கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: விண்வெளி
கேலக்ஸி எவலூஷன் எக்ஸ்ஃப்ளோரர் என்பது ஒரு பெரிய புற ஊதாக்கதிர் தொலைநோக்கி. நியூமெக்ஸிக்கோவில் நிறுவப்பட்டுள்ளது. இதன் முக்கிய வேலை கேலக்ஸிகளை ஊன்றி கவனித்து படம் எடுப்பது. கேலக்ஸிகளின் மையங்களில் அதிக அழுத்தமும், வெப்பமும், வாய்த்திரட்சியும் இருப்பதால் அங்கே புதிது புதிதாக விண்மீன்கள் தோன்றியபடி இருக்கும். கேலக்ஸியின் வெளிவிளிம்புகளில் பெரும்பாலும் குளிர்ந்துபோய் மரணமடைந்து கொண்டிருக்கும் விண்மீன்களே காணப்படும் என்பது பொதுவான நம்பிக்கை.
மையத்திலிருந்து சுமார் 100,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால், கேலக்ஸியின் மெல்லிய சாட்டைபோன்ற நீட்சிகளில் ஒன்றில் புதிதாக ஒரு சூரியன் பிறந்துகொண்டிருப்பது தெரிந்தது. தெற்கு கதிர்ச்சக்கர கேலக்ஸி (Southern pinwheel Galaxy) என்று அழைக்கப்படும் (M 83 என்பது அதன் விண்ணியல் பெயர்) ஒரு கேலக்ஸி இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த மிகவும் பிரகாசமான நட்சத்திரக்கூட்டம்.
M 83 ன் விட்டமே 40,000 ஒளி ஆண்டுகள்தான். இதன் மையத்திலிருந்து 140,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் புதிய விண்மீன் உதித்துக் கொண்டிருப்பது அதிசயமாக இருக்கிறது. 'இயற்கை இப்படித்தான்' யாராலும் உறுதியுடன் சொல்ல முடியாது போலிருக்கிறது.
கலைக்கதிர், ஜூலை 2008
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: விண்வெளி
சென்ற மார்ச் மாதம் 2 ஆம் தேதி நமது பூமி பெரிய விண்வெளி விபத்திலிருந்து பிழைத்தது. 35 மீட்டர் குறுக்களவுள்ள விண்கல் பூமியின் பாதையில் குறுக்கிட்டுச்சென்றது. மேலும் 72,000 கி,மீ நெருங்கி வந்திருந்தால், 1908 இல் சைபீரியாவில் ஏற்பட்ட துங்குஸ்க்கா விண்கல் மோதல் அளவுக்கு பாதிப்பு நிகழ்ந்திருக்கும்.
கல்லின் பெயர் 2009 45, வேகம் பூமியின் சார்பில் வினாடிக்கு 8.82 கி.மீட்டர். மோதலின் அதிர்வு 15 மெகா டன் வெடிமருந்துக்குச் சமம். அடுத்து 2067 இல் இது பூமியைக் குறுக்கிடலாம். இதுவரை சுமார் 6043 விண்கற்கள் பூமியை நெருங்கிவந்து பயமுறுத்திவிட்டுச் சென்றிருக்கின்றன. 58 ஆண்டுக்கப்பால் மறுபடியும் 2009 45 திரும்பிவரும்போதும் பூமி பிழைத்துக்கொள்ளும் அதற்கப்புறம் எப்படி என்பது இயற்கைக்கே வெளிச்சம்.
- முனைவர் க.மணி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: விண்வெளி
டி.டி.எச். சேவைக்கான சிறிய டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலைநோக்கியாக பயன்படுத்தி மழை மேகத்தை கண்டறியும் புதிய வசதியை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஜெ. பெனலன் (69).இவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தேசிய அளவிலான அமைப்புகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பாடியில் வசித்து வருபவர் ஜெ. பெனலன். மோட்டார் மெக்கானிக் பிரிவில் பட்டம் பெற்ற இவர் பள்ளி பருவத்தில் பொ. திருகூடசுந்தரனார் எழுதிய அறிவியல் ஆய்வுகள் குறித்த புத்தகத்தைப் படித்தது முதல், அறிவியல்பால் ஈர்க்கப்பட்டார்.
1953-ம் ஆண்டு முதல் இவருக்கு வானியல் ஆய்வில் ஈடுபாடு அதிகரித்தது. இதன் காரணமாக பல்வேறு முக்கிய விண்ணியல் ஆய்வு நிகழ்வுகளில் பங்கேற்றார் பெனலன். வானியல் ஆய்வுகளை அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை எளிமைப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியும் வழிகளைத் தேடினார் இவர். இந்த தேடலின் விளைவாக வானியல் ஆய்வில் முக்கியமானதாக கருதப்படும் ரேடியோ தொலைநோக்கியை எளிமைப்படுத்தும் வழிகளை கண்டுபிடிக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டார்.
வானியல் ஆய்வில் பொதுவாக கண்ணாடி தொலைநோக்கி மற்றும் ரேடியோ தொலைநோக்கி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றை கண்களால் காண முடியும். மேகக் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் இதனைப் பயன்படுத்த முடியாது.
நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவை பிரதிபலிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை ரேடியோ தொலைநோக்கிகள்.
ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வைக்கும்போது அந்த திசையில் கடந்து செல்லும் நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன் ஆகியவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம். ரேடியோ தொலைநோக்கிகளை உருவாக்குவது மிகுந்த செலவு மிக்கதாகவும் உருவத்தில் பெரிதானதாகவும் இருப்பதால் இதனை எளிமைப்படுத்த வேண்டிய அவசியத்தை பெனலன் புரிந்து கொண்டார்.
பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக பெற உதவும் டி.டி.எச். ஒளிபரப்பு முறையில் பயன்படுத்தப்படும் டிஷ் ஆன்டெனா இதற்கு உதவும் என தெரியவந்தது.
டிஷ் ஆன்டெனாவில் இருந்து வரும் வயரை செட்டாப் பாக்ஸ்-க்கு கொண்டு சென்று அதில் இருந்து வயரை இதற்காக மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள கருவிக்கு கொண்டு வந்து அதில் இருந்து மல்டி மீட்டருடன் வயரை இணைக்க வேண்டும். டிஷ் ஆன்டெனா எந்த திசை நோக்கி வைக்கப்பட்டுள்ளதோ அந்த திசையில் வானில் நிகழும் மாற்றங்களை எண்களின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
மழை மேகம், சூரியன், வானியல் நிகழ்வுகள் மட்டுமல்லாது, வானில் ஏற்படும் ஹைட்ரஜன் மேகங்களையும் இதன் மூலம் ஆய்வு செய்ய முடியும். இதன் மூலம் வானில் உருவாகியுள்ள மேகக் கூட்டம் மழை தரும் மேகமா? அல்லது மழை தராத மேகமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
நட்சத்திரங்கள், கோள்களுக்கு உள்ள எண்களைப் போன்று மேகத்துக்கும் உள்ள எண் மதிப்பீடு அடிப்படையில் துல்லியமாக கண்டறிய முடியும். இதன் மூலம் வானிலைத் துறை பணிகளையும் எளிமைப்படுத்த முடியும். இந்த எளிய முறையில் பெரிய அளவில் ரேடியோ தொலைநோக்கி அமைத்தால் ஆகும் செலவில் மிகக் குறைந்த அளவே இதற்கு செலவாகும். மேலும், பள்ளிகளில் இவற்றை உருவாக்குவதன் மூலம் மாணவர்களுக்கு வானியல் நிகழ்வுகளை மிகக் குறைந்த செலவில் எளிய முறையில் கற்பிக்க முடியும்.
அதிகபட்சம் ரூ. 150க்குள் இந்த முறையில் ரேடியோ தொலைநோக்கியை உருவாக்க முடியும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கீகாரம்: ரேடியோ தொலைநோக்கி தயாரிப்பில் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படும் இந்த முறை சரியானது என ஊட்டியில் உள்ள டாடா அடிப்படை ஆய்வு மையத்தின் வானியல் மையம் அங்கீகரித்துள்ளது. இதேபோல ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விண்ணியல் ஆய்வு மையமும் இது சரியானது என பாராட்டி அங்கீகரித்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களின் அங்கீகாரத்தின் மூலம் டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலைநோக்கியாக பயன்படுத்துவதற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சுமார் 20 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் இதுபோன்ற அமைப்பை நிறுவி, மிகப்பெரிய அளவிலான விஎல்ஏ எனப்படும் ரேடியோ தொலைநோக்கியை உருவாக்கலாம்.
2009-ம் ஆண்டு அமெச்சூர் ரேடியோ தொலைநோக்கி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து இத்தகைய ரேடியோ தொலைநோக்கியை பெரிய அளவில் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார் பெனலன்.
இன்னும் படிக்க:http://www.viparam.com/index.php?news=14927
http://del.icio.us/post?url=http://www.viparam.com/index.php?news=14927&title=மழைமேகத்தைகண்டறியபுதியவசதி: சென்னைவிஞ்ஞானிக்குதேசியஅங்கீகாரம்
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: விண்வெளி
காலனி ஆதிக்க நாடுகள் சந்திரனிலும் கால் ஊன்றவேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல.
சந்திரனில் வசிக்கவேண்டுமென்றால் சுவாசிக்க காற்று வேண்டும்...
குடிக்க நீர் வேண்டும்...
உண்ண உணவுவேண்டும்...
சரியான காற்றழுத்தத்தில் வசிப்பிடம் வேண்டும்...
எரிபொருள் வேண்டும்...
இவ்வளவு வசதிகளையும் சந்திரனிலேயே தேடிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்லும் ஒவ்வொரு பவுண்டு எடைக்கும் 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஒரு காலன் தண்ணீரின் எடை எட்டு பவுண்டுகள். ஒரு காலன் தண்ணீரை பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு 400,000 டாலர்கள்.
சந்திரனில் உள்ள பாறைகளில் ஆக்சிஜன் அடக்கம். வெப்பத்தையும் மின்சாரத்தையும் பயன்படுத்தி ஆக்சிஜனை எளிதாக பெற்றுவிடலாமாம். சந்திரனில் தண்ணீர் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. சந்திரனின் தென் துருவத்தில் பனிக்கட்டி வடிவத்தில் நீர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தண்ணீர் சுரங்கங்களை வெட்டி நீரை எடுத்துக் கொள்ளலாம். நீரை ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரித்து ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிபொருளை சம்பாதித்துக் கொள்ளலாம்.
சந்திரனில் தண்ணீர் கிடைக்காமற்போனால் பூமியிலிருந்துதான் நீரைக் கொண்டு செல்லவேண்டும். திரவ ஹைட்ரஜனை பூமியிலிருந்து கொண்டு போகவேண்டும். அதனுடன் சந்திரனின் பாறைகளில் இருக்கும் ஆக்சிஜனைக் கலந்து, நீரை தயாரித்துக் கொள்ளலாம். இந்த நீர் தயாரிக்கும் முயற்சியின் போதே மின்சக்தியையும் பெற்றுக் கொள்ளமுடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
இவையனைத்தும் சாத்தியமாகக் கூடிய செலவில் அமைந்தால், சந்திரனிலும் அமெரிக்கா தனது காலனி ஆதிக்கத்தை விரிவாக்கும்.
மேலும் படிக்க: http://science.howstuffworks.com/what-if-moon-colony.htm
- மு.குருமூர்த்தி
- நிலாவில் குடியேறுவதில் என்ன சிக்கல்?
- சீரற்ற சுவருடைய கட்டிடங்கள்
- ஜப்பானின் மாஜிக் புல்லட்
- மனித உடலில் இயந்திர உறுப்புகள்
- செயற்கை நுண்ணறிவு தேடும் அணுஉலை மின்சாரம்
- இயற்கையை அறிய உதவும் செயலிகள்
- ஆய்வக மீன் இறைச்சி
- அண்டார்டிகாவை ஆராயும் ஆளில்லா விமானங்கள்
- குளிரூட்டும் ஆடைகள்
- வானில் வலம் வரப் போகும் சூப்பர்சானிக் விமானம்
- மரணத்திற்குப் பிறகும் சூழல் பாதுகாப்பு
- சீன சிப் தொழிற்துறையின் வேகம்: அமெரிக்கா சமாளிக்குமா?
- காடுகளைக் காக்க லைடார் தொழில்நுட்பம்
- பீங்கான் தொழில்நுட்பம்
- ஆகாயத்தின் கண்களும் அறிவின் தேடலும்
- சமூக வலைத்தளங்களில் 2FA (Two - Factor Authentication) பாதுகாப்பா? வணிகமா?
- தேடல் இயந்திரத்தின் செயற்கை நுண்ணறிவு
- மெட்டாவெர்ஸ் - இணையத்தின் எதிர்கால வடிவம்
- உங்கள் வீட்டிலும் ஒரு சூரிய மின் நிலையம்
- மரபணு மாற்றம் (CRISPR-Cas9) தொழில்நுட்பம் - 2020 வேதியியல் நோபல் பரிசு