சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்து எஸ்.பொ. அவர்கள் எழுதிய கட்டுரை தொடர்பாக அம்மாநாட்டின் அமைப்பாளர் முருகபூபதி, கீற்று ஆசிரியர் குழுவிற்கு அனுப்பிய மின்னஞ்சல்:

13-08-2010

ஆசிரியர்

கீற்று இணைய இதழ்

தமிழ்நாடு 

அன்புடையீர் வணக்கம்.

 தங்களின் கீற்று இணையத்தளத்தில் (07-ஆகஸ்ட்2010) நாம் இலங்கையில் அடுத்த ஆண்டு (2011 ஜனவரி 6,7,8,9 ஆம் திகதிகளில்) நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக அவதூறான செய்தி பரப்பப்பட்டிருக்கிறது.

  இந்த மகாநாடு சிலவருடங்களுக்கு முன்னரே ஆலோசிக்கப்பட்ட கலை, இலக்கிய செயற்திட்டமாகும். அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் முருகபூபதியாகிய நான்,  இந்த நிகழ்வை நடத்தும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபகர்.

murugaboopathyஇலங்கையிலும் பல வெளிநாடுகளிலும் வதியும் தமிழ்  எழுத்தாளர்களினது வேண்டுகோளுக்கிணங்கவே இந்த சர்வதேச ஒன்றுகூடல் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பலரதும் ஆலோசனைகளைப் பெற்று கடந்த 03-01-2010 ஆம் திகதி இலங்கையில் கொழும்பில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் சுமார் 120 பேரளவில் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினேன். இக்கூட்டத்தில் படைப்பாளிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொழும்பில் வெளியாகும் வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய தமிழ்த்தேசிய நாளிதழ்களின் ஆசிரியர்கள் மற்றும் மல்லிகை, ஞானம், கொழுந்து, செங்கதிர் முதலான சிற்றிதழ்களின் ஆசிரியர்கள் பயிற்சிப் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். இதுபற்றிய விரிவான செய்திகள் பல ஊடகங்களில் கடந்த ஜனவரி மாதமும் அதன் பின்னரும் வெளியாகியிருக்கிறது.

 தமிழ்நாட்டில் இனிய நந்தவனம் மற்றும் யுகமாயினி இதழ்களிலும் விரிவான செய்திகள் பிரசுரமாகியுள்ளன.

  இம்மகாநாடு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா ஆகிய நகரங்களிலும் விரிவான ஆலோசனைக் கூட்டங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் நான் கலந்துகொண்டது சம்பந்தமான செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தன. சமீபத்திலும் மகாநாட்டு இணைப்பாளர் தலைமையில் இப்பகுதிகளில் கூட்டங்கள் நடந்துள்ளன. விரைவில் மலையகத்தில் ஹட்டன் நகரத்தில் மற்றுமொரு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளி மலையக எழுத்தாளர்கள், கலைஞர்களும் இம்மகாநாட்டில் பங்கேற்று கருத்தரங்குகளில் தமது கட்டுரைகளை சமரப்பிக்கவிருக்கின்றனர்.

  இம்மகாநாடு முடிந்த பின்னர் இலங்கை மலையகத்தில் பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழக வளாகம், கிழக்கு பல்கலைக்கழகம், தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் கலை, இலக்கிய கருத்தரங்குகள் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டு குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வளாக முதல்வர், கலைப்பீட பேராசிரியர்கள் ஆகியோரது சம்மதமும் பெறப்பட்டுள்ளது. இந்த மகாநாட்டினால் தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களும் பயனடையத்தக்க விதமாகத்தான் நிகழ்ச்சி நிரல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

 இந்த மகாநாடு அரசியல் சார்ந்தோ இலங்கை அரசாங்கம் சார்ந்தோ நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படவில்லை என்பது இக்கூட்டங்களில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்கு தெரியும். ஊடகங்களுக்கும் தெரியும்.

 12 அம்ச கலை, இலக்கியம் , கல்வி சார்ந்த  யோசனைகளை முன்வைத்தே நாம் இந்த மகாநாட்டை கூட்டுகின்றோம்.

இந்த மகாநாட்டிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. எழுத்தாளர்களினதும் இலக்கிய ஆர்வலர்களினதும் சமூகநலன் விரும்பிகளினதும் நிதிப்பங்களிப்புடன்தான் இம்மகாநாடு நடைபெறவிருக்கிறது.

 அப்படியிருக்க தங்களது கீற்று இணைய இதழில் மகாநாட்டு அமைப்பாளரான என்னையும் என்னோடு இணைந்து பணியாற்றவுள்ள கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் கேவலப்படுத்தும் விதமாகவும் எமக்கு எதிராக அவதூறு பரப்பும் விதமாகவும் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் திரு. எஸ்.பொன்னுத்துரை அவர்கள் கருத்துக் கூறியிருக்கிறார்.

அமைப்பாளராகிய நான் இலங்கை அதிபர் திரு. ராஜபக்ஷ அவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மகாநாடு நடத்துவதாக தங்களது கீற்று இதழில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

நான் ஒரு இருதய நோயாளி. சில வருடங்களுக்கு முன்னர் பைபாஸ் சத்திர சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றேன். கடந்த சில வருடங்களாக மருந்து மாத்திரைகளுடன்தான் எனது வாழ்க்கை நடக்கிறது.

 1972 ஆம் ஆண்டு முதல் நான் எழுத்தாளனாக இலங்கையில் நன்கு அறியப்பட்டவன். வீரகேசரி நாளிதளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கின்றேன். அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னரும் எனது இலக்கியப்பணி இதழியல் பணி தொடர்கிறது. நான் ஒரு படைப்பாளி அத்துடன் பத்திரிகையாளன். இதுவரையில் 18 நூல்கள் எழுதியிருக்கின்றேன். இரண்டு நூல்களுக்கு சாகித்திய விருதுகளும் பெற்றுள்ளேன். பல நாடுகளுக்கும் பயணித்து பயண இலக்கியங்கள் எழுதியிருக்கின்றேன். நான் அவுஸ்திரேலியாவிலிருந்துகொண்டு மேற்கோள்ளும் பல சமூகப்பணிகளுக்காக 2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தினத்தின்போது சிறந்த பிரஜைக்கான (Australian Citizen Award 2002) விருதும் பெற்றுள்ளேன். அத்துடன் அவுஸ்திரேலியாவில் சில தமிழ் சமூக அமைப்புகளினதும் விருதுகளையும் பெற்றுள்ளேன். தமிழ்ச்சமூகத்தில் மிகுந்த கவனிப்புக்குள்ளாகியிருக்கும் எனக்கு, கீற்று இணைய இதழ் ஆசிரியரான தாங்களும் திரு. எஸ்.பொன்னுத்துரையும் அபகீர்த்தி ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

  தங்களது கீற்று இதழில் என்னைப்பற்றியும் நான் ஒழுங்குசெய்துள்ள சர்வதேச எழுத்தாளர் மகாநாடு பற்றியும் அவதூறாக எழுதப்பட்டிருப்பதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றேன்.

தங்களது கீற்று இதழில் என்னைப்பற்றியும் எனது மகாநாட்டுப்பணி பற்றியும் மிகவும் அவதூறாக எழுதியுள்ள திரு. எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரைக்கும் தங்களது கீற்று இணைய இதழுக்கும் எதிராக நான் மானநட்ட வழக்கு தொடருவதற்கு தீர்மானித்துள்ளேன். இதுசம்பந்தமாக நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

தங்களது குறிப்பிட்ட கீற்று இதழ் அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் 24 மணிநேர ஒலிபரப்புச்சேவையான இன்பத்தமிழ் ஒலி வானொலியில் கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு கருத்துக்களம் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, மேலும்  பல நேயர்களினால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றேன். இதற்கெல்லாம் காரணம் தாங்களும் தங்கள் இதழும் திரு.எஸ்.பொன்னுத்துரையும்தான் என்பதை மிகுந்த வேதனையுடன் அறியத்தருகின்றேன்.

எனவே மானநட்ட வழக்கு தொடருவதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்திய நாணயத்தில் பத்துக்கோடி ரூபா நட்ட ஈடுகோரி தங்களுக்கும் திரு. எஸ்.பொன்னுத்துரைக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருக்கின்றேன்.

இக்கடிதத்தை சுயசிந்தனையுடனும் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு தங்கள் இருவராலும் நேர்ந்த அபகீர்த்தியினாலும் எழுதுகின்றேன்.

முருகபூபதி

அமைப்பாளர்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011

முகவரி: 170, Hothlyn Drive, Craigieburn, Victoria 3064, Australia

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

********

மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை: கீற்று நந்தன்

மதிப்பிற்குரிய முருகபூபதி அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் கீற்று ஆசிரியர் குழுவுக்கு அனுப்பியுள்ள மேற்கண்ட மின்னஞ்சலைக் கண்டோம். அதில் தாங்கள் கீற்று மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். கீற்று இணையதளம் அனைத்துவிதமான சிந்தனைகளுக்குமான ஒரு வெளியாகத் திகழ்கிறது. கீற்றில் வெளிவரும் கட்டுரைகள் படைப்பாளிகளின் சிந்தனையைச் சார்ந்தே வெளிவரும் கருத்துக்களாகும். இதில் கீற்றிற்கு எவ்வித தனிப்பட்ட நலனும் ஆர்வமும் இல்லை. இதுபோன்ற மின்னஞ்சல்களை எமது கருத்துச் சுதந்திரத்திற்கான மிரட்டலாக நாங்கள் உணர்கிறோம்.

உலக நாடுகளினால் ‘போர்க்குற்றம் நடந்தது’ என அறிவிக்கப்பட்ட நாட்டில் நிகழும் ஒவ்வொரு பொதுநிகழ்வும் அரசியல் தன்மை கொண்டதாகவே கவனிக்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. அத்தகைய நிகழ்வுகளின் மீதான விமர்சனத்தை முன்வைப்பதற்கு மனித உரிமைகளில் ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களுக்கும் அதை வெளியிடுவதற்கு கீற்று மாதிரியான ஊடகங்களுக்கும் உரிமை இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும், மனித உரிமையாளர்களுக்கும் இன்னமும் இலங்கையில் நுழைய அனுமதி மறுக்கிற சிங்கள அரசின் ஆதரவில்லாமல் இலங்கையின் தலைநகரில் எவ்விதக் கூட்டமும் நடத்திட முடியாது என்பது அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்ததே. இந்நிலையில் தங்களது அமைப்பின் அறிவிப்பும் மாநாடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதைத் தாங்கள் ஏற்கனவே அறிந்தே இருப்பீர்கள். அப்படியிருக்கும்போது மதிப்பிற்குரிய எஸ்.பொ. அவர்களின் விமர்சனத்தால் மனவுளைச்சலுக்கு ஆளானேன் என்று கூறுவது பொருத்தமற்றது.

மேலும் அக்கட்டுரையில் எஸ்.பொ. அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிரான எதிர்வினை ஆற்ற வேண்டுமாயின், கீற்று இணையதளத்திற்கு நீங்கள் தாராளமாக அனுப்பலாம். அவற்றையும் நாங்கள் வெளியிடத் தயாராக இருக்கிறோம். மற்றபடி, தங்களையோ, தங்கள் அமைப்பையோ  தனிப்பட்ட முறைமையில் தாக்க வேண்டிய அவசியம் கீற்று இணையதளத்திற்கு இல்லை. பத்து கோடி ரூபாய் மானநட்ட வழக்கு தொடர்வேன் என்பதுபோன்ற மிரட்டல்களால் கீற்று போன்ற பொதுவான சிந்தனைவெளியின் செயல்பாடுகளை முடக்க முடியாது. அப்படி வழக்குத் தொடரப்படுமாயின் அதனை சட்டரீதியில் எதிர்கொள்ள கீற்று தயாராகவே இருக்கிறது. எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை.

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

(படம் நன்றி: தினகரன் வாரமஞ்சரி)

Comments

16 comments

16
பகவன்
தம்மைப் பற்றி வந்த கருத்துகளுக்கு விடை சொல்ல முடியாமல் மிரட்டலில் ஈடுபடும் முருக பூபதி போன்றவர்களை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.... 'ஒலித்தக்காலி என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்' என்று அன்றே திருவள்ளுவர் சொல்லிவிட்டார். எனவே கீற்று அஞ்சாமல் தன்னுடைய பணிகளைச் செய்யலாம்.
indian
iyaa muruga boobathy neengal idhaya novaalinnu sonninga inna maathra saapdrennu sollavey illaya
Rishi
It is a well known fact that Murugapoopathy is a supporter of Sri lankan Government. He has visited SriLanka and spoken in support of the Government and against Tamils' freedom struggle & LTTE. Can he deny this? If he is not a suppoter of the Sri lankan government wiill he condemn the atrocities of the Sri lankan government committed up to now, through keetru, openly.

All his friends - writers - are anti LTTE and supporters of the Sri lankan government. Whole world knows this.
seelan jeya
முருகபூபதியின் குழுவினர்' மாற்றுக் கருத்துஇ பன்முகத்தன்மை ' என்று எப்போதும் உரத்துக் கத்துபவர்கள். எனவே தமது நியாயங்களை முன்வைப்பதே சரியானது.10 கோடி ருபா நட்டஈடு கேட்பது தர்மமல்ல! ஏனெனில் அதனைக் கட்டவிழ்ப்புச் செய்தால் - 'கப்பம் கோரல்' என்றுதான்வரும்!
அவரிடம் இரண்டு கேள்விகள் ...
1 . மானுடநேசத்தைக் கொண்டது இலக்கியம். எனவே அதைப் படைக்கும் எழுத்தாளர் மாநாட்டில்
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 40,000 தமிழ் மக்;களுக்கு அஞ்சலி செலுத்துவார்களா?
2. ஊடகவியலாளர்களைக் கொலைசெய்துவரும் இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவார்களா?
சர்வசித்தன்
திரு முருகபூபதி அவர்களுக்கு, இந்திய திரை நட்சத்திரங்கள் இலங்கையில் நடைபெறும் ‘விழாக்களில்’ கலந்து கொள்ளக்கூடாது என மனிதாபிமானம் மிக்க அமைப்புகள் தீர்மானம் இயற்றி அதனை வட நாட்டவர்களான அமிதாப் உட்படப் பலர் ஏற்றுக்கொண்டு செயல்பட்டது தங்களுக்குத் தெரிந்தே இருக்கும். ‘கலைஞர்’ அரங்கேற்றிய செம்மொழிக் ‘குடும்ப விழா’வினைக் கூட இன உணர்வும், மனித நேயமும், மானுட தர்மமும் அறிந்தோர் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டதும், உலகத் தமிழர்கள் அதனைப் புறந்தள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததும் தாங்கள் அறியாததல்ல. இப்போதும், போரினால் அகதிகளாக்கப் பட்ட பலர் முகாமகளில் வாடுவதும், அவர்களுக்கு உதவிசெய்வதில் மெத்தனம் காட்டும் இலங்கை அரசு அவசரகதியில் தமிழர் வாழும்,வாழ்ந்த பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதையும் தாங்கள் அறியாததல்ல. இவை பற்றி எதும் தெரியாதவர் போன்று, அங்குள்ள சில அரசு சார்பு அரசியல் கட்சிகளின் ‘பாணி’யில் தாங்களும் வாய் மூடிக் கிடப்பதுவும்,மாபெரும் இனக் கொலை ஒன்று நிகழ்த்தி முடிக்கப்பட்டு அந்த அவலத்தின் பாதிப்பு நீங்குவதற்கு முன்பாகவே ‘உலத் தமிழ் எழுத்தாளர் மாநாடு’ என்னும் பெயரில் விழா நடாத்த முற்படுவதும், ஓர் முன்னாள் பத்திரிகையாளனுக்கோ அல்லது ‘தன்மானம்’மிக்க எழுத்தாள்னுக்கோ ஏற்புடையது என்று தாங்கள் கருதினால், தங்களது இந்தப் புதிய ‘திருவிழா’வைக் கண்டித்து எழுதிய திரு எஸ்.பொ அவர்களும்,அதனை வெளியிட்ட ‘கீற்று’ வும் ‘சுரணை மிக்க’ குற்றவாளிகளே !
Veerasivam
முருக புபதியோ அல்லது வேறு எவரோ, எழுத்தாளர் மகாநாடு நடத்துவதோ அல்லது வேறு ஏதேனும் இலக்கியம் மற்றும் அரசியல்சார் நிகழ்வுகளை நடத்துவதோ ஒரு பிரச்சனைக்குாிய விடயமல்ல. அது அவர்களின் சுதந்திரம் மற்றும் நிலைப்பாட்டுடன் தொடர்புபட்டது. தவிர அவ்வாறானவர்களோ அல்லது வேறு எவருமோ புலிகளை விமர்சிக்க அல்லது எதிர்த்து செயலாற்றுவதும் ஒரு பிரச்சினைக்குாிய விடயமல்ல. அதுவும் அவர்களது சுயாதீனம் மற்றும் அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்புபட்டதாகும். அத்துடன் இப்போது புலிகள் என்று எவரும் இல்லை. இவ்வாறான விடயங்களை வைத்துக் கொண்டு ஒருவரது செயற்பாடுகளை நாம் அளவிடக் கூடாது. இவ்வாறான செயற்பாடுகளை காலம் இடம் பொருள் என்பவற்றை மையப்படுத்தியே விமர்சிக்க வேண்டும். அந்த வகையில் கீற்று இது குறித்து எழுப்பியுள்ள கேள்விகள் நியாயமானதே!

இன்றைய சூழலில் குறிப்பாக மே18, 2009 இற்கு பின்னர் சிறிலங்காவில் நடைபெறும் எந்தவொரு பிரமாண்டமான நிகழ்வுகளும் குறிப்பாக தமிழ் அல்லது தமிழர் குறித்து, அரச காிசனை அல்லது அதன் அனுமதியின்றி எதனையும் எவருமே செய்ய முடியாது. இது மிகவும் வெளிப்படையான ஒன்றும் கூட. அத்துடன் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் எந்தவொரு கருத்தையும் பகிரங்கமாகக் கூறக் கூடிய புறச் சூழலும் தற்போதை கொழும்பின் கீழ் இல்லை. எனவே கொழும்பில் ஒரு எழுத்தாளர் மகாநாட்டை நடாத்துவது குறித்து சிந்திக்கும் போது இது குறித்தெல்லாம் இவ்வாறானவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சிந்திக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

எனவே அவர்களிடம் ஒரு தெளிவான நிகழ்ச்சிநிரல் உண்டு என்ற முடிவுக்கு நாம் வரலாம். இங்கு அரசு என்று நாம் குறிப்பிடும் போது எடுத்தற்கெல்லாம் சிங்கள ஆழும் குழுமம் குறித்து நாம் யோசிக்க வேண்டியதில்லை, டக்லஸ் மற்றும் கருணா போன்றவர்களும் இவ்வாறான நிகழ்வுகளை தங்களது அரசியல் விளம்பரங்களுக்காக நடத்ததலாம், அவர்களே இதற்கான அரசின் ஆசியைப் பெற்றுக் கொடுத்திருக்கலாம். கிழக்கில் இதற்கான கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தவர்கள் பலர் கருணாவுடன் நெருக்கமானவர்கள் என்றே அறியக்கிடைக்கின்றது.

குறிப்பாக அடுத்து வரவிருக்கும் வடக்கின் மகாணசபைத் தேர்தலை இலக்குவைத்து செலாற்றும் டக்லஸ் தனது செல்வாக்கை கூட்டிக் கொள்வதற்கு இவ்வாறான எழுத்து பிரச்சாரகர்களை வாங்கியிருக்கலாம். ஏனெனில் இந்த விழாவின் பின்னனியில் இயங்கும் அவுஸ்ரேலிய நோயல் நடேசன் என்பவர் முன்னர் டக்கலஸின் அழைப்பின் போில் சிறிலங்கா வந்து சென்றிருந்தார் என்பதும் இங்கு நோக்கத்ததக்கது. தமிழக பழைய சூழைமேடு பிரச்சனையால் திணறிப் போயிருக்கும் டக்லஸ் இதில் பங்கு கொள்ளும் தமிழக விபச்சார மண்ணிக் வேண்டும் வியாபார எழுத்தாளர்களை தனக்கு ஆதரவாக திரட்டி ஒரு அபிப்பிராய உருவாக்கத்தை செய்ய முயலலாம். இப்படி பல கோணங்களில் இதனை நாம் பார்க்கலாம்.

அடிப்படையில் இது கலை,இலக்கிய வளர்ச்சி நோக்கிய ஒரு செயற்பாடல்ல. சமீபகாலமாக கொழும்பால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு வகையான உளவியல்சார் அரசியலின் ஒரு பகுதியாகும்.

இதில் என் போன்றவர்களின் கேள்வி என்னவென்றால், இதனை முருக புபதி போன்றவர்களும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஞானம் மற்றும் குழுவினரும் இதனை ஏன் மறைக்க வேண்டும். ஏன் கீறறுவை மிரட்ட வேண்டும்?

இதுதான் எமது நிலைப்பாடு. இவ்வாறு செயலாற்றுவது எங்கள் சுயாதீனத்துடன் தொடர்புபட்டது. நாங்கள் அரசுடன் சேர்ந்துதான் இதனை ஒழுங்கு செய்துள்ளோம் என்பவற்றை பகிரங்கமாகச் சொல்வதில் என்ன சிக்கல். என்ன தடை? எஸ்.பொ எழுதியது குறித்தும் கீற்று அதனை வெளியிட்டது குறித்தும் ஏன் கோபப்பட வேண்டும். இங்கு எவருடனும் எவர் சேர்ந்தும் பணியாற்றுவது ஒரு பிரச்சனைக்குாிய விடயமல்ல ஆனால் அதனை பகிரங்கமாகச் சொல்லுமளவிற்கு முதுகொலும்மை வலுப்படுத்திக் கொள்ளவது அவசியம். முதுகெலும்மை அடைமானம் வைத்திருப்பவர்கள் எவராலும் எதனைமே வெளிப்படையாகவும் நேர்மையாகவும் சொல்ல முடியாது. முதலில் இவ்வறானவர்கள் தங்களது முதுகெலும்பின் உறுதியை சாிபார்த்துக் கொள்வது அவசியம். அத்துடன் அது எங்கேனும் அடகு கைக்கப்பட்டிருந்தால் அதனை முதலில் மீட்டுக் கொள்ள வேண்டும். எனக்குத் தொிந்து இதில் அங்கம் வகிக்கும் பலர் முதுகெலும்பைத் தொலைத்து வெகு நாட்களாகவிட்டது. சிலருக்கு அது பிறப்பிலேயே இல்லை.

இவர்கள் கீற்றுவில் வரும் விமர்சனங்களுக்காக ஒதுங்கிவிடப் போவதுமில்லை. சிலவேளை இதில் ஒரு சிலர் தங்களது முதுகெலும்மை இனங்கண்டு கொண்டால் ஒதுங்கலாம். சிவத்தம்பியும் சில வேளை இதில் கலந்து கொள்ளலாம். செம்மொழி குறித்து எவ்வளவோ வேண்டு கோள்கள் விடுக்கப்பட்டன, விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன அதற்காகவெல்லாம் அவர் என்ன அஞ்சினாரா. அதில் அவர் ஒரு பனம்காட்டு நாி. அது சலசலப்புக்களுக்கு அஞ்சாது.
Vee Ramasamy
நம் மக்களை இனப் படுகொலை செய்த நாட்டில் கூத்தடிப்பதை கண்டிக்க கீற்றுக்கு உரிமை இருக்கிறது . முருகபூபதியின் கடிதத்தில் எந்த நியாயமும் இல்லை. அவர் சொல்லும் காரணங்கள் சுய பரிதாபத்தையும் மிரட்டலையும் கொண்டிருக்கிறது . இலங்கையில் நடைபெறும் சிற்றிதழ் மகாநாட்டைக் நடத்தக்கூடாது. கீற்றுக்கு துணை நிற்போம் . எங்கள் ஈரக்குலை கொதிக்கிறது . உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இவ்வளவுக்கு பிறகும் மனச் சாட்சி இல்லையா? மன உளைச்சல் என்கிறாரே , இனப்படுகொலை தமிழ் மக்களின் நெஞ்சத்தில் ஏற்படுத்தியதை விடவா ? அவருக்கு பெரிய மன உளைச்சல் வந்து விட்டது?"
Uma Varatharajan
அசினும்,விவேக் ஓபராயும் மாநாட்டில் விஷேஷ பார்வையாளர்களாக கலந்து கொள்வார்களா?
மீனகம்
உண்மை கசக்கும் என்பதை முருகபூபதி நிரூபணம் செய்துவிட்டார். முருகபூபதி தானாகவே அனைத்து உண்மைகளையும் இதன் மூலம் மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளார்.
tamilselvan.c
Ayya Murugaboobathy,

Are u ******? If you are true writer, u should have condemned , the genocides, and crimes against humanity by the SINHALAN ARMY. Do you have members of SLA from your family or any other EELAM TAMILS FAMILY. Do you have any say in SLA PARLIMENT, ur voices are being heard, and addressed adequately. Then why u so called tamil writters, are visting this WAR CRIMINAL COUNTRY? When UN committee members are being denied permission , do you think r u so powered person than BAN KI MOON and league of nations.

Please give up ur schedule, do not shame tamils, what is the purpose of promoting tamil in the sinhala capital. Do you have the guts to pass resolutions to ask SLA and Pakses to cooperate with war crimes committee investigations, allow NGOs to work in the war torn tamil home lands.

Please give up! you will be written as traitors and ashamed people, with KARUNAS, douglas, perumals, and kakkai vanniyan. Raj Pakse is tamils enemy? it is known fact, u ?????????
elagnairu
முருகபூபதி ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.. போர்க்குற்றவாளிகளாக பட்சே சகோதரர்கள் விசாரிக்கப்படவேண்டும் என்ற நிலையின் வளர்ச்சியாக சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம், & கருணாநிதி ஆகியோரையும் அந்தப் பட்டியலில் இணைத்து விசாரிக்க வேண்டும் என்ற கருத்தும் பூமிப்பந்தில் தோண்றியுள்ளது,, இந்தவேலையில் யார் ஒருவ்ரும் தமிழின் பெயரால்... கலையின் பெயரால்.. எந்த கூத்தையும் நடத்தப்படும் போதும் இன்றைய சூழலில் எவனும் இலங்கை சென்று அவைகளில் கலந்துகொள்வது என்பதும்... ஈழப்படுகொலைக்கு துணைபோய்... அதன் தொடர்ச்சியாய் அங்கு இனப்படுகொலை ஏதும் நடைபெறவில்லை.. மனித அத்துமீறல் ஏதும் நடைபெறவில்லை என்ற பொய்த்திரையை உருவாக்கும்,, இதைவிட தமிழனுக்கு துரோகமாக எதுவும் செய்துவிட முடியாது,,, கருணாக்கள் வரிசையில் முருகபூபதி செல்லும்போது அதை தடுக்க முடியாவிட்டாலும் துரோகிகளை இனம் காண உதவும்... 9443761307
kandhasamy
ஆதவன் திட்சண்யா என்கிற ஈழ எதிர்ப்பாலரை கீற்றுக்காரங்க விமர்சிச்சப்போ, அவரு 'ஐயோ பாவம் நான் தலித்து'னு ஒப்பாரி வைச்சாரு. இப்ப இந்த முருகபூபதி என்னாடான்னா, நான் ஹார்ட் பேஷண்டு என்கிறாரு. புலிஎதிர்ப்பாளருங்க எல்லாம் ஒரேமாதிரிதாம்பா பேசறாங்க...
கவிமதி
அய்யா முகபூபதிக்கு...

உலகத்தமிழ் எழுத்தாளர்களில் ஒருவனான பாமர எழுத்தாளனும், என் தொப்புள்கொடி உறவுகளை வல்லூறுகள் குதர எழுத்துப்போராட்டம் நடத்தியவர்களில் ஒருவனாகவும் கேட்கிறேன்.

உங்களின் பேராசைக்கு அளவே இல்லையா? பத்துக்கோடி அம்மாடியோவ் அப்படினா எப்படியிருக்கும் சாமி?
ஏன்னா எனக்கு நம்ம தெருக்கோடி மட்டுந்தான் தெரியும். அதுசரி தெரிந்தவர்கள்தானே ஆசைப்பட முடியும். நீங்க வழக்குப்போடுங்க சாமி பத்துக்கோடி என்ன நூறு கோடிக்கூட போடலாம். அதுக்கு முன்னால சில வினாக்கள் என் ***** இருந்துக்கிட்டு அரிக்குது அத தங்களின் மேலான சமூகத்திற்கு வைக்கிறேன்.

இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவில் கூட ராசபட்ஷேவுக்கு ஆதரவாக நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு அவன் ஆசிர்வாதமும்,மோதிரக்கை குட்டும் பட்டு மூச்சுத்தினர தினர மூட்டை வாங்கின உலத்தமிழ் எழுத்தாளர், அறிவுசீவிகள் நிறைய உண்டு.

நீங்கள் நடத்தப்போற சர்வதேச எழுத்தாளர் மாகாநாடு அவர்களைவைத்தா? அப்படினா அவங்க "பைய" நிரப்ப பணம் அதிகமாதான் தேவைப்படும் நீங்கபோடுங்க வழக்க.

ராசபட்ஷேக்கு எதிரான போர்க்குற்றவாளி வழக்குகளை நீர்த்துப்போக செய்ய அவனே ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளோட உங்களைப்போன்ற அறிவுசீவிகளும் நடத்துகிற மாகாநாடுகள் லட்சக்கணக்கான என் உறவுகளின் புதைக்குழிகள்மீதா?

அப்படினா அதிக பணம்தான் தேவைப்படும் நீங்க போடுங்க வழக்க..

உங்களுக்கென்ன நீங்க சொகுசா ஆஸ்திரிலியாவுல இருந்துக்கிட்டு உங்க சகாக்கல முடுக்கிவிட்டு இலங்கையில மாகாநாடு நடத்தரீங்கல்ல...

அதுக்கு பணம் அதிகமாதான் தேவைப்படும் நீங்க போடுங்க வழக்க...

இப்படியே எழுதிக்கிட்டு போகலாம்தான்..

இக்கடிதத்தை எழுதும்போது மட்டும் முழிச்சிகிட்ட உங்க சுயசிந்தனையும், தனிப்பட்ட வாழ்க்கை மீதான அக்கரையும், ஏன் கொத்து கொத்தாக தமிழினம் அழிக்கப்படும்போது வரலைன்னு நா கேட்க மாட்டேன் ஏன்னா அந்த சமத்தில உங்க 19வது புத்தகமா ஸ்ரீராசபக்ஷே ஜெயம் எழுதிகிட்டி இருந்திருப்பீங்கன்னு நல்லா தெரியுது.

எதோ கீற்று தளத்தாலும், எஸ்.பொ அவர்களாலும்தான் உங்களுக்கு அபகீர்த்தி ஏற்பட்டு விட்டதென்றால், இதுவரை சுபகீர்த்தியாக இருந்து வருகிறீர்கள் இல்லையா?

நாங்களெல்லாம் அப்படியில்லங்க அப்ப பேசுனப்ப புலி ஆதரவுன்னாங்க, இப்ப பேசுனா (இந்திய) தேசதுரோகின்னு சொல்லுறான்க. இப்படித்தான் கருத்து சுதந்திரத்தையும், எழுத்து சுதந்திரத்தையும், குறைந்த அளவு அழும் சுதந்திரமாவது கிடைக்குமாவென போராடுகிறோம்.

இந்தியாவிலாகட்டும்,இலங்கையிலாகட்டும் அல்லது உலகத்திலாகட்டும் எங்கள் உறவுகளை அடிப்பவனுக்கு எதிராக யார்மீது வழக்குப்போடலாம் என்றுக்கூட தெரியாதவர்களாக இருக்கிறோம். பரவாயில்லை நீங்களாவது யார்மீது வழக்குப்போடலாம்னு தெரிந்துவைச்சிருக்கீங்க.

நம்ம இனத்த (உங்களையும் சேர்த்துக்கிட்டேன்)அழிச்சிட்டு இருக்குற ராசபட்ஷே மீதோ,இலங்கை அரசு மீதோ வழக்குப்போட்டா கோடியும் கிடைக்காது பீடியும் கிடைக்காதுன்னு நல்லா தெரிஞ்சுவைச்சு இருக்கீங்க.

போடுங்க போடுங்க உங்களுக்கும் மாநாடு நடத்தி ஒரு அய்க்கியமா சுயசிந்தனையோடும், சுபகீர்த்தியோடும் தனிவாழ்க்கை நடத்த பணம் தேவைபடும் இல்லையா பணத்துக்கு நீங்க எங்கே போவிங்க பாவம்...வழக்கமான வழக்கபோடுங்க...

இந்த கோடிக்கு எத்தன சுழின்னு தெரிஞ்சா நாங்க இப்பவே எண்ண தொடங்கிடுவோம்ல...கைவலிச்சா சொல்லுறோம் நீங்களே வந்து எண்ணி எடுத்துகிட்டுபோங்க...

கடைசியா ஒன்னு கேட்குறேன்.
உங்க மாகாநாட்டுக்கு நான் ஒரு கட்டுரை எழுதித்தாரேன் அத ஒரு எழுத்துக்கூட மாத்தாம மாநாட்டுல வாசிட்டா நா பிச்சை எடுத்தாவது உங்களுக்கு 10கோடி தரேன் போதுமா.
elangovan
முருகபூபதி அவர்களின் மானத்தின் விலை, 10கோடியா?
இது ஒங்களுக்கே ஓவரா தெரியல...?
Murugan
1 . மானுடநேசத்தைக் கொண்டது இலக்கியம். எனவே அதைப் படைக்கும் எழுத்தாளர் மாநாட்டில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 40,000 தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவார்களா?
2. ஊடகவியலாளர்களைக் கொலைசெய்துவரும் இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவார்களா?
இளங்கோ அருள்மொழி சோழவர்மன்
ஐயா முருகபூபதி அவர்களே வணக்கம்,

******, நீ மட்டும் தமிழ்நாட்டுல இருந்திருந்தினா உன்ன நானே ***** அடிசிருபேன்.
என்னடா இவ்வளவு கேவலமா சொல்றான்னு நினைக்காத, இது தமிழனோட உணர்ச்சி.
உன்னமாதிரி **** ஆளுங்க எல்லாம் நம்ப தமிழ் இனத்துல இருக்குரனாலத்தான் நாம்ப இவ்வளவு கேவலமா இருக்கோம்.
ஆனா ஒருநாள் நம்ப இனம் தலைதூக்கும், அன்னைக்கு இருக்கு உனக்கு.

வெற்றி வேல், வீர வேல் - சோழனின் முழக்கம் தமிழர்களின் முழக்கமாக்கட்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.