• அது என்ன ‘சனாதனம்’? வர்ணாஸ்ரம தர்மத்தின் மற்றொரு பெயர் தான் அது! மனு சாஸ்திரம், இறந்து போன மூத்த சங்கராச்சாரி, இந்துக்களின் புனித நூல்கள் எல்லாம் இதைத் தான் கூறுகின்றன.

• பிறப்பால் ஒருவன் ‘பிராமணன்’ - அவனுக்கு அடிமை, பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்கள், பஞ்சமர்கள் மற்றும் பெண்கள். இது பிரம்மாவே கூறியது என்று மனுதர்மம் கூறுகிறது.

• அந்த சனாதனம், இப்போது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி என்று அதிகார பலத்துடன் தமிழர்களாகிய நம்மீது படை எடுத்து வருகிறது.

• மொழி, இன அடையாளங்களை ஒழிக்க, மாநிலங்களையே இல்லாது ஆக்க நடக்கும் முயற்சி - சனாதனம்.

• நீட் தேர்வைத் திணிப்பது - சனாதனம்.

• இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது - சனாதனம்

• காசியை தலைநகராக்கி, மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்கி இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களின் வாக்குரிமையைப் பறிப்போம் என்று சாமியார்கள் கூட்டம் வாரணாசியில் கூடி இந்துராஷ்டிரத்துக்கு புதிய அரசியல் சட்டத்தை அறிவித்திருக்கிறதே - அது சனாதனம்.

• தமிழ்நாட்டிடமிருந்து ஒரு ரூபாயை வாங்கி 35 காசுகளை மட்டுமே திருப்பித் தருகிறதே ஒன்றிய ஆட்சி - அது சனாதனம்.

• அனைத்து இந்துக்களும் சமம் ஆக முடியாது; ‘பிராமணர்’ கட்டுப்பாட்டிலுள்ள கோயிலில் பிற ஜாதி இந்துக்கள் அர்ச்சகராக முடியாது என்று நீதிமன்றத்தில் இப்போதும் படி ஏறுகிறார்களே - அது சனாதனம்.

• கார்ப்பரேட்டுகளுக்கு 13 இலட்சம் கோடி வரிச் சலுகை; அதே நேரத்தில் விளிம்பு நிலை எளிய இந்துக்களுக்கு பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறார்களே - அது சனாதனம்.

• ஸ்வயம் சேவக்குகளாக ஆர்.எஸ்.எஸ் - இல் பெண்கள் உறுப்பினர் ஆக முடியாது என்று இன்று வரை தடை போட்டிருக்கிறார்களே - அது சனாதனம்.

• சரிபாதியாக இருக்கும் இந்துப் பெண்கள் தெய்வ பக்தி இருந்தாலும் கோயில் அர்ச்சகராக, சடங்குகளில் பங்கேற்க, முடியாதவர்களாக தடைபோட்டு வைத்திருக்கிறார்களே - அது சனாதனம்.

• மாட்டுக் கறி சாப்பிடாதே; மதம் மாறினால் சிறை; இஸ்லாமியருக்கு குடியுரிமை மறுப்பு; நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் மறுப்பு - இவை எல்லாமுமே சனாதனம்.

• தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியைக் கவிழ்த்து, குதிரை பேரம் பேசித் தங்களது ஆட்சியாக மாற்றுவது, ஆளுநர்களை அரசியல் முறைகேடுகளுக்குப் பயன்படுத்துவது - சனாதனம்.

• ஜாதி கட்டாயம் வேண்டும் என்பதோடு, ஜாதி ஒழிப்பு பற்றி கள்ள மவுனம் சாதிப்பது - சனாதனம்.

• ஜாதியமைப்பை ஆதரித்துக் கொண்டு - ஜாதிவாரி கணக்கெடுப்புகளை மறுப்பது - சனாதனம்

• மாநில உரிமைகளை மறுத்து ஒற்றை ஆட்சியைத் திணிப்பது - சனாதனம்

• ‘பிராமணன்’ என்றால் ஒழுக்கமானவன்; குஜராத்தில் கூட்டுப் பாலியல் செய்தாலும் 14 பேரைக் கொலை செய்தாலும், “பிராமணன் ஒழுக்கமானவன்” - முன்கூட்டியே சிறையிலிந்து விடுதலை செய்வோம் என்கிறார்களே - அது சனாதனம்.

• மணிப்பூர் பழங்குடி மக்களை ஒழிக்கத் துடிப்பது - சனாதனம்

• பணமதிப்பு இழப்பு - ஜி.எஸ்.டி. வரி விதிப்பு - காஷ்மீர் தனி உரிமை அழிப்பு - விவசாயிகளுக்குத் துரோகம்; மின்சார உரிமையை மாநிலங்களிலிருந்து பறித்தல்; - அமுலாக்கத் துறை - சி.பி.அய். அமைப்புகளைப் பழி வாங்கப் பயன்படுத்துதல் - ‘சனாதனம்’.

• வன்முறையாளர்களை, கிரிமினல் குற்றவாளிகளை கட்சி உறுப்பினர்களாக்கி ‘இந்துத்துவா’ படம் காட்டும் மோசடி வித்தை - சனாதனம்.

• ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் வர்ணாஸ்ரமமே - சனாதனம்.

விடுதலை இராசேந்திரன்

Pin It