நவம்பர் மாதம் 6-ம் தேதி, தமிழக பா.ஜ.க 'வெற்றிவேல் யாத்திரையை’ எல்.முருகன் தலைமையில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பிஜேபிக்கு பெரிய ஆதரவு தளம் உருவாகும் என்றும் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்றும் அதனால்தான் எதிர்க்கட்சிகள் இதைப் பார்த்து பயப்படுகின்றன என்றும் நமது மனித முருகன் அவர்கள் தனது அபிலாசையை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
ரத யாத்திரை நடத்தி ஆட்சியை பிடித்த கலவர சங்கிகள் அப்படியான சிந்தனை ஓட்டத்தில் இருந்து இன்னும் விடுபடவில்லை என்றாலும் அப்படியான ஒன்றை தமிழகத்தில் நடத்தி வெற்றிப் பெற்றுவிடலாம் என எண்ணுவது உள்ளபடியே அவர்களின் மனத் திடத்தைதான் காட்டுகின்றது.
ஆனால் அசாத்திய மனத்திடம் எப்போதுமே வெற்றிப் பெற்று விடுவதில்லை. கடலை கையால் இரைத்து விடுவேன் என்பதோ இமயமலையை பெயர்த்து விடுவேன் என்பதோ எப்படி ஆகாதவனின் வெற்றுப் பிதற்றலோ அப்படித்தான் தமிழ்நாட்டில் வேல் யாத்திரை நடத்தி ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற முருகனின் முரட்டு கனவும்.
ஆனால் அது ஒருபோதும் பலிக்கப் போவதில்லை. காரணம் கஞ்சா வியாபாரிகள், கள்ளநோட்டு அடிக்கும் சமூக விரோதிகள், பொறுக்கிகள், ரவுடிகள், கேடிகள், விபச்சாரத் தரகர்கள், பாலியல் குற்றவாளிகள் போன்றோரின் சரணாலயமாகவும் மேற்படி தொழில்களை தமிழ்நாட்டில் நடத்தி தமிழக மக்களை சீரழிக்கத் துடிக்கும் மக்கள் விரோத கும்பலாகவுமே பாஜகவை தமிழக மக்கள் பார்க்கின்றார்கள்.
எந்த வகையான சமூக பிரச்சினைகளுக்கும் வாயே திறக்காத இந்த காரியவாத ஜந்துக்கள் மத ரீதியான ஏதாவது பிரச்சினை மாட்டாத அதை வைத்து தங்களின் அரசியல் அரிப்பை தீர்த்துக் கொள்ள முடியாத என அலைந்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏதோ இந்துமத்ததின் அத்தாரிட்டியே தாங்கள்தான் என்பதுபோல காட்டுக் கூச்சல் போடும் இந்த சமூக விரோத கும்பலை குறைந்தபட்சம் சிந்திக்கும் ஆற்றலுல்ல ஒரு இந்து கூட ஏற்றுக் கொள்வதில்லை.
ஏற்கெனவே கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திவிட்டார்கள் என்று ஒரு ஆபாச நூலுக்காக மல்லுக் கட்டியதோடு அந்த ஆபாச புத்தகத்தை தமிழகம் முழுவதும் பாஜகவினர் தங்களது வீடுகளில் வைத்து படித்து பரவசநிலையை அடைந்ததோடு வேல் பூஜையும் செய்தனர். அக்கிரகாரத்தையும் அதை அண்டிப் பிழைக்கும் அடிமைக் கூட்டத்தையும் தவிர தமிழக மக்கள் அதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. வேலைவெட்டி இல்லாத வீணர்களின் வெற்று கூச்சல் என்று கடந்து போனார்கள்.
நிச்சயமாக இந்த முறையும் அப்படித்தான் நடக்கப் போகின்றது. ஆனால் அப்படியான இழிவான நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வேல் யாத்திரைக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டிருப்பதாக தெரிகின்றது.
ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட ஒருவனையும் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது என்பதுதான் உண்மை. ஏதோ வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்கவரும் அகதிகளைப் போலத்தான் தமிழ்நாட்டு மக்கள் வடமாநில நபர்களை பார்ப்பதால் முருகன் யாரை அழைத்து வந்து அதிசயம் நிகழ்த்த பார்த்தாலும் அது அம்போ எனத்தான் போகும்.
இது ஒருபுறம் இருக்க உண்மையிலேயே தமிழ்மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீது பிஜேபிக்கு மரியாதை இருக்குமானால் அனைத்து முருகன் கோயிலிலும் தமிழில் மந்திரம் சொல்ல வேண்டும் என்றல்லவா முதலில் பிஜேபி யாத்திரை சென்றிருக்க வேண்டும்.
ஆனால் சமஸ்கிருத, இந்தி அடிமைகளான அவர்களால் ஒருபோதும் அப்படி செய்ய முடியாது. அதனால்தான் முருகனை முன்னிலைப்படுத்தாமல் அவர்கள் வேலை முன்னிலைப்படுத்துகின்றார்கள். முருகனை முன்னிலைப்படுத்தினால் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு முருகனும் பிஜேபி தூக்கிப்பிடிக்கும் பார்ப்பன கந்தனும் வேறு வேறு என்று மீண்டும் புயலை கிளப்ப ஆரம்பித்து விடுவார்கள் என்பதால்தான் பாதுகாப்பாக வேலை மட்டும் தனியாக பிரித்து அதை அரசியல் படுத்துகின்றார்கள்.
உணவைத் தேடவும், மிருகங்களை வேட்டையாடவும் ஆதிதமிழன் உற்பத்தி செய்த கருவிதான் வேல் என்பது. வேல் வழிபாடுதான் முருகனுக்கு முந்திய வழிபாடாகும். காலப்போக்கில் வேல் வழிபாடு முருக வழிபாடாக மாறியது. முருகன் கடவுளாகவும் வேலை எடுத்து வெறியாடும் நபரின் பெயர் வேலன் என்றும் ஆகியது.
சங்க இலக்கியத்தின் வழி இதை நம்மால் அறிய முடியும். தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் வேல் தான் கிடைத்ததே அல்லாமல் முருகன் சிலை எதுவும் கிடைக்கவில்லை. வேல் என்பது ஒரு பொதுவான போர் ஆயுதமாகவே பயன்பாட்டில் இருந்துள்ளது.
சங்க இலக்கியங்களின்படி முருகன் குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவான். அவனது பூசாரியான வேலனுக்கு என்ன வேலை என்றால் வெறியாடி குறிசொல்வது. தலைவியின் காதல் நோயால் மெய்ப்பாடு தோன்றும் பொழுது தாயும் செவிலியும் அந்நோய் இன்னது என்று அறிய வேலனை அழைத்து வெறியாட்டம் நிகழ்த்தி வினவுவர்.
இச்சமயங்களில் ஆடறுத்து, ஆடுகளத்தை மெழுகி, வேலனைத் தருவித்து வெறியாட வைப்பார்கள். வேலன் வருங்காலம் பற்றி குறி சொல்வதோடு மந்திர மருத்துவனாகவும் இருப்பான். இந்த வேலன் மீது ஏறி இவனை குறிசொல்ல வைக்கும் தெய்வத்தின் பெயரே முருகு ஆகும்.
முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல! சினவேல் ஓம்புமதி: வினவுவது உடையேன்; பல்வேறு உருவின் சில்அவிழ் மடையொடு, சிறுமறி கொன்று, இவள் நறுநுதல் நீவி வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய விண்தோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும் உண்ணுமோ, பலியே?
இந்தக் குறுந்தொகை பாடலில் வேலன் வெறியாடுவதைப் பற்றி கூறப்படுகின்றது. முருகனை வழிபட்டு, இங்கு வெறியாடுவதற்கு வந்தவனாகிய அறிவு முதிர்ச்சியுடைய வேலனே! கோபித்துக் கொள்ளலைப் பாதுகாப்பாயாக. நின்னிடத்தே கேட்பது ஒன்று உடையேன்.
பலவாக வேறுபட்ட உருவினைக் கொண்டதும், சில சோற்றையுடையதுமான படையலோடு, சிறிய ஆட்டுக்குட்டியையும் கொன்று, இவளது நாறிய நெற்றியைத் தடவி, முருகனை வணங்கிப் பலியாகக் கொடுத்தனை. ஆனால் இவளை வருத்திய வானளாவிய பெரிய மலைப்பக்கத்தைக் கொண்ட தலைவனது ஒள்ளிய மாலையணிந்த மார்பும், நீ கொடுக்கும் பலியை ஏற்று உண்பதாகுமோ என்று தலைவி கூறுவதாக பாடல் உள்ளது.
இந்தப் பாடலில் நாம் கவனிக்க வேண்டியது முருகனுக்கு பலி கொடுக்கப்படுவதைப் பற்றி குறிப்பிடப்படுகின்றது. மேலும் இங்கே எந்த மந்திர வழிபாடும் இல்லை. மிகச் சாதாரணமாகவே தங்களுடைய வழிபாட்டை சங்ககால மக்கள் செய்துள்ளார்கள்.
கூழைக்கும்பிடு போடும் வழிபாட்டுமுறை அப்போது இல்லை.என்பதும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். முருகனது வேலை என்பது தலைவியின் நோய்க்கான காரணத்தைக் கூறுவது மட்டுமே. மேலும் ஒரு அகநானூற்றுப் பாடல் முருகனை கேவலப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
வெறிபுரி ஏதில் வேலன் கோடை துயில் வரத்தூங்கும் ஆயின், மாரிக்குரல் அறுத்து, தினைப்பிறப்பு இரீஇ, சொல்லாற்றுக் கவலை பயம் கறங்கு தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா! வேற்றுப் பெருந்தெய்வம் போருடன் வாழ்த்தி
வேலன் வெறியாடல் தலைவி நோய்க்கு மருந்தாகாது. இச்சிறு தெய்வத்தின் சக்தி தனக்குக் காதல்நோய் தந்த பெருந்தெய்வமான மலைநாட்டுத் தலைவனின் சக்திமுன் வெல்லாது. இங்கு வேலனையும் அவன் வணங்கும் முருகனையும் அற்பச் சக்தியுடைய சிறு தெய்வமெனத் தலைவி இகழ்ந்து பேசுகிறாள்.
மேலும் “மடையம் மன்ற வேலன்” போன்ற சொற்கள் வேலனையும் அவனது தெய்வமான முருகனையும் மடையர்கள் என்றே கூறிப்பிடுகின்றன.
அப்போது இருந்த முருக வணக்கத்தின் நிலை இதுதான். தங்களுக்கு எதாவது பிரச்சினை என்றால் வேலனை வரவழைத்து ஆடுபலி கொடுத்து அவனிடம் குறிகேட்பார்கள். இதுதான் நிலை. முருகனுக்கு என்று கோவில் தனித்து இருந்ததாக பெரிய அளவில் சான்றுகள் இல்லை. ‘அணங்கு உடை முருகன் கோட்டத்து’ என்ற புறநானூற்று வரியால் சில இடங்களில் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது.
பரிபாடல் காலத்திலும் திருமுருகாற்றுப்படை காலத்திலும் முருகனுக்கு என்று ஆறுபடை கோவில்கள் உருவாகிவிட்ட நிலையை காணமுடிகின்றது. மேலும் பரிபாடலிலும், திருமுருகாற்றுப்படையிலும் குறிப்பிடப்படும் முருகன் தமிழக மக்கள் வணங்கிய முருகன் அல்ல; அது வட நாட்டு மக்கள் வணங்கிய ஸ்காந்தன் என்பது இந்த நூல்கள் வழி அறிய முடிகின்றது.
தமிழ்நாட்டு மக்கள் வணங்கிய முருகனுக்கு அப்பன் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. பழையோள் சிறுவன், கொற்றவை செல்வன் என்றே முற்பட்ட சங்க இலக்கியங்களில் அழைக்கப்படுகின்றான். பின்நாளில் வந்த பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களிலேயே முருகனின் அப்பன் சிவன் என்று குறிப்பிடப்படுகின்றது. மேலும் அவனது பிறப்பைப் பற்றிய புராணமயமாக்கப்பட்ட கேவலமான கதைகளும் வருகின்றது.
வட மொழி நூல்களில் ஸ்காந்தனுக்கு அப்பன் அக்கினிதான். பின்நாளில் அக்கினி செல்வாக்கு இழந்த போது அவன் ருத்திரனின் மகனாக்கப்பட்டான். இப்போதோ அவன் சிவனின் மகன் ஆவான். ஸ்காந்தனின் அப்பன் யாரென்று ஸ்காந்தனுகே தெரியாத நிலையே நீடிக்கின்றது. அப்படிப்பட்ட ஸ்காந்தனை தமிழ் முருகனுடன் இணைத்ததுதான் பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையின் வேலை.
தமிழ்நாட்டில் உள்ள முருகனுக்கு வள்ளி என்ற ஒரு மனைவி மட்டுமே முற்பட்ட சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றது. ‘முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல’ என்று நற்றிணை வரி மூலம் இதை அறியலாம். ஆனால் பரிபடால், திருமுகாற்றுப்படை போன்றவை முருகனுக்குத் தெய்வானை என்ற மனைவியும் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தத் தெய்வானை ஒரு பாப்பாத்தி ஆவாள். அசுரர்களை (தமிழர்களை) அழித்து தேவலோகத்தை மீட்டதற்காக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்து வைக்கின்றான். இதில் வள்ளி களவு மணத்தின் பிரதிநிதி ஆவாள். தெய்வானை கற்புமணத்தின் பிரதிநிதி ஆவாள். தமிழ்ச்சமூகம் கொண்டாடிய களவு மணம் தெய்வானையின் கற்பு மணத்தால் கேவலப்படுத்தப் படுகின்றது.
பார்ப்பன அடிமைகளாக இருந்த தமிழ்ப் புலவர்கள் முருகனை பார்ப்பன மயமாக்கி, பைங்கட் பார்ப்பனன் சிவனை அவனுக்கு அப்பனாக மாற்றினர். சிவன் வழிபாடு தமிழ்நாட்டில் முற்பட்ட சங்க இலக்கியக் காலத்தில் அவ்வளவு பிரபலமாகவில்லை. சேயோன் ஒரு நிலத்தின் கடவுளாக மட்டுமே குறிப்பிடப்பட்டான்.
வடநாட்டு இலக்கிய படைப்பில் தான் ஸ்காந்தன் மயில், சேவல், பாம்பு போன்ற விலங்குகளோடு தொடர்புபடுத்தப் படுகின்றான். தமிழ்நாட்டு வழிபாட்டு மரபில் அவனுக்கு மயில் மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது. திருப்பரங்குன்றத்தில் இருந்த முருக வழிபாட்டை குறிப்பிடும் பரிபாடல், திருப்பரங்குன்ற மக்கள் முருகனை இரு வழியாக வழிபட்டதைக் குறிப்பிடுகின்றது. கோயிலில் சிலை உருவில் செவ்வேலையும் கோயிலுக்கு வெளியே கடம்ப மரத்தடியில் வேலன் வெறியாட, பொதுமக்கள் வேலையும் கடம்ப மரத்தையும் வழிபட்டது கூறப்படுகின்றது.
இலக்கியங்களின் துணைகொண்டு பார்க்கும் போது முருகனுக்கான வழிபாடு என்பது நாட்டார் வழிபாட்டு மரபை முழுவதுமாகப் பின்பற்றியதாகவே இருந்திருக்கின்றது. ஆட்டு ரத்தத்தில் தினை வகைகளை பிசைந்து முருகனுக்குப் படைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
இப்போது முருகன் சுத்த சைவமாகிவிட்டான். முற்பட்ட சங்க இலக்கியங்களில் முருகனுக்கு இரண்டு கைகள் மட்டுமே இருக்கின்றது. ஆனால் பிற்பட இலக்கியங்களான பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்றவை முருகனுக்கு ஆறுதலைகளும், பன்னிரெண்டு கைகளும் உள்ளது போல குறிப்பிடுகின்றன.
மேலும் முருகனின் அண்ணன் கணேசன் என்பதும் அவர்களின் அப்பன், அம்மா சிவன், பார்வதி தம்பதிகள் என்பதும் உலகைச் சுற்றி வந்து ஞானப்பழத்தை வாங்கும் கதையும் இந்துமதத்தின் புனித சொல்லான ‘ஓம்’ என்பதும் எந்த முற்பட்ட சங்க இலக்கியத்திலும் கிடையாது என்பதையும் உறுதியாக நாம் சொல்கின்றோம்.
ஆனாலும் பார்ப்பன பாதம்தாங்கி எல்.முருகனும், அவரை வழிநடத்தும் அக்கிரகாரத்து அழிச்சாட்டியங்களும் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவது கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை ஏற்கெனவே தமிழ்நாட்டில் கணிசமாக உள்ள முருக பக்தர்களை எல்லாம் பிஜேபியில் சேர்த்துவிட வேண்டும் என்ற நோக்கம் தவிர மயிரளவுக்குக் கூட அவர்களுக்கு தமிழர்கள் வழிபட்ட அந்த ஆதி முருகனின் மேல் மரியாதை என்பதெல்லாம் இல்லை.
ஒரு பார்ப்பானுக்குக் கூட முருகன் பெயர் இல்லை என்பதும் தமிழ்நாட்டை தாண்டி வேறு எந்த வட இந்திய மாநிலத்திலும் முருகனுக்கு ஒரு கோயில்கூட கிடையாது என்பதும் இந்த பார்ப்பன அதன் பாதம் தாங்கிகளின் கெட்ட நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள உதவும்.
உண்மையின் தன்மானமும் சுயமரியாதையும் உள்ள தமிழ்மக்கள் பிஜேபி கும்பலின் இந்த தகிடுதத்த விளையாட்டுகளுக்கு தங்களுக்கு தெரிந்த வகையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. ‘கரசேவை’ அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் செய்யத் தெரியும் என்பதை காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டின் மீது நீட் தேர்வை திணித்து கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவில் நெருப்புவைத்த கூட்டத்திற்கு, தமிழகத்தில் இந்தியையும் சமஸ்கிருந்தத்தையும் திணிக்கும் கூட்டத்திற்கு, ஜிஎஸ்டி மூலம் தமிழ்மக்களின் வரிப்பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு தமிழ்நாடு வெள்ளம் புயல் பேரழிவு நோய்களால் பாதிக்கப்படும் போதுகூட பணம் தராமல் கொத்துக் கொத்தாக சாகவிட்டு வேடிக்கை பார்க்கும் கல் நெஞ்சக்காரர்களுக்கு, ஆளுநர் போன்ற மத்திய அரசின் கங்காணிகள் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுத்த நிறுத்த முற்படும் பார்ப்பனிய ரவுடி கும்பலுக்கு சரியான புத்தி புகட்ட இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மற்றபடி அப்படியான ஒரு கரசேவை நடக்க வேண்டுமா இல்லையா என்பதெல்லாம் இந்த யாத்திரைக்கு அனுமதி தரும் காவல்துறையின் செயல்பாட்டை பொறுத்தது என்பதை நாம் சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை.
- செ.கார்கி