இந்திய அரசியல் சட்டம் தனது குடிமக்களுக்குச் சில அடிப்படை உரிமைகளை வரையறுத்து உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் இந்தியா, தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் நடந்த போராட்டங்களில் விளைவு ஆகும். ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும் ஆட்சியாளர்கள் அவர்களுக்கு உகந்த இந்த அரசியலமைப்புச் சட்ட விதிகளைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தத் தயார் இல்லை. அதை வெவ்வேறு வழிமுறைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் முடக்குகின்றனர்.

இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து 63 ஆண்டுகள் ஆகியும் மக்களின் மிகவும் அடிப்படைத் தேவைகளான‌ கல்வி, வேலை, இருப்பிடம், உணவு, குடிதண்ணீர், சுகாதாரம் போன்றவை போதுமான அளவிற்கு வழங்கப்படவில்லை. இது வல்லரசு நாடாம்.

இதற்கு மாற்றாக, மக்களுக்கான நலனை முழுமையாகக் கருத்தில் கொண்டு மாற்று அரசியலைப் பல அமைப்புகள் முன் வைக்கின்றன. மாற்று அரசியலை எதிர்கொண்டு, மக்களின் வாழ்வாதாரமான கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் ஒருபோதும் முன் வருவதில்லை. ஆனால் அதற்காகப் போராடுபவர்களைக் கொடுமையாக ஒடுக்குவதற்கு தடா, பொடா, தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புக்காவல் சட்டம் போன்ற கறுப்புச் சட்டங்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதும் அவர்களுக்கான மாற்று அரசியல் தீர்வுகளை முன் வைத்து மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீதும், குறிப்பாக சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மீதும் கடுமையாகப் பாய்கிறது.

சில மாதங்களுக்கு முன் மக்கள் சனநாயக குடியரசு கட்சியைச் சேர்ந்த ராகினி அவர்களை பொடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தற்போது காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது என்று போராடிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியையும் அந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் பலரையும், புலிகள் காப்பகச் சட்டம் பழங்குடி மக்களுக்கு எதிரானது என்று போராடிய மேற்குத் தொடர்ச்சி மலை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மனுவேல் என்பவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக போலிஸ் துறை கைது செய்துள்ளது. மேலும் பல்வேறு ஜனநாயகவாதிகள் மேற்கண்ட கறுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைப்பட்டனர். நெடுமாறன், வைகோ. வன்னியரசு, சீமான் போன்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பு இருந்த பிரிட்டிஸ் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், பின்பு இருக்கும் சுதந்திர இந்திய ஆட்சி முறைக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த கறுப்புச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியச் சட்டம் மற்றும் ஜனநாயக ஆட்சி முறை போன்றவைகளுக்கு எதிரானது.

மேலும் அனைத்து நீதிமன்றங்களும் இது போன்ற கொடிய, ஜனநாயக விரோத, வாழ்வுரிமைக்கு எதிரான கறுப்புச் சட்டங்களுக்கு ஆட்சியாளர்களுடன் சேர்ந்து கைகோர்த்துத் துணை புரிகின்றன. நம்புவோம் நீதிமன்றங்கள் தன்னிச்சையானது; சுதந்திமானது; ஜனநாயகக் குடியரசைப் பாதுகாப்பது……..!!!

வாருங்கள் நண்பர்களே!

கறுப்புச் சட்டங்களை எதிர்ப்போம்….

ஜனநாயகம் காப்போம்……

சட்ட வல்லுநர்களும், கறுப்பு சட்டங்களை எதிர்கொண்டவர்களும் உரையாற்றுகிறார்கள்...

அனைவரும் வருக!! ஆதரவு தருக!!

இடம்: ஓட்டல் அக்‌ஷயா,
சாமியார் மடம் பேருந்து நிறுத்தம், (17D, 37D,)
டாக்டர் அம்பேத்கார் ரோடு, அசோக் பில்லர் சாலை
கோடம்பாக்கம், சென்னை 600 024

நாள்:14-12-2013 சனிக்கிழமை, நேரம் : மாலை 5.00 -8.30

தலைமை 

வழக்கறிஞர் நடராசன் (மக்கள் வழக்குரைஞர் கழகம்)

உரையாற்றுவோர்:

வழக்கறிஞர் சங்கரசுப்பு
வழக்கறிஞர் விஜயக்குமார்
பேராசிரியர் அ.மார்க்ஸ்
வழக்கறிஞர் சுப.மனோகரன்
வழக்கறிஞர் மரிய ஜான்சன்
தோழர் பொழிலன், தமிழ்தேச மக்கள் கட்சி (தேசிய பாதுகாப்பு சட்டம்)
தோழர் பாலன் இ.க. க (மா-லெ) (மக்கள் விடுதலை)(பொடா)
உயர்திரு அப்துல் ரஹீம், இந்திய முஸ்லீம் லீக் (தடா)
வழக்கறிஞர் கார்க்கிவேலன், (மக்கள் வழக்குரைஞர் கழகம்)
வழக்கறிஞர் கார்த்திகேயன், (மக்கள் வழக்குரைஞர் கழகம்)

- மக்கள் வழக்குரைஞர் கழகம்

தொடர்புக்கு: சுப.மனோகரன், வழக்குரைஞர் , நெ.138, தம்பு செட்டி தெரு, சென்னை 
செல் 9940176599 , 9840855078

Pin It