suyas canelஉலகம் முழுவதும் தற்போதுப் பேசப்படும் உலகின் முக்கிய வழித்தடமான சூயஸ் கால்வாய் விபத்தானது உலகளவில் பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தும் என உத்தேசிக்கப் படுகின்றது

சூயஸ் கால்வாய்!

ஐரோப்பாவிற்கும் - ஆசியாவிற்கும் இடையே உள்ள சூயஸ் கால்வாய் வழியாக உலகின் 12 சதவிகித வர்த்தகம் நடைபெறுகின்றது. கச்சா எண்ணெய் முதல் சாதாரண உதிரிப் பாகங்கள் வரை இப்பாதையின் வழியாகவேப் பயணமாகின்றது.

சமீபத்தில் நிகழ்ந்த மணல் புயலில் சிக்கிய எவர்கிரின் என்ற கப்பலால் இவ்வர்த்தகம் தடைப்பட்டுள்ளது. நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட கப்பலில் பல்லாயிரக்கணக்கான டன் பொருட்கள் பரிவர்த்தனை ஆன இத்தலம் தற்போது அண்ணன் எப்போதுப் போவான் திண்ணை எப்போதுக் காலியாகும் என்ற பேச்சு வழக்கின் அடிப்படையில் பல நூறு கப்பல்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. இதனால் வளைகுடா நாடுகளின் கப்பல்களும் - ரஷ்ய இந்தியக் கப்பல்களும் நிற்கின்றது. 

சாலையில் ஏற்படும் Traffic jamயினைப் போல் கடலில் ஏற்பட்டுள்ளதால் ஒர் நெருக்கடி நிலைப் போல ஏற்பட்டுள்ளது. முக்கிய பொருட்களான கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியினை உலக நாடுகள் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

ஏன் உலகப் பொருளாதார நிபுணர்கள் பதறவேண்டும்? காரணம் ஒன்றுமில்லை! அமெரிக்காவிலிருந்தும் - ஐரோப்பா நாடுகளிலிருந்தும் வாணிபம் செய்யும் கப்பல்கள் இக்கால்வாய் வழியாக இலகுவாக வளைகுடா உட்பட இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குப் பொருட்களை ஏற்றுமதியும் - இறக்குமதியையும் செய்கின்றனர்.

மத்திய தரைக் கடலையும் - இந்தியப் பெருங்கடலையும் எகிப்தின் சூயஸ் நகரின் அருகே 1859ல் துவங்கி 15 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட கால்வாய் வழியாக இணைப்பதினால் நடைபெறுகின்றது. இல்லையென்றால் ஆப்ரிக்காவின் "குட் ஹோப்'யினைச் சுற்றியே பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் இன்னும் பயணப்பட வேண்டும். இதனால் விலைவாசி ஏற்றம் உண்டாகும். மணலில் சிக்கியுள்ள எவர்கிரீன் கப்பல் அகற்றப்பட இன்னும் பல வாரங்கள் ஆகும் என்பதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு விலைவாசிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சேதுக் கால்வாய்!

150 ஆண்டு காலத் தமிழகத்தின் கனவுத் திட்டமான சேதுக் கால்வாயானது இந்தியாவிலிருந்து - மேற்கத்திய நாடுகளுக்கும் , கிழக்காசிய நாடுகளிலிருந்து - மேற்கத்திய நாடுகளுக்கும் பயணப்பட இலங்கையினைச் சுற்றிச் செல்ல வேண்டிய நிலையினை மாற்றி "மன்னார் வளைகுடா" விற்கும் இலங்கையின் "தலை மண்ணாருக்கும்" இடையே உள்ள ஆதம் பாலம் என்னும் மணல் திட்டினை ஆழப் படுத்தி அதன் மூலம் கால்வாய் அமைத்துக் கப்பல்களைப் போகச் செய்வதே சேதுக் கால்வாய் திட்டம்.

இதன் மூலம் தமிழகத்திற்குப் பொருளாதார உயர்வையும், இதுவரைப் பயணப்பட்ட இலங்கையினைச் சுற்றிச் செல்லும் பயணத் தொலைவினைக் குறைத்து விரைவாகப் பயணப்படவும் இதன் மூலம் தமிழகத்தில் புதியத் துறைமுகங்கள் உருவாக்கத்திற்கும் வேலை வாய்ப்புகள் பெருக்கத்திற்கும் உதவும் என்ற அடிப்படையில் திட்டம் உருவாக்க ஆங்கிலேயக் கால முதல் தற்போது வரை பல்வேறு வகையில் மத்திய அரசுக்குத் தமிழக அரசுகளின் மூலம் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தது.

1999ல் திமுக கூட்டணியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு அமைத்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அதன் பின் அமைந்தக காங்கிரஸ் அரசு ஜூலை 2, 2005ல் மதுரையில் வைத்து இத்திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இடையில் இந்துத்துவச் சித்தாந்தத்தில் புகுந்த அரசியல் சூட்சமம் தமிழின விரோதச் சித்தாந்தமாக உருமாறி இத்திட்டத்தினை மத ரீதியிலான விளைவுகளாக உண்டாக்கிக் கிடப்பில் போடக் காரண கர்த்தாவாக மாற்றியது.

அதாவது இத்திட்டத்தின் அடித்தளத்தின் போதுத் திமுகவுடன் கூட்டணியிலிருந்து ஆட்சியினை நடத்தியப் பாஜக அப்போது வாய்த் திறக்காமல் இருந்துவிட்டு, காங்கிரஸ் ஆட்சி மாறியபின் மத அரசியலை உள் சொருகி தற்போது இத்திட்டமே நடைபெறாமல் ஆக்கப்பட்டதற்கு பாஜகவின் பார்ப்பனியப் பாசிசச் சித்தாந்தம் என்று கூறினால் மிகையில்லை.

எப்படி நாம் சூயஸ் கால்வாயின் விபத்தினை உலகப் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்திடுமோ என அஞ்சுகின்றோமோ, அது போல சேதுக் கால்வாய் பரிணமிக்கும் திட்டத்திற்குத் தடையினையும் தமிழகத்தின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாக அமைந்திடுகின்றது.

விபத்தினை சரி செய்வது நமது கடமை

சரி செய்வோமா?.

- நவாஸ்

Pin It