இரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை தவிர்க்கவே முடிவதில்லை. 

black bookவாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஒரு தோட்டாவோ...... ஒரு காட்டிக் கொடுத்தலோ......போகிற போக்கில் பார்க்கிற ஓர் அலட்சியப் பார்வையோ போதுமானதாக இருக்கிறது.
 
'ரெய்ச்சல்' யூத இன பெண். வேறு என்ன வேண்டும் அவள் கொல்லப் பட வேண்டியதற்கான காரணம். அவள் ஒரு பாடகியும் கூட. அது ஒரு கலை வடிவத்துக்குள் வந்து விடுகிறது. அது ஒரு எதிர்ப்பு குறியீடாக மாறி விடுகிறது. ஹிட்லரின் ஆட்சியில்... எதிர்ப்புக்குணங்கள் இருக்கவே கூடாது என்பது தாரக மந்திரம். ஈ மீசையில் ஒட்டாத பெரும் பேராசை அது. அதுவும் யூத இனத்துக்கு சாவது ஒன்று தான் கொடுக்கப்பட்ட வாழ்வியல் நியதி. அதுதான் அங்கு நிகழ்கிறது. யூத மனிதர்களும் அத்னை சாதாரணமானவர்கள் கிடையாது. சமயோசித, புத்திசாலித்தனம் நிரம்பிய, குரூர குணம் படைத்தவர்கள் தான். 
 
அவர்களின் புத்திசாலித்தனம்தான் இன்றைய இஸ்ரேல் என்று அறிக.
 
ரெய்ச்சல் துரத்தப் படுகிறாள். அவள் வீடு அழிக்கப் படுகிறது. அவளின்  குடும்பம் திருட்டுப் படகில் தப்பிக்க முயற்சிக்கையில் சுட்டு வீழ்த்தப்படுகிறது .
 
ஒரு கட்டத்தில், படம் முடியும் நேரத்தில் அவள் 'எல்லி'சாக மாறிய பின் பேசும் ஒரு வசனம் என்னை தூங்க விடவில்லை. "இன்னும் இது இப்டியே எத்தனை நாளைக்கு"  என்பதுபோல தொனி கொண்ட ஒரு வசனம். ஓடி ஓடி களைத்து, ஏமாற்றி ஏமாந்து, அடித்து அடி வாங்கி, என்னவெல்லாம் செய்து இந்த உயிரைக் காக்க முடியுமோ  அத்தனையும் செய்த பிறகு துரோகத்தின் விளிம்பில் மாட்டிக் கொண்டு சரிந்து கிடக்கும் போது தான் மேற் சொன்ன வசனம் வருகிறது. 
 
அது அத்னை கமானதா இருக்கிறது. 
 
எல்லா ஊரிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஒரு புரட்சி குழு அங்கும் இருக்கிறது. அதில் அவள் உளவாளி ஆகி விடுகிறாள். ரெய்ச்சலாக இருக்கும் அவள் எல்லிஸ் என்ற  உளவாளியாக மாறி விடுகிறாள். உளவாளிகள் வாழ்வென்பது வாழ்வது அல்ல. சாவது. வன்புணர்வோ..... வேறு வழி இல்லாத தன் புணர்வோ.... எது வேண்டுமானாலும் நடக்கலாம். புணர்ச்சியின் ஊடாகவே பெரும் பெரும் காரியங்கள் அரங்கேறுகின்றன. ஏனெனில் அதுதான் ஆதி. அதற்குள்தான் ஆகமம் ஒளிந்திருக்கிறது. அதுதான் இருட்டும் வெளிச்சமும். சிருஷ்டியும் மரணமும் கூட. ஒரு காட்சியில் ரெய்ச்சல் தன் பெண் குறியில் இருக்கும் கருப்பு மயிர்களுக்கு செம்பட்டை சாயம் அடித்துக்  கொண்டிருப்பாள். நமக்குள் நிறமற்று நின்று விடுகிறது காட்சி விளக்கம். 
 
அத்தனை நுட்பமான உடல் சார்ந்த பாதுகாப்பை அவள் கொண்டிருக்கிறாள். ஓர் உளவாளியாக எந்த நேரத்திலும் எந்த விதமான சோதனைகளுக்கும் அவள் ஆட்பட நேரிடும். அதில் ஒன்று... புணர்தல். ஒருவேளை அச்சூழலில் கருப்பு மயிர், தான் ஒரு யூத பெண் என்று காட்டி கொடுத்து விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வை.... இந்த போராட்டம் அவளுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. நுண்ணிய அறிவின் பயத்தை அவள் பேண்டீசுக்குள் ஒளித்துக் கொண்டே முன்னேறுவது... இன்னமும் இது மிருகத்தனமான வேட்டை சமூகம்தான் என்பதை இன்னொரு முறை உறுதிப் படுத்துகிறது. 
 
மானுடகும் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் தன் நிலை பிறழ்ந்து தானே சுட்டுக் கொண்டு வீழ்ந்தும் விடுகிறது. வீழவும் விடுகிறது. 
 
ன் புரட்சி கூட்டத்தில் இருந்து மூன்று முக்கிய நபர்கள் காவலர்களிடம் மாட்டிக் கொள்ள, அவர்களை கண்டு பிடிக்க, எப்படியாவது தப்பிக்க வைக்க, அவள் உளவாளியாக செல்கிறாள். நினைத்த கோட்டில் நன்றாகவே காட்சி நகருகிறது. அந்த உயர அதிகாரிக்கு அவள் மீது காமம் சார்ந்த காதலோ, காதல் சார்ந்த காமமோ எதுவோ ஒன்று ஆழமாக வந்து விடுகிறித்து. அவளுக்கும் அது அப்படியே நிகழ்ந்து விடுகிறது. புர்தலின் வழியே இவ்வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது ஊர் தாண்டி நாடு தாண்டி கலாச்சாரம் தாண்டி ஆண் பெண் தாண்டி... உயிர்களின் பொதுவுடைமையாக்கப் பட்டு விடுகிறது. 
 
தான் ஒரு யூத பெண் என்று தன் மீது சந்தேகம் வந்த பிறகு, துணியில்லாத தன் மார் மீதும் அவன் கைகளை தொட்டியாக்கி கவ்வ வைத்து விட்டு, "இதுல தெரியுதா நான் யூத பெண்ணென்று" என்று கேட்கையில்...சங்கடமான சூழல்களில் இருந்தே மகத்தான கேள்விகள் பிறக்கின்றன என்பதை நம்ப முடிகிறது. வெற்று மார்புகளைக் கொண்டு எந்த இனம் என்று எப்படிக் கூறுவது. "இல்ல இதில தெரிகிறதா...?" என்று புட்டத்தை தடவ வைத்து கேட்டு விட்டு, யோனி காட்டுகையில் அவனாகவே நம்பி விடுகிறான். செம்பட்டை சாயம் காப்பாற்றி விடுகிறது. ஆம் அவள் யூதப் பெண் இல்லை என்று நம்பி அதன் பிறகு புணரத் தொடங்குகிறான். எத்தனை வன்மம் யூதர்கள் மீது...? அவர்கள் புணரக் கூட தகுதி இல்லாதவர்கள் என்று ஓர் இனத்தின் மீதிருக்கும் வெறுப்பை அவர்கள் மயிர் கொண்ட உடல்களின் தத்துவத்தில் எழுதி வைத்திருப்பது என்ன வகை சட்டமோ...அரசியலோ...?
 
மாற்றி மாற்றி கண்டுபிடித்து விடுகிறார்கள். புத்திசாலித்தனங்கள் விளையாடுகின்ன. யார் காட்டிக் கொடுக்கிறார்கள், யார் காப்பாற்றுகிறார்கள் என்று காட்சிக்கு காட்சி மாறிக் கொண்டேயிருக்கிறது நிஜமும் நிழலும். இவ்வுலகில் எந்த மனிதன் நல்ல மனிதன் அவன் எதுவரைக்கும் நல்ல மனிதன். எந்த மனிதன் கெட்டவன். அவன் எது வரைக்கும் கெட்டவனாக இருக்கின்றன என்று கணிக்க முடியாத சூழலில் அவள் தோழி அவளைத் தப்பிக்க வைத்து விடுகிறாள். உயர் மட்ட குழு எப்போதுமே போதைக்குள் தான் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது...இங்கும் அது தான் நிகழ்கிறது. 
 
ஒரு திருப்பத்தில் எல்லிஸ், துரோகி என்று அவள் குழுவால் தேடப்படுகிறாள். உளவாளிகள் வாழ்வு அப்படித்தான். நிமிடத்தில்.... ஒரு திருப்பத்தில்.... ஒரு வளைவில்... தன் தோற்றத்தை மாற்றி விடும்.... செய்யும் வேலை அப்படி. அதையும் தாண்டி அவள் தப்பித்துக் கொண்டே இருக்கிறாள். இறுதியில் கையில் கிடைக்கும் அந்த கருப்பு நோட்டில் (பிளாக் புக்) எல்லா உண்மைகளும் பொதிந்து இருக்கின்றன. து சரியான தீர்வை தந்து விட்டதாக படம் முடிகையில் படம் முடிவதில்லை....மாறாக படம் மீண்டும் அப்புள்ளியில் இருந்து தொடங்குவதாகவே எனக்குத் தோன்றியது.
 
ஒரு பெண்.. தானற்று திரிவதுதான் இப்படம். 
 
தனக்குள் இருக்கும் தானை தன் இருத்தலை, தன் விடுதலையை, எப்டியாது கண்டுபிடித்து பத்திரமாக மீட்டெடுத்து விட வேண்டும் என்பதுதான் கதையின் கரு. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த உலகம் அவளை உறிந்து எடுத்து சக்கையாக்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் அவள் தன் நம்பிக் கையை விடுவதில்லை. அவள் ஓடிக் கொண்டேயிருக்கிறாள். தடுமாற்றம் இல்லாத பளிச் ஓட்டம். வெள்ளை சாயலில் தேவதைதான் அவள். அந்த முகத்தில்தான் எத்தனை சோகம்...! அது தீராவே முடியாத தோட்டாக்களால் நொடிதோறும் மாய சல்லடையாக்கப் பட்டுக் கொண்டேயிருக்கிறது....மலர் பூக்கும் கனவோடு.
 
யூத பிணங்களிளெல்லாம் பண மரங்களும்.... காசு கிளைகளும்... நகை கிடங்குகளும் ஒளிந்திருக்கின்றன. அத்தனையும் கொள்ளை அடிக்கப்படுகிறது. து அவர்களின் வறுமைக்கும் வாழ்வுக்கும் சேர்த்து வைத்த எதிர்காலம். பொட்டென தெறித்த இனப் படுகொலையில் அத்தனையும் இல்லாமல் போகிறது. பிணக்குவியல்களில் மொய்க்கும் ஈக்களில் கூட வஞ்சமே ரீங்காரமிடுகின்ற.
 
வாழ்வின் விளிம்பு நிலை மனிதன் தன் வாழ்வை மீட்டெடுக்க வேறு வழியின்று ஆயுதம் தாங்க வேண்டியிருக்கிறது. அதன் பரப்புகள் நம்பிக்கையாலும் அவநம்பிக்கையாலும், துரோகத்தாலும் அடி உதைகளாலும், தோட்டாக்களாலும் குருதிகளாலும் கொடி நாட்டப் படுகின்றன. ரத்தங்கள் சிந்தியே புரட்சிகள் ஜெயிக்கின்றன  என்பதுதான் வரலாற்று உண்மை. இங்கும் முதுகில் லத்தியால் சராமாரியாக அடி வாங்கி சரிந்து கிடக்கையில் தலையில் கொட்டப்படும் மலங்கள் உலகம் முழுக்க இருக்கும் தீண்டாமையை நாற்றத்ததோடு கொட்டுகிறது. 
 
இந்த 'பிளாக் புக்' ஒரு இனத்தின் கருப்பு வாழ்வை பக்கம் பக்கமாய் கொண்டிருக்கிறது. படிக்க படிக்க துக்கம் போரிடுவதை இப்படி எழுதி கடந்து விடுகிறது காணும் கண்கள். யூதர்களின் சிகை அலங்காரம் எப்போதுமே வசீகரமானவை. அதிலும் பெண்கள் நேர்த்தியான அழகோடு இருப்பதாகவே நம்புகிறேன். அவர்களின் ஹீப்ரூ மொழியில் கூட வசீகரம் ததும்புவதாக நம்பும் வழியில்... யூதக் காடுகள் மனதுக்குள் விரிகின்றன. அங்கே ஹிட்லரை சுட்டு வீழ்த்திக் கொண்டே நகர்கிறார்கள் யூதர்கள். யூத ஹிட்ர்களும் இருக்கிறார்கள். கவனம்.
 
இதே போல விடுதலை பற்றிய இன்னொரு படமும் நினைவுக்கு வருகிறது.
 
சிறையில் இருந்து தப்பி செல்வது குறித்து யோசிக்கையில் அது விடுதலை வேண்டிய சுயம் வெளிப்படும் இடம். ஒரு மனிதனை அடித்து போட, அடக்கி வைக்க இன்னொரு மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அதுவும் எந்த குற்றமும் செய்யாத போது காலம் முழுக்க சிறைக்குள் இருப்பதை எப்படி பார்ப்பது..... ?
 
"பாப்பிலோன்" (1973-directed by Franklin J. Schaffner) என்ற படத்தின் கதையே இது தான். 
 
பாப்பிலோன் சிறைக்குள்ளிருந்து ஒவ்வொரு முறையும் தப்பிக்க முயற்சி செய்கிறான். சிறைக்குள் வந்து நண்பனான 'தேகா' உதவி செய்கிறான். மாட்டிக் கொள்ளும் போது ஆறு மாதம் இருட்டு அறை தனிமை என கொடுமைகள் பல அனுபவித்த போதும், உதவி செய்த தேகாவை பாப்பிலோன் காட்டிக் கொடுப்பதில்லை. காலங்கள் ஓடுகிறது... அடுத்த முறையும் மாட்டிக் கொள்கிறான். என்ன செய்தாலும்.. எப்படியும் மாட்டிக் கொண்டு மீண்டும் மீண்டும் வேறு வேறு கால கட்டங்களில் இருவரும் சந்திக்கும் வாய்ப்பை சிறையும் இந்த வாழ்வின் வரையறையும் செய்து கொண்டேயிருக்கிறது. சிறை அவர்களை தீரா துயரமென அடை காத்துக் கொண்டிருக்கிறது.
 
இறுதியில் தனித்த பேய்த் தீவில் இருந்து தேங்காய் மட்டைகளை கட்டிய சாக்கு மூட்டை மேல் படுத்துக் கொண்டே கடலில் இரண்டு நாள் பயணித்தால் தப்பி விடலாம் என்று யோசனை கூறுகிறான் பாப்பிலோன். பாப்பிலோன் பைத்தியக்காரத்தனமாக இப்படித்தான் எதையாவது செய்து கொண்டே இருப்பான் எனும் தொனியில் சரி என்று பாதி பைத்தியக்கார மன நிலையில் இருக்கும் தேகா கூறினாலும், வாழ்வின் முன்பு கண்ட தோல்விகள் அதன் மூலம் கிடைத்த அடி உதைகள், அவமானங்கள்... அதிகமாக்கப்பட்ட சிறை தண்டனை காலங்கள்.... அதையெல்லாம் தாண்டி.... இனி இங்கேயே இருந்து விடலாம் என்ற ஒப்புக்கொடுத்தல்,அதிகார வர்க்கத்தை ஆழ்மனம் ஏற்றுக் கொள்ளுதல்  போன்றவற்றின் நீட்சியாக கடைசி நிமிடத்தில், " நானும் வரல நீயும் போக வேண்டாம்... போனா நீ செத்துடுவ.......இப்போது நீ செய்ய இருப்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல" என்று சொல்லி பாவமாக பார்க்கிறான். நண்பனை ஆசையாய் ஆதரவாய் தழுவி விடை பெற்றுக் கொண்டு அந்த உயர்ந்த மலையில் இருந்து கடலுக்குள் எட்டிக் குதிக்கிறான் பாப்பிலோன்.
 
'பாப்பிலோன் மிச்ச வாழ்க்கையை விடுதலையோடு சுதந்திரமாக வாழ்ந்தான்' என்று படத்தை நரேட் செய்பவர் கூறுகிறார். படம் முடிகிறது. எங்கோ தூரத்தில் தனித்த தீவுக்குள் மாட்டிக் கொண்ட நிலையில்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன். விடுதலை என்பது மனதுக்குள் உணர்வது...மனத்தால் உணர்வது. அதை உணராத போது தப்பித்துக் கொள்ள ஆசைப்பட்டுக் கொண்டேதான் இருக்கும் உயிர். ஆம் உயிர் என்பதே விடுதலையின் வித்தென முளைத்தது தான்.
 
ஒரு கதாபாத்திரத்துக்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியமா அந்த அளவுக்கு நியாயம் செய்யும் 'பிளாக் புக்' கதையின் நாயகி... கதையின் கருவை சுமக்கும் யூத வானவில். 
 
பாப்பிலோன் கூட தேவதூதன்தான்... விடுதலைக்கு ஏங்கும் யாக தூதன்.  
 
Film: Black Book
Director : Paul Verhoeven
Year : 2006
Language : Dutch, German, English, Hebrew
- கவிஜி
Pin It