இந்திய வரைபடத்தில் ஒரு புள்ளிபோல தோன்றும் உத்தபுரம் என்ற கிராமம் தீண்டாமைக் கொடுமையால் தேசத்தின் கரும்புள்ளியாக மாறி உள்ளது. அங்கிருந்த 600 அடி தீண்டாமைச் சுவரை இடிக்க கடுமையாண போராட்டம் நடத்திய பிறகு 10 அடி சுவர் மட்டும் இடிக்கப்பட்டு ”ஆஹா! பாருங்கள் உத்தப்புரம் உத்தமபுரமாக மாறி விட்டது” என்று திமுக அரசு மார்தட்டிக்கொண்டது. ஆனால் அங்கு தலித் மக்கள் வாழ்க்கை மிகவும் கொடுமை மிக்கதாக இருந்தது மாறவே இல்லை. எத்தனை முறை மனு கொடுத்தும் அரசும் மதுரை மாவட்ட நிர்வாகமும் திரும்பிப் பார்க்கவே இல்லை. மீண்டும் மீண்டும் அங்குள்ள் தலித் மக்கள் தாக்கப்படுகின்றனர். ஆதிக்க சாதியால் மட்டுமல்ல காவல்துறையாலும் அவர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்கள் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்குகள் போடப்படுகின்றன‌. அவர்கள் செய்கிற‌ ஒரே குற்றம் தீண்டாமையை எதிர்த்துப் போராடுவதுதான். 

uthapuram_332தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு அரசு உருவாக்கிய பொதுப்பாதையில் தலித் மக்கள் “ஆட்டோ” உள்ளிட்ட எந்த வாகனத்திலும் செல்லக்கூடாது என்ற ஆதிக்க சக்திகளின் நிலைபாட்டை காவல்துறையே ‘ஷிப்டு’ போட்டு அமல்நடத்திவரும் நிலையில், காலம்காலமாக முத்தாலம்மன் கோவில் அரசமர வழிபாடு தலித் மக்களின் பாரம்பரியமான வழிபாட்டு உரிமையாக இருந்துள்ளபோது, அதனை ‘சுவர் வைத்து’ அடைத்துக்கொண்டு தலித் மக்களுக்கு பல ஆண்டுகளாக அனுமதி மறுப்பதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

தோழர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., அவர்கள், வளர்ச்சிப் பணிக்கான நிதியிலிருந்து ரூ. 3.75 லட்சத்தை உத்தப்புரம் தலித் மக்கள் மற்றும் இதர பிரிவினரின் பயன்பாட்டிற்காக பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க ஒதுக்கியும் அரசு அதை கட்டாமல் காலம் தாழ்த்தி வருவது ஆதிக்க சாதிகளின் வற்புறுத்தலால்தான். தொடர்ந்து ஏதாவது பிரச்சனை எனில் உத்தப்புரத்தில் உள்ள மொத்த தலித் மக்கள் மீதும் காவல்துறை வழக்குப் போடுவதும், ஒவ்வொரு வழக்கிலும் 300 பேர், 500 பேர் என பெயர் குறிப்பிடாமல் எண்ணிக்கையைச் சேர்ப்பதும், தலித் மக்கள் தங்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும்போதெல்லாம் மிகப் பெருவாரியான ஆண்கள் உள்பட தலித் மக்களை காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்கி கைது செய்வதும் வழ‌க்கமாக உள்ளது.

இந் நிலையில் அங்கு சட்டத்தின் ஆட்சியை அமலாக்கக் கோரி 12.07.10 அன்று மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது தமிழக அரசின் காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் காவல் துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் என். நன்மாறன், எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் படுகாயமடைந்தனர். பெண்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கியதோடு நில்லாமல், தலைவர்கள், தொண்டர்கள், பெண்கள் உட்பட 384 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தமுக்கம் மைதானத்தில் அடைக்கப்பட்டார்கள். மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த கொடூரமான தாக்குதலுக்குக் காரணம் என்ன? "அம்பேத்கர் சுடர்" விருது பெற்ற முத்தமிழ் வித்தகர் பல காரணங்களை அறிக்கைகளாக இனி வெளியிடலாம்; தம்பிகளுக்கு கடிதம் எழுதலாம். அவரது குடும்ப சேனல்களும், சொந்தங்களின் அலைவரிசைகளும் பொய்களுடன் வலம் வரலாம்  ஆனால் உண்மையை யாரும் மறுக்க முடியாது. 

உத்தப்புரத்தில் அரசு திறந்து விட்ட பொதுப்பாதையை தலித் மக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும், நிழற்குடை அமைக்க வேண்டும், அரசமர வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த தேசம் ஜனநாயக நாடு என்று மீண்டும் மீண்டும் வெட்கம்  இல்லாமல் அழைக்கப்படுகிறது. உத்தப்புரத்தில் ஆதிக்க சாதியினர் அக‌ங்காரத்தை தடுக்கமுடியாமல் தமிழக  காவல்துறை வேடிக்கை பார்த்து நிற்பதற்குப் பெயர் ஜனநாயகம்?

uthapuram_331தலித் மக்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜிடம் தலைவர்கள் எடுத்துரைத்தனர். அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மு.மனோகரன், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல்துறை உதவி ஆணையர் தேன்மொழி ஆகியோர் உடனிருந்தனர். அரசு திறந்து விட்ட பாதையை தலித் மக்கள் பயன்படுத்தி வருவதாக மீண்டும், மீண்டும் காவல்துறை கண்காணிப்பாளர் மு.மனோகரன்  கூறினார். அதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுப் பாதையை பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை எனக்கூறிக் கொண்டே, எங்களை அன்று உத்தப்புரத்தில் வாகனத்தில் செல்ல விடாமல் காவல்துறை தடுத்தது என சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் குற்றம் சாட்டினார். மீண்டும், மீண்டும் காவல்துறை கண்காணிப்பாளர் பொய் சொல்லக்கூடாது என்று தலைவர்கள் வலியுறுத்தினர். 

'கடந்த பல வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் தலித் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதுவரை 4 மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தலைவர்கள் வலியுறுத்தினர். தான் நேரடியாக வந்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறினார். அதற்கு பதிலளித்த தலைவர்கள், 'உத்தப்புரத்திற்கு பல ஆட்சியர்கள் நேரடியாக வந்து பார்த்து நிழற்குடை அமைக்கவும், அரசமர வழிபாடு நடத்தவும் தலித் மக்களுக்கு அனுமதி வழங்கலாம் என அறிவித்துள்ளனர். அந்த கோப்புகளைப் பார்த்து நடவடிக்கை எடுங்கள். ஒவ்வொரு ஆட்சியரும் வந்து பார்த்து விட்டு நடவடிக்கை எடுக்காத நிலை தொடரக் கூடாது. இன்னும் எத்தனை காலம்தான் தலித் மக்கள் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டிருப்பார்கள்?' என வினா எழுப்பினர்.

'இது குறித்து அதிகாரிகளிடம் பேசிவிட்டுக்கூட சொல்லுங்கள் காத்திருக்கிறோம்' என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆட்சியரிடம் கூறினார். ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியர், 'பொதுப்பாதையில் தலித் மக்களை அனுமதிப்பது குறித்து காவல்துறை கண்காணிப்பாளருடன் பேசியுள்ளேன். இன்னும் இரண்டு நாட்களில் அந்த நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற விஷயங்கள் குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. உத்தப்புரம் சென்று விட்டு வந்துதான் பேச வேண்டும்' என்றார். 'அதுவரை நாங்கள் காத்திருக்கத் தயாராக இருக்கிறோம். நீங்கள் உத்தப்புரம் சென்று விட்டு வரும் வரை வெளியே காத்திருக்கிறோம்' என டி.கே.ரங்கராஜன் கூறி விட்டு தலைவர்களோடு வெளியேறினார். 

அதன் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் அமைதியான முறையில் அமர்ந்து முழக்கமிட்டனர். அப்போது அங்குவந்த மாநகர் காவல்துறை ஆணையர், எம்.பாலசுப்ரமணியன், தலித் மக்களின் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் அடித்து வண்டியில் ஏற்றுங்கள் என உத்தரவிட்டதும், காவல்துறையோடு சேர்ந்து கொண்ட அதிரடிப்படையினர் ஒவ்வொருவரையாக குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று தாக்க ஆரம்பித்தனர். தடுத்த பெண்கள் மீதும் கடுமையாகத் தாக்கினர்.

uthapuram_333தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் பி. சம்பத்தை சூழ்ந்து கொண்ட காவல்துறையினர், அவர் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் தொடுத்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜைத் தூக்கி வந்து மிருகத்தனமாக தாக்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், என்.நன்மாறன் ஆகியோரை மக்கள் பிரதிநிதிகள் என்றும் பார்க்காமல் குண்டுக் கட்டாகத் தூக்கிச்சென்று பேருந்தில் எறிந்தனர் அதிரடிப்படையினர். காவல் துறையினரோடு, மப்டியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த காவலர் ஒருவரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார். பெண்களை நடுரோட்டில் மானபங்கம் செய்வது போல தலைகீழாகத் தூக்கிச் சென்று ஆண் காவலர்கள் கேவலப்படுத்தினர்; அவர்களையும் தாக்கினர் 

இத்தாக்குதலில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம். தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வேலம்மாள், முத்துராணி, முத்து பேயாண்டி, நல்லதங்காள், கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பாலசுப்ரமணியன், பி.தேவி, செங்குட்டுவன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒவ்வொருவரையும் கைது செய்து குண்டு கட்டாகத் தூக்கி வந்த காவல்துறையினர், பலரின் செல்போன்களை பறித்துக் கொண்டனர். காவல்துறை தாக்குதலில் பி.சம்பத், சாமுவேல்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, செங்குட்டுவன் ஆகியோர் மயக்கமடைந்தனர். கடைசியாக டி.கே.ரங்கராஜன் எம்.பி மீது காவல்துறையினர் தாக்குதல் தொடுத்தபோது, பெண்கள் அவரைக் கேடயம் போல சூழ்ந்துகொண்டு காவல்துறையினரின் தாக்குதலை தங்கள் மீது வாங்கிக் கொண்டனர். கடைசியாக அனைவரையும் அடித்து வாகனங்களில் ஏற்றிய காவல்துறையினர், வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று டி.கே.ரங்கராஜனை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

காவல்துறையினரின் இந்த திட்டமிட்ட வன்முறையால் மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட்ட அப்பகுதி கலவர பூமி போல காட்சியளித்தது. செருப்புகள், பேனாக்கள், சில்லரைக் காசுகள் அப்பகுதியில் சிதறிக்கிடந்தன. காவல் துறையினரின் இத்தாக்குதலைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த மக்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் சென்று கதவுகளைத் தாழிட்டுக் கொண்டனர். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறை, அவர்களை தமுக்கம் மைதானத்தில் அடைத்தது. பலமணி நேரமாகியும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. பிற்பகல் 2.20 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் நல்லதங்காள், விருதுநகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

uthapuram_334தி.மு.கழகத்தின் பத்திரிக்கையான முரசொலியில் இந்தப் பிரச்சனை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக கட்டுரை எழுதி மகிழ்கிறார் முதல்வர். மாவட்ட ஆட்சியர் 30 நாட்களில் பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறியதும் அதை அப்படியே எழுதிக்கொடுங்கள் அல்லது பத்திரிக்கையாளர்களிடம் சொல்லுங்கள் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கேட்கிறார். இதில் ஏதாவது ஒன்று நடந்திருந்தாலும் இவ்வுளவு பெரிய பிரச்சனை எழுந்திருக்காது. எழுதிக்கொடுப்பதில் ஆட்சியருக்கு என்ன சிரமம்? சிரமம் எதுவும் இல்லை, அவருக்குத் தெரியும் உத்தபுரத்தின் தலித்துகளுக்கு எதுவும் செய்ய முடியாது என்று. இப்பிரச்சனை துவங்கி இவர் நான்காவது ஆட்சியர். இதில் திட்டமிட்டு பிரச்சனையை உருவாக்கியது யார் என்று கலைஞர்தான் சொல்ல வேண்டும். 

மனசாட்சி உள்ள யாரும் இதை ஏற்றுக்கொள்வார்களா? ஒரு சிறிய கிராமத்தில் உள்ள தீண்டாமைப் பிரச்சனையை தீர்க்க முடியாத தமிழக அரசும் காவல்துறையும் போராட்டத்தில் வந்த பெண்களிடம் தனது வீரத்தைக் காட்டுவது முறையா? பெண்களை சேலை அலங்கோலமாக ஆண் காவலர்கள் இழுத்து வருவது ஜனநாயகமா? காவல்துறைக்கு போட்டோ எடுக்கும் ஒரு அயோக்கியன் போராட்டத்திற்கு வந்த மாணவனை தலையில் மிதிப்பதை ஆதரிக்கலாமா? பொதுப்பாதையை அடைத்து வைத்திருக்கும் ஆதிக்க சாதியினரிடம் வீராதி வீரர்களான காவல்துறையின் தடிகள் நீளாதது ஏன்? கேள்விகள் நீண்டுகொண்டே இருக்கின்றன‌. வழக்கம் போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் இந்த அரசு கள்ள மெளனம் சாதிக்கிறது. இப்படி தடியால் அடித்து மண்டைகளைப் பிளந்து உரிமைக்கான போராட்டத்தை அடக்கிவிடலாம் என்று கலைஞர் நினைத்தால் அது பகல் கனவாக மாறும் என்பதை அவர் உணர்வது நல்லது.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

13 comments

13
noyyalnathi
உங்களுக்கு என்னடா உரிமை வேண்டிக்கிடக்கிறது.. என்று தாழ்த்தப்பட்டவர்களை கேவலப்படுத்தும் ஆதிக்க சாதிகளீன் பணமும் ஓட்டும் கருணாநிதிக்கு வேண்டும்.. இவர் ஏதோ சமத்துவ்வான் போல் ஸ்டாலினுக்கு துர்காவை கட்டி வைத்தாலும்.. ச்பெக்ட்ராம் ஊழலில் ராசாவை காப்பாற்ற நினைத்தாலும்.. மனதளவில் தான் ஒரு ஆதிக்கசாதியின் காவலனாகவே இருந்து வருகிறார்.. மதுரையில் தீண்டாமைக்கு எதிராக போராடிய இடது கம்யூனிஸ்டை திருப்பூரில் " காசு கண்ட தோழன் கோவிந்தசாமி மூலம் பிளவு படுத்துகிறார்..." தன் வாரிசுகள் நாட்டை ஆள யாரும் தடையாகிவிடக்கூடாது என்பதில் கவனமாகயிருக்கும் இவர் பெரியாரியல் வாதி நாடகமாடுவதை நாட்டோர் புரிந்துகொள்ள வேண்டும் ..... (நொய்யல்நதி ஒரத்துப்பாளையம் )
suriyan
ஒரே நகைச்சுவை தான் போங்கள்...கலைஞர்
vimalavidya
A barbaric lathi charge was done by the DMK POLICE REGIME. Karunanithi's statements clearly exposed his utter lies..The photos exposed him nakedly. He cannot escape from the curse of the dalit women..
His colors became very fade within a month of his self praising Tamil conference. vimalavidya
அரவிந்தன்
அய்யோ அய்யோ கருணாநிதி முழு நேர காமெடியன் ஆகி விட்டார் போங்கள். உத்தபுரத்தில் பிரச்சனை, சிதம்பரத்தில் பிரச்சனை, திண்டுக்கல்லில் பிரச்சனை பிரச்சனையோ பிரச்சனை. என்ன சார் ஒய்வெடுக்க வீட்டுக்கு போனா இப்படியா இந்த கம்யூனிஸ்ட் காரனுங்க போராட்டம் நடத்தி அதனால போலீஸ் அடித்து பிரச்சனையை உண்டு பண்ணுகிறது. அவர்
ஏதோ மிரட்டி விடச் சொன்னா? எச்சாவுல்ல விசுவாசத்தை காட்டுது காவல்துறை. பாவம் சார் போலீஸ் காரர்கள் நிலை.. இதுல வேற அடிக்கடி தமிழ்நாட்டுல பிரச்சனையின என்னதான் பண்ணுறது.
இதுக்கல்ல மேல அடுத்த முதல்வரா யார ஆக்குறதுனு வேற பிரச்சனை..
பிரச்சனை தீர அப்பப்ப காமெடி செய்த சிறித்து வருகிறார்,
அரவிந்தன்
நந்தனார் நடந்து வந்த பாதை பற்றிய கதையை பெரியாரிடம் தான் கேட்க வேண்டும் என சொல்லும் கலைஞர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு மே 28 நடந்து அன்றே தீர்மானம் நிறைவேற்றி அரசின் நடவடிக்கை இல்லையெனில் நாங்கள் நந்தன் பாதையில் ஜூலை 15ல் நடப்போம் என அறிவித்து 45 நாட்கள் எதுவும் செய்யாத கருணாநிதி அவர்கள் இப்போது எதற்கு எடுத்தாலும் போராட்டம் நடத்துகிறார்கள், நந்தியாக இருக்கிறார்கள், வளர்ச்சி திட்டங்களை தடுக்கிறார்கள் என பொய்யுரையை பரப்புகிறார். மக்களுக்கு தெரியும் யார் பொய்யன் என்று..
Guest
Nearly 20% of population in tamilnadu belongs to dalit community people .The politicians wants their vote only with out opposing those higher caste people .The 'X' party which act like " OF THE DALIT PEOPLE ,BY THE DALIT PEOPLE ,FOR THE DALIT PEOPLE " DO only using the dalit people to put posters, banners,billboards ect to get publicity .The ' X' party wants dalits votes ,but they could do nothing for the dalit people ,Wihtout understanding them ,the dalit people work day and night .
K Subbiah
உத்தப்புரம் நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை சி.பி.எம். என்னவோ தான் மட்டுமே தமிழகத்தில் ஜாதி , தீண்டாமைக்கு எதிராக போராடுவதுபோல ஒரு தோற்றத்தை உண்டாக்க முயல்கிறது. இன்னும் பூணூல் போட்டுக் கொண்டு இருக்கும் தலைவர்களை , கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலும், தொழிற்சங்கப் பொறுப்புகளிலும் வைத்து லெவி வசூல் செய்யும் சி.பி.எம் ஈழப் போராட்டத்திற்கு இழைத்த துரோகம் நாம் அனைவரும் அறிந்ததே.
ஹிந்து பத்திரிக்கை ராமை வைத்துக்கொண்டும், பூணூல் தலைவர்களை வைத்துக்கொண்டும் தீண்டாமையை ஒழிப்பது முடியாத காரியம். அண்ணல் அம்பேத்காரும், பெரியாரும் சொன்னது ஒன்றுதான். இந்து மதம் ஒழிந்தால்தான் தீண்டாமை ஒழியும். ஜாதி ஒழியும். இந்து மதம் ஒழிக என்று பாடுபட சி.பி.எம் தயாரா? வெளி நாடு போனால் பகவத் கீதையைப் பரிசாகக் கொடுக்கும் தலைவர்களை வைத்துக்கொண்டு புரட்ட்ட்ட்ட்சி பேசும் இவர்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. ஆதிக்க வாதிகளின் கொட்டம் அடக்கப்படவேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் வெள்ளாளர் ஓட்டு போய்விடுமோ என்று நன்மாறனை கூட அழைத்து செல்லும் இவர்கள் செயல் ஓட்டுப் பொறுக்கத்தானே தவிர வேறு ஒன்றும் அல்ல.
சுப்பையா.
Rameshbabu S.G
சட்டமன்ற உறுப்பினர் நன்மாறனை எனக்கும் பத்தாணடுகளுக்கு மேலாக தெரியும். அவரது சாதியை இப்போதுதுதான் தெரிந்துக்கொண்டேன் சுப்பையா. அதுசரி. தலித் மக்களுக்கு ஆதரவாக தலித்துகள் மட்டுமே போராட வேண்டும் என்று சொல்லும் உங்கள் கேவலாமன சிந்தனை முதலில் மாற வேண்டும். அடுத்து வெள்ளாலர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் தங்களை இந்த போராட்டங்களுக்கு உட்படுத்திக்கொள்வதை வரவேற்க வேண்டும். இப்பிரசனையில் வேறு யார் போராடினாலும் சிபிஎம் வரவேற்கும். சிபிஎம் மீதூள்ள வன்மத்தை காட்டுவதை இபிரச்சனையிலும் தொடர்வது சரியில்லை. மற்றபடி தங்கள் குற்றசாட்டும் அதற்கான பதிலும் பலமுறை இணையத்தில் பதில் சொல்லி புளித்து போன விஷயங்கள். புதிதாக ஏதாவது கண்டுபிடிக்கவும்.
mgnanasuriyan
Kaakkhi ondrum varnasramathin puthiya niramillai nanbare RSSin miga pazhaiya niramthan
GT
PORATTATHAI THISAI THURUPPAVE POLICE "THADI ADI".
KALIGNAR ,THEENDAAMAI KODUMAIKKU ETHIRA ENTHA NADAVADIKKAIYUM EDUKKATHATHU, ENDRA SEITHI PINNUKKU POYIRUCHCHU.
IDHU THAN KALAIGNARING THANTHIRAM.
PAL JATHIYILUM SAMBANTHAM PANNIYATHA ADIKKADI KOORIKKONDU ,THAAN ORU PERUMUTHALAAIKALIN PIRIATHINITHI ENBATHAI MARAIKKA PARKIRAR.
சேதுபதி
வாங்க சுப்பையாபிள்ள...
என்ன ****, என்னவோ தீவிர தலித் உரிமைப் போராளி போல படம் காட்டுறீங்களே.. கொஞ்சம் ****!

உத்தப்புரம் வெள்ளாளரின் சாதிவெறியை காறித்துப்பி ஒரு வார்த்தை கூட உங்களிடமிருந்து வரவில்லை என்பதிலிருந்தே உங்களின் யோக்கியதை அம்பலமாகிவிடுகிறதே!

உத்தப்புரம் சாதிய வன்முறைகளும், அதற்கெதிரான போராட்டங்களும், சுப்பையாவைப் பொறுத்தவரை, ஏதோ ஆடல்- பாடல் நிகழ்ச்சிகள் போலத் தெரிகிறது போலும்... அதனால்தான், தமிழகத்திலேயே அதிக வழக்குகளைச் சுமந்து நிற்கிற உத்தப்புரம் தலித் மீது நடத்தப்படும் வன்முறையையும், அதற்கெதிரான போராட்டங்களையும் "உத்தப்புரம் நிகழ்ச்சிகள்" என்று போகிற போக்கில் உளற முடிகிறது!

சாதிக்கும், தீண்டாமைக்கும் எதிராக தாங்கள் மட்டும்தான் போராடுவது போல ஒரு தோற்றத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்படுத்துகிறது என்று இந்த **** கூறுகிறார்...
டாக்டர் கிருஷ்ணசாமி உத்தப்புரம் சென்றாரே... வை.பாலசுந்தரம் சென்றாரே... தா.பாண்டியன், குன்னக்குடி பிள்ளைமார் அடிகளாருடன் அருளாசி தந்தாரே.. அவர்களெல்லாம் ஏன் உத்தப்புரம் மக்களைத் திரட்ட முடியவில்லை...? விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், பேரையூர் வரை வந்து விட்டு, "அமைதியான முறையிலேயே தீண்டாமைப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்" என்று ***** ****** *****
ஏன் இவர்களெல்லாம் உத்தப்புரம் மக்களுக்கு நீதிபெற்றுத்தர வேண்டிதுதானே... மார்க்சிஸ்ட் கட்சியா குறுக்கே நிற்கிறது?

அப்புறம் வெள்ளாளர் ஓட்டுக்காக மார்க்சிஸ்ட் கட்சி பயப்படுகிறது; அதனால்தான் நன்மாறனை உடன் அழைத்துச் செல்கிறார்கள் என்று வேறு இந்த ***** உளறுகிறது. ரமேஷ்பாபு அவர்கள் சொன்னபடி நன்மாறன் என்ன சாதி என்று சுப்பையா போன்ற வெள்ளாளர் சொல்லித்தான் வெளியே தெரிகிறது.

அப்புறம் இதே நன்மாறன் எம்எல்ஏ விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராம கோயில் நுழைவுப் போராட்டத்தையும், திருநெல்வேலி மாவட்டம் பந்தல்புளி மாரியம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தையும் தலைமை ஏற்று நடத்தி கைதானார். பந்தப்புளியிலும், பாவாலியிலும் எந்த சாதி- ஆதிக்க சாதி என்று சுப்பையா போன்ற சாதி கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடித்துச் சொன்னால் சரியாக இருக்கும். சுப்பையா தனது கன்னத்தில் தானே அறைந்து கொள்ள வேண்டிய நிலைதான் ஏற்படும்.

அப்புறம் கட்சியில் இல்லாத என்.ராம் போன்றவர்களை மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்த்துவிட்டு, சுப்பையாவே "லெவி" கட்டுகிறார்.
அதைப் பேசி ஆகப் போவதில்லை.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இஎம்எஸ் போன்ற தலைவர்கள் பூணூலை அறுத்ததுதான் வரலாறே தவிர, அணிந்தது அல்ல! தோழர் பி.ராமமூர்த்தியின் கலப்புத் திருமண வரவேற்பு விழாவை தலைமையேற்று நடத்தியவர் தந்தைப் பெரியார்தான். இன்னும் நிறைய சொல்லலாம்... 90 ஆண்டுகால வரலாறு அது.

எனவே, சுப்பையா யாரோ சில புத்திசுவாதீனமற்றவர்களின் எழுத்தைப் பேச்சை இனிமேலும் வாந்தியெடுக்க வேண்டாம்.
புதூர் சிபி
இந்து மதத்தை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்று அண்ணலும். தந்தையும் சொன்னது சரி. சுப்பையா என்ன சொல்ல வருகிறார்?
தீண்டாமைப் பிரச்சனையில் மற்ற கட்சிகள் எடுக்கும் நிலையை பார்த்து விட்டு பேசாமடந்தையாக இருக்கும் சுப்பையா போன்றவர்கள், மார்க்சிஸ்டுகள் இப்பிரச்சனையை எடுத்தவுடன் தாவிக்குதிக்கிறார்கள்.
இந்து மதம் இருக்கும் வரை சாதித்தீண்டாமை இருக்கும் எனப் பேசிக்கொண்டேயிருக்கும் சுப்பையா. ஓட்டுப்பொறுக்கி எனச் சொன்னதில் இருந்து தெரியவில்லையா?
குட்டிச்சுவர் பார்ட்டி தான். . . அதாவது புர்ச்சிவாதி. அவருக்கு இதுக்கு மேல் எழுதுவது தப்பு, என்ன நான் சொல்றது?
baappu
தோழர்கள் சேதுபதி,புதூர் சிபி ஆகியோர் பதிலளித்து சுப்பையா போன்ற அதிரடி புர்சி காரர்களை அம்பலப்படுத்துவதனால் ஏற்படும் நேரவிரயத்தை தவிர்த்தமைக்கு நன்றி.

தோழர் பாபுவின் கட்டுரை மிகவும் பயனுள்ளது. தீண்டாமை கொடுமைக்கெதிராக ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.