சாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியம், அவசியமின்மையை வலியுறுத்தி குறிப்பிடும்படியான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. அதற்குள் முந்திக்கொண்டு ‘ஜாதிப்பேய்’ என இந்தக் கணக்கெடுப்பை வர்ணித்து கவர் ஸ்டோரி வெளியிடுகிறது இந்தியா டுடே. ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்’ என்பது இந்தியா டுடேவின் கவலை. இந்த ஒரு காரணத்தினாலேயே நாம் இந்தக் கணக்கெடுப்பை முதல் ஆளாக ஆதரிக்க வேண்டியிருக்கிறது. சாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது ‘எந்த சாதி பெரிய சாதி’ என எண்ணிப் பார்க்கும் வேலை இல்லை. நம் சமூகத்தில் அனைத்து வகையான அடக்குமுறைகளும் சாதியின் பெயரால்தான் நடக்கின்றன எனில் அதற்கான தீர்வுகளும் அதே ரீதியில்தானே இருக்க முடியும்?

வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முழுமையாக அமுல்படுத்தத் தடையாக இருப்பதே சாதி வாரியான கணக்கெடுப்பில் முழுமை இல்லை என்பதுதான். கடைசியாக 1931-ல் எடுக்கப்பட்டதுதான் சாதிவாரிக் கணக்கு. 80 வருடங்களுக்கு முந்தைய கணக்கு இப்போது செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கிறது. தவிரவும் மண்டல் கமிஷனில் சொல்லப்பட்டிருப்பது போன்று ‘இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் முன்னேறிய சாதிகளை பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்பதை செய்வதற்கும் இந்த கணக்கெடுப்பு அவசியமாகிறது.

அதேநேரம் கணக்கெடுப்பின் இறுதியில் சிறு குழுக்களாக இருக்கும் சிறிய சாதியினர் மேலும் ஒடுக்கப்படுவதற்கான அபாயங்கள் இருப்பதாகவும், ஆகப்பெரிய சாதி எது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அதன் ஆதிக்கம் மேலும் கூடுதலாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையுமே நாம் பேச வேண்டும். இடஒதுக்கீடு என்பது சாதி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றா? ஆம் என்றால் இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் சாதியின் பாத்திரம் சமூகத்தில் எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது, இனிமேற்கொண்டும் தொடரப்போகும் இட ஒதுக்கீட்டின் வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் தேவையா என அனைத்தையும் நாம் பேசுவோம். 

இதையொட்டி கீற்று இணையதளத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

.

தேதி: ஜூன் 1, 2010. செவ்வாய்க்கிழமை

நேரம்: மாலை 6 மணி

இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை


வரவேற்புரை:

பத்திரிக்கையாளர் பாரதி தம்பி 

கருத்துரை:

எழுத்தாளர் லிவிங் ஸ்மைல் வித்யா

வழக்கறிஞர் சுந்தர்ராஜன்

பெண்ணியலாளர் ஓவியா

‘தலித் முரசு’ புனித பாண்டியன்

ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி

கொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழகம் 

கேள்வி நேரம்:

விவாத அரங்கத்தின் இறுதியில் பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்விதமாக கேள்வி நேரம் இடம்பெறும். பார்வையாளர்கள் எழுதிக் கொடுக்கும் கேள்விகளுக்கு கருத்துரையாளர்கள் பதிலளிப்பர். 

நன்றியுரை:

பாஸ்கர், கீற்று.காம்

அனைவரும் வருக!

Comments

7 comments

7
kamal
ஒரு ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடந்தால் தான் உங்க ளுக்கு மறுக்க பட்ட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நீங்கள் சொல்வது சரிதான்...? இப்படி கிடைக்கும் 'சலுகையை' எதிர்பார்த்தால் அடுத்த தலை முறை இலும் இந்த ஜாதி எண்ணம் வராதா??? ஆதிக்க வர்கத்தினர் செய்யும் செயலுக்கும் உங்களின் வாதத்திற்கும் பெரிய வித்தியாசாம் இருப்பதாக எனக்கு தெரிய வில்லை ... சத்தியமா இந்த நாடு இப்படி தான் இருக்கும் ....

இப்படிக்கு

ஜாதியை வெறுக்கும் இளைஞன்...
SURENDRAN CHELLIAH
Now,we must know the status about the lower (Economically) peoples. Because ,till now most of the peoples meet the same problems in this society( like that Papapatti & Keeripatti).
bharathi
ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது தலித்களுக்கு எதிரானது , இன்று தலித்களை மட்டுமே கணக்கெடுக்கும் பணி நடை பெற்று வந்தது. ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது பிற்படுத்தப்பட்ட ஜாதி ஹிந்துகளின் கோரிக்கைகளாகும் இதன் மூலம் ஏற்கனவே அட்டுழியம் செய்து வரும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் வலுபெருவர் . தலித்களை அடக்கி ஒதுக்குவார் இதன் மூலம் ஜாதி மேலாதிக்கம் தொடரும், ஜாதி வெறி தூண்டப்படும் , ஜாதி கலவரங்கள் பெருகும் அதிக்க ஜாதியினர் கிரேமி லேயர் துறக்க முன் வருவதில்லை, அனால் ஜாதி வாரி கணக்கெடுப்பை கூறுகின்றனர் இதை ஆதரிக்கும் பெரியார் பக்தர்கள் அனைவரும் முன்னேறிய சாதியினரே ஆவர் இது ஜாதி வெறியை தக்க வைக்கும் முடிவு இதன் மூலம் தமிழ் நாட்டில் ஜாதி கலவரங்கள் தோன்றும் .
சிங்காரம்
தோழர்களே, சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பினை எதிர்ப்பவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், சாதியினை நிரந்தரமாக்கும் விசயம் இது; இது சாதிப்பிரிவினையை நிரந்தரமாக்கிவிடும்; இதனால் சாதிப்பிரச்சனைகள் தலைவிரித்தாடும் என்பன போன்றவை. ஆனால் உண்மையிலேயே மூவாயிரம் ஆண்டுகளாக பார்ப்பன மனுநீதியால் நிரந்தரமாக்கப்பட்ட சாதியின் கொடுமைகளை இந்துமதம் காலத்திற்குக் காலம் நேர்த்தியாகச் செய்துவருகின்றது. இந்து மதத்திற்கு சாதிக்கான 'ரிக்கார்டு' எதுவும் இருக்கக் கூடாது ஆனால் சாதி அடுக்குப் பிரிவினைகள் இருக்கவேண்டும் என்பது தான். நாம் சொல்வது சாதியை நீ ரிக்கார்டு செய், இடஒதுக்கீடு 50%க்கு மேல் செல்லக்கூடாது என்று சொன்ன உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு/முடிவு தவறானது என்பதை நிரூபிப்பதற்கான சான்று தான் சாதிவாரி கணக்கெடுப்பு. இதனால் பார்ப்பன அரசியலின் இடஒதுக்கீட்டிற்கு எதிரான சாயம் வெளுத்துப்போகும். பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் முக்கியத்துவம் வெளிச்சம் பெறும். குறைந்த பட்சம் 60% இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு போதாது என்பதற்கான ஒரு ஆதாரமே இந்தக் கணக்கெடுப்பு. இதனை சாமானியமாக மத்திய அரசு நடைமுறைப்படுத்தாது. இதற்காக அகில இந்திய ரீதியல் ஒருங்கிணைந்த அரசியல் முன்முயற்சி தேவை. அது மட்டுமே இதனை நிர்பந்தப்படுத்தும். உங்கள் முயற்சிக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும். இக்கருத்தருங்கில் படைக்கப்பட்ட உரைகளை தயவு செய்து வெளியிடுங்கள். மக்கள் தெரிந்துகொள்ளட்டும். தோழமையுடன் சிங்காரம்
bharathi
சாதிகள் அற்ற இந்தியாவை படைக்க வேண்டும் என்ற கனவோடு அல்லும் பகலும் பாடுபட்டு நாங்கள் எல்லாம் ஜாதிகள் அற்ற இந்தியா வை உருவாக்க தலித் கொடுமைகளுக்கு எதிராக போராடி வருகிறோம் ஆனால் இது போன்ற ஜாதி ஹிந்து களின் ஜாதி வெறியை தூண்டி விடும் போக்கே இது
பகவன்
பங்கேற்க ஆசைதான்... முடியவில்லை... பாராட்டத்தக்க முயற்சி... தொடர்ந்து செல்லுங்கள்...
P.SELVARAJ
கூட்டம் மிக அருமையாக நடந்தது,வாழ்த்துக்கள் பாராட்டுகள் கொஞ்சம் சீக்கிரம் ஆரம்பித்திருக்கலாம் பரவாயில்லை தொடர்ந்து இதுபோன்ற முயற்சி செய்யுங்கள் நன்றி

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.