அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில் பெயரில், அந்தக் கோயிலின் அர்ச்சகர்களே போலி இணையதள முகவரிகளை உருவாக்கி பக்தர்களிடமி ருந்து ரூ. 20 கோடி அளவுக்கு கொள்ளை யடித்த சம்பவம் நடந்துள்ளது. கல்புர்கி மாவட்டம் அப்சல்பூரில் இருக்கும் தாத்தரேயா கோயில் தென் னிந்தியாவில் பிரசித்தி பெற்ற கோயில் களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கோயிலில் இளம் அர்ச்சகர்களாக பணிபுரிந்து வந்த வல்லப் பூஜாரி, அன்குர் பூஜாரி, பிரதிக் பூஜாரி, கங்காதர் பூஜாரி மற்றும் சரத் பட் ஆகிய 5 பேர், சிறப்பு பூஜைக்கு ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் இதற்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி பக்தர்களிடம் பணவசூல் செய்து வந்துள்ளனர். கோயிலுக்கு என்று இருக்கும் அதிகாரப் பூர்வ இணையதளத்தின் ‘லிங்கை’ப் பகிராமல், தாங்கள் தனியாக உருவாக்கிய இணையதளத்தின் ‘லிங்கை’ப் பகிர்ந்துள்ளனர். இந்த வகையில் 5 அர்ச்சகர்களும் கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 20 கோடி ரூபாயைச் சுருட்டியுள்ளனர். கோயில் இணை ஆணையர் யஷ்வந்த் குருகர் இந்த முறைகேடுகளைத் தற்போது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த நிலையில், அர்ச்சகர்கள் 5 பேரும் தற்போது தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

***

கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு ஏழ்மையை ஒழிக்க முடியுமா?

பொருளாதார ஏழைமை, செல்வ பேதம் ஒழிய வேண்டுமானால் அவைகளின் உற்பத்தி ஸ்தானம், அதாவது தோன்றுமிடமும், காப்பு இடமும் ஒழிக்கப்பட வேண்டும். ஏழைமைக்கும் செல்வத்திற்கும் கர்த்தாவும், காவலும் கடவுளாய் இருக்கிறது. அப்படிப்பட்ட கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு, அல்லது அக் கடவுள் ஆணைக்கு அடங்கினவனாய் இருந்து கொண்டு, கடவுள் தன்மையை - செயலை - கட்டளையை நீ எப்படி மீற, சமாளிக்க, தாண்ட முடியும் என்று சிந்தித்துப் பார்.

அதனால்தான் மனித சமுதாய சமத்துவத்திற்கும் மதம் ஒழிக்கப்பட வேண்டியது எப்படி அவசியமோ, அதுபோல் பொருளாதார சமத்துவத்திற்கும், அதாவது பொருளாதாரச் சமத்துவம் வேண்டுமானால் பொருளாதாரப் பேதத்துக்கும் பேதத் தன்மைக் காப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்ற கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

(பெரியார், ‘குடி அரசு’ - 10.03.1945)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.