தீராத தாகத்தின்
தவிப்புகளில் ஊற்றெடுக்கிறது
வாழ்க்கையின் வேட்கை
ஓடை புரண்டுவந்து
நினைத்த பாதங்கள் உலர்ந்து
அலைகின்றன வெப்ப நிலங்களில்
கழனிகளில் துள்ளிய
ஆரல் மீன்களைக் கொத்திய
கொக்குகள்
வெண்மேகங்களாகித் திரிகின்றன
ஈரப்பதமற்ற காற்றின் திசைகளில்
கானல் மிதக்கும் தெருக்களில்
வாய்பிளந்து கிடக்கின்றன
நகரத்து குடங்கள்
வரப்போகும் தண்ணீர் லாரிக்காய்
மரம் வெட்டியும்
நிலம் உறிஞ்சியும் முடித்த
வாழ்க்கைக் குடங்கள்
நிரம்புகின்றன கண்ணீர்த் துளிகளால்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நரசிம்மராவ் அரசின் EWS இட ஒதுக்கீடு ஆணையின் வரலாறு
- தூக்கு தண்டனையை நிறைவேற்ற மாற்று முறை காண்பதா மாண்பு?
- “தத்துவ ஞானிகள் தன்மை குன்றார்”
- அதிகரிக்கும் வானவில் நாட்கள்
- சாதியத்துக்கு எதிரான போராட்டத்தில் அம்பேத்கர், காந்தி முரண்
- அரசியல் அரிச்சந்திரன்
- பார்ப்பனர்களின் தேசியம்
- திராவிட மாடல் ஆட்சியா? சாராய மாடல் ஆட்சியா?
- நீதிமன்றங்களிலும் புதைபடும் சமூகநீதி
- தமிழ் ஒரு சூழலியல் மொழி
- விவரங்கள்
- யாழன் ஆதி
- பிரிவு: தலித் முரசு - ஆகஸ்ட் 2005