பட்ஜெட்டிற்குள் செல்வதற்கு முன் நாடு விடுதலை பெற்றதிலிருந்து இதுவரை நடைமுறைப் படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களால் கோடிக்கணக்கான வெகு மக்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன என்பதை நினைவில் கொண்டு வருவதுடன் குறைந்தபட்சம் 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை நோக்கியதாகவாவது இந்த பட்ஜெட் இருக் கின்றதா? என்பதை விவாதிக்க வேண்டிய  அவசியம் உள்ளது.
11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரம், குடிநீர், மகளிர் மேம்பாடு, கிராமப்புற வளர்ச்சி, உள்ளாட்சி, நிர்வாகம், கல்வி, மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவமளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 2010,2011 க்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது பிரணாப் முகர்ஜி 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பரிந்துரைக்கப் பட்டது போல அனேகமாக 100% திட்ட ஒதுக்கீடு செய்துள்ளோம் என தனக்குத் தானே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்திடவே முயலப்பட்டுள்ளதே தவிர அந்த இலக்குகளை நோக்கிய பயணத்தை ஆட்சியாளர்கள் தொடர வில்லை.
அனைவருக்கும் கல்வி என்கிற அடிப்படையான இலக்கினை எட்டுவதற்காக சர்வ சிக்ஷா அபியானுக்கு 71 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யபட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 15 ஆயிரம் கோடியும் சேர்த்து கடந்த 4 வருடகாலத்தில் 54371 கோடிதான் ஒதுக்கீடு செய்யப் ட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை நோக்கியதாகக் கூட நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையில் எப்படி அனைவருக்கும் கல்வி என்கிற அடிப்படை இலக்கினை எட்ட முடியும்? எப்படி இவர்களின் கல்வியை பரவலாக்கி அதனுடைய தரத்தை உயர்த்த முடியும்.
சர்வ சிக்ஷா அபியானின்  கதிதான் இப்படி யென்றால் இந்த தேசத்திலுள்ள 31% இளைய தலைமுறையினரின் அறிவாற்றல் உழைப்புத்தகுதி, திறமை, வேலைவாய்ப்பு ஆகியவற்றோடு சம்பந்ததப்பட்ட மேல்நிலைக் கல்வியை போதிக்கும் ராஷ்டிரிய மத்யமக் சிக்ஷான் கதியோ இன்னமும் மோசமாகவுள்ளது. அதனுடைய இலக்கான 22,620 கோடியில் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1700 கோடியையும் சேர்த்து இதுவரை 2762 (12.21%) மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது என்ன விளைவுகளை உருவாக்கும்? இந்த தேசத்தின் கோடிக்கணக்கான இளைய தலைமுறையினரின் மேல் நிலைக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் கற்க இயலாத நிலை உருவாகி தேசத்தின் உழைப்புச் சக்தி சுருங்கி விடாதா? இது தேசத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கே பெரும் தடைக்கல்லாக அமைந்துவிடாதா?
ஏழை, எளிய வீட்டுப் பிள்ளைகளுக்கு ஒருவேளை உணவையாவது உத்திரவாதப்படுத்த வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்ட மதிய உணவு திட்டத்திற்கான 48 ஆயிரம் கோடியில், இந்த பட்ஜெட்டில் 9440 கோடி என 4 வருடகாலத்தில் 31,477 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரு வேலை உணவைக்கூட உண்ண வழியில்லாமல், வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு சோம்பித் தூங்கி வழியும் கோடிக்கணக்கான ஏழை வீட்டுப் பிள்ளைகளின் வாழ்வை இவர்களால் எப்படி மலரச் செய்யமுடியும்? அன்றாட வயிற்றுப் பிழைப்பிற்கே வழியின்றி கோணிப்பைகளை தூக்கிக் கொண்டு குப்பைகளையும், கூளங்களையும் பொறுக்கித் திரியும் சின்னஞ் சிறார்களை இவர்களால் எப்படி கல்வியின்பால் ஈர்க்க முடியும். ஏழை, எளிய வீட்டுப்பிள்ளைகளின் வயிற்றுப் பசியை போக்கிட ஒரு வேளை சோற்றையாவது போட வேண்டுமென்கிற காமராஜரின் கனவை இந்த கர்மவீரர்களால் எப்படி நனவாக்க முடியும்.
கல்விக்கான நிதிஒதுக்கீட்டின் கதி இப்படியிருக்க கல்வி கற்பிக்கும் ஆசான்களை உருவாக்கும் ஆசிரியர் பயிற்சிக்கான நிதி ஒதுக்கீடு இன்னமும் மோசமாகவுள்ளது. ஒதுக்கீடு செய்யப்படவேண்டிய 4 ஆயிரம் கோடியில் இந்த பட்ஜெட் ஒதுக்கீடான 500 கோடியும் சேர்த்து இதுவரை வெறும் 1444 கோடி 36.1%, மட்டுமே ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கல்வியை முன்னெடுத்துச் செல்வதில் ஆட்சியாளர்களுக்கு எந்த அளவிற்கு அக்கரையுள்ள தென்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
பட்ஜெட்டிற்கு முந்தைய, அரசின் கொள்கைகளை பறைசாற்றுகின்ற சம்பிரதாய முறையிலான ஜனாதிபதியின் உரையில்கூட விலைவாசிகளை கட்டுப்படுத்திட முன்னுரிமை செய்யப்படும். ஊரக வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி நாட்டில் எவருமே பட்டினியால் வாடதாபடி உணவுக்கான உத்திரவாதம், அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி உரிமை என பல விஷயங்கள் நீட்டி முழங்கி உறுதியளிக்கப்பட்டன. ஆனால், அவைகளை நிறைவேற்றும் பாதையில் கூட இந்த பட்ஜெட் பயனளிக்காமல் எதிர் திசையில் பயணப்பட்டுள்ளது.
சாதாரண ஏழை, எளிய மக்கள் மருத்துவ வசதி பெற்றுவரும் மாவட்ட மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்படவேண்டிய 2780 கோடியில் இப்போதைய 200 கோடியும் சேர்த்து இதுவரை வெறும் 284 (10.2%) கோடியும் சுகாதாரத்திற்கான மனிதவள மேம்பாட்டிற்காக 4 ஆயிரம் கோடியில் 395.11 (9.9%) மட்டும்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மக்களின் அடிப்படையான குடிநீர் மற்றும் சானிடரி வசதிகளை மேம்படுத்துவதற்காக தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கான 34916 கோடியில் 2010  2011ல் ரூ. 8100 கோடி என இதுவரை 27200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பக்கம் உண்ண உணவில்லை, மறுபக்கம் வாழ சுகாதார வசதியில்லை என்கிற நிலையில் நோய் நொடிகளுக்குள் உந்தித்தள்ளப்படும் மக்களின் மருத்துவ மற்றும் சுகாதார தேவைகளை எப்படி இந்த அரசு பூர்த்தி செய்யப் போகின்றது.
இந்த பட்ஜெட்டில் எலும்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தும் செயற்கை மூட்டு மற்றும் தட்டு ஆகியவைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்களுக்கான இறக்குமதிவரி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் தங்களுடைய வாழ் வாதாரத்தை தக்கவைத்து முட்டிதேய பாடுபட்டே ஆக வேண்டுமென்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருப்பதால் தானோ என்னவோ, இதற்கு வரி விலக்களித்துள்ளார்கள்? இந்த சலுகை எத்தனை கோடி மக்களுக்கு பயன்படும்? கிராம மருத்துவ மனைகளுக்கோ அரசு மருத்துவ மனைகளுக்கோ தேவையான எந்தவொரு சலுகையோ போதுமான நிதி ஒதுக்கீடோ இந்த பட்ஜெட்டில் இல்லை. மாறாக, தேசம் முழுவதும், குறிப்பாக பெரு நகரங்களில் “லாபம் கொழிக்கும் தொழில்’’ என்கிற வகையில் வேகமாகவும் பிரமாண்ட மாகவும் வளர்ந்து வரும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கு பயன்படும் வகையில்தான் இப்படிப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இனியரு ஆபத்து என்ன வென்றால் இந்திய மருத்துவத்துறையை மருத்துவக்காப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படக் கூடியதாக மாற்றுவதற்கான முயற்சியும் இந்த பட்ஜெட்டில் மேற் கொள்ளப்பட்டுள்ளது.காப்பீட்டுத்துறையில் அன்னிய முதலீட்டை 26% லிருந்து 49% மாக உயர்த்தி இருப்பதும் பன்னாட்டுகாப்பீட்டு நிறுவனங்களின் கைகளில் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வையும் ஒப்படைப்பதாக  அமையக் கூடிய அபாயம் உள்ளது. உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர்காப்பீட்டுத் திட்டத்தில் 1.44 கோடிபேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளார்கள் 43716 பேர் 140.22 கோடிவரை பெற்று பயனடைந்துள்ளார்கள் என அரசு தரப்பில் பறைசாற்றப்பட்டாலும், அந்தகாப்பீட்டு திட்டத்தின் நடைமுறைகளும், கதியும் எந்த அளவிற் குள்ளது என்பது குறித்து வேதனையாக செய்திகள் அன்றாடும் வந்து கொண்டுதானே உள்ளன.
சமீபத்தில் 3700 தாத்தா, பாட்டிமார்களும் அவர்களுடைய பேரன், பேத்திமார்களும், உடல் ஆரோக்கிய அளவில் எந்த அளவிற்கு திடகாத்திரமாக உள்ளார்கள் என்பதை கண்டெறிவதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 270 பேரன் பேத்திமார்கள் எலும்பு அடர்த்தி குறைவுநோய் (ஆஸ்ட்ரோ போரோசிஸ்)க்கு ஆட்பட்டு, எலும்பு முறிவுகளுக்கு பலியாகும் நிலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள், மக்கள்  நலன் சாராத எதிர்கால சுகாதார மற்றும் மருத்துவக் கொள்கைகளின்காரணமாக இன்னமும் எத்தனை இளைய தலைமுறையினர் என்னென்ன நோய்களுக்கு ஆளாக வேண்டி வருமோ?
தான் ஒரு எளிமையான பேர்வழி என்பதைக்காட்டிக் கொள்வதற்காக தன்னுடைய ஜோல்னா பையில் வைத்து எடுத்துவந்து, மம்தா பானர்ஜி சமர்ப்பித்த ரெயில்வே பட்ஜெட்டும் சரி, பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்த பொது பட்ஜெட்டும் சரி, பெருமளவில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு, உதவக்கூடிய பட்ஜெட்டாக இல்லை. மாறாக இவை இரண்டுமே “தனியார்மயம் இல்லை தனியார்மயம் இல்லை’’ என சொல்லிக் கொண்டே தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை கவனமாக நடை முறைப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. ரெயில்வே துறை தனியார் மயமாக்கப்படமாட்டது என கூறப்பட்டாலும் புதிய வர்த்தக திட்டத்தின் கீழ் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும் எனவும் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களுக்கு 100 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கப்படும் வகையில் சிறப்பு செயல்பாட்டை அமைக்கப்படும் என்பதற்கு என்ன பொருள்?
இந்த பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல், சிமெண்ட் மற்றும் அடிப்படை கட்டுமானப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் கட்டுக்கடங்காமல் ஏற்கனவே உயர்ந்துள்ள விலைகள் மேலும் உயர்ந்து மக்கள் தாங்கிக் கொள்ளாத வாழ்க்கைச் சுமைகளைத் தாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் தேசத்தின் இளைய தலைமுறையினருக்கு குறிப்பாக வேளான் நெருக்கடிகளின்காரணமாக மாநிலம்விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து குறைந்த கூலியில் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுவரும் கோடிக் கணக்கானோர் அந்த வேலைகளையும் அந்த சொற்ப வருமானத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் சிடி, பொம்மை, மொபைல் உதிரிபாகங்கள், மைக்மேரா ஓவன், வாட்டர்பில்டர் போன்றவைகள் விலை குறையுமாம். இவைகளை யெல்லாம் எத்துணை ஆம் ஆத்மிகள் பயன்படுத்துகின்றார்கள். தேசத்தின் கௌரவம்மிக்க தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்றுகாணாமல் போய் அல்லது கடத்தப் பட்டுள்ள நிலையில் குழந்தைகளை மகிழ்விக்க பொம்மைகளின் விலைகளை குறைத்திருப்பது வாழ்க்கைக்காக அழும் குழந்தைகளின் கைகளில் கிலுகிலுப்பை கொடுப்பது போலத்தான் அமைந்துள்ளது.
இந்த ஆண்டு தேவையான அளவு மழை பெய்ய வேண்மென்று மழைக்கடவுளான இந்திரனை வேண்டிக் கொள்கிறேன். அப்போதுதான் சிறப்பாக பொருளாதார வளர்ச்சி இருக்கும் என இந்திரனையும், சந்திரனையும் தான் பிரணாப் முகர்ஜி துணைக்கு அழைக்க முடிந்ததே தவிர அவரால், வேளாண் துறைக்கோ, தொழில் துறைக்கோ பொருளாதார வளர்ச்சிக்கோ வேறு எதையும் உருப்படியாக செய்ய முடியவில்லை.
இந்தியாவிலுள்ள மக்களில் 56% பேர் வேளாண் சார்ந்த தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டுள்ளார்கள் நாட்டில் மொத்தமுள்ள 60 கோடி விவசாயிகளில் 80%பேர் 5 ஹெக்டேருக்கும் குறைவாக வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயி கள் இன்னமும் பெரும் பகுதியினர் அதைவிடவும் குறைவான நிலம் வைத்துள்ளார்கள் அத்துடன் கோடிக் கணக்கானவர்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இவர்களுடைய வாழ்வு மலர பட்ஜெட்டில் எந்தவொரு உருப்படியான திட்டமும் இல்லை.
வேளான் வளர்ச்சிக்கு தேவையான நீர்ப்பாசன வசதிகளை அதிகப்படுத்தவோ, விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விவசாயிகளுக்கு சலுகை விலையில் கிடைக்கப் பெறச்செய்யவோ தேச மக்களின் உணவுப் பாதுகாப்பு சார் உற்பத்தி மற்றும் இறக்குமதி ஏற்றுமதிக் கொள்கைகள் உருவாக்கப்படவோ வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கக்கூடிய உள்நாட்டுச் சந்தையை உருவாக்கிக் கொடுக்கவோ இந்த பட்ஜெட் வழிவகைகாணவில்லை.
பண்ணையில் உற்பத்தியாகும் போது இருக்கும் விலைக்கும் சமையலுக்கு அது வரும் போது இருக்கும் விலைக்குமிடையில் நிறைய வேறுபாடு உள்ளது. எனவும் இடைத்தரகர்களின் ஆதிக்கம்தான் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கானகாரணம் இது அவசரமாகவும் அவசியமகவும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை எனவும் பிரணாப் முகர்ஜி கூறிய போதிலும் மக்கள் பயன்படுத்திவரும் அத்தியாவசியப் பண்டங்களான தானியங்கள், பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி ஊக வணிகத்தின் மூலம் கொள்ளை லாபம் அடிக்கும் பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது அதை கட்டுப்படுத்தவோ இந்த பட்ஜெட் துணியவில்லை. மாறாக அவர்களை மென்மேலும் கொழுக்க வைக்கவே உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர் மார்க்கெட்டில் ஒரு கிலோ அஸ்கா வின் விலை ரூ 33 வரை என இருக்கும் போது அதே அஸ்கா வெளிநாடுகளுக்கு ரூ. 12.50க்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது இந்திய பங்குச் சந்தையி லுள்ள 33 சர்க்கரை நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை 30 கோடியிலிருந்து 910 கோடி வரை அதாவது 2900% உயர்த்திக் கொண்டுள்ளன.
வேளாண் விளை பொருட்களின் ஏற்றுமதியும் உயர்ந்து கொண்டே உள்ளது. ஜனவரி 10இல் மட்டும் ஏலக்காய், மிளகாய், பூண்டு, கரிமசால் போன்ற நறுமன மசாலாப் பொருட்களின் ஏற்றுமதி 18% அதிகமாகியுள்ளது. அளவின் அடிப்படையில் அது 3.92 லட்சம் டன்னாகவும் மதிப்பில் அது 4.28 கோடியாகவும் உள்ளது. கிராமப்புற வேளாண்மையோடு நெருக்கமான உறவுகளுள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தித் தொழிலும் இன்று அச்சுறுத்தலுக் குள்ளாகியுள்ளது. இறைச்சி ஏற்றுமதிக்கு 35% மான்யம் வழங்கப்படுவதால் அதன் ஏற்றுமதியும் அதிகரித்த வண்ணமுள்ளது. 2008, 2009இல் 5000 கோடி அளவில் இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டதால் 10 ஆண்டுகளுக்கும் மேல் பால் கறக்கக்கூடிய பசு மற்றும் எருமைகள் கொல்லப்பட்டு அதனால் பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு பாலின் விலையும் உயர்ந்துவிட்டது.
பட்ஜெட் அறிவிப்பின்போது, தொழில் துறைக்கு அதிக சுமை இருக்காத வகையில் இந்த பட்ஜெட் இருக்கின்றது என்கிற கருத்து பரவலாக பரவியதால், பங்குகளின் விலைகள் உயர்ந்தன. மும்பை சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்ததே இந்த பட்ஜெட் வர்த்தக ஆதாரங்களுக்கு எந்த அளவிற்கு உதவக்கூடியதாக இருந்தது என்பதை பறைசாற்றுவதாக இருந்தது.
இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களிடமிருந்து தயவு தாட்சண்யமின்றி உறிஞ்சி எடுத்து பெரிய முதலாளிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதாகவே அமைந்துள்ளது. கம்பெனி வரிக்கான கூடுதல் வரி 10% இருந்து 7.5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து 25000 கோடி திரட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரு முதலாளிகளுக்கு 2008இல் 70 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் வரியில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால் மட்டும் அரசுக்கு 80 ஆயிரம் கோடி இழப்பு இது கடந்த ஆண்டையும் விட அதிகமாகும். கடந்த 36 மாதங்களில் மட்டும் பெரு முதலாளிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்பட்டதால் அரசுக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வருட பட்ஜெட்டில் எக்சைஸ் வரி சலுகையில் 1.71 லட்சம் கோடியும், கஸ்பம்ஸ் (சுங்க)  வரி சலுகையால் 2.49 கோடியும் நேரடியான வஜா(WRITE OFF) ல் 80 ஆயிரம் கோடியும் என மொத்தம் 5 லட்சம் கோடி அரசின் கஜானாவிற்கு வந்து ஏழை மக்களுக்கு பயன்படுத்தப் படாமல் பெரு முதலாளிகள் கொழுத்து வளர திருப்பி விடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு 7000 கோடி தள்ளுபடி செய்து விட்டோம் எனஅரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளோ 1991இல் இருந்து விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த தொகையை விட 15 மடங்கு அதிகமாகும்.
இந்த பட்ஜெட் பெரு முதலாளிகளின் நலன் களில் மட்டுமே அக்கரை செலுத்தக்கூடிய பெரு முதலாளித்துவ ஆதரவு பட்ஜெட்டே அன்றி ஆம் ஆத்மி ஆதரவு பட்ஜெட் அல்ல.
-எ.நிஸார் அகமது
ட்ஜெட்டிற்குள் செல்வதற்கு முன் நாடு விடுதலை பெற்றதிலிருந்து இதுவரை நடைமுறைப் படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களால் கோடிக்கணக்கான வெகு மக்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன என்பதை நினைவில் கொண்டு வருவதுடன் குறைந்தபட்சம் 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை நோக்கியதாகவாவது இந்த பட்ஜெட் இருக் கின்றதா? என்பதை விவாதிக்க வேண்டிய  அவசியம் உள்ளது.

11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரம், குடிநீர், மகளிர் மேம்பாடு, கிராமப்புற pai_00வளர்ச்சி, உள்ளாட்சி, நிர்வாகம், கல்வி, மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவமளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 2010,2011 க்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது பிரணாப் முகர்ஜி 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பரிந்துரைக்கப் பட்டது போல அனேகமாக 100% திட்ட ஒதுக்கீடு செய்துள்ளோம் என தனக்குத் தானே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்திடவே முயலப்பட்டுள்ளதே தவிர அந்த இலக்குகளை நோக்கிய பயணத்தை ஆட்சியாளர்கள் தொடர வில்லை.

Pin It