ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை. 

மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவதாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே நடந்திருக் கின்றன. மராத்தி, ஒரிசா, கன்னடம் மற்றும் ஆந்திரப் பகுதி களைக் கொண்ட இந்தத் தக்காணப் பிரதேசத்தில் சாத வாகணர் என்ற ஆந்திரர்கள், சாளுக்கி யர், ராஷ்டிரகூடர், கங்கர், கடம்பர் என்று பல் வேறு வம்சத்தினரின் ஆட்சி கள், தனித்தனிப் பகுதிகளில் நடந்தன.  

13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவி லிருந்து, மொகலாயர்கள் படை எடுத்து வந்து, தக்காணத்தின் வடபகுதியைக் கைப்பற்றினர். அப்போது தக்காணத் தென்பகுதியில் விஜயநகரப் பேரரசு இருந்தது. இது, மத்திய இந்தியாவின் நிலை என்றால், தென்னிந்தியாவின் வர லாறு என்ன? சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர் மற்றும் குறுநில மன்னர்களின் ஆட்சிகளுக்குட்பட்ட, தனித் தனிப் பிரதேசங்கள்தான் இருந்தன. இந்திய வரலாற்றில், பெரும் நிலப் பகுதியைக் கைப்பற்றி, பல தனி யாட்சிகளை ஒழித்து - ஒரு முக ஆட்சியை உருவாக்கியவர்கள் மொக லாயர்கள் தான்! 

மொகலாயர்கள் பேரரசு நடந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாடு முழுவதும், சமூக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண் டார்கள். இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத பல்வேறு இனக் குழுக்களை, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததும் இந்தக் காலத்தில் தான். முஸ்லிம் அல்லாத எல்லோரையும், மொகலாய மன்னர்கள் இந்துஎன்று கூறியதும், ‘இந்துஎன்ற பெயர் வழக்கில் வந்ததும், அக்காலத்தில் தான். சமஸ் கிருத சுலோகங்களையும், வேதங்களை யும் பார்ப்பனர்கள், தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ப திருத்தி அமைத்துக் கொண்டதும் அப்போதுதான். 

அப்போதும் தமிழ்நாடு மொக லாயர்கள் ஆட்சியின் கீழ் வரவில்லை. அத்தகைய மொகலாயப் பேரரசுகூட, அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்து விட்டது. அதன் பிறகு 66 ஆண்டு களுக்கு, இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆளும் ஒரே மய்ய அரசு எதுவும் உருவாகியதில்லை. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிதான் இங்கே குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. இந்திய அரசர் களிடம் உரிமை வாங்கிக் கொண்டு, கடற்கரை ஓரமாக தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை இவர்கள் ஏற் படுத்திக் கொண்டனர். கி.பி. 1612 இல் முதன்முதலாக சூரத்திலும் தொடர்ந்து மசூலிப்பட்டிணம் (1616), அரிகர்பூர் (1633), சென்னை (1640), பம்பாய் (1669), கல்கத்தாவிலும் (1686) வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர். 

வர்த்தகம் செய்ய வந்தவர்கள், நாடு பிடிக்கும் ஆசையை விட்டு விடுவார்களா? இந்தக் கம்பெனி வெறும் கை யுடன் வந்துவிடவில்லை. தனக்காக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றிருந்தது. முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிட்டகாங் பகுதியைத் தாக்கி தோல்வி கண்டார்கள். பிரிட்டிஷ் கம்பெனி நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்று உத்தரவு போட்ட அவுரகசீப் மரணமடைந் தார். (கி.பி.1707) பேரரசு சிதைந்து, தனித்தனி ஆட்சிகள் உருவானது. தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு நல்ல வாய்ப்பாகி விட்டது. 

ராபர்ட் கிளைவ், ஆற்காடு பகுதியைப் பிடித்தார் (கி.பி.1749) தொடர்ந்து 12 ஆண்டுகள் போர் நடத்தி தென்னிந்தி யாவின் பல பகுதிகளைப் பிடித்தனர். கருநாடகப் போர்கள் மூலம் ஆந்திரத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர். வெற்றி களைக் குவித்த ராபர்ட் கிளைவ் வடக்கே போனார். பிளாசி யுத்தம் நடத்தினார்; அதில் வங்கம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப் பற்றிய பல்வேறு பகுதிகள்தான் இந்தியா. ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், பர்மாவும் (இன்றைய மியான்மர் நாடு) இலங்கையும் அடங்கி இருந்தது. 

அப்போது இலங்கை ஒரு மாவட்ட மாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை; ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர்வாக அலுவலகமே தமிழநாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ் தானும் பங்களாதேசும் அன்றைய இந்தியாதான். இப்போதுள்ள வட கிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை. ஆக, 3000 ஆண்டு கால வரலாற்றில் - தனித் தனிப் பகுதி களாக நிலவிய தேசங்களை - துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆங்கிலே யர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் இந்தியா’.

Comments

21 comments

21
மணி
என்ன மட்டமான தரத்திலான கட்டுரை. ஒரு புதிய செய்தி கூடயில்லாமல். கீற்றின் தரத்தில் அமைந்ததில்லை
கணேசன்
ஐயோ மணி. இந்த தகவல்கள் கூட தெரியாத தற்குறிகள் பலர் நம் நாட்டில் உள்ளார்கள். எனவே இந்த தகல்வல்கலி அவர்கள் படிபர்கலேயனால் இந்திய நாட்டுப்பற்று என்னும் மோசடியை உணர்வார்கள்.
ராஜா
உண்மையிலேயே இது அனைவரும் அறியவேண்டிய ஒரு கட்டுரை எனென்றால் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வரவில்லை என்று வைத்துகொள்வோம் இபோதைய பகுதிகளை உள்ளடக்கிய இந்தியா என்று ஒரு நாடு இருந்திருக்குமா சற்று யோசனை செய்து பாருங்கள்
பக‌ல‌வ‌ன் குவைத்
அய்யா ம‌ணி அவ‌ர்க‌ளே த‌மிழ் நாட்டில் த‌மிழ்மொழிப் போர்வையில் எத்த‌னைப் பேர் இருக்கிறார்க‌ள் என்று உங்க‌ளுக்கு தெரியுமா?
அப்ப‌டி இருப்ப‌வ‌னில் எத்த‌னைப்பேர் இந்திய‌ தேசிய‌ம் பேசிக்கொண்டு த‌மிழின‌த்தை அழித்துக்கொண்டு இருக்கின்றான் என்ற‌ உண்மை தெரியுமா?
நாம் போலி இந்திய‌ தேசிய‌ம் பேசியே ஈழ‌த் த‌மிழ‌னை கொன்று குவித்தோமே அப்போதாவ‌து
ந‌ம் ம‌னம் குற்ற‌ உண‌ர்வு கொண்ட‌தா. கொஞ்ச‌ம் யோசிங்க‌
t.sethuramalingam
உலகமே திறமையின் அடிப்படையில் வளர்ச்சியை நோக்கிப் போகும்போது. இன்னும் தமிழ்நாடும் இந்தியாவும் சாதி மதங்கள் பற்றிப் பேசுவது நம்மை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லாது.
மதி.இண்டியா
அய்யா விடுதலை இராசேந்திரன் ,

தமிழ்நாடு எனும் பிரதேசம் என்று ஒரே குடையின் கீழ் இருந்தது ? அப்ப தமிழ் நாட்டை பழைய படி நான்காக பிரித்து விடலாமா ?

அப்பவும் கூட கொங்குநாடு எந்த மன்னனின் ஆளுகையிலும் இல்லை , எனவே தனி கொங்கு தேசம் அமைய நாங்கள் கொடி பிடிக்கலா ?
Agilan
Vidutahali Rasa.....I want to ask one qn here. There was No Tamil Nadu as we know it now even during the British period. It was Madras presidency...before that It was divided between Cholas,Pandiyas Pallavas...not to mention the poligars and other fragments...who were eventually controlled by Tippu sultan...so the word Tamil Nadu is also a myth??? a lie propagated by politicians like Kalaignar??

IF we want to divide a society/country we can find a million reasons in history, geography and our own imagination. Qn is IF TN or anyother state splits away from India, can they even survive the geo-political climate around India with a powerful China, allying with Srilanka and Naval flank support from Myanmar, whole of South-india can be gobbled up in 1 week. Not to mention Pakistand and taliban nexus.

Even IF you split TN away from India, there will be a demand to split it into 100 other pieces....unity as a concept is known to Indians for only 60 yeras. THat is the only insurance for us and the ONLY benefit we have. IF you take that away with this kind of mailcious propaganda we will only be a refugee in some other country..! Mind it..!!
chudar
@ அகில‌ன், ம‌தி.இண்டியா,

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகம்" என தொல்காப்பியமும், " இமிழ் கடல் வரைபிற் தமிழகம் அறிய", "இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருத்தினை" என சில‌ப்ப‌திகார‌மும் கூறிய‌திலிருந்து த‌மிழ‌க‌ம், த‌மிழ் நாடு போன்ற அடையாள‌ங்க‌ள் தொன்று தொட்டு இருந்து வ‌ந்த‌தை அறிய‌ முடியும்.

இது போல் ஐரோப்பியர் வருகைக்கு முன்னரே இந்தியா என்கிற அடையாளம் இருந்த‌து என்று நிரூபிக்க முடியுமா?

".so the word Tamil Nadu is also a myth??? a lie propagated by politicians like Kalaignar??"

இது போல பொய்களையும், அவதூறு, விஷ(ம)ப் பிரச்சாரங்களையும் ஒரு கேள்விக்குறியின் துணையோடு எழுதிப் பரப்புவதைத் தினமலர், இந்து, துக்ளக் எல்லா பார்பனீய ஊடகங்களிடமும் ஏற்கனேவே பார்த்திருக்கிறோம். திருந்தவே மாட்டீர்களா?
Evano
"IF TN or anyother state splits away from India, can they even survive the geo-political climate around India"

இதுவரை 450+ தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

முதல்ல உங்க கையாலாகாத ஆண்மையற்ற
இந்திய அரசாங்கத்தைத் தன் குடிமக்களின் உயிரைக் காப்பாற்றச் சொல்லு. அப்புறம் இங்கு வந்து இந்திய பிரச்சாரம் பண்ணு..!
Evano
//"தமிழ்நாடு எனும் பிரதேசம் என்று ஒரே குடையின் கீழ் இருந்தது ?"//

பிற்கால‌ச் சோழ‌ர் கால‌த்தில் முழுத்த‌மிழ‌க‌மும் ஒரே குடையின் கீழ் இருந்த‌து.
இந்தியா ?
saanjayganthi
great history information
Ila Murukan
In 1 January 2000, when the new millennium was born the Wall Street Journal on the front page gave gave a picture of India in the year 1000. The Raja Raja Chozhan controlled under his rule the entire South India, Ceylon, and extending to Java and Sumatra.
marthandan
Mr.Agilan
You should take note that in the world there are so many nations with less than one million population. Mind it and then talk about your rubbish argument of survival. All nations having less than one miliion populations are surviving. But in Tamil Nadu we have more than Six Crore population. Agilan, you are writing couragiously that if Tamil Nadu would not survive, if it is liberated from India. Keep it in your mind one day Tamil Nadu would be liberated. But betrayers do not have place there. You are one among them.
v.venkatasalam
பள்ளி சிறுவர்களுக்கான கட்டுரை இது.
Agilan
Mr.Marthandan..There may be countries with less than a million population, but what is their geo-political climate? you can choose your friends, you can't choose your neighbours sharing borders...understand this basic fact before mentally retarding yourself with inane comments. Don't kid yourself that South-Asia is a Scandinavian or baltic region. We have had enough blood with this division and separatism talk...what tangible benefit can it possibly bring? this is my question. Are our Tamil political leaders any better than those we have in center? your Kalaignar will seel TN to china IF they give a ministerial berth to MK Muthu...no need to even mention morons like Ramdoss, Jayalaitha and the rest...

To Evano, who is shedding crocodile tears for 450+ Tamizh fisherman, first get your stats on number of deaths in TN owing to illicit liquor. You will know who is the real pottai who is unable to even discuss or solve this issue...all bcos they are only interested in cash in their party Kalla..!! First try to choose a proper leader or atleast allow creating a scenario where a genuine leader can come in..separation in the current context is NOT in the interest of Tamilians..!
தனபால்
ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு மன்னர் வம்சத்தினர் ஆண்டிருக்கலாம், ஆனால், காஸ்மீர் முதல், கன்னியாகுமரி வரை ஆன்மிகம், பண்பாடு போன்றவற்றால் வேதகாலம் முதல் ஒரேதேசமாக இருந்தது இந்திய தேசம்.மற்ற எந்த நாகரிகமும் தோன்றாத காலத்தில்,அதாவது உலகில் மற்ற பகுதியில் உள்ளவர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தபோது வேதகால இந்தியர்கள் மட்டுமே மிகச்சிறந்த நாகரீகத்தை வாழ்ந்திருந்தனர்.அந்த மிகச் சிறந்த நாகரீகத்திற்கு சொந்தமானவர்கள் என்று இமயம் முதல் குமரி வரையில் உள்ள அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்வோம்.
anbazhagan.
@ The Greeks were ruled by many Princedoms. They were even in heavy hostilities. The History of Polleponnesian War is known by all of us. Italy was unified with the greate men's great efforts. The border of china is not an old one. Construction of a nation is a tough rather that of destructive. Don't be slave to any of the'alien' ideologies. Yes, we admit that the political unification is one of the salient features of the British rule. But the authors of these such articles are enjoying democracy here rather anywhere. Let them say the democracy is an evil!.
Elango Arulmozhi varman
Mr. Dhanapal,

Correct yourself.
Do not tell as vedic period. As a tamilian, tell as Sangam period.
ஜெயம்
நடுநிலையான அறிய தகவல்களைக் மக்கள் மன்றத்திற்கு கொண்டுவந்த கட்டூரை. யார் யார் எப்படி கருத்துரை பதிந்தாலும் உண்மையை உண்மையாக்த் தானே சொல்லியாக வேண்டும். இன்னும் நிறைய மறைந்த பகுதிகள் இருந்தாலும் சரித்திரத்தில் தெரிவிக்கப் பட வேண்டிய கட்டூரையாளர் ஐயா விடுதலை ராசேந்திரனார் அவர்களுக்கு நன்றிகள்
இ.பு.ஞானப்பிரகாசன்
தமிழ்நாடு தனிநாடாக இருந்தபொழுதே, அதாவது பல ஆயிரம் ஆண்டுகளாகவே, இதே அண்டை நாடுகள் இங்கே இருக்கத்தான் செய்தன. ஆனால் அப்பொழுது இதே சீனர்களோ, வங்காளர்களோ தமிழர்களை எதிர்க்கத் துணியவில்லை. காரணம், தமிழ் அரசர்கள் மூவரும் என்னதான் தங்களுக்குள் அடித்துக் கொண்டாலும், வெளி ஆட்களான நாம் அவர்களின் மக்கள் மீது கைவைத்தால் மூன்று அரசர்களும் ஒன்றாய்ச் சேர்ந்து தங்களைத் தாக்குவார்கள் என்ற அச்சம்தான். ஆனால் இன்று சீனா, வங்கதேசம், மலேசியா என உலக நாடுகள் அனைத்தும் தமிழர்களைக் கண்டமேனிக்குத் தாக்குகின்றன என்றால் அதற்குக் காரணம், இந்தியா தமிழர்களைத் தன் மக்களாகக் கருதவில்லை, தமிழர்களைத் தாக்கினால் இந்தியா ஒன்றும் செய்யாது என்ற துணிச்சல்தான். எனவே தமிழ்நாடு தனிநாடாக ஆவது தமிழ்நாட்டின் பாதுகாப்பை மீண்டும் பழையபடி உறுதி செய்யுமே தவிர அதனால் நம் பாதுகாப்புக்கு தீங்கு ஏதும் நேராது.
Arasan
Let ignore the Indian jingoistic that haven’t have clarity about the history.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.