தொடர்புடைய படைப்புகள்

மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சார்ந்த ஒரு பட்டதாரி பெண், தன்னை நரபலி தரப்போகிறார்கள் என தனது குடும்பத்தினரிடம் பயந்து பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு வந்துள்ளார். மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, அவரை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஒப்படைத்து, நீதிபதி உரிய பாதுகாப்பு வழங்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார். அரசு வழக்கறிஞரும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். தமிழ்நாடு தான் தன்னைப் பாதுகாக்கும் என்று தமிழ்நாடு வந்ததாக அந்தப் பெண் கூறி உள்ளார். ஆர்.எஸ்.எஸ் குடும்பம், சொந்த மகளை நரபலி தருகிறது; பெரியார் மண் அவரை காப்பாற்றுகிறது. இதுதான் தமிழ்நாடு; இதுதான் பெரியார் மண். சங்கிகளே என்ன சொல்லப் போகிறீர்கள்?

விஞ்ஞானிகள் கடும் கண்டனம்: மருத்துவ சோதிட வகுப்பைத் தொடங்குகிறது மருத்துவக் கவுன்சில்

ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் ‘மருத்துவ சோதிடம்’ என்ற புதிய வகுப்பை இந்திய மருத்துவக் கட்டமைப்புக்கான தேசிய கவுன்சில் உருவாக்கியுள்ளது. இதற்கு ‘அறிவியல் கழகம்; தடைகள் தகர்ப்பு’ என்று விஞ்ஞானிகள் - அறிவியலாளர்களைக் கொண்ட அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வானத்திலுள்ள கிரகங்கள் மனித உடல்கள் மீதும் உணவியல் மீதும் தாக்கத்தை உருவாக்குகிறது என்பது அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கை. இந்த மூட நம்பிக்கைகளை அறிவியல் பாடத்தில் சேர்ப்பது கண்டனத்துக்குரியது என்று அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த வகுப்புக்கு இதுவரை 1000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மருத்துவ அறிவியல் பயிலும் மாணவர்களை மூடநம்பிக்கைகளில் ஆழ்த்தும் இந்த வகுப்பு, இந்திய கல்வி முறையை மதிப்பிழக்கச் செய்து நாட்டுக்கு கேடு விளைவிப்பதாகி விடும். இந்த கேலிக் கூத்து நாடகங்களை குடிமக்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடாது; எதிர்க்க வேண்டும் என்று அறிவியல் கழகம் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.