தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் 24.10.2014 அன்று காலை 10 மணிக்கு தஞ்சையில், பேரியக்கத்தின் அலுவலகத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந் திரன் தலைமை யில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் நா. வைகறை, இரெ. கருணாநிதி, விடுதலைச்சுடர், இரா.சு. முனியாண்டி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் அ. தேவதாசு, தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, வழக்கறிஞர் மு.கரிகாலன், தோழர் க. காமராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அக் கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம் 1

தமிழர்களின் உயிருக்கு ஆபத்தாக உள்ள சர்வதேச சதிகாரர் சுப்பிரமணிய சாமியை இந்திய அரசு நாடு கடத்த வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டை இந்தியா விடுவிக்க வேண்டும்.

தீர்மானம் 2

தஞ்சைப் பெரிய கோயில் பரம்பரை அறங்காவலராக மராட்டிய பான்ஸ்லே இருக்கக் கூடாது.

தமிழ்ப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில் சோழப் பேரரசர்கள் எழுப்பிய இதர கோயில்கள் உள்ளிட்ட 88 கோயில்களைக் கொண்ட அரண்மனைத் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராக தஞ்சை மண்டலத்தை ஒரு காலத்தில் ஆக்கிரமித்த மராத்திய இனத்தைச் சேர்ந்த பாபாஜி பான்ஸ்லே என்பவர் இருக்கிறார். இன்றைக்கும் அவர் மேற்கண்ட கோயில்களுக்குப் பரம்பரை அறங்காவலராக இருப்பது இந்து அற நிலையச் சட்டத்திற்கும் முரணானது, வரலாற்று உண்மைகளுக்கும் எதிரானது, தமிழர் தன்மானத்திற்கும் இழுக்கானது.

பாபாஜி பான்ஸ்லே சோழர் பரம்பரையைச் சேர்ந்த வரும் அல்லர் தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவரும் அல்லர். தஞ்சையை ஆண்ட மராத்திய அரசர்களின் சட்டப்பூர்வ வாரிசும் அல்லர். ஒருவர் சொந்தமாகக் கோயிலைக் கட்டி அதற்கு தன் சொத்துகளை எழுதி வைத்து அதனுடைய அன்றாட வழிப்பாட்டுச் செலவு களுக்குப் பணம் கொடுத்து பராமரித்து வந்தால்தான் அவர் ஒரு கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருக்க முடியும் என்பது இந்து அறநிலையச் சட்டம் விதிக்கும் நிபந்தனை யாகும்.

எனவே மேற்கண்ட மூன்று கூறுகளுக்கும் பொருந் தாத மராத்திய பாபாஜி பான்ஸ்லேயை தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக வைத்திருப்பது சட்ட விரோத மாகும்.

எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு பாபாஜி பான்ஸ்லேயை பரம்பரை அறங்காவலர் பொறுப்பிலிருந்து நீக்கி மேற்படி தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களை தமிழக அறநிலையத்துறையில் சேர்க்கு மாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

சரசுவதி மகால் நூலகம்

உலகில் மிகத் தொன்மையான ஓலைச்சுவடி களையும் அரிய நூல்களையும் கொண்டுள்ள நூலகம் தஞ்சை சரசுவதி மகால் நூலகமாகும். இந்த நூலகம் உரிய பராமரிப்பின்றி அன்றாடம் அழிந்து கொண் டுள்ளது. இதற்குரிய இயக்குனர் பதவி நிரப்பப்படாமல் கடந்த 20 ஆண்டுகளாக காலியாகவே உள்ளது.

நிர்வாக அலுவலர் (கி.ளி.) பதவியும் 10 ஆண்டுகளாக நிரப்பப்படா மல் காலியாக உள்ளது. இந்நூலகத்திற்கு உரிய அலுவ லர்கள் மற்றும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 60 பேர். ஆனால் இப்பொழுது இருப்பதோ வெறும் 20 பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கையே இந்நூலகம் கவனிப் பாரின்றி சீரழிந்து கிடக்கிறது என்பதற்கானச் சான்று.

இந்த நூலகத்தில் அரிய நூல்கள் திருட்டுப் போகின்றன. உரியவாறு புதிய நூல்கள் பதிப்பிக்கப்படுவ தில்லை.

எனவே சரசுவதி மகால் நூலகத்தைத் தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் நிர்வாகத்திலிருந்து விடுவித்து, அதற்கேற்ப அங்கு அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவைக் கலைத்து, பள்ளிக்கல்வி அமைச்சகத்திலி ருந்து இந்நூலகத்தை விடுவித்து, தனிச்சிறப்பு நூலக மாக தமிழக அரசு தனது பொறுப்பில் ஏற்று, இந் நூலகத்திற்குப் புத்துயிரூட்டி அதன் செயல்பாடுகளை சிறப்புறச் செய்ய வேண்டும். உடனடியாக காலியாக உள்ள இயக்குனர், நிர்வாக அலுவலர், அலுவலர்கள் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும்.

Pin It