டி.ஆர்.பாலுவின் கடல் ஆதிக்கம்

சேது சமுத்திரத் திட்டமும் அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களும் காணாமல் போய்விட்டன. ஆனால் அப்போது அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவும் அவருக்கு வழிகாட்டிய முதல்வர் கருணாநிதியும் நிம்மதியாய் உள்ளனர்.

அதனால் எல்லை தாண்டிப்போய் இலங்கைக் கடலில் மீன்பிடிக்கும் அதிவேக நவீனப்படகுகள் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவை என்ற உண்மை வெளி வந்துள்ளது. அண்மையில் பிடிபட்ட 18 படகுகள் அனைத்தும் அவருக்கே சொந்தமானவை எனறும், தங்களை இலங்கைப் பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கச் சொன்னவர் டி. ஆர். பாலு தான் என்று பிடிபட்ட 136 மீனவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை முதல் குமரி வரை அனைத்துக் கடல்புரங்களிலும் பாலுவுக்குச் சொந்தமான படகுகள் ஏராளம் உள்ளன என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன. இவை போக மீன்பிடிக் கப்பல்களும் உள்ளன. அதில் ஒரு கப்பலின் ஓட்டத்தைத் துவக்கி வைத்தும் பெயர் சூட்டியதும் கருணாநிதி தான். அந்தக் கப்பலின் பெயர் ரைசிங்சன் (உதயசூரியன்).

இலங்கைப் பாதிரியார் ஆனந்த குமார் இதுபற்றிக் குறிப்பிடும் போது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் பிடிக்கப்படுவதற்கும் கொய்யப்படுவதற்கும் காரணமாக இருப்பவர்கள் திமுகவினரும், யாழ்பாணத்தலைவர் தன்மீது தமிழகத்திலுள்ள வழக்குகளிலிருந்து தப்புவதற்காகத் திமுகவுக்கு உதவுகிறார்" என்று கூறியுள்ளார். கண் துடைப்புக்காகவே கனிமொழியின் ஆர்ப்பாட்டம் என்றும் கூறியுள்ளார்.

Pin It