தொடர்புடைய படைப்புகள்

சாதி, மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள், ஆணாதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் என அனைத்து வித இழிவுகளிலும் புதையுண்டு கிடந்த சமூகத்தை அவை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்து தன்மதிப்பு, சகோதரத்துவம், சமத்துவமுடைய ஒரு சமூகமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த ஒரு மனிதர் பெரியார். தனது 95 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணியில் ஈடுபட்டிருந்தவர் அவர்.

ஈ.வெ.ராமசாமி நாயக்கராக பொது வாழ்வில் நுழைந்து, அனைவராலும் வேறுபாடின்றி 'பெரியார்' என்று ஏற்றுக் கொள்ளப்படும் நிலைக்கு அவர் உயர்ந்தது ஓரிரவில் நடந்த மாயம் அல்ல.

periyar_403ஆதிக்க சாதியை சேர்ந்ததாக அறியப்பட்ட ஒரு குடும்பத்தில் ஆணாகப் பிறந்து தன் நேர்மையான பார்வையாலும் சுயசிந்தனையாலும் சாதி ஆதிக்கத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக இறுதி வரை அவர் உறுதியாக நின்று போராடினார் எனில் அவர் கடந்து வந்த பாதை நிச்சயம் அத்தனை எளிமையானதாக இருந்திருக்க முடியாது. இன்றைய சமூகத்தில் எளிதாக உள்வாங்கப்படுகிற எத்தனையோ முற்போக்கான செயல்களுக்கு வித்திட்டவர் அவரே. இன்றளவிலும் சமூகத்தால் சகித்துக் கொள்ள முடியாத முற்போக்கான சிந்தனைகளை ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பே பழமையில் ஊறிப் போன அன்றைய சமூகத்தின் முன் துணிச்சலுடன் வைத்தவரும் அவரே.

பெரியார் ஒரு சுய சிந்தனையாளர் மட்டுமல்ல; இன்று இச்சமூகம் ஓரளவேனும் சுயசிந்தனையும் சுயமரியாதையும் உள்ள ஒரு சமூகமாக வளர்ச்சிப் பெற்றிருக்கிறது எனில் அதற்கு அவரது அயராத உழைப்பே முக்கிய காரணம்.

தனது சிந்தனைகளை அவர் பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார்.

பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும் வாய்ப்பாகவே பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் குடி அரசு தொகுப்பு விளங்குகிறது. இதுவும் பெரியாரின் வாழ்க்கை வரலாறுதான். ஆனால் சம்பவ‌ங்களால் கோர்க்கப்பட்ட வரலாறு அல்ல; கருத்துக்களால் கோர்க்கப்பட்ட வரலாறு.

அந்த வரலாற்றைத் தொகுத்து 1925 முதல் 1938 வரையிலான குடி அரசு இதழ்களை 27 தொகுதிகளாக வெளியிட்டு ஒரு பெரும் பணியை பெரியார் திராவிடர் கழகம் செவ்வனே செய்து முடித்து விட்டது. அதை மக்களிடம் கொண்டு செல்லும் பணி பெரியார் திராவிடர் கழகத்திற்கு மட்டுமே உரியதல்ல. அந்தப் பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனெனில் பெரியார் மக்களுக்கு உரியவரே அன்றி எந்த ஒரு தனி கட்சிக்கு மட்டும் உரியவரல்ல. இதனை வலியுறுத்தியே பெரியார் திராவிடர் கழகம் பெரும் சட்டப் போராட்டத்தை நடத்தி இந்நூல்களை வெளிக் கொணர்ந்துள்ளது.

வெறும் நோக்கு நூலாகவோ, அலங்காரமாக அடுக்கி வைக்கவோ அல்லது இதன் மூலம் பணம் சம்பாதிக்கவோ இந்நூல்கள் வெளியிடப்படவில்லை. இன்றைய சமூகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள சாதி, மத இழிவுகளை ஒழிக்க மீண்டும் மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார் என்ற பேருண்மையை உணர்ந்து இன்றைய தலைமுறையினருக்கு அவரை, அவரது கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன; இலவசமாக இணையத்தில் தரப்பட்டுள்ளன.

10,000 பக்கங்களுக்கு மேலாக இருக்கக் கூடிய குடிஅரசு தொகுப்புகள் முழுவதையும் படிக்க பலருக்கு மலைப்பாகத் தோன்றக் கூடும். அந்த பணியை எளிதாக்கவே கீற்று 'பெரியாருடன் ஒரு பயணம்' நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து தோழர்கள் நம்மை பெரியாருடன் பயணிக்க வைக்க இருக்கின்றனர். சாதி, மதம், பாலினம், வறுமை என அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிய பெரியாருடனான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லக் கூடியவர்களாக அந்த ஒடுக்குமுறைகளுக்கு ஆளான சமூகத்தின் தோழர்களே வருகின்றனர்.

தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரையும் குழந்தை போல நேசித்த அந்த கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!

பெரியாருடன் ஒரு பயணம்
(1925 -‍ 1938 குடிஅரசு தொகுப்புகளின் வழியே)

நாள்: 18.09.2010, சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை: பாஸ்கர், கீற்று ஆசிரியர் குழு

குடிஅரசு இதழ் தொகுப்பு:

1925 -‍ 1926: ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
1927 ‍- 1929: எழுத்தாளர் ஓவியா
1930 - 1932: எழுத்தாளர் அழகிய பெரியவன்
1933 - 1935: எழுத்தாளர் பூங்குழலி
1936 - 1938: பேராசிரியர் ஹாஜா கனி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ரிவோல்ட் ஆங்கில இதழ் தொகுப்பு: விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்புரை: கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

நன்றியுரை: பிரபாகரன், கீற்று ஆசிரியர் குழு

 அனைவரும் வருக!!

தொடர்புக்கு: பாஸ்கர் - 9884499357

Comments

15 comments

15
Dr.Thirumugam
நன்றி 'கீற்று' இணயத் தள பொறுப்பாளர்களே, தோழர்களே!

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!
Murugesan S
very good and much needed event. I will attend for sure.
dhinakaran
good................thanks .....!
villavan
தமிழ்ச்செல்வன் சிபிஎம்மில் இருக்கிறார். அவரது சிபிஎம் கட்சி மதானியை கைது செய்ய உதவியிருக்கிறது. மதானியை கடுமையாக தற்போது எதிர்க்கிறது. மதானிக்கு ஆதரவாக தமுமுக கூட்டம் போடுகிறது. இரண்டு பேரும் இந்த மேடையில் *******. *****
kannan
பெரியாரை பற்றி ஓவராக புகழக்கூடாது அவருக்கு அதற்க்கான தகுதியும் இல்லை சும்மா இட ஒதுக்கிடு பற்றி பேசியே பொழுதை ஓட்டக்கூடாது இன்று ஜாதி வேறுபாடு அதிகம் பார்பவர்கள் உங்களை போன்றவர்கள் தான் கீற்று வின் பார்வையே குறுகிய பார்வை இதற்க்கு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் பார்வையை விசாலமாக்க வேண்டும் என்பது கண்டிப்பான தேவை
விஷ்வா
thangalin sevaiku nanri
தமிழ்நாடன்
வணக்கம் தோழர்களே,
மிக அரிய பணியினைத் தொடங்கியுள்ளீர்கள், இப்பயணம் தமிழகம் முழுதும் உலகம் முழுமைக்கும் பயணப்பட வேண்டுமென்பதே எனது ஆவல்.
நன்றி, வாழ்த்துக்கள்
saravanan
Mr.Kannan, it is because of Periyar, Kamaraj and Karunanithy who belong to backward community could come to such a highest level. Without Periyar Tamil Nadu politics can not be taken forward. The social status of downtradden people that is being enjoyed now is only because of Periyar.
re ka balamurugan
நல்லதொரு முயற்சி. இன்றைய சூழலில் பெரியார் போன்ற தலைவர்களின் பணியினையும் அவரால் விளைந்த நன்மையினால் நாம் பெற்ற வளர்ச்சியையும் நமது கல்லூரியில் பயிலும், பள்ளிப் படிப்பை முடிக்கும் தறுவாயிலுள்ள மாணவ மாணவியரிடம் கொண்டு செல்வது இன்னும் நலம் பயப்பதாயிருக்கும். வேர்களை மறந்த மரங்களாய், செடிகளாய் நாம் மாறி வருவது மிகவும் வருந்தத் தக்கது. அதற்கான முயற்சியிலும் கீற்று ஈடுபட வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
நெற்றிக்கண்
இணையத்தில் தொகுப்பு அல்லது நேரடி ஒளிபரப்பு உள்ளதா, முகவரியை தெரியபடுத்தவும் , நன்றி
SARAVANAKUMAR
Nalla muyarchi..
Uthave thevaipattal allaikaum.

nantri...

valthugal...
இறைகற்பனைஇலான்
தோழர்க்கு வணக்கம். தங்களின் காலத்தாலான முயற்சி சிறப்பானது. வாழ்க பெரியார். வெள்க தமிழகம்.
rishi
periyar is a weapen against all type of viruses in our society.
Pasu.Gowthaman
periyaarutan oru payanam sirappaanathoru muyarsi .

vetriperum,vaazhthukal.

tamizhcelvan, CPM thaan... antha cpmmin barathi puththagaalayam thaan yennudaiya' E VE RAMASAMI YENKINRA NAAN ' thokuppinai
veliyittullathu.

kutiarasu thokuppil pangerravan yenramuraiyil mindum payanam verripera
vaazththukiren.
SURESUKUMAR
thozharukku vanakkam
thangalin "keettru'-vin muulam tamil mozhi valarvatharkku miga ariya paniI thodangiullirgal. payanam sirakka valtthukkal nanri
tamil valga valarga

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.