இந்தப் பிரச்னையை ஆராய ஏன் முடிவு செய்தோம்?

மின்சார உற்பத்தி தொடங்கி மருத்துவம், தொழில் துறை, விவசாயம் என்று பல துறைகளிலும் கதிரியக்கம் மற்றும் கதிரியக்கப் பொருட்கள் பயன்படுகின்றன. அதே நேரம், இந்த பயன்பாட்டின் மூலம் இந்த துறை களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், பொது மக்க ளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் கதிரியக்க ஆபத்து களும் மிக அதிகம். எனவே அவற்றை மதிப்பிடுவதும், கட்டுப்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. கதிரியக்க ஆபத்துகள் என்பது தேச எல்லைகளை கடக்கக் கூடியது என்பதால் உலகப் பாதுகாப்பை வலியுறுத்தவும், அதிகப்படுத்தவும் சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. உலகப் பாதுகாப்பு, அனுபவ பகிர்வு, ஆபத்துகளை குறைக்க செயல்திறனை அதிகப்படுத்துதல், விபத்துகளை தடுப்பது, நெருக்கடி நிலைகளை கையாள்வது மற்றும் ஆபத்தான விளைவுகளை குறைப்பது ஆகியவற்றின் மூலமே இது சாத்தியப்படும்.

இந்தியாவில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் 1983ம் ஆண்டு அமைக்கப் பட்டது. அணுசக்தி சட்டம் 1962ன் கீழ் அமைக்கப்பட்ட இந்த வாரியம் சில பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டது.

நம் நாட்டிலும் உலக அளவிலும் நிலவும் ஒழுங்குமுறை சூழல்,கதிரியக்க ஆபத்துகள் குறித்த முக்கியத்துவம், நமக்கு உறுதி செய்யப்படும் பாதுகாப்பு ஆகியவை இந்த ஆய்வை மேற்கொள்ள எங்களைத் தூண்டியது.

இந்திய அணுசக்தித் துறையை நிர் வாகம் செய்யும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அமைப்பு, அதிகாரம், அந்தஸ்து மற்றும் அதன் திறன் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

நமது தணிக்கையின் நோக்கங்கள் என்ன?

இந்த தணிக்கையின் நோக்கங்கள்: 

1.அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், அணுசக்தி குறித்த நெறிப்படுத்தும் அமைப்பாக செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தேவைப்படும் சட்டரீதியான அந்தஸ்து, அதிகாரம், சுதந்திரம், ஆணை ஆகியவை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்கு இருந்ததா?

2.சர்வதேசப் பரிந்துரைகள் மற்றும் உள்ளூர் தேவை களை கருத்தில் கொண்டு இந்த வாரியம் அணு, கதிரியக்கம் மற்றும் தொழில்துறைகளில் உரிய பாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்கியிருக்கிறதா? பல்வேறு அணு மற்றும் கதிரியக்க நிலையங்கள் அமைப்பதற்காக உரிய அமைவிடம், வடிவமைப்பு, கட்டுமானம், தொடக்கம், இயக்கம் மற்றும் செயலி ழக்கம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் தர நிர்ணயங்கள் ஆகியவற்றை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் உருவாக்கி இருக்கிறதா?

  •  1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் ஒப்பந்தபடி அணுகழிவுகளை ரஷ்யா எடுத்துக்கொள்ளும் என்றும் நிலை தற்போது மாறிவிட்டது. 1998ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணுக்கழிவுகள் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்கப் படும் என்று கூறப்படுகிறது. 

3.அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் ஒப்புதல் பெற்ற பின்னரே அணு மற்றும் கதிரியக்க நிலையங் கள் செயல்பட வேண்டிய சூழலில், வாரயத்தால் திறம்பட செயல்பட முடிந்ததா?

4.அணுமின்நிலையங்களும், மற்ற அணு மற்றும் கதிரியக்க நிலையங்களும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தால் முறையாக நெறிப்படுத்தலுக்கும், கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்பட்டு இயங்குவது உறுதி செய்யப்பட்டதா

5.அணு உலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் பொது மக்கள் மீதான கதிரியக்க வீச்சு குறித்து தனது பொறுப்புகளை வாரியம் உரிய முறையில் கண் காணித்து நிறைவேற்றுகிறதா? சுற்றுச்சூழலில் கதிரியக்க பொருட்கள் கலப்பது பற்றி உறுதியான மற்றும் திறமையான நடவடிக்கைகளை எடுக்கிறதா?

6.அணு உலை மற்றும் கதிரியக்க நிலையங்களில் அவசர காலங்களில் கையாள்வதற்கான அவசரகால தயார்நிலை திட்டங்கள் செயல்பாட்டில் இருக் கிறதா? கதிரியக்கப் பொருட்கள், எரிபொருள் ஆகியவை இடம் பெயர்க்கப்படும் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கை திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறதா?

7.அணு மற்றும் கதிரியக்க நிலையங்களை செயலிழக்க செய்வதற்கும், செயலிழக்கப்பட்ட அணுக்கதிரியக்க பொருட்களை பாதுகாக்க உரிய மற்றும் போதுமான ஒழுங்கு நடைமுறைகள் இருக்கிறதா?

8.அணு கதிரியக்க விவகாரங்களில் ஈடுபடும் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்பில் இருக்க வாரியம் உரிய நடவடிக்கைகள் எடுத்திருக்கிறதா?

நமது தணிக்கை முடிவு என்ன?

அது காட்டியவை: 

அணுக் கதிரியக்க சேவைகளுக்கான ஒழுங்கு கட்டமைப்பு:  

சர்வதேச அளவில் நிபந்தனைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றுடன் உள்நாட்டு நிபுணர் களின் பரிந்துரைகளும் இருந்தபோதும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியமோ மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு இயங்கும் ஒரு அமைப்பாகவே இருந்திருக்கிறது. மத்திய அரசு வழங்கிய அதிகாரங்கள் மட்டுமே வாரியத்திடம் இருந்தது.

அணு மற்றும் கதிரியக்க பாதுகாப்புக் குறித்து புதிய சட்டங்களை உருவாக்கவோ, ஏற்கனவே இருந்த சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரவோ அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்துக்கு அதிகாரம் இல்லை.

கடுமையான ஆபத்துகள் கொண்ட அணு மற்றும் கதிரியக்க நிலையங்களில் நடைபெறும் குற்றங்கள் அல்லது மீறல்களை தடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை மிகவும் அற்பமானது.தவிர அபராதத் தொகையின் அளவை முடிவு செய்யும் உரிமையோ அதை அமல்படுத்துவதற்கான உரிமையோ அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்துக்கு இல்லை. (பத்தி 2.3, 2.5, 2.8)

பாதுகாப்புக் கொள்கை,தரக் கொள்கை மற்றும் வழிகாட்டுதல் கொள்கைகள் வடிவமைப்பு: 

1983ம் ஆண்டில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத் தினை உருவாக்கிய உத்தரவில் குறிப்பாக வலியுறுத்தப் பட்டிருந்த நிலையிலும், நம் நாட்டிற்கான அணு மற் றும் கதிரியக்க பாதுகாப்புக் கொள்கையை வடிவமைக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தவறிவிட்டது. பெரிய அளவில் அப்படியரு கொள்கை இல்லாததால் பரவலான கதிரியக்க பாதுகாப்பு திட்டமிடுதல் பாதிக்கப்படும்.

அணுக்கதிரிக்க பாதுகாப்புக்காக 27 பாதுகாப்பு ஆவணங்களை தயாரிக்கவேண்டும் என்று 1987 ஆண்டில் மெகொனி குழு (Meckoni Committee) பரிந்துரை செய்தது. அணுக்கதிரிக்க பாதுகாப்புக்காக 27 பாதுகாப்பு ஆவணங்களை தயாரிக்கும் இப்பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று 1997 ஆண்டில் ராஜா ராமண்ணா குழு அறிவுறுத்தியது. ஆனால் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் இதைச் செய்யத் தவறிவிட்டது. பாதுகாப்பு ஆவணங்கள் தயாரிப்பது குறித்த தணிக்கையின்போது அப்பணியில் காலதாமதம் இருப்பதும் கண்டறியப்பட்டது. (பத்தி 3.1, 3.2)

ஒப்புதல்கள் 

கதிரியக்க சேவைகளைப் பொறுத்தவரை ஒப்புதல ளிக்கும் நடைமுறை மற்றும் தொடர் கண்காணிப்பு,புதுப்பிப்புக்கான நடைமுறை ஆகியவை பலவீனமாக இருந்தது கண்டறியப்பட்டது.இதன் காரணமாக குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கதிரியக்க சேவைப் பிரிவுகள், உரிய உரிமங்கள் இல்லாமல் இயங்கின. அடிப்படை உரிம ஆவணங்கள் இல்லாததும், முக்கியமான ஒப்புதல் ஆவணங்களை பராமரிப்பதிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியது.

நாட்டிலுள்ள எக்ஸ்ரே மையங்களில் 91சதவிகிதம் மையங்கள் வாரியத்தோடு பதிவானவை அல்ல. அதனால் அவை ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

2001ல் உச்சநீதிமன்றம் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எக்ஸ்ரே மையங்களை ஒழுங்குபடுத்த கதிரியக்க பாதுகாப்பு இயக்ககத்தை அமைக்க உத்தரவிட்டது. ஆனால் இன்றைய தேதியில் கேரளாவிலும் மிசோரா மிலும் மட்டுமே இந்த இயக்ககம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒழுங்கு மற்றும் ஒப்புதல் சேவைகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க எந்தவிதமான சட்டத்தையும் வாரியம் உருவாக்காத நிலையில் அதற்கான செலவுகளை வாரியமே ஏற்றுக் கொள்கிறது. (பத்தி 4.2, 4.3)

ஒழுங்கு தேவைகளுக்காக கட்டுப்பாடுகளும் அமலாக்க மும்: 

கதிரியக்க நிலையங்களில் நெறிப்படுத்தும் ஆய்வு களை எவ்வளவு கால இடைவெளியில் செய்ய வேண் டும் என்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் இது போன்ற கண் காணிப்பு ஆய்வுகளுக்கான விதிமுறைகளை சரிவர வகுக்காத நிலையில், வாரியத்தின் செயல்பாடுகளை சர்வதேச அணு சக்தி நிறுவனம் விதித்துள்ள அளவு கோல்களோடு (இது போன்ற கண்காணிப்புகளை நடத்தும் கால இடைவெளிகள் குறித்து), ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில் கீழ்கண்ட விஷயங்களை நாங்கள் கவனித்தோம்.

  • கதிரியக்கத் தன்மை கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவரீதியான கதிரியக்க மையங்களில் மிக அதிக கதிரியக்க பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்ட மையங்களில் சுமார் 85 சதவீத மையங்களில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.
  • கதிரியக்கம் மூலம் நோய் கண்டறியும் சேவைமையங்களில் சுமார் 97 சதவீத மையங்களில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.
  • பொதுமக்கள் உடல்நலம் சார்ந்த கதிரியக்க மையங் களில்கூட வாரியம் தனது ஒழுங்கு நடவடிக்கைகளை சரிவர அமல்படுத்தவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.
  • கேரளாவிலுள்ள கதிரியக்க மையங்களில் இருந்த குறைபாடுகள் குறித்து சுட்டிக் காட்டப்பட்ட போதும் அம்மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கவும் அமலாக்கவும் அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் தவறிவிட்டது. (பத்தி 5.2, 5.6)

கதிரியக்க பாதுகாப்பு 

அணுமின் உலைகளின் கதிரியக்க பாதிப்பை கண் காணிக்கும் பணிகள் அணு சக்தி உலைகளின் நிர்வாகி களிடமே இருக்கிறது.அணுசக்தி குறித்த விவகாரங்களை நெறிப்படுத்தும் அமைப்பாக அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் இருந்தாலும், அணுமின் நிலையங்களில் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் ஆய்வு நடத்தி நிலைமைகளை மதிப்பிடவும்,அணுமின் நிலைய பணி யாளர்களை கதிரியக்க பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் அதிகாரமும் வாரியத்திற்கு வழங்கப்படவில்லை.

பயன்பாட்டில் இல்லாத கதிரியக்க பொருட்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கு உரிய நெறிமுறைகள் அமலாக்கப்படுவதை உறுதிபடுத்த உதவியாக, கதிரியக்க பொருட்களின் பட்டியல் எதுவும் வாரியத்திடம் இல்லை.

  • உபயோகத்திற்கு பிறகு கதிரியக்க கழிவு பத்திரமாக அகற்றப்பட்டதை உறுதிப்படுத்தவும்
  • கதிரியக்க கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்காக அவற்றை எடுத்துச் செல்லும் போக்குவரத்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டதா என்பதையும், கதிரியக்க கழிவுகள் உரிய முறைப்படி பாதுகாப்பாக அகற்றப் பட்டதா? இல்லையா? என கண்டறியவும்
  • கதிரியக்க மூலப்பொருட்கள் நெறிமுறைகளைத் தாண்டி செல்லவில்லை. தொலைந்து போன அல்லது கேட்பாரற்ற கதிரியக்க மூலப்பொருட்களை கண்டுபிடிக்கவும்...

உரிய நடைமுறைகள் இல்லை. (பத்திகள் 6.3, 6.4)

அணு சக்தி மற்றும் கதிரியக்க மையங்களுக்கான அவசரகால தயார் நிலைகள் 

அணு மின் நிலையத்துக்குள்ளான அவசரகால தயார்நிலைகளுக்கான திட்டங்கள் அணு உலைகளின் நிர்வாகங்களினாலேயே வடிவமைக்கப்பட்டன. அணு உலைக்கான எரிபொருள் சேவைகளும் அவர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தன. பல்வேறு இடர்களின் அடிப் படையில் வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொண்டு வந்தாலும், வாரியம் அந்த பயிற்சிகளின் அறிக்கைகளை மட்டுமே பார்வையிட்டதே தவிர நேரிடையாக பயிற்சிகளில் பார்வையாளராகக்கூட தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.

அவசரகால தயார்நிலை திட்டங்கள் சரியாக இல்லாததையே அணு மின் நிலையத்துக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகள் உணர்த்தின. இதை சரிசெய்வதற்கு வாரியம் பரிந்துரைக்கும் நடவடிக்கை களை அமலாக்க வேண்டும் என்று உத்தரவிடும் அதிகாரமும் வாரியத்திடம் இல்லை.

தொழிற்சாலை கதிரியக்கம், மருத்துவ சிகிச்சைக்கான கதிரியக்கம் மற்றும் காமா கதிர்களால் விளையும் ஆபத்துகள் அதிகம் என்று கணக்கிடப்பட்டிருந்தாலும் அவற்றுக்கான அவசரகால தயார்நிலை குறித்து குறிப்பான வழிகாட்டுதல்கள் இல்லை. (பத்தி 7.3, 7.4)

அணு மற்றும் கதிரியக்க சேவைகளை செயலிழக்கச் செய்தல்

அணு மின் நிலையங்களை செயலிழக்க செய்ய இந்தியாவில் எந்தவொரு சட்டரீதியான நடைமுறையும் இல்லை. செயலிழக்கச் செய்வது பற்றி நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு ஆவணங்களை உருவாக்குவது தவிர வாரியத்திடமும் எந்தவொரு அதிகாரமும், செயல்திட்டமும் இல்லை.

அணுமின் நிலையத்தைச் செயலிழக்கச் செய்வது குறித்த பாதுகாப்பு ஆவணத்தை வாரியம் வெளியிட்டு 13 ஆண்டுகள் கழித்தும் நாட்டிலுள்ள எந்த அணு உலையிடமும், 30 வருடங்கள் பயன்படுத்திய பின்னர் மூடப்பட்ட அணு உலைகள் உள்பட, அணுமின் நிலையத்தை பாதுகாப்பாக செயலிழக்க செய்வதற்கான திட்டம் எதுவும் இல்லை.

Koodankulam-5_5801962ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அணு சக்தி சட்டத்திலோ,அச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவிதிகளிலோ அணுக்கழிவுகளை பாதுகாப்பது குறித்து எந்த திட்டமும் இல்லை.தவிர, அணுக்கழிவை பாதுகாப்பதற்கு தேவையான நிதி ஆதாரம் இருப்பதை உறுதி செய்யும் பணியிலும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்துக்கு எந்த பங்கும், அதிகாரமும் இல்லை. (பத்திகள் 8.2, 8.3, 8.4)

அணுசக்தி நெறிமுறைப்படுத்தும் சர்வதேச அமைப்பு களோடு தொடர்பில் இருத்தல்

சர்வதேச அணுசக்தி நெறிமுறைப்படுத்தும் அமைப்பு களோடு வாரியம் தொடர்பில் இருந்தாலும் அணு மற் றும் கதிரியக்க செயல்பாடுகளில் சர்வதேச அளவு கோல்களையும் நல்ல செயல்முறைகளையும் கடை பிடிப்பதில் மெத்தனம் காட்டுகிறது.

சர்வதேச அணு சக்தி அமைப்பின் சரிபார்க்கும் சேவைகளை பயன்படுத்தி,தனது ஒழுங்குமுறை செயல்பாடுகள் சரியாக இருக்கிறதா என்று அறிந்து கொள்ளவும் உள்ள வாய்ப்பை வாரியம் பயன்படுத்தத் தவறிவிட்டது. (பத்திகள் 9.2, 9.3)

எங்களுடைய பரிந்துரைகள்

  • அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், அதிகாரம் மிக்கதாகவும் சுதந்திரமாக செயல்படக் கூடியதாகவும் இருப்பதை அரசு உறுதி செய்யலாம். (தற்போது அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒரு அரச £ணை மூலமாகவே உருவாக்கப்பட்டுள்ளது)அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்காக ஒரு சட்டத்தை உருவாக்கி வாரியத்திற்கு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். இதன் மூலமாக நெறிமுறைகளை உருவாக்குவதில், அந்த நெறிமுறை களை அமல் செய்வதில்,அதை கண்காணிப்பதில் வாரியம் உரிய முறையில் செயல்படுவதிலும், நெறிமுறைகளை பின்பற்றாத அமைப்புகள் மீது வாரியம் நடவடிக்கை மேற்கொள்ளவும் வழி வகை செய்ய வேண்டும்.
  • அணு சக்தி சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அதிக பட்ச அபராதத் தொகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அத்துமீறல்களின் தன்மையைப் பொறுத்து நடவடிக்கை எடுப்பது, அபராத தொகை நிர்ணயிப்பது உள்ளிட்ட தீர்வுகளை காண, அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்துக்கு அதிகாரம் வழங்கலாம்.
  •  அணுசக்தி மற்றும் கதிரியக்க பாதுகாப்பு கொள் கையை காலக்கெடு விதித்து உருவாக்க வேண்டும்.
  • அணு மற்றும் கதிரியக்க பாதுகாப்புக்கான 27 நெறிமுறைகளும் வழிகாட்டுதல்களும் -அவற்றுள் 11 நெறிமுறைகள் 2001ம் ஆண்டில் அடையாளப்படுத்தப் பட்டன விரைவாக வகுக்கப்படலாம்.
  • நாட்டிலுள்ள எல்லா கதிரியக்க மையங்களும் வாரியத்தின் ஒழுங்குக் கட்டுபாட்டுக்குள் வரும் வகையில் உரிமங்கள் வழங்கும் நடைமுறையை மேம்படுத்தலாம்.
  • உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி எல்லா மாநிலங்களிலும் கதிரியக்க பாதுகாப்பு இயக்ககங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கலாம்.
  • ஒப்புதல் வழங்கும் நடைமுறைக்கான செலவுகளை உரிமம் பெறுபவர்களிடமிருந்தே பெறும் வண்ணம் வாரியம் கட்டணம் நிர்ணயம் செய்யலாம். அப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படலாம்.
  • கீழ்கண்ட வழிமுறைகள் மூலமாக வாரியம் அணு மற்றும் கதிரியக்க சேவைகளின் ஒழுங்குமுறை கண்காணிப்பு நடைமுறைகளை பலப்படுத்தலாம்.

1.ஆபத்து ஆய்வுகளை குறிப்பிட்ட கால இடை வெளிகளில் மேற்கொள்வதன் மூலம் ஒழுங்கு முறை கண்காணிப்புகள் குறிப்பிட்ட காலங்களில் நடைபெறுவதை உறுதி செய்யவும் அதன் பொருட்டு சர்வதேச அளவுகோல்களை கடைபிடிக்கவும் செய்யலாம்.

2.சர்வதேச அணு சக்தி அமைப்பு நிர்ணயித்துள்ள வரைமுறைகளின் அடிப்படையில் கதிரியக்க மையங்களுக்கு கண்காணிப்பு மேற்கொள்ளலாம்.

3.குறிப்பிட்ட காலங்களில் கண்காணிப்பு அறிக்கை களை தாக்கல் செய்யவும் அதன் மூலம் அவற் றின் அமலாக்கத்தை உறுதிப்படுத்தவும் செய்யலாம்.

  • உடல்நலஅமைப்புகள்,சூழலியல் ஆய்வுக்கூடங்கள் போன்ற கண்காணிப்பு அமைப்புகளை வாரியத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் வாரியத்தின் ஒழுங்குமுறை அமைப்பை பலப்படுத்தலாம்.
  • கதிரியக்க மூலப்பொருட்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகாமல் இருப்பதையும், பயனில்லாத மூலப் பொருட்கள் பாதுகாப்பாக அகற்றப்படுவதையும் உறுதி செய்வதற்காக அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அணுசக்தியை பயன்படுத்தும் நிர்வாகங் களிடமிருந்து தேவையான தகவல்களை பெறவேண்டும்.இதற்கு வழி செய்யும் வகையில் வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
  • அணு உலை அமைந்திருக்கும் இடத்தில் நடைபெறும் அவசரகால தயார்நிலை பயிற்சிகளில் வாரியம் தன்னை மேலும் தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்ளலாம்.
  • ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் அணு உலை களும், புதிதாக அமைக்கப்படவிருக்கும் அணு உலைகளும் அணுஉலையை செயலிழக்கும் திட்டத்தை தயார்படுத்தவும், அங்கீகாரம் வாங்கவும் தெளிவான கால இலக்குகளை அரசாங்கம் நிர்ணயிக்கலாம்.
  • அணுஉலைகளை செயலிழக்கச் செய்வதற்கான செலவுகளைப் பற்றிய திட்டங்கள் இன்னும் தெளி வாக வகுக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த கட்டணம் மாற்றப்படலாம்.
  • அணு ஒழுங்குக் கட்டமைப்பை பலப்படுத்தவும் ஸ்திரப்படுத்தவும் வாரியம் சர்வதேச அணுசக்தி அமைப்பின் சரிபார்க்கும் சேவைகளையும் பிற அணு உலைகளுடனான ஒப்புநோக்குகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எங்களது பரிந்துரைகளுக்கு அணு சக்தித் துறையின் பதில் என்ன?

நாங்கள் எடுத்துச் சொன்ன கவலைகளையும்,அச்சங்களையும் அணுசக்தி துறை புரிந்து கொண்டது. எங்களது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கால அளவுகளுடன் கூடிய உறுதி மொழிகளை கொடுக்கா விட்டாலும்,அவற்றை பரிசீலிப்பதாக அணுசக்தித்துறை கூறியுள்ளது.

Pin It