கோபுர கலசத்தின் உச்சியில்
கடவுளின் கடவுளாய்
அமர்ந்திருக்கிறதோர் பறவை
கடவுளை
ஆசீர்வதித்ததின்
அடையாளமாய் பிரசாதமென
எச்சமிட்டு பறக்கிறது
மின் கம்பங்களின் எண்ணிக்கைக்கு
இணையாகக்கூட
மரங்கள் நடப்படாத நகரத்தில்
பறவைகள் இறங்குவதில்லை
பறவைகளின் சிறகசைவில்
சுழலும் காற்றில் மாசு நீங்கக்கூடும்
தங்க நாற்கர சாலைகளால்
இணைக்கப்படும் இந்நகரத்தின்
பழைய வரைபடத்தில்
பறவைகள்
இரையருந்திப் பறக்கும்
மாபெரும் மண் கிண்ணத்தைப்போல்
குளமொன்று இருந்தது
பெரும் மழைக்காலங்களில்
குளம்தேடி நீர்சூழ
நகராத காங்கிரிட் கப்பல்களாய்
மிதக்கும் குடியிருப்புகள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சர்வாதிகாரப் பெற்றோர்கள்
- வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?
- சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் (1934 - 2021)
- அனல் காற்று
- கண் சிமிட்டும் காகிதங்கள்
- எழுதப்படாத ஒரு கவிதை
- தமிழ்த் தேசியத்தின் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?
- 'உலக அரசியல் சினிமா - 16 இயக்குநர்கள்' - நூல் அறிமுகம்
- இந்திய அரசியலமைப்பின் பிரிவு 351-ஐ நீக்குக!
- எரியும் இலங்கை உணர்த்தும் பாடம்
- விவரங்கள்
- தென்பாண்டியன்
- பிரிவு: புதுவிசை - ஆகஸ்ட் 2005