எவருமறியாமல் நீயும் நானும்
சந்தித்த சுவடுகளை
எவருமறியாமலே
அழித்துச் சென்றிருந்தது
நள்ளிரவு மழை
முளைக்கத் தொடங்கி விட்டன
சொற்கள்
அவைகள் காட்டிக் கொடுக்கக் கூடும்
மகரந்தம் மாறா நம்
மரபணுக் காதலை,
இளம்பச்சையாய் துளிர்விடும்
நேசமூறிய நெகிழ் நிலங்களை...
இனி திணைகள் எங்கும் ரீங்காரத் திருவிழா

- சதீஷ் குமரன்