி, தாயார் பெயர் கதீஜாபீவி.
இவரது இயற்பெயர் அஹமதுஅலி. சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில் பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். பழனிபாபாவுடன் மருத்துவர் அய்யா நட்புடன் இருந்தது உண்மைதான்.
அதற்குக் காரணம் முஸ்லீம்களுக்கு பாதுகாவலாக இருக்க விழையும் குணமே தவிர
வேறில்லை. ஆனால் பழனிபாபா மிகுந்த வன்முறையாளராக உருவாக ஆரம்பித்ததும்
மெல்ல விலகினார் என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளும் முஸ்லீம் ஆதரவு
கட்சிகள்தான். திமுக அதிமுக காங்கிரஸ் பாமக என்று அனைத்து கட்சிகளுமே முஸ்லீம்களை அரவணைத்து ஏற்றுக்கொள்கின்றன. ஒரு சில தீவிரவாதிகளை வைத்து எல்லா முஸ்லீம்களையும் தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள். அது சரிதான்.ஆனால், தமிழ்நாட்டில் ஒரு பலமும் இல்லாத
பாஜகவை காரணமாக காட்டி எல்லா இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் அசிங்கமாக பேசுவதும் கோவில்களை உடைப்பேன் என்று பேசுபவர்களுக்கு
ஆதரவளிப்பதும் ஏன்? நீங்கள் சொன்ன வழக்குகளை விசாரணை செய்து அதில் இந்துக்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்வது இந்திய அரசு. அதே இந்திய அரசுதான் மதானி பெங்களூர் குண்டுவெடிப்பில் சம்பந்த்ப்ப்பட்டிருக்கிரார் என்றும் சொல்கிறது. இந்துக்களை குற்றம்
சாட்டினால், குதிக்கும் நீங்கள், ஏன் மதானி விஷயத்தில் அரசு சொல்வது மட்டும் பொய் என்று கூட்டம் போடுகிறீர்கள்? இந்துக்கள்
சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று காங்கிரஸ் அரசு சொன்னதும் ஏதாவது இந்து அமைப்போ அல்லது இந்துக்களோ பொங்கி எழுந்து அவர்கள் நிரபராதி என்று
சொன்னார்களா? மனித உரிமை கூட்டம் போட்டார்களா? அல்லது ஊர்வலம் போனார்களா?
அமைதியாகத்தானே “தவறு செய்திருந்தால் அனுபவிக்கட்டும்” என்று இருக்கிறார்கள்?
Agilan
மால்கம் X இராசகம்பீரத்தான், நண்பர்களுக்கு, இஸுலாமில் வந்து செருப்பவரிடம் போய் உங்கள் மார்கத்தின் உந்நதத்தை கேட்க சொல்கிறீர்கள். செறி நீங்கள் எப்போதாவது இஸுலாமில் இருந்து விலகுபவர்களிடம் இதே கேள்வி கேட்க வேண்டியது தானே?? உங்கள் மதத்தில் உள்ள குறையை சுட்டி காட்டினால் எங்களுக்கு வெறுப்பு என்று சொல்லும் நீங்கள் உங்கள் மதம் ஏன் மதத்தில் இருந்து விலகுபவர்களை மரண தண்டனைக்கு உரியவர் என்று சொல்கிறது என்று விணிவியது உண்டா??

உலகிலேயே வேகமாக பரவும் மதம் என்று மார்தட்டும் நீங்கள் மிக வேகமாக இந்த மதத்தில் இருந்து விலகி வருபர்களும் அதிகம் என்று ஏன் உணரவில்லை? எக்ஸ்-இஸ்லாம் என்று கூக்ல்(Google) செய்து பாருங்கள் புரியும்.

என் நோக்கம் ஒரு மதத்தை தூக்கி பிடிப்பது அல்ல... ஆனால், இந்துக்ளிடம் குறைந்த பட்சம் அவர்கள் மதத்தில் இருக்கும் குறை, நிறை குறித்த விழிப்புணார்ச்சி உள்ளது. ஆனால் முஸ்லிம்கள் இன்னும் அதை கூட உணரவில்லை. தங்கள் மார்கம் தான் சிறந்தது மற்றது எல்லாம் உதவாகரை என்று போதிக்க படுகிறார்கள். உங்கள் வாதம் அனைத்தும் அந்த மூளை சலவாயின் வெளிபாடகவே தெரிகிறது.

தலித்துகள் நடத்தும் பல கோவில்களில் எல்லா சமூகமும் பங்கேற்க்கும் நிலை வந்தாகிவிட்டது. இது இன்னும் வளரவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் ஒரு தலித் மௌல்வியை எங்களுக்கு காட்டினால் நாங்களும் சந்தோஷா பாடுவோம். என் அவர்களால் Waqf Board சிறப்பாக நடத்த முடியாத என்ன? அங்கேயும் வாய்ப்பு கொடுங்கள்....
வீரன் கௌதமன்
நான் நாடார் இனத்தை சேர்ந்தவன். நான் சொல்லுவதை முஸ்லீம்கள் கவனிக்க
வேண்டுகிறேன். பெரும்பாலான முஸ்லீம்கள் அமைதியானவர்கள், வன்முறைக்கு போகாதவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அவர்கள் சமூகத்தில் உள்ள வன்முறையாளர்கள் அந்த சமூகத்துக்கு கெட்ட பெயர் கொண்டுவருகிறார்கள். அந்த
சமூகத்தில் உள்ள பணக்காரர்கள் இந்த வன்முறையாளர்களை ஆதரிக்கிறார்கள்.
ஆகையால் ஒட்டுமொத்த சமுதாயமே பிரச்னையில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதே போல ஒரு சிக்கலில்தான் தலித்துகளும் ஒரு காலத்தில்
இருந்தார்கள். இந்து தலித்துகள், இந்து வன்னியர்களாலும் மற்ற மேல்சாதியினராலும் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் இதனால் மதம்
மாறினார்கள். கிறிஸ்துவர்களாக ஆனார்கள். ஆகவே அவர்களுக்கு புதிய அடையாளம் கிடைத்தது. பல தலித்துகள் படித்து முன்னேறினார்கள். சுதந்திரம்
அடைந்ததும் இந்தியா அவர்களுக்கு பல சலுகைகள் அளித்தது. மதம் மாற வேண்டிய தேவை இல்லாமல் அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்தார்கள். இன்னும் சில
பிரச்னைகள் இருக்கின்றன என்றாலும் 80 வருடங்களுக்கு முந்திய நிலையை விட இன்று மிகவும் நல்ல நிலையில் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஆகையால், இதேபோன்ற சிக்கலில் இருக்கும் மரைக்காய்ர்களும் ராவுத்தர்களும் லெப்பைகளும் இதே காரணங்களுக்காக மதம் மாறலாம். கிறிஸ்துவ மதத்திற்கோ அல்லது இந்து மதத்திற்கோ பௌத்த மதத்திற்கோ மதம் மாறலாம். அப்போது
முஸ்லீம் என்ற அடையாளத்தை விட்டு இந்து மரைக்காயர்களாகவும் கிறிஸ்துவ ராவுத்தர்களாகவும் வரும்போது அவர்கள் இந்த மத பிரச்னைகளை விட்டுவிட்டு தங்களது வாழ்க்கை பிரச்னைகளை கவனித்து வாழ்க்கையில் முன்னேறலாம். தலித்துகள் கீழ்மையான் நிலையிலிருக்க்கிறார்கள் என்று காரணம் காட்டி அவர்களை இஸ்லாமுக்கு மதம் மாற முஸ்லீம்கள் சொல்கிறார்கள். அதே போல முஸ்லீம்களின் பிரச்னையான நிலையை காரணமாக வைத்து அவர்கள் இந்து மதத்துக்கோ அல்லது கிறிஸ்துவ மதத்துக்கோ அல்லது பௌத்த மதத்துக்கொ மதம் மாறி தங்கள் வாழ்க்கையை சீர்படுத்திக்கொள்ளவேண்டும்.
வாழ்வாதார பிரச்னைகளுக்காக தலித்துகள் மதம் மாறலாம் என்றால், வாழ்வாதார பிரச்னைகளுக்காக மரைக்காயர், ராவுத்தர் லெப்பைகள் முஸ்லீமள் மதம் மாறுவதில் என்ன தப்பு?
Agilan
வீரன் கௌதமன் அவர்களுக்கு, நீங்கள் சொல்லுவதை முழுமயாகா ஆமோதிக்கிறெஅன். ஆனால் இங்கிஎய் தான் இஸ்லாம் மற்ற மதங்களில் இருந்து வேறு படுகிறது. ஷரியாவை பொறுத்தமட்டில் ஒருவன் இஸ்லமில் இருந்து விலகினாள் அவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம். இதை சத்தமாக(law) கொண்ட பல இஸ்லாமிய அரசுகள் உண்டு என்பது பலரும் அறிந்தடெஅ. ஆகாயால் இந்து, க்ரிஸ்சியந்,பொததம் போன்ற மதங்களில் இருக்கும் உரிமை இஸ்லமில் இல்லை. எவன் இந்த மததிதில் இருந்து விலகிநள்ளும் உயிருக்காக பயந்து தான் ஆகா வேண்டும்.
Guest
P M K vil oru r.s.s pracharaganaga seyal padum vanni arasuiku vazthukal. ayyavin arasial thalabathigal nalla araasial ariudan ullanar PMk urupatapolthan.
nanri
vijay vincent
வன்னிஅரசு
விஜய் வின்செண்ட் அவர்களுக்கு,
இந்த பதிவில் கருத்துக்களை எழுதிய பின்னர்தான் எறையூர் கிராமத்தில் வன்னியர்கள் தலித்துகளுக்கு இழைத்த தீங்கை படித்தேன். அதில் என்னுடைய பின்னூட்டத்தையும் இட்டேன்.
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=8129:2010-05-05-07-56-18&catid=1069:08&Itemid=341
எறையூர் தலித் மக்களின் சுயமரியாதைக்கானப் போராட்டம்
ஆய்வு அறிக்கையில் என்னுடைய பின்னூட்டத்தை இங்கே பதிகிறென்.
//வருந்துகிறேன். கடந்த முப்பது வருடங்களில் இது போன்ற இழிவு எந்த ஒரு இந்துகோவிலிலும் இல்லை என்று உறுதியாக கூறமுடியும். அதனினும் முதலாக வன்னியர்கள் பெருவாரியாக பங்கு பெற்று பல ஊர்களிலும் நகரங்களிலும் உருவாக்கியுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களில் எந்த விதமான சாதிபாகுபாடும் இல்லை என்று அறுதியிட்டு கூறுகிறேன். அங்கு மாதவிடாய் ஆன பெண்களுக்கு கூட விலக்குகிடையாது என்பதையும் தெரிவித்துகொள்கிறேன். தலித் பூசாரிகளும் பெண் பூசாரிகளும் இருக்கின்றனர். இவர்கள் மதம் மாறிய வன்னியர்கள் மனிதத்தையும் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது.
//
நான் வன்னியன் என்பதையோ தலித்துகளுக்கு வன்னியர்கள் முன்பு தீங்கிழைத்திருக்கிறார்கள் என்பதையோ மறுக்கவில்லை. ஆனால், இன்று மேல்மருவத்தூர் பக்கம் வந்த வன்னியர்கள் தங்கள் மனத்தில் இருந்த தலித்துகள் மீதான தவறான் என்ணத்தை துறந்துவிட்டார்கள் எனப்துதான் உண்மை. தலித்துகளும் வன்னியர்களும் கூடி வாழும் அமைப்புகளை உருவாக்கி சமுதாய புரட்சி செய்திருக்கும் மேல்மருவத்தூருக்கும் ஆர்.எஸெஸெகுக்கும் என்ன சம்பந்தம்? இங்கே கிறிஸ்துவ வன்னியர்கள் , கிறிஸ்துவ தலித்துகள் மீது செய்த கொடுமைக்கு யார் பழி ஏர்பது? அய்யா ஒரு சில கிறிஸ்துவ வன்னியர் கிராமங்களில் சமாதான்மாக வாழுங்கள் என்று முயன்றபோது சர்ச் உள்ளே புகுந்து தடுத்தது. இந்த மால்கம் எக்ஸ் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள படம், எறையூரில் தலித் கிறிஸ்துவர்கலை வன்னிய கிறிஸ்துவர்கள் செய்த கொடுமை கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் கவனிக்கவும். கிறிஸ்துவர்கள் செய்த தவறு என்றாலும் இந்துக்கள் மீது கரித்டு கொட்டுவது ஏன்? ஏன் ஆன்மீக உலகில் புரட்சி செய்திருக்கும் மேல்மருத்தூஉர் வார வழிபாட்டு மன்றங்களை பாராட்ட முடியவில்லை?
vijay vincent
எறையூரில் தலித் கிறிஸ்துவர்கலை வன்னிய கிறிஸ்துவர்கள் செய்த கொடுமை கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் கவனிக்கவும். கிறிஸ்துவர்கள் செய்த தவறு என்றாலும் இந்துக்கள் மீது கரித்டு கொட்டுவது ஏன்?
vannia crusthavarkal vannia inthukal -
votu poda anivarum vanniyerkal,
katchiyai valarka onivrum tamilarkal,
matrnerathil crushaverkal, islamiyar, inthukal,-
thozar vanni arasuiku -thozare katurai parpaniam inthia samukathil vithaikum nanjai parriathu, nigal evalavu kupadu potaalum entha parpaanum ungali avarkazuku samamai etrukolapovathilai,
ungal pinnutangalai ayyavdam kattungal, nanum P M K vin porupalarkalil orvan than. nanri
வன்னிஅரசு
அன்புள்ள விஜய்
இந்த விவாதத்தை ஆரம்பித்திலிருந்து படியுங்கள். வன்னியர்களும், தேவர்களும் மற்றவர்களும் தலித்துகள் மீது செய்யும் வன்கொடுமைகள் எல்லாம் செய்துவிட்டு பாப்பானை காரணம் காட்டி தப்பித்துகொள்கிறார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. அதனை முஸ்லீமாக மால்கம் எக்ஸ் செய்கிறார்.
கிறிஸ்துவராக நீங்கள் செய்கிறீர்கள். அவரவர் செய்யும் வன்கொடுமைகளுக்கு அவரவரே பொறுப்பாளியானால்தான் வன்கொடுமைகளை நிறுத்த வழிபிறக்கும். இணையத்தில் எல்லோரும்
பாப்பானை அடிக்கலாம். கிராமத்தில் களப்பணி ஆற்றுபவர்களிடம் “எல்லாத்துக்கும் பாப்பான் தான்
காரணம்” என்று சொல்லிப்பாருங்களேன். பாப்பானே இல்லாத ஊரில் வன்னிய கிறிஸ்துவர்களும்
அவர்களது சர்ச்சும் செயுயும் வன்கொடுமைக்கு பாப்பானை காரணம் காட்டி கிறிஸ்துவர்கள் தப்பிக்க
முனைவது போல கேவலம் இல்லை. சரி. பாப்பானே எறையூர் கிராமத்தில் செய்த வ்ன்கொடுமைக்கு
காரணம் என்று சொல்லிவிட்டோம். எல்லாரும் ஒப்புக்கொண்டுவிட்டோம் என்றே வைத்துகொள்வோம்.
அப்புறம் என்ன? வன்கொடுமை நின்றுவிடுமா?
வெண்மனி மாறன்
பார்பணன் அழிந்தாலும் பார்பாணியம் அழிவது இல்லை,
இன்றைய சமுகத்தின் ஒவ்வொரு நிலைகளிலும்
பார்பாணியம் பரவிகிடக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மத அடையாளவாதிகளிடமும் பார்பணம் இல்லாமல் இல்லை. எல்லோரும் பூணுல் போடாத பார்பணர்களே.
உங்களது சாதிய மத பெருமைகளை பேசி கொண்டே இருங்கள். புணைப்பெயர் கொண்டு பெருமை பேசுங்கள்.. முகம் தெரிவது இல்லையே..
எங்கள ஆயிரமாயிரம் வருடங்களாய் அடக்கி வந்த சாமிகளா.. நீங்கள் உங்கள் குலப் பெருமைகளை பேசி கொண்டே இருங்கள். அதுவும் தலித்துகளுக்கு நீங்கள் காட்டும் கரிசணத்தை சொல்லி கொண்டே போங்கள்,
எங்களின் வாய்களில் மலத்தை திணியுங்கள், பிறகு நான் அவனில்லை என்று கூறுங்கள்,
எங்களின் பென்களை கற்பழியுங்கள் பிறகு கூறுங்கள் நான் அவனில்லை என்று....
குடிசைகளை கொழுத்துங்கள், உயிருடன் எங்களையும் கொழுத்துங்கள்.
பிறகு சொல்லுங்கள் நான் அவனில்லை என்று..
நீங்கள் எல்லொரும் சோர்ந்து எங்களை கொன்று அழித்துவிடுங்கள்..
பிறகு அந்த சாதிகாரன் தான் செய்தான், இல்லை அந்த மதத்துக்காரன் தான்
செய்தான் என்று மாறி மாறி குறை கூறுங்கள். நாங்கள் யாரும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது..
நாங்கள் செருப்பு தைத்து கொண்டிருப்போம், இல்லை யென்றால் நீங்கள் பேண்ட கழிவுகளை அள்ளி கொண்டிருப்போம், உழுது கொண்டிருப்போம்...
நீங்கள் பேசி கொண்டே இருங்கள்.. எங்கள் முப்பாட்டன் தலைமுறையும் பேசியது இல்லை, நாங்களும் பேச போவதுமில்லை...
நீங்கள் மட்டும் உங்கள் சாதிய பெருமை, மதப் பெருமைகளை பேசி கொண்டே இருங்கள்.
எங்களுக்கு இருப்பிடமோ, இல்லை உயர் கல்வியோ கிடைக்க விடாமல் செய்யுங்கள் அப்பொழுதுதான் எவனும் உங்களை பார்த்து கேள்வி கேட்கமாட்டான்.
உங்களுக்கு எதிராக போராட மாட்டான். நீங்கள் தூண்டி விடும் மதக்கலவரங்களுக்கு நாங்கள் அடியாளாக வருவோம், தீண்ட தகாதவன் என்றாலும் உங்களுக்காக சமுக குற்றங்கள் புரிவோம், சிறையில் இருப்போம், எங்கள் பரம்ப்ரையையும் குற்றவாளிகளாக்குவோம்,
சாதிய எஜமானர்களின் காம அரிப்புகளுக்கு எங்கள் பென்களை பலியாக்குவோம்.. எங்களுக்கு சேரி என்ற இருப்பிடம் கொடுங்கள். நாங்கள் எங்கு தப்பித்து போக முடியும்?.. சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயனின் கொடுமை ,அதாவது பரவாயில்லை, சுதந்திர இந்தியாவில் சாதி வெறியர்களின் கொடுமை, எங்களுக்கு இன்னொரு சுதந்திரம் யார் வாங்கி தரமுடியும்?..
மதம் மாறி போனாலும் சாதிய கொடுமை, கிடைத்து கொண்டு இருக்கும் சலுகைகளை காட்டி மத மாற்றத்தை விட்டாகனும், உள்ளே இருந்து சாகிறதா? இல்லை வெளியில் போய் சாகிறதா என்பது தான் பிரச்சனை.
வாழவும் விடுவது இல்லை, சாக விடுறதும் இல்லை.
தப்பி தவறி முன்னுக்கு வந்த எங்க மக்கள் சிலரும் இன அடையாளம் தெரியாமல் முதன்மை சாதி மக்களை போல் வாழ்வர். ஒரு சில முற்போக்கு பேசும் தலித்துகளையும் மறைமுகமாக நாரடிப்பீர்கள்
ஈழ ஆதரவு பேசுபவன் தலித் என்றால் உடனே அவனை புலி எதிர்ப்பாளன், என வீன் பழி சுமத்துவீர்கள்.., தனி பட்ட தாக்குதல்கள் இருக்கும், சம்மந்தமே இல்லாமல் விவாதம் என்ற பெயரில் எதை எதை யோ பேசுவீர்கள், எல்லா மீடியாக்களிலும் உயர் சாதிய ஆக்கரமிப்பு என்றால்...இனைய தளங்களையும் விட்டு வைப்பது இல்லை..
நீங்கள் உங்கள் இனத்தின் மாண்புகளை, மதத்தின் பெருமைகளை பேசி கொண்டே இருங்கள், ஆனால் காலம் மாறி விட்டது சாதியாளர்களே!!!!!

இனி தலித்தின் வாயில் மலம் தினிக்க நினைத்தாலே
அவன் குரல்வலை அருபடும். எங்கள் பென்களின் நிழல்களை நெருங்கினாலே உன் சாதிய ஆன்மை அரு படும். இனியும் உன் சாதிய சதி திட்டம் எங்களிடம் எடுபடாது.. புகைந்து கொண்டிருக்கும் நெருப்பு உன் சாதிய தோலை பொசுக்கிவிடும் முன் ஓடி விடு எங்கள் எல்லையை கடந்து.
அய்யா சாமின்னு பிச்சை கேட்டு உரிமையை பெருவதற்கு
நாங்கள் பிறக்கவில்லை.. எங்களின் உரிமையை எங்களுக்கு எடுத்து கொள்ள தெரியும், அடிக்கு அடி , உதைக்கு உதை, யார் யாருக்கு பிச்சை போடுவது???
சாதியத்தின் பெயராலும் ,மதத்தின் பெயராலும் நீ போடும்
பெருமை சண்டைகளுக்கு எங்களை இழுக்காதே.
தலித்துன்னா என்ன ஆராய்சி பொருளா?....
vijay
thozar vanni arasuku , nan crusthavan, malcam x muslim athannala naga inhukala thitarom ithu than ungal karuthu, ungal arasial mathavvath canotathudan ullathu, nan tamilan saathiyathuku ehiranavan, mathavvathihrku ethiranavan, ungal mel maruvthuri nan engum grai solavilai. mathangali, sathiyi cadanthu thmilanag nam inivathu kaalathin thevai. nanri
அ. ஹாஜாமைதீன்.
(இங்கே மதம் மாறுபவர்கள் அவரவர் ஜாதிப் பெயரிலேயே அறியப்பட வேண்டும் என்பதே இஸ்லாமிய நியதி. )
"மார்க்கம் அறியாத (ரஹிம்) மரைக்காயர்" அவர்களே! ஜாதிக்கும், தொழில் பெயருக்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாமல் கருத்துப் பதிவு செய்கிறீர்களே!
உங்களது பெயருக்கு பின்னால் தொங்கும் அந்த வால் (மரைக்காயர்) ஜாதிப் பெயரா? இஸ்லாமிய நியதி என குறிப்பிட்டுள்ளீர்களே, இந்த நியதிக்கு குர் ஆனிலிருந்தோ,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்தோ ஏதாவது ஆதாரத்தை தர இயலுமா?
முதலில் இராவுத்தர் மரைக்காயர், லெப்பை, என்ற சொல்லுக்குறிய பொருளை அறிந்து கொள்ளுங்கள் : இசுலாமியர்களில் இராவுத்தர், மரைக்காயர், லெப்பை, என்பது அவர்கள் செய்து வந்த தொழில்களின் அடிப்படையில் கூறப்பட்ட பெயராகும், தமிழ் மொழியில் ராவுத்தன் என்றால் குதிரை ஓட்டி அல்லது குதிரைப் பாகன் என்று பொருள். ("மாவுத்தன்" யானைப் பாகன் என்பது போல) குதிரை வணிகத்திற்காக வந்தவர்கள் குதிரையை அடக்கியாளும் ஆற்றலுடையவர்கள் என்ற பொருளில் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டனர். *
மரைக்காயர் (மரக்கலம்+ ஆயர்)என்றால் கப்பல் மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் என்று பொருள். *
இஸ்லாமிய பணியில் ஈடுபட்டோர் லப்பைக் என்ற அரபிச் சொல்லை பயன்படுத்திட அதுவே லெப்பை என்றானது.*
எத்தனையோ மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களெல்லாம் தங்களது ஜாதிப் பெயருடனா இஸ்லாத்தில் இனைந்தார்கள்?
தமிழகத்தில் தீண்டாமையில் இருந்து விடுதலைப் பெற அலையலையாக தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தை தழுவுவது 20-ம் நூற்றாண்டு முழுவதும் பரவலாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தீண்டாமையின் கொடுமையிலிருந்து விடுதலைப் பெற மக்கள் இஸ்லாத்தைத் தழுவுவது 1981 வரை சர்வ சாதாரணமாக நிகழ்வாக இருந்தது. ஆனால் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் 1981-ல் நடைபெற்ற மதமாற்றம், தமிழர்களில் ஒரு பிரிவினர் தீண்டாமைக்குத் தீர்வாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அகிலமே அறியும் நிகழ்வாக மாற்றியது. இதுபோன்ற கடந்த கால நிகழ்வுகள் ஏதும் தெரியாமல் "நாங்கள் தூய அரபியர்களே." என வாதிட்டால் நீங்கள் வாழ வேண்டியது அரபு நாட்டில், பேச வேண்டியது அரபு மொழி ஆகையால், இஸ்லாத்தை பற்றி தப்பும் தவறுமாக தமிழில் எழுதுவதை நிறுத்திவிட்டு அரபு நாட்டில் குடியேற முயலுங்கள்.
(குறிப்பு: ரஹிம் மரைக்காயர் என்ற பெயரில் கருத்துப் பதிவு செய்திருந்தாலும்.... கருத்தை ஊன்றி கவனித்தால் மாற்று மத சகோதரர்கள் யாரும் எழுதியிருப்பார்களோ என சந்தேகமாக இருக்கிறது.
Agilan
வெண்மணி மாறன் சகோதரருக்கு, உங்கள் உணர்வும், கோவமும், அதில் உள்ள நியாயமும் புரிகிறது.நான் முதலியார் சமூகத்தில் பிறந்தவன். என் முப்பாட்டன் காலத்தில் நீங்கள் சொல்லும் அன்னாய்த்தும் பகிரங்கமாக நடந்தது என்பது உண்மை. அதை இந்த சமூகம் தவறாக கருத வில்லை என்பதும் உண்மை. ஆனால் அந்த நிளயில் இருந்து நாம் வேளி வந்து கொண்டிருக்கிறோம் என்பதயும் தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு தலித் சகோதரனை சக மனிதனாக மதிக்ாதவன் எவனும் எனக்கு பொன்னும் கொடுக்க முடியாது, பொன்னும் எடுக்க முடியாது..!! அவன் எந்த ஜாதி காரணக இருந்தாலும் செறி.

நாங்கள் தனிப்பட்ட அளவிலோ, ஒரு குடும்பமாகவோ உங்கள் பின்னால் நிற்கிறோம். இதை ஒரு சக மனிதனாக உணர்ந்து செய்வது தான். மனிததனில் எந்த உயர்வு, தாழ்வும் இல்லை. எங்களிடம் மைக் செட் இல்லை, கூட்டம் போட பணம் இல்லை. ஆனால் எங்களை போல் மனிதனாக வாழ விழைபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். நீங்கள் நியாயமாக உங்கள் நண்பர்களை கவனித்தாலே போதும். இந்த சமூக மாற்றத்தை நீங்கள் உணரவில்லை அல்லது உணர மறுத்தல் அதை விட வேதனையான விடயம் வேறு எதுவும் இருக்க முடியாது..!!

எங்களை போன்ற ஜாதியை தூக்கி பிடிக்காதவர்களின் குரல் ஜாதி அரசியலிலின் உரத்த பிரச்சரத்தில் நசுன்கி தான் போகும். நாம் பேரன்களும் ஜாதி எனும் சகதியில் பிறழா வேண்டியது தான்.
ரஹிம் மரைக்காயர்
அன்புள்ள அ.ஹாஜாமைதீன்,
எனக்கு மார்க்கம் தெரியவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். முன்னுள்ள பின்னூட்டத்தில் கேட்டிருக்கிறேன். பதில் கூறுங்கள். Holy Prophet (upon whom be peace) said: "Quraish are the leaders of men." (Mustiad Ahmad:
Marwiyat Amr bin al As). குரேய்ஷி குலத்தைச் சார்ந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குரேய்ஷி குலத்த்தினரே தலைவர்களாக இருக்கவேண்டும் என்று
கூறியுள்ளார்கள். இனிமேல் அன்சாரி என்று ஒரு ஜாதி இல்லை, குரேய்ஷி என்று ஒரு ஜாதி இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்களா? அப்படி
சொல்லியிருந்தால் ஏன் தலைவர்கள் குரேய்ஷி சாதியிலிருந்துதான் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்? ஏன் இன்னமும் அன்சாரி, குரேய்ஷி போன்ற குலத்தினர் அரேபியாவிலும் உலகெங்கும் உள்ளார்கள்?
நான் அரபியாவுக்கு ஓடவேண்டும் என்று சொல்லும் ஹாஜாமைதீன் அவர்கள் மார்க்க அறிவும், இறையச்சமும் இல்லாத ஒரு அராத்து கும்பலை பின்பற்றுகிறார் போல் தெரிகிறது.
Fazlul Maulana-- Al Hadis, Vol. 4, p. 594, Ibn Abbas reported that the Apostle of Allah said, "Love the Arabs for three things-- I am an
Arab, and the Koran is in Arabic, and the talk of those in Paradise is in Arabic."
சுவனத்தில் பேசப்படும் அரபியை நாம் பேசுவது இனிமையானது. அரபி மொழியை ஏன் பழிக்க முனைகிறீர்கள்?
மாரிமுத்து
வெண்மனிமாறன் உண்மையிலேயே தலித்தா அல்லது எங்களை வன்முறைக்கு தூண்டிவிட்டு பலனடைய முயற்சி செய்யும் மக இகவா என்று தெரியவில்லை. முதலில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் அடிமைப்பட்டுக் கிடந்தோம் என்பது இவர்கள் சொல்லும் பொய். தமிழகத்தில் மள்ளர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். நாங்கள் சேர சோழ பாண்டிய வமிசம் தமிழ்நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் மள்ளர்களது வமிசம்.பாண்டியன் நெடுஞ்செழிய மள்ளரை வேந்தன் என்றதும் அவனுடைய நீண்ட மதில் கொண்ட மதுரையை மல்லன் மூதூர் என்றதும் அவன் நெல்லின் மக்களின் குலத்தைச் சார்ந்தவன் என்பதும் பின்வரும் பாடல்களால் அறியலாம். “ வானுட்கும் வழ நீண்டமதில் மல்லன் மூதூர் வய வேந்தெ. ” −- புறநானூறு – 18,குடபுலவியனார் பாடியது. “ சீர் சான்ற உயர் நெல்லின் ஊர்
கொண்ட உயர் கொற்றவ ” −- மதுரைக் காஞ்சி வரி 87 – 88, மாங்குழ மருதனார். (பாண்டிய வேந்தர் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழிய மள்ளரைப் புகழ்ந்து பாடியது). பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீன்குடைக் கொடித் தேர்ச் செழிய ”
−- புறநானூறு 24
சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட அனைத்துத் தமிழ் இலக்கியங்களும் இந்த தேவேந்திர மள்ளர்களின் புகழ் பாடும். இலக்கியங்களில் நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிற்பபையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும். அரசர்களின் இந்நெல் நாகரிகத்தின் தலைவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் பல ஆதாரங்களை முனைவர் குருசாமி சித்தன், B.E.M.Sc (Engg.) Ph.D (Uconn-USA) - தலைவர், தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம் எழுதியுள்ளார். இவற்றை இங்கே காட்டுவது எங்களை ஆண்டபரம்பரை என்று காட்டிக்கொள்ளவோ, மற்றவர்கள் எங்கள் கீழே சேவகம் புரியவேண்டும் என்றோ அல்ல. இந்தியாவில் இன்று அனைவரும் சமமான குடிமக்களாக வாழ்ந்தாலே போதும். எங்களுக்கு பல சலுகைகளை கொடுத்திருக்கிறார்கள். இன்னும் பல ஊர்களில் கிராமங்களில் சமத்துவம் இல்லை என்பதும் உண்மைதான். அதனை நோக்கி நாங்கள் மட்டுமல்ல, சக மனிதர்கள் அனைவரும் உதவுகிறார்கள். இங்கே ஒருவர் சொன்னது போல, 80 வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இன்று இல்லை என்பது உண்மைதான். இன்று நாங்கள் தொழிலதிபர்களாக, கம்ப்யூட்டர்களில் பணிபுரிபவர்களாக, எஞ்சினியர்களாக டாகடர்களாக உயர்ந்துள்ளோம். இந்த திசையிலேயே செல்லவேண்டுமே அல்லாமல், எங்கோ நடக்கும் ஒரு சில நிகழ்ச்சிகளை வைத்துகொண்டு உணர்ச்சி ஏறி அடுத்தவர் மீது வன்முறை என்று ஆரம்பித்தால், முஸ்லீம்கள் நிலைதான் எங்களுக்கு வரும். அந்த திசையை நோக்கி எங்களை தள்ளிவிட முயற்சி செய்யும் வெண்மனி மாறன் போன்றோரிடம்தான் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
அ.ஹாஜாமைதீன்.
(" குரேய்ஷி குலத்தைச் சார்ந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குரேய்ஷி குலத்தினரே தலைவர்களாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள். இனிமேல் அன்சாரி என்று ஒரு ஜாதி இல்லை, குரேய்ஷி என்று ஒரு ஜாதி இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்களா? ரஹிம் (மரைக்காயர்) 2010-07-01 23:28:07)
நண்பர் ரஹிம் (மரைக்காயர்) அவர்களே! குரைஸ், அன்சாரி, மரைக்காயர், ராவுத்தர், லெப்பை, தக்னி, பட்டானி அல்லது பட்டான், இவைகள் எல்லாம் ஜாதிகளா?
Agilan
அ.ஹாஜாமைதீன், நண்பரே, இஸ்லமில் குரேஷி, காண், பாதன் இவை ஜாதி இல்லை என்று கூற முனைகிறீர்கள். இவை ஜாதி இல்லை என்றே வெய்ப்போம், அப்படி ஆனால் ஒரு ஆஷ்ரப் ஏன் ஒரு அற்ஜலைல் மனம் முடிப்பதில்லை? கொஞ்சம் விளக்கினாள் நன்றாக இருக்கும்.

இஸ்லமில் ஜாதிய அடக்கு முறை இல்லை என்றாள், சுபி வாஹ்சாபிஸ்ட் சண்டை எதனால்? நண்பர் புனிதமாக கருதும் ஷரியா அமலில் இருக்கும் பாகிஸ்தானில் நடந்த தற்கொலை தாக்குதலை பட்திரி கேள்வி படவில்லை போலும்!!

ஆமாதியாககள் கொன்று கூவிக்க பாடும் அவலம் இவருக்கு தெரிய வில்லை போலும்..!!

இராண், இராயக் - ஶீய, சுன்ணி அரசியலால் மாண்டவர் எண்ணிக்கை பத்து லட்சத்டை தாண்டும்.

டார்‌ஃபர் இல் அரபு முஸ்லிம்கள் கொள்ளும் கருப்பின மக்கள் அனைவரும் முஸ்லிம் தான்.

இராக் இல் கொல்லப்பட்ட கூர்த் இன மக்கள் அனைவரும் முஸ்லிம்கள் தான்....

இந்த வெறி ஆட்டம் அனைத்தாயும் இந்துதுவா அல்லது கிரிஸ்துவ சர்ச் செய்ததா?? முஸ்லிம்கலெ செய்தது தானெ?? என் இஸ்லாமிய ஆட்சி இருக்கும் பாகிஸ்தாநில் மாத கலவரமே இல்லய??

தயவு செய்து உங்களுக்கு போதிக்க பாடுவதை தாண்டி சுயமாக யோசித்து பாருங்கள்....
thamizhan
Mr. Malcom X,
Do you know what Ambedkar said about your "Aryan" theory. first try to get the details of what's Ambedkars view in this regard. And further about brahmins and their role he said that they could not have been the cause of creation of castes. Their role is just but giving theoretical sanction to that. If you come to see see Manu smriti.. you should basically understand a fact that it was not written by any individual and brahmins do not follow manu smriti, which is ascribed for Kshatriyas and it was written by a kshatriya and not brahmna. Brahmins have their own various dharmasastras such as apasthamba dharmasastra, baudhayana dharmasastra, gauthama dharmasastra...etc.

Many of the views expressed by Vanni arasu seem more responsible criticism and trying to sweep those criticisms under the carpet shows the intention of the author.
இப்ராமின்
முஸ்லிம்கள் அனைவருமே இப்ராமின்ஸ்தான்:

ப்ராமின் எனும் வார்த்தைக்கு அர்த்தமென்ன என்று எனது பிராமின் நன்பர்களிடம் கேட்டேன். ப்ராமின் என்றால் "பிரம்மனிலிருந்து வந்தவன்" என்று அர்த்தம் என்றார்கள். அதெப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று கேட்டேன். எங்கள் வேதம் அப்படித்தான் சொல்கிறது என்றார்கள்.

ஆம் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

ப்ராமின் என்பது அரபி வார்த்தை. "ப்ராம்+மின்" எனும் இரண்டு சொற்களின் இணைப்பு.

ப்ராம் என்பது இப்ராம், அப்ராம் என்று இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்களை குறிப்பிடுகிறது. அரபியில் "மின்" என்றால் "அங்கிருந்து, அதிலுருந்து" என்று பொருள். அதாவது இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்களின் வம்சாவழியினர், சந்ததி என்று பொருள்.

5000 வருடங்களுக்கு முன்பு இப்ராஹிம்(அலை) அவர்களின் தந்தை கோயில்களுக்கு சிலைகளை செய்து தரும் தொழிலை செய்து வந்தார். சிலைவணக்கத்தை எதிர்த்து இப்ராஹிம்(அலை) வீட்டை விட்டு வெளியேறினார். 1400 வருடங்களுக்கு முன்பு புனித கஃபாவில் 360 சிலைகளை வைத்து குறைஷிக்கள் எனும் பிராமின்ஸ் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது புனித கஃபா பெருமானாரின் தாத்தா அப்துல் முத்தலிபின் பொறுப்பிலிருந்தது.

ஏகத்துவத்தை பறைசாற்றிய எம்பெருமானார்(ஸல்) சிலைவணக்கம் செய்த குறைஷிக்கள் இனத்தில் பிறந்தார் என்பதை மறந்து விடலாகாது.

1. ஏகத்துவத்தை ஏற்கா விட்டாலும், சிலவணக்கம் செய்து கொண்டிருந்த குறைஷிக்கள் அனைவரும் இப்ராஹிம்(அலை) அவர்களின் சந்ததியினர். அவரை பெரிதும் மதித்தனர். தங்களை "இப்ராம்-மின்" (இப்ராஹிமிலிருந்து வந்தவர்) என்று சொல்லி பெருமிதம் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இது தவிர ஹஜ்ஜில் முஸ்லிம்கள் நிறைவேற்றும் கடமைகளும் திருப்பதியில் ப்ராமின்ஸ் நிறைவேற்றும் கடமைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என்பதை மறுக்க முடியாது.

3. திருப்பதியை சுற்றி ஏழு மலைகள் உள்ளன: வெங்கடாத்ரி, சேஷாத்ரி, வேதாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி என்பது அந்த ஏழு மலைகளின் பெயர்களாகும்.

மெக்காவை சுற்றியும் ஏழு மலைகள் உள்ளன: ஜபல் அபு சிபா, ஜபல் சபா, ஜபல் மர்வா, ஜபல் அபு மில்ஹா, ஜபல் அபு மாயா, ஜபல் அபு ஹுலையா, ஜபல் அபு குஜ்லான் என்று அழைக்கப் படுகின்றன.

4. இப்ராஹிம்(அலை) அவர்களின் துணைவியார் பெயர் சாரா. ப்ரம்மனின் மனைவி பெயர் சர"ஸ்வதி". ஸ்வதி என்றால் தூய்மை. அதாவது தூய சாரா என்று பொருள்.

5. அனைத்து கடவுள்களுக்கும் கோவில் உண்டு, பூஜை உண்டு. ஆனால் பிரம்மனுக்கு கோவிலும் கிடையாது, பிரம்ம பூஜையும் கிடையாது. சிலை வணக்கத்தை எதிர்த்த "ப்ராஹ்ம்"முக்கு கோவில் கட்டக் கூடாது எனும் தார்மீக நியதியும் தருமமும் உண்மையிலே பிரமிக்க வைக்கிறது.

ஆக, அல்லாஹ்வின் இல்லம் என்றழைக்கப்படும் கஃபாவை கட்டி "ப்ராம்(அலை)" காட்டிய சத்தியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அனைவருமே இப்ராமின்ஸ்தான்(அதாவது இப்ராம்(அலை) வழியில் நடப்பவர்) என்பதில் சந்தேகமென்ன?
smubarak
சரியான பதில்
salim malik
நாங்கள் சமுதாயத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தால் கூட மாட்ரு மத்த்திர்கு மாற மாட்டோம்.
ஜெகதீஸ்
தலித்தும் இசுலாமியர்களும் ஒன்றினைய வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. இசுலாமியர்கள் தங்களுடைய இல்லப் பெண்களை தலித்துகள் திருமணம் செய்து கொடுத்தாலே தலித் இசுலாமியம் வெகு சிறப்பாக ஒன்று சேர்ந்துவிடும்.

இசுலாத்தில் இருக்கின்ற ஆண் நான்கு திருமணம் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதி அளி்த்திருக்கிறார் அல்லவா, அந்த நான்கில் ஒன்று தலித்தாக இருக்குமாறு பார்த்துக் கொண்டால் இன்னும் சரியாக தலித் இசுலாம் சாத்தியமாகிவிடும்.

தம்பதியினருக்கு என் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.