கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: நீட் போராட்டத்தின் நியாயத்தை உணராமல் மாணவர்களை வாட்டி வதைக்கிறது ஜோசப் விஜய் அரசு. நீட் தேர்வை எதிர்க்கிறோம் என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போராடிய மாணவர்களைத் தாக்கியது மட்டுமல்ல; போராட்டத்தை நீர்த்து போகச் செய்யும் பணியைத் தனது அமைச்சர்களைக் கொண்டு செய்கிறார்.

மாணவர் போராட்டத்தைத் திசை திருப்பி ஜூலை 23-ம் தேதி வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை கோலாகலமாக கொண்டாடுங்கள் என ஒரு அமைச்சர் அறிக்கை கொடுக்கிறார். ஜூலை-22ம் தேதி இரவு தமிழ்நாடு முழுவதும் திரையரங்கம் முன்பு தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்கள் பாலாபிசேகம் செய்வதும் 150 ரூபாய் டிக்கெட்டை 1000, 1500-க்கு வாங்கி செல்வதுமான அவலநிலையைக் காண முடிந்தது. முற்போக்கான மாநிலம் தமிழ்நாடு என்றும் அது உரிமைகளுக்கு முதலாவதாக போராடும் என்ற வரலாற்றை மாற்றி தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்களைத் தற்குறிகளாக மாற்றும் வேலையை ஜோசப் விஜய் அரசு செய்கிறது.

வடமாநிலங்களைப் பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என வசை பாடினோம் அவர்கள் தங்கள் உரிமைக்காக உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் குத்தாட்டம் போட வைக்கிறது இந்த அரசு. தூய்மைப் பணியாளர் போராட்டத்தின் போது மேனாள் முதலமைச்சர் கூலி படம் பார்க்கப் போகலாமா? என கேட்ட அன்றைய நடிகர் ஜோசப் விஜய் இன்று முதலமைச்சர் ஆன பின்பு ஜனநாயகன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு அமைச்சர் திரைப்படம் பார்க்க விடுமுறை கேட்கிறார், கல்வியில் முன்னணி மாநிலமான தமிழ்நாட்டை விஜய் அரசு கீழ் நோக்கி இழுத்துச் செல்கிறது. தமிழ்நாட்டின் அமைச்சரவை இன்று திரையரங்கில் சென்று கேக் வெட்டுவதும் திருவிழா போன்று தான் வகிக்கும் பொறுப்பை மறந்து கூத்தடிக்கிறார்கள். அமைச்சர்கள் திரைப்படம் பார்க்கக் கூடாது என்பதல்ல; ஒரே நாளில் அனைத்து அமைச்சர்களும் திரைப்படம் காண திரையரங்கில் கிடப்பது தமிழ் மக்களைத் திசைதிருப்பும் செயலாகும்.

புதிதாக எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் முந்தைய அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றம் செய்யும் பணியை மட்டுமே செய்யும் இந்த மைனாரிட்டி குதிரை பேர அரசு தமிழ்நாட்டின் இளைஞர்கள் மாணவர்களைத் தவறாக வழி நடத்துவதைக் கண்டிக்கிறோம்.dvk against neetகழகத் தோழர்கள் போராட்டம் - நீட் தேர்வை நீக்கு

கோவையில்: ஜூலை-22 அன்று அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கோவை மாவட்டக் கழகம் சார்பில் மாநகரச் செயலாளர் வெங்கட் கண்டன உரை ஆற்றினார்.

ஜூலை-26, அன்று மாலை 5 மணி அளவில் கோவை காந்திபுரம் பகுதியில் அனைத்துக் கட்சிகள் சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்களுடன் எழுச்சியோடு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது கோவை மாவட்டக் கழக தோழர்கள் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் பங்கேற்றனர்.

சேலத்தில்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் அனைத்து இந்திய இளைஞர்கள் அனைத்து இந்திய மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் ஜூலை 22, 2026 முதல் ஜூலை-24 வரை சேலம் மாவட்டம் தொடர்வண்டி நிலையம் அருகில் நடைபெற்றது. இரண்டு நாள் காத்திருப்பு போராட்டத்தில் சேலம் மாவட்டச் செயலாளர் டேவிட், தோழர்கள் சுதர்சன் மற்றும் ஆனந்தி கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சியில்: நீட் முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் செய்து வருகிற மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கி வருகிற ஒன்றிய அரசைக் கண்டிக்கிறோம்! நீட் முறைகேடுகளுக்குக் காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானே பதவி விலகு! எனும் முழக்கங்களோடு பொள்ளாச்சியில் ஜூலை-24, வெள்ளி மாலை 04 மணிக்கு காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொள்ளாச்சி கழகத் தோழர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

தி.க, திஇதபே, ததேவிஇ, திமுக, கொமக, தபுக, தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம், கல்லுரி மாணவர்கள் என பல்வேறு தோழமை இயக்கத் தோழர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

வேலூரில்: குடியாத்தத்தில் நீட்டை முற்றிலும் தடை செய்! கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்டக் கழகம் சார்பாக ஜூலை-26, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் இரா சிவா, தெருவிளக்கு கோபிநாத், அமல்ராஜ் அம்மாசி, பால குமரன் பார்த்தி ராஜி பாஸ்கர் செல்வகுமார் ஜெய்குமார், திரு.புரட்சி, திராவிடப் பாண்டியன்,ஜெய்பீம் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

சென்னை: ஜூலை-22, அன்று மாலை 4:30 மணிக்கு, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு தலைமையில், தோழர்கள் ஷர்மிளா - குடிஅரசு ஆகியோர் முன்னிலையில், சென்னை சிம்சன் பெரியார் சிலை அருகே, கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், அசாருதீன் (பூவுலகின் நண்பர்கள்), இரண்யா, ஆதன் (தமிழ்நாடு மாணவர் கழகம்) ஆகியோர் கண்டனவுரையாற்றினர். இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

பாலன் இல்லத்தில்: ஜூலை-24,2026 அன்று காலை 10:30 மணிக்கு, சென்னை தியாகராய நகர் பாலன் இல்லத்தில், கரப்பான்பூச்சி கட்சியினர் நீட்டை எதிர்த்து நடத்திவரும் போராட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மைனர் (யூ2 புரூடஸ் வலையொளி), பங்கேற்று கண்டனவுரையாற்றினர். கு. அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்),ஆ. வ. வேலு (மாவட்டத் துணைச் செயலாளர்), பகுதிக்கழக நிர்வாகிகள், தோழர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

புதுப்பேட்டை: நீட்டைத் தடை செய்யக்கோரி, தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், பல்வேறு இயக்கங்கள் இணைந்து, ஜூலை-26,2026 மாலை 4 மணிக்கு, புதுப்பேட்டை லாங்க்ஸ் கார்டன் சாலையில் பேரணி நடைபெற்றது. பேரணியைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்தினர். பேரணியில் 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், முற்போக்கு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மருத்துவர் எழிலன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, மே-17 நிறுவனர்.திருமுருகன் காந்தி, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜ், ஊடகவியாலளர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.

தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மா. வேழவேந்தன் ( மாவட்டத் தலைவர்), மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி‌. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஆ.வ. வேலு, இராவணன், ப. அருண் (இளைஞரணி அமைப்பாளர்), பேரன்பு (தமிழ்நாடு மாணவர் கழக சென்னை ஒருங்கிணைப்பாளர்), இளவரசன் (அமைப்பாளர் தமிழ்நாடு மாணவர்கழகம்), சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), பகுதி அமைப்பாளர்கள் த.நா. சூர்யா, ராஜன், மயிலை தோழர்கள்: மனோகர், சிவா, ப்ரவீன் ஏகேஎஸ், பிரசாந்த், ஷர்மிளா, கார்த்தி ராஜேந்திரன், சு. பிரகாஷ், கக்காஷி, இரண்யா, பரணி, மகிழவன், ஹரி, தினகரன், இளவரசன், மஞ்சுநாதன், பண்பாளன், சஞ்சய், தீபக், செந்தில், செல்வன், அஜய் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.