அன்புள்ள சுபவீ வணக்கம். கடந்த காலத்தில் புலிகளுக்காகவும் ஈழ மக்களுக்காகவும் பேசி பல முறை சிறைசென்றவர் என்கிற வகையிலும் சமூக நீதிக்கான தமிழகப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர் என்ற வகையிலும் உங்கள் மீது மரியாதை உண்டு. இப்போதும் அந்த மரியாதை இருக்கும் உரிமையிலேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுத நேர்கிறது. வரவிருக்கும் மே மாதத்தில் 17,18,19 ஆகிய நாட்களை உங்களால் மறக்க முடியாது என நினைக்கிறேன். பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட சிறிய பிரேதசத்திற்குள் எம் மக்களை அழைத்து வந்து கூட்டுக் கொலை செய்த நாட்கள். அந்நாட்களை இப்போது உங்களுக்கு நினைவுறுத்துவதால் நீங்கள் அசூயை அடையலாம். ஆனால் இன்னமும் அந்த மனிதப் பேரழிவில் இருந்து எங்களால் மீண்டு எழ முடியவில்லை என்ற வேதனையை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
இப்போது பார்வதியம்மாள் தொடர்பாக கருணாநிதியின் முரசொலி இதழில் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் ஒரு பகுதி உண்மை. ஆனால் நீங்கள் பல நேரங்களில் பேசப்பட வேண்டிய உண்மைகளை பேசாமல் விட்டு விட்டு உங்களுக்குப் பாதகமில்லாத விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஈழ மக்கள் என்ற வகையில் நீங்கள் எங்களிடம் பேசியாக வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தே இக்கடிதம்.
அதிமுக தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து ஈழ மக்கள் மீது வன்மம் காட்டியவர் என்பதை யாரும் இங்கே மறுக்கவில்லை. ஈழ மக்களுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதி உரிமைகளுக்கும் ஜெயலலிதா எதிரானவர் என்பதை நாங்கள் கருணாநிதியிடமிருந்தோ அல்லது ஏனைய ஜெயலலிதா எதிர்ப்பாளர்களிடமிருந்தோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. பார்வதியம்மாள் சென்னை விமான நிலையம் வந்தபோது ரகசியமாக வரவேற்கப் போன நெடுமாறனையும், வைகோவையும் தள்ளி விட்டு விட்டு பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய சென்னை விமானநிலைய மத்திய அரசு ஊழியர்கள் (பாருங்கள் ஒரு செய்தியை எப்படி எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது. மாநில அதிகாரிகளுக்கு தொடர்பில்லையாம்) விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் கட்சி இதழான முரசொலிக்கு நீங்கள் ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து அவர்கள் இன்று அதை வெளியிட்டிருகிறார்கள். கருணாநிதிக்காக நீங்கள் அடியாள் வேலை பார்ப்பது சரிதான். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் எழுதியதில் உறுத்தலாக சில விஷயங்கள் இருக்கிறது.
"இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, 'உதவிட இயலுமா?' என்று கேட்டார். அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன்." எவ்வளவு ஆழமான வரிகள் சுபவீ... அதாவது சித்த நேரம் முன்னாடி பேசியிருந்தேன்னா அவா கிட்டே சொல்லியிருப்பேனே என்பது போல இருக்கிறது. ஏன் இரண்டு மணி நேரம் முன்னாடி சொல்லியிருந்தால் மட்டும் உங்கள் தலைவர் கருணாநிதி பார்வதியம்மாளை அனுமதித்திருப்பாரா என்ன?
சரி கருணாநிதிக்கும் எண்பது வயதாகி விட்டது அயர்ந்து தூங்கியிருப்பார். ஏன் மறு நாளே 'இப்படியாகி விட்டது நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை திருப்பி அனுப்பி விட்டார்கள். நாம் உடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி 2003-ல் ஜெயலலிதா போட்ட உத்தரவை நீக்கச் சொல்லுவோம். அம்மாவை நாமே அழைப்பதன் மூலம் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கலாம். முடிந்தால் தேர்தல் வரை நீடிக்கலாம்' என்று கலைஞரிடம் சொல்லியிருக்கலாமே? நீங்கள் சொன்னால் செய்யாமலா போய் விடுவார்? நீங்கள் சொல்லி அவர் எவ்வளவு செய்திருக்கிறார், இல்லையா சுப.வீ.?
இப்படியான உதவிகள் இதற்கு முன்னரும் மே மாதத்திலும் உங்களிடம் கேட்கப்பட்டிருக்கலாம். என்ன செய்வது கையாலாகாத ஓர் இனமாக ஈழத் தமிழினம் இன்று போய் விட்டது. அப்படி சில கோரிக்கைகள் உங்களிடம் கேட்கப்பட்டு நீங்கள் கருணாநிதியைச் சென்று பார்த்திருக்கலாம். அது பற்றி கருணாநிதி உங்களிடம் சொன்ன பதில் பற்றியும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். கடந்த மே மாதத்தில் போரின் முடிவின் போது போர் நிறுத்தம் கோரி நீங்களும், இருட்தந்தை ஜெகத்கஸ்பர் ராஜும் சேர்ந்து கனிமொழி மூலமாக இறுதிக் கட்ட வேலையில் ஈடுபட்டீர்கள். அந்த முயற்சியில்தான் புலிகளின் தலைவர்கள் நடேசனும், புலித்தேவன் உள்ளிட்ட பல நூறு போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்று ஜெகத்கஸ்பரே எழுதினார். உண்மையில் இது வேறு யாரும் சொன்ன குற்றச்சாட்டு இல்லை, ஜெகத்தே எழுதியதுதான். அதை வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று வரை ஜெகத் பதில் சொல்லவில்லை. நீங்களாவது டில்லியில் இருந்து உங்களின் மூலம் உத்தரவிட்ட அந்த காங்கிரஸ் பெரியவர் யார் என்று சொல்வீர்களா?
நீங்கள் முரசொலியில் எழுதியிருக்கும் கட்டுரையில் ஜெயலலிதா ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் மீது பல கேள்விகளை வீசியிருக்கிறீர்கள். அது உண்மைதான் ஆனால் இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழத்தில் போரை நிறுத்தி விட்டார்கள் என்று எழுந்து போன கருணாநிதியின் நிழலில் நின்று கொண்டு போயஸ் கார்டன் வாசலில் நிற்பவர்கள் மீது இக்குற்றச்சாட்டை வீச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? போயஸ்கார்டனை விட அறிவாலயம் மேல் என்கிற வீரவசனங்கள் இனி வேண்டாம். நாற்பதாண்டுகாலமாக நாங்கள் ஏமாந்து விட்டோம். இனியும் வீர வசன நடை வேண்டாம்.
பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்ட விவகாரத்தில் தொடர்பே இல்லாத கருணாநிதி மீது வைகோ குற்றம் சுமத்துவதாக பொங்குகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து அரசியல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்துகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து வைகோ வருகிற தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம், கருணாநிதி முன்னிலையில் சட்டமன்றத்தில் சொன்னது போல செம்மொழி மாநாட்டிற்கு எதிராக பார்வதியம்மளை சிறப்புப் பேச்சாளராகக் கொண்டு வைகோ தமிழின எழுச்சி மாநாட்டு நடத்த திட்டமிட்டிருக்கலாம். அது உங்களுக்கும் கருணாநிதிக்கும் உங்களின் நண்பர்களான காங்கிரஸ்காரர்களுக்குமே தெரிந்த உளவுத் தகவல்; அது எமக்குத் தெரியாது.
ஆனால் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விவாகரத்தில் கருணாநிதிக்கு தொடர்பே கிடையாதா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சுபவீ. தொடர்பே இல்லை என்றால் ஏன் பல மணி நேரம் முன்பே விமான நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது? இரவோடு இரவாக நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை அதிகாரிகள் விடவில்லை. இவர்கள் போகவில்லை என்றால் விட்டிருப்பார்கள் என்று போலீசே செய்தி பரப்பியதே இதற்கெல்லாம் உங்களிடம் என்ன பதில்?
நன்னடத்தை விதிகளின் படி தன்னை விடுவிக்கக் கோரினார் நளினி..... ஆமாம் நீண்டகால சிறை வதைகளில் இருந்து மீண்டும் தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார் நளினி. இதோ நளினியின் அறையில் இருந்து செல்போனைக் கண்டுபிடித்து விட்டார்கள் காவல்துறையினர். மேலதிகமாக மூன்று வழக்குகள் நளினி மீது போடப்பட்டுள்ளன.
நளினி போனை கழிப்பறையில் வீசியதாக சட்டமன்றத்தில் சொல்கிறார் திமுக தலைவர்களில் ஒருவரும் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியவருமான துரைமுருகன். உடனே காங்கிரஸ்காரன் எழுந்து நளினி யாரிடமெல்லாம் பேசினார் என்று பட்டியல் சொல்கிறான். ஆமாம் நளின்யின் சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதும் கருணாநிதிக்குத் தெரியாது. இதையும் நம்புகிறோம். நள்ளிரவு 12 மணிக்குத் தகவல் தெரிந்து விமான நிலையத்தில் விசாரித்தபோது அவரை திருப்பி அனுப்பி விட்டதாக சொன்னார்கள் என்று முதலில் சொல்லி விட்டு, பின்னர் காலையில் பேப்பரைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கருணாநிதி சொன்னதையும் நம்புகிறோம். அந்த உத்தமருக்கு எதுவுமே தெரியாது; உங்களுக்கு நெடுமாறனும், வைகோவும் பார்வதியம்மாளை வைத்து என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெரியும் என்பதையும் நம்புகிறோம்.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல உள்ளூர்த் தமிழர்களில் பலரும் கூட பல நேரங்களில் மான ரோஷம் பார்க்காமல் உங்களிடம் உதவி கேட்டு இப்படி வகையாக சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில்தான் நீங்கள் வகையாக அந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். “இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவு வந்ததா?” என்று. சபாஷ் சரியான கேள்வி. உங்கள் அரசியல் ஆசானிடம் இருந்து ஆரம்பப்பாடத்தை நீங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கிறீர்கள். இந்த சொரணை கெட்ட ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இன்னும் உங்களிடம் ஏதாவது உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் வகையாக இப்படி நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேளுங்கள். அப்போதாவது இவன்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.
சந்திப்போம் நீங்களும் செம்மொழி மாநாடு, கலைஞர் டிவி, திமுக குடும்ப விழாக்கள், பட்டிமன்றம், கருணாநிதியை ஈழ விவகாரத்தில் பாதுகாப்பது என்று பிஸியாக இருப்பீர்கள். உங்களை தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.
இப்படிக்கு,
கையாலாகாத ஒரு தமிழன்
வெல்க தமிழ்! வீழ்க தமிழன்!
திமுகவின் முரசொலி நாளிதழில் சுப.வீ. எழுதியுள்ள கட்டுரை:
சென்னை: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட காரணமாக இருந்தவர் போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் வைகோவும் நெடுமாறனும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரான சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டுவரும் ஒரு செய்தியில், அடிப்படையான சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுட்டுள்ளன என்பதை இப்போது அறிய முடிகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார், தமிழக மண்ணில் கால் வைக்கவும் அனுமதிக்காமல், மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட மனிதநேயமற்ற செயலை அனைவரும் கண்டிக்கிறோம்.
மக்களவையிலேயே திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இதுகுறித்து கவன ஈர்ப்புச் செய்துள்ளார். இந்நிலையில் உண்மைகளை மூடிமறைத்து முதல்வர் கருணாநிதி மீது பழிபோட்டு, உண்ணாவிரதம், கண்டனம் என்று ஒரு மலிவான அரசியல் இங்கே அரங்கேற்றப்படுகிறது.
விமான நிலையம் பரபரப்பாக இருந்த அந்த நள்ளிரவில் தோழர் தியாகு, என்னைத் தொலைபேசியில் அழைத்து அந்தச் செய்தியைக் கூறினார். பத்திரிகையாளர்கள் மூலமாகக் கவிஞர் தாமரைக்கு செய்தி கிடைத்ததாகக் கூறிய அவர், உங்களால் ஏதும் உதவ முடியுமா? என்று கேட்டார். முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள வழி உள்ளதா என்றும் வினவினார்.
இந்த நேரத்தில் முதல்வரை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும் என்றேன். அதில் உள்ள நியாயத்தை அவரும் புரிந்து கொண்டார். பிறகு தமிழின உணர்வாளர்கள், பத்திரிகையாளர்கள் சிலர் அடுத்தடுத்துத் தொலைபேசியில் பேசினர்.
இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, 'உதவிட இயலுமா?' என்று கேட்டார்.
அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், 'முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே' என்றேன்.'இல்லையில்லை விசா கிடைத்துவிட்டதால், பரபரப்பாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் யாருக்குமே சொல்லவில்லை' என்று அவர் கூறினார்.
அப்படியானால் வைகோவிற்கும், நெடுமாறன் அய்யாவிற்கும் மட்டும் எப்படி தெரிந்தது என்ற என் கேள்விக்கு அவருக்கும் விடை தெரியவில்லை.
வயதான தாயை அழைத்து வந்து, அவருக்குச் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட, அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமே இங்கு அரசியல் தலைவர்கள் சிலரிடம் விஞ்சியிருப்பதை இப்போது நம்மால் அறிய முடிகிறது.
விமான நிலையத்தில், தொடர்பே இல்லாமல் முதல்வர் கருணாநிதியைக் குற்றஞ்சாட்டி வைகோ (வழக்கம் போல்) ஆவேசமாய்ப் பேசுவதை ஜெயா தொலைக்காட்சி மறுநாள் தொடர்ந்து காண்பித்தது. "அடடா, பார்வதி அம்மாள் மீது ஜெயலலிதாவிற்குத்தான் எத்தனை அன்பு" என்று என்று விவரம் அறியாதவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
கருணாநிதியைத் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது என்று அறிக்கை விட்டார் நெடுமாறன்.
எத்தனை பெரிய மோசடிகள் இவை. 2003ம் ஆண்டு, பிரபாகரனின் பெற்றோரை இந்தியாவிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது, அவர்களைக் கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காதவர்கள், அவரால்தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்ற உண்மையைத் திசைதிருப்ப ஆடும் நாடகத்தைத்தான் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது.
பார்வதி அம்மாள் விரும்பினால், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அவர்களை அழைப்பதற்கு ஆவன செய்வேன் என்று கூறும் முதல்வர் கருணாநிதியை தமிழ்ச் சமூகம் போற்றும்.
வயது முதிர்ந்து, நோயினாலும், பல்வேறு சூழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள அந்தத் தாய் மன அமைதியுடன் வாழ நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை மனிதநேயம் கொண்ட அனைவரின் விருப்பமாகவும் இருக்க முடியும். நாம் அதற்கு நம்மால் இயன்றதைச் செய்வோம்.
அதே நேரத்தில் திருப்பி அனுப்பிய 'பாவிகளை' எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.
நீங்கள் தேடும் 'அந்தப் பாவி' போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள்.
| நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க... |
கீற்று இணையதளத்திற்கு படைப்புகளை அனுப்ப இங்கே அழுத்தவும். வேறு எந்த இணையதளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே! நாகரிகமற்ற/பிழையான பின்னூட்டங்கள் குறித்து editor@keetru.com-க்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும். br> br> |
-
|2010-04-23 06:43:17 TAMILHE IS EALLY GOOD JALRA.... ENTHA NAAL UNGALUKKU ENIYA NAAL ALLA..... ALL THE DAYS GOOD FOR U
-
|2010-04-23 10:21:35 K.EaswaranWe are living in a instant communication period, especially in the air travel. Nowadays, the list of passengers are conveyed to the destination country and approval is sought before the plane takes off. Any suspicious passenger is asked to be disembarked prior to take off. This is the norm. In this case, Indian authorities deliberately issued the visa and allowed her, Mrs Parvathy Velupillai, to travel to Chennai to satisfy their ulterior motive. Mother India killed so many Muslims, Eellam Tamils and Pallankudi makkal. This is her another venomous act. That is it. Easwaran
-
|2010-04-23 15:27:49 Nagasundaram . Rதமிழர்களே ............... தமிழர்களே...........! நீங்கள் வாய் விட்டுச் சிரிக்க சிரிக்க......... ஹ ஹ ஹ ஹா ..........சிரிக்க வேண்டுமா..........? (ஆனால் வேதனையோடு......) சுபவீயின் முரசொலி அறிக்கையைப் படியுங்கள்......... அந்த வி. ஜி. பி. பூங்காவில் சிரிக்க வைக்க முடியாதவர் ஒருவர் இருப்பாரே , அவரையும் கூடச் சிரிக்க வைத்து பரிசு வாங்கலாம் .................
-
|2010-04-23 18:16:17 durai ilamuruguநண்பரே, நீங்கள் உண்மையில் பார்வதி அம்மாள் மருத்துவத்திற்காக்த்தாண் தமிழ்னாடு வந்தார் என்று எண்ணுகீறிர்களா. அவ்ருடன் மருதுவர் யரேனும் கூட விமனதில் வந்தார்களா? மருத்துவத்திற்காக வந்தவர்களை அரசியல்வாதிகாள்தான் வரெவேற்பார்களா, மருதுவர்கள் வரெவேற்க செல்லமட்டர்களா? எந்த மருதுவமனியில் தன்கி சிகிச்சை பெற வந்தார்/ அதற்கான் ஆவணங்கள் அவரிடம் இருந்தனவா? மலேசியாவில் கிடைக்கத என்னசிரப்பு மருதுவம் தமிழ்நாட்டில் கிடைக்க்ப்போகிரது. வயத்து முதிர்ந்த , நோயாளியான ஒரு மூதாட்டியை வைது அரசியல் னடத்துவது யார் ? தமிழ்னாட்டின் என்ரைய சூழ்நிலை தெரிந்தும் அந்தப் பெண்மணி சென்னை வரவழிக்கப்பட்டது ஏண்/புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வசிக்கும் சனடா, பிரான்சு நாடுகளை விட தமிழ் னாட்டில்ந்ல்ல மருதுவம் கிடைக்கும் என்று எங்கலை னம்ப்பசொல்கிறீர்களா? நெடுமாறனும் . வைக்கோவும் தங்கள் உடல் நலத்தைப்பேணுவதற்கு அமெரிக்கா செல்லும் பொழுது அந்த மூதாட்டியை சென்னைக்கு வரவ்ழித்தது யார்? இந்த வினக்களுக்கு பதில் தெர்ந்தால் உண்மை வெளிப்படும் . இதற்கு பதில் சொல்ல கையாலாகததமிழனும் . அவ்ர்பின் உள்ள தலைவர்களும் கடமைப்பட்டு உள்ளார்கள்
-
|2010-04-24 02:47:48 tamilanநண்பரே, நீங்கள் உண்மையில் பார்வதி அம்மாள் மருத்துவத்திற்காக்த்தாண் தமிழ்னாடு வந்தார் என்று எண்ணுகீறிர்களா. அவ்ருடன் மருதுவர் யரேனும் கூட விமனதில் வந்தார்களா? மருத்துவத்திற்காக வந்தவர்களை அரசியல்வாதிகாள்தான் வரெவேற்பார்களா, மருதுவர்கள் வரெவேற்க செல்லமட்டர்களா? எந்த மருதுவமனியில் தன்கி சிகிச்சை பெற வந்தார்/ அதற்கான் ஆவணங்கள் அவரிடம் இருந்தனவா? மலேசியாவில் கிடைக்கத என்ன சிரப்பு மருதுவம் தமிழ்நாட்டில் கிடைக்க்ப்போகிரது. வயத்து முதிர்ந்த , நோயாளியான ஒரு மூதாட்டியை வைது அரசியல் னடத்துவது யார் ? தமிழ்னாட்டின் என்ரைய சூழ்நிலை தெரிந்தும் அந்தப் பெண்மணி சென்னை வரவழிக்கப்பட்டது ஏண்/புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வசிக்கும் சனடா, பிரான்சு நாடுகளை விட தமிழ் னாட்டில் ந்ல்ல மருதுவம் கிடைக்கும் என்று எங்கலை னம்ப்ப சொல்கிறீர்களா? நெடுமாறனும் . வைக்கோவும் தங்கள் உடல் நலத்தைப் பேணுவதற்கு அமெரிக்கா செல்லும் பொழுது அந்த மூதாட்டியை சென்னைக்கு வரவ்ழித்தது யார்? இந்த வினக்களுக்கு பதில் தெர்ந்தால் உண்மை வெளிப்படும் . இதற்கு பதில் சொல்ல கையாலாகத தமிழனும் . அவ்ர்பின் உள்ள தலைவர்களும் கடமைப்பட்டு உள்ளார்கள் i am not aganist for tamilelam but i am very much avoid the politictions because they are having very bad openion about the tamilans.
-
|2010-04-24 09:08:34 aandonarasial leaders ellarumaa ena throgikal. we r the know alrerady about all this ideotic leaders on muthukumar issue. lets forgot about rthis aal *****.
-
|2010-04-24 16:07:11 அக்னிப்புத்திரன்எதற்கெடுத்தாலும் கலைஞரைக் குறை கூறும் ஒரு கூட்டம் இப்படி ஒரு பிரச்சினை கிடைத்தால் சும்மா விட்டு விடுமா? என்னமோ இவர்களுக்கு மட்டுமே தமிழ் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இருப்பது போல வேஷம் கட்டித் திரியும் இக்கூட்டம் ஆரம்பம் முதலே இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத இடத்தில் தேடித்திரிந்த அதிமேதாவிகள். போயஸ் தோட்டத்தில் தமிழ் உணர்வைத் தேடும் அறிவுக்கூட்டமல்லவா இவர்கள். திருமதி பார்வதியம்மாள் வருகையை முன்கூட்டியே முறைப்படி தமிழக முதல்வருக்கு ஏன் தெரிவிக்கவில்லை? மாறாக, வைகோ மற்றும் நெடுமாறனுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் இருவர் மட்டும் இரகசியமாக விமான நிலையம் வந்ததன் நோக்கம் என்ன? (கடந்த அதிமுக ஆட்சியில் தேச விரோதிகளாக சித்திரிக்கபட்ட இந்த இருவரும் "பொடாவில்" செல்வி.ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்டவர்கள் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது) இந்த விவகாரத்தில் இதுவரை இவர்கள் ஆதரிக்கும் புரட்சித்தலைவி ஏன் வாய் திறக்கவில்லை? அவர் ஆட்சியின் போது விடுத்த வேண்டுகோள்படியே கறுப்புப்பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதை வைகோ ஏன் கண்டிக்கவில்லை? அரசியலில் தற்போது ஒட்டிக்கொள்ள இருக்கும் ஒரே மடம் அதிமுகதான். அதனை பகைத்துக்கொள்ள வைகோவிற்கு மனம் வரவில்லை. காரணம் அரசியல் எதிர்பார்ப்பு. ஆனால், வெளியில் தமிழுணர்வு என்ற ஆர்ப்பாட்டமான பேச்சு, ஆவேசமான போலி நடிப்பு. வைகோவாவது அரசியல் ஆதாயங்களுக்காக இப்படிச் செயல்படுகிறார். ஆனால் அய்யா நெடுமாறன் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? உண்மையிலேயே அந்த அம்மாளுக்கு தகுந்த மருத்துவம் செய்யக் கருதியிருந்தால் முன்கூட்டியே கலைஞரிடம்...சரி வேண்டாம் ..தமிழக முதல்வர் என்ற முறையில் அவரை அணுகியிருந்திருக்க வேண்டாமா? ஒரு வேளை செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் தமிழுணர்வு எதிர்ப்பாளர் என்ற முறையில் ஏதாவது தடைவிதித்து ஏதாவது செய்திருக்கக்கூடும். ஆனால் கலைஞர் அப்படியில்லையே! அவரிடம் சென்று பேசியிருக்கலாமே. தற்போதுகூட தன்னால் முடிந்த உதவிகள் செய்ய தாம் தயாராக இருப்பதாக கலைஞர் கூறியிருப்பதை கவனிக்க வேண்டும். திரு.சுப.வீரபாண்டியன் கேள்விகள் அனைத்தும் அறிவுள்ள அனைவரும் புரிந்துகொள்ளக்கூடியவை.
-
|2010-04-24 20:18:32 muhammednanbargalae ivargal ellam viyabarigal... kadantha kaalathil naamellam ivargalai nambi emantu vittom.
-
|2010-04-25 06:50:23 Raviorea iravil 20.000 tamilarkal kollappatta pothu marunaal mattum illa innaiku varai athu patry vaiy thirakatha karunai illatha nithe edu pattry mttum yenna pesi vid pokirara?
-
|2010-04-25 12:31:51 thoppulkodiyedhiriayyaa su.ba vee nallavar, vallavar, naanayamaanavar, yeanenil mudhalil THIYAAGUVIDAM IRUNDHAAR, PIRAGU STUDENT XEROX ARUNAASALADHIDAM IRUNDHAAR, PIRAGU AYYA NEDUMAARANIDAM IRUNDHAAR, IPPO KOLAIGNARIDAM ULLAAR.... NAALAI YAARIDAM IRUPPAAR YENA AARAATCHI SEYYA VEANDAAM? YEANENIL AVAR NALLAVAR , UNMAIYAANA (?) UNARVAALAR?
-
|2010-04-26 01:31:25 ராஜாஇவரை இன்னுமா இந்த ஊரு நம்புது... இந்த கமண்ட் நான் எழுதலாம்னு நினச்சி ஸ்கொரல் பண்ண அதுக்குள்ள பரமு அடிச்சிட்டாரு.... சரி என்னோட கமென்ட் .... அய்யா கலைஞர் தொலைக்காட்சில புரொகிராம் பேசினா செக் தருவாங்கய்யா ... நீங்க என்னய்யா தருவீங்க... ? தமிழனாவது, சொரணையாவது..
-
|2010-04-26 06:26:26 என்.விநாயக முருகன்தமிழர்களே தமிழர்களே நீங்கள் எங்களுக்கு ஓட்டு போட்டாலும் நாங்கள் உங்களை கடலில் தூக்கிபோடுவோம். கட்டுமரமாய் மிதக்க சொல்வோம். கவிழ்ந்து விடமாட்டோம்
-
|2010-04-26 12:30:42 tamilஇனியும் இந்த ஜால்றாகளை பற்றி பேச வேண்டுமா? ஜால்ரா சு ப வீ ஒன்றை புரிந்து கொள்ளுங்க..... ஈழ தமிழர்களின் எதிரி ஜெயா.... நீங்கள் மற்றும் கருணா ஈழ தமிழர்களின் துரோகிகள். ஜெயா மற்றும் காங்கிரஸ் நம்பலாம் ஆனால் உங்களை போன்ற துரோகிகளை இனியுமா நாங்கள் நம்ப வேண்டும்? கண்டபடி திட்டனும் போல இருக்கு சீ துரோகிகளே
-
|2010-04-27 23:23:22 thurai ilamuruguஇந்த துரோகி / எதிரி என்ற பிரித்துப்பார்க்கும் வேலை தேவையானது தானா?துரோகி திருந்த்லாம் எதிரி என்ரக்குமே எதிரிதான் . னீங்கல் சொல்லுகிறபடி பார்த்தால் மகிந்த ராஜ் பட்சே ப்ரவயில்லை ஈழதுக் கருணாதான் கெட்டவர் ஆக்வே எதிரிக்கு வோட்டுக் கேட்போம் துரோகியைக் குத்திக்கொண்டே இருப்ப்போம் வாழ்க தமிழர் ஒற்றுமை
-
|2010-05-02 10:53:02 robinsonthe questions raised by Ilamurugu are indeed very straight. she could have been sent to Europe or treated in Malaysia itself. it's a sheer political stint by these mobs-Vaiko alias poiko, Pazha alias Kuzhappa vathi nedumaaran. the very fundamental fact that truth will come out with triumph always and wins.
-
|2010-05-05 10:10:05 noyyalnathitamilan enra porvaiyil olinthukondu su.ba.vee kku vakkaalaththu vaangkum nanparea 6 maatha visa 6 maatha hospital appointment todu thaan antha moothaaddi vanthaal... eela tamilarkalukkum pulikalukkum thodarnthu thurokam seythuvarum karunanithi kooddaththukku ellaamea payamthaan karunaanithiyin kaikkoolikal ellorumea nanku naadakam aadukiriirkal
-
|2010-05-05 10:10:29 aatruneerMANIMAKAN poanra sinthanaiyaTra muddaalkal eppothum muddaalkalaakave iruppathum karungkaalikalai kanmoodi aatharippathum veathanaikkuriyathu
-
|2010-05-06 00:22:41 ம.பொன்ராஜ்தோழர் திரு இளமுருகு அவர்களுக்கு 1. திருமதி பார்வதி அம்மாளுக்கு கனடா, மலேசியா போன்ற நாடுகளில் விசா மறுக்கப் பட்டது உங்களுக்கு தெரியுமா, தெரியாத ? 2. இந்தியாவில் அவருக்கு விசா வழங்கப்பட்டு, கடைசி நேரத்தில் அவர் திருப்பி அனுப்பட்டார் என்பதும் தெரியாதா ? 3. கடைசியில் வேறு வழியில்லாமல் அவர் இலங்கைக்கே சென்றார் எனபது தெரியுமா, தெரியாதா ? உங்கள் கூற்றுப் படி 'இந்தியாவை' விட , 'இலங்கை'யில் உயர்தர மருத்துவ வசதி இருப்பதாக அர்த்தமா ? 4. பார்வதி அம்மாள் வந்த விஷயம் தனது கட்டுப் பாட்டில் உள்ள காவல் துறைனருக்குத் தெரியும்போது , அதனை நிர்வகிக்கும் மந்திரியான மு.கவிர்க்குத் தெரியாதா? 5. பார்வதி அம்மாளை வைத்து வைகோ, நெடுமாறன் போன்றோர் அரசியல் நடத்துவதாகவே ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியதற்கு காரணம் 'போயஸ்' அம்மா தான் என்று சுட்டிக் காட்டும் மு.க மற்றும் சுப.வீ போன்றோரின் 'விரல்களை', போரின் இறுதி நாடகளில் சுட்டிக் காட்டி பழிபோட யாரும் இல்லாததால் 'தன்னுடைய' *****க்குல்லேயே அவ்விரலகளை வைத்திருந்தது உங்களுக்கு நினைவு இல்லையோ ? 6. இப்போது பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்துள்ள தமழக அரசு, அவர் வந்த பொது ஏன் செய்யவில்லை? காரணம், "பார்வதி அம்மாள்" வைகோ,நெடுமாறன் தயவில் இந்தியா வந்து சிகிச்சை எடுத்தால் எங்கே அவர்களுக்கு புகழ் போய்விடுமோ என்ற எண்ணத்தில் தானே, 'கலைப்பது போல கலைத்து' விட்டு இப்படி ஒரு நாடகம் ஆடுகிறார் கருணாநிதி? இது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை ?
-
|2010-05-08 00:19:02 Anonymousஇந்த துரோகி / எதிரி என்ற பிரித்துப்பார்க்கும் வேலை தேவையானது தானா? துரோகி திருந்த்லாம் எதிரி என்ரக்குமே எதிரிதான். நீங்கல் சொல்லுகிறபடி பார்த்தால் மகிந்த ராஜ் பட்சே ப்ரவயில்லை ஈழதுக் கருணாதான் கெட்டவர் ஆக்வே எதிரிக்கு வோட்டுக் கேட்போம் துரோகியைக் குத்திக்கொண்டே இருப்ப்போம் வாழ்க தமிழர் ஒற்றுமை
-
|2010-05-10 02:08:46 senthuranஎமக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் தமிழக உறவுகளுக்கு நன்றி தமிழகத்து மற்றைய அரசியல்வாதிகள் சரியானவர்களா, சந்தர்ப்பவாதிகளா எமக்கு தெரியாது. ஆனால் கருணாநிதiயி எமது இனத்தை குழிதோண்டிப் புதைப்பதற்காக அவதாரம் எடுத்த ஒருத்தராகவே ஈழத்தமிழர்களாகிய நாம் கருதுகிறோம். எனவே சுபவீ அவர்கள் கலைஞருக்கு வக்காலத்து வேண்டும் அயோக்கியத்தனத்தை நிறுத்த வேண்டும். முன்பெல்லாம் சுபவீ எமக்காக குரல் கொடுக்க உலகெல்லாம் வலம் வந்தவர். அவருக்கு தெரியும் நாம் அவர் மீது வைத்திருந்த மதிப்பும் மரியாதையும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். அவரது வாக்கும் நாக்கும் பிரண்டுபோனதால் வந்த நிலைமை இது. சுபவீயை நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். *** ********.... வேதனையுடன் ஒரு ஈழத்தமிழன்.
-
|2010-05-10 02:09:53 koneswaransaroeezhath thamizhan azhiyumpoothu thanathu kudumpaththaarkku manthirip pathavikkaakak kaavadi thookkiyavar thaane karunanithi. antha manushanin nenjil konchmenum eeram irunthaal enkalaik kaappaattiyirukkalaam. avaraiyum avarathu arachiyal adiyaadkalaiyum nampuvathu veen velai
-
|2010-05-10 02:10:43 thurai iLamuruguநண்பர் பொன்ரஜ் அவர்கட்கு, "திருமதி பார்வதி அம்மாளுக்கு கனடா, மலேசியா போன்ற நாடுகளில் விசா மறுக்கப் பட்டது உங்களுக்கு தெரியுமா" தெரியாது.ஆனால் புலிகளின் இரூப்பிடம் உலகத்தின் எல்லநாடுகளிலும் ஊண்டு. இந்தியவைத் தவிர வெறு எந்த நாட்டிலும் அந்த மோதாடிக்கு விசா வழ்ங்கப்படவில்லை என்று கூறீர்களா? ஆச்சரியமாக இல்லை புலிகளின் ஊறவினர்கள் வசிக்கும் இட்ங்களில் கூட அவர்களுக்கு வசதி செய்து தர முடயவில்லை என்பதை னன் நான் நான் நம்பவேண்டுமா? த்ற்பொது தமிழக அரசின் ந்த்[இலைப்பட்டைப் பற்றி பொன்ராஜ் அவர்கள் என்ன நினைக்கிறார் என்பதை அறிய ஆவலாய் உள்ளேன் . அம்மோதட்டி மருத்துவதிற்கு ஏன்று தேர்ந்து எடுத இடம் திருச்சி என்று கூறுக்றார்களே ? திருச்சி யில் என்ன சிறப்பு மருதுவ வசதி ஊள்ளது? சு ப வீ யின் விர்ல்கள் ஏங்கே வைதுக் கொள்ளுவார் என்பது எனக்குதெரியாது அடஹப் பற்றிக்கவலைப்படவும் இல்லை சு ப வீ நினைத்து இருந்தால் போரின் கடைசி நாட்களை மாற்றியிரிக்கலாம் என்று நினைக்கும் உங்களை நினைத்தால் ....
-
|2010-05-10 11:39:31 makilanபார்வதி அம்மாள் சிகிச்சைக்காகத்தான் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வர வேண்டுமா? எண்பது வயதைக் கடந்த அந்த மூதாட்டி இந்தியாவின் பாதுகாப்புக்கு உலை வைக்கும் திட்டங்களுடன் வர நிச்சயம் வாய்ப்பில்லை. தனது கடைசி நாட்களை அவர் கழிக்க விரும்பும் இடங்களில் கட்டாயம் தமிழகமும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அவரது பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர் தமிழகத்துக்கு வர காரணமாக சிகிச்சை என்று சொல்லப்பட்டிருக்கலாம். காரணம் எதுவாயினும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதால்தான் விசா வழங்கப்பட்டது. விசா பிரச்சினை எதுவும் இல்லாதபோது, பார்வதி அம்மாள் இங்கே வர விமான நிலைய அதிகாரிகள் ஏன் மறுத்தார்கள் என்பதுதான் கேள்வி. அடுத்த கேள்வி, சுப.வீக்கு பிரச்னை, ’சுயநலத்தமிழர்கள்’ தேவை ஏற்படும்போது மட்டும் கலைஞரிடமும் தன்னிடமும் வருகிறார்கள் என்பதா? அல்லது....அவரது கோபம் நியாயமானதாகவே இருக்கட்டும். தமிழர்கள் வாழ்நாள் முழுதும் மறக்கக்கூடாத ஒரு போராளியின் தாயின் விருப்பத்தை(கடைசி விருப்பமாகக்கூட) நிறைவேற்ற வேண்டிய தருணத்தில் இத்தகைய ’ஈகோ’ பிரச்னைகளுக்கு இடம் கொடுக்கலாமா? மாலையிலிருந்து இரவு வரை நீடிக்கும் பாராட்டு விழாக்கள், ரம்பா உள்ளிட்ட நடிகைகளின் திருமண விழாக்கள் போன்றவற்றில் உடல்நலக்குறைவை மீறி கலந்து கொண்டு, சிறப்பிகிற கலைஞரை இரவு நேரத்தில் தொந்தரவு செய்யலாமா என்ற சுப. வீயின் தயக்கம் நம்பும்படி இருக்கிறதா? மற்ற விழாக்களில் தனது உடல் சிரமத்தை மீறி வந்ததைப் பதிவு செய்யும் கலைஞர் பார்வதி அம்மாள் பிரச்னையிலும் நியாயமான நடவடிக்கை எடுத்துவிட்டு, உடல்நலக்குறைவுக்கு கவலைப்பட்டிருந்தால், தமிழகமே சேர்ந்து கவலைப்பட்டிருக்குமே? வைகோவும் பழ.நெடுமாறனும் பார்வதி அம்மாளை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்திவிடுவார்கள் என்ற நிலமைக்காகவோ, அல்லது கலைஞர் அன் கோவின் தேவையற்ற பயத்துக்காகவோ பார்வதி அம்மாள் அலைக்கழிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? கையில் விசாவுடன் தமிழகத்துக்கு வந்த பார்வதி அம்மாளை கீழே இறங்க விடாமல் தடுத்தது அவரது அடிப்படை உரிமையில் மண் அள்ளிப்போட்ட பாதகம் இல்லையா? பார்வதி அம்மாளை தமிழகத்திற்கு வர வைத்துவிட்டு, இதே கேள்வியை சுப.வீ கேட்டிருந்தால் அவரோடு முரண்பட்டவர்கள் கூட தலை குனிந்து நின்றிருப்பார்களே. தமிழா...நீ பேசுவது நியாயமா?
-
|2010-05-10 12:43:31 appaviஇக்கட்டுரை குறித்தான சுப.வீ அவர்களின் உரை.... http://tamiltube.wordpress.com/
-
|2010-05-12 12:50:00 noyyalnathi6 maatha vishaavoadu vanthavarai tamilaka polisai vaiththu viraddi adththuviddu.... avarkal virumpinaal earppaadu seythutharappadum enru ariviththuviddu.. antha ammaalin viruppaththai oru kaithiyin nilaikku thallum keavalaththai.. pathavi veri pidiththa.. kaalai nakki pilaikkira kooddam durai ilamuruku poala keadkalaam.. arivu.. vedkam.. maanam.. roasam.. ullavarkal earkamaaddaarkal
-
|2010-05-14 05:48:41 thurai ilamuruguஇப்பொழுது அம்மா மருதுவம் செய்து கொள்ளுவதற்கு ஸ்ரீஇலனகாவில் உள்ள வல்லவெட்டித்துறைக்கே சேன்ரு விட்டர்களாம்.
-
|2010-05-14 11:14:06 tscboseviduthalai pulikalai vaithu thanathu katchiyai kappattiyavar thiru kalainchar. m.g.r.adchiel ela tamilarkal evarukku devai pattarkal.su.pa.v.meethu oru samayam mathippu erunthathu.tharpothu veeramani thirumavalavan pontavarkal karunanithiin ela mukamudi kavalarkal.jayalalitha ela thuroki npathu su.pa v. cholli theriya vevdiyathu ellai. anttu jayalelitha cheythathi entu karunanithi cheyhirar. evarkalukku panathai pathukakka oru kachi devi. chila calrakkalum devai. kuttimaniyai elangaiedam kaiyaka paduthiyavar yar.unnavirutha nadakam nadathiyathu yar.prabakaran m.g.r. avarkalai santhithuvidakudathu npatharkkaka atharkkumunba oru guttathi gutti ela prachanaiyai arasiyal akkiyathu yar.tamilina thalivar.
-
|2010-05-15 18:57:02 JohnsonSubha vee oru throgi. Avaridam ithai vida enna ethir parkka mudiyum. Karnannidhyin kaal varudi than indha subha vee.
-
|2010-05-17 09:12:52 janshonசுப வீர பான்டியன் பனதிர்க்க ஸொரம் பொனவர் என்பது உலகரின்த உன்மை இதில் யருக்கும் மாருபட்ட கருத்து இல்லை இவரை பட்ரி நாம் புதிதாக தெரின்து கொல்ல ஒன்ட்ரும் இல்லை.
-
|2010-05-19 13:27:39 vivegananthanமுறுக்கு மீசை வைத்துக் கொண்டலேயே, அவரை போராளியாக நினைப்பது நமது தவறுதான். கருணாநிதியை விடவும் ,கருணாவை விடவும் ஆபத்தானவர் சுபவி. அவரது கட்டுரைகளையும், அவரைப் பற்றி குறிப்பிடும் கட்டுரைகளையும் தவிர்ப்பது கீற்று தளத்தின் மரியாதையை தக்கவைக்கும்.
-
|2010-05-20 10:52:24 sudarsanthamizhargale thamzhilargale -neengal enakku theyrthalil vaakk alithaalum ungalai muthugil thaan kutthuven. ennai kadalil thookki pottal oolai iduwayn kenjuwayn. aannal charithirathil naan ettappanai thorkkavaippan. athu naan enakku vendum. atharku yaaridam vendumanalum koott vaippen athuvum enna 8 kodi thamizhargalaium soniavukku kaal adiyil " ADAGU VAIPPEN" ENAKKU VENDUYATHU PUGAZH.PEAYAR. IPPADIKKU.:KALAINGAR KARUNAVIN MANASAATCHI.
-
|2010-05-23 01:42:43 உண்மை சுடும்ஈழத்தமிழர்களும் புலி ஆதரவு தமிழர்களும் ஒரு மாதிரியான மெண்டல் நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. தமிழக தமிழர்கள் மற்றும் தலைவர்கள் மூடிக்கொண்டு இருந்தால் போதும்.நாங்கள் ஈழத்தை வென்றெடுப்போம் என்று பிதற்றிய காலம் எனக்கு ஞாபகம் உள்ளது. சண்டை ஆரம்பித்து கொடூரமாக மாறும்போது பிரபாகரன் வெளிவந்து உண்மை பேசவில்லை. யாரிடமும் உதவி கேட்கவில்லை. ஒரு சக்ரவர்த்தி போல் தன்னை நினைத்துக்கொண்டு நடந்தது உண்மைதானே? ஊரில் இருப்பவனை குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு தன் முதுகை பார்ப்பது நல்லது...
-
|2010-05-23 01:43:14 உண்மை சுடும்எவன் மீதாவது பழியை போட்டுவிட்டு தன் தலைவனையும் தன் மனபிரமையையும் கட்டிகாப்பது என்ற திட்டத்தில் பலர் உலவுகிறார்கள். பிளான் ஏ, பிளான் பி என்று எதுவுமே இல்லை. பிளான் எல்லாம் சிவிலியன்களை தன் முன்னால் வைத்து சண்டை போடுவது தான்.
-
|2010-08-06 00:38:26 janakirajaஅய்யா வணக்கம். நலம் நலமறிய ஆவல். உரையாடிநீண்ட நாட்களாகி விட்டது . உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தங்களின் அறிவாழம் மிக்க உரையைக் கேட்டு வியந்து போனேன். மாநாட்டுப் பணிகளில் தங்களின் அர்ப்பணிப்பு பாராட்டத் தகுந்தது. எனது வகுப்பறையில் நிகழ்ந்த சிறு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதனை எழுதுகிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் தாங்கள் உரையாற்றுகிற போது “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... ”என்னும் பாடலைக் குறிப்பிட்டு, இப்பாடல் அகதிகளுகான பாடல் என கூறியிருந்தீர். அதனைப் புத்தக வடிவிலும் படித்துள்ளேன். சில நாட்களுக்கு முன்னால், அஞ்சல் வழியில் இசை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சங்க இலக்கியம் குறித்து வகுப்பெடுத்துக் கொண்டிருக்கையில் “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்....” என்னும் பாடலை இது உலகின் அகதிகளுக்கான, புலம் பெயர்ந்த மக்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் பாடல், குறிப்பாகத் தமிழீழ மண்ணில் வாழ வழி இல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழும் தமிழர்களின் பாடல் என குறிப்பிட்டு விளக்கிக்கொண்டிருக்கையில் வகுப்பிற்கு வருகைதந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் எழுந்து, இந்தக் கருத்தையும் இந்தப் பாடலையும் இத்தோடு நிறுத்துமாறு கண்ணீருடன் கூறினார். விசாரிக்கையில் அவரது பெயர் நந்தினி என்றும், இரண்டு பெண்பிள்ளைகளுக்குத் தாய் என்றும், அவர் யாழ்ப்பானத்திலிருந்து வெளியேறி இன்று அகதியாக வாழும் ஈழத்தமிழச்சி என்பதையும் அறிந்துகொண்டேன். அவரது ஊர் குறித்த நினைவுகளை எனது விளக்கம் கிளறிவிட அதனால், ஊரையும் உறவையும் இழந்ததன் வலியே அங்கே கண்ணீராய் - அழுகையாய் வெளிப்பட்டது என்பதை உணர்ந்தேன். பிறகு,நிச்சயம் தமிழீழம் மலரும் அன்று நமது சொந்த மண்ணில் - நம் உறவுகளோடு நாம் வாழ்வோம். அதுவரை இந்த உணர்வைப் பாதுகாப்போம் என ஆறுதல் படுத்தினேன். தங்களின் கருத்து எனது வகுப்பின் வழியே அந்தத் தமிழச்சியின் உள்ளத்து உணர்வை உசுப்பியதை உணர்தேன். தங்கள் கருத்தின் வலிமையையும் உணர்ந்தேன். இதே வழியில் தங்களின் கருத்துரை தொடரட்டும். நன்றி. தோழமையுடன் ஜானகி.இராசா உதவிப்பேராசிரியர் தமிழியியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பேச.9976996911 மின்னஞ்சல் janakiraja81@gmail.com
| < முன் | அடுத்தது > |
|---|






