தொடர்புடைய படைப்புகள்

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் 89400 க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடியுள்ளனர். இதில் 60 விழுக்காடு டபுள் இன்ஜின் சர்க்கார் என்று சொல்லப்படுகிற பாஜக ஆளும் மாநிலங்களில் தான்.

மத்தியிலும் நாங்கள் தான் மாநிலத்திலும் நாங்கள் தான் என்று கூப்பாடு போடுகிறவர்கள் ஆட்சியிலே பள்ளிகளை மூடி வருகின்றனர். இதே வேளையில் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் 2,72,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

PM SVANidhi சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 கோடி குழந்தைகள் பள்ளி கல்வி கட்டமைப்பில் இருந்து தங்களை விடுவித்துள்ளனர். ஆக கல்வி கட்டமைப்பை சீர்குலைத்து மீண்டும் இளைஞர்களை குழந்தைகளை, பெண்களை உடல் உழைப்பு சந்தைக்கு தள்ளுகிற வேலையை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

பள்ளிகள் ஏன் மூடப்படுகின்றன என்று கேள்விகள் கேட்டால் குறைவான குழந்தைகளே படிக்க வருகிறார்கள் என்று காரணத்தைச் சொல்கிறார்கள். நாங்கள் பள்ளிகளை மூடவில்லை மற்ற பள்ளிகள் உடன் இணைக்கின்றோம் என்று பதிலளிக்கிறார்கள்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.