மீந்துபோன இட்லிகளை
துண்டுகளாக்கி
கொல்லைப் புறச்சுவரில்
பரிமாறுகிறேன்

நம்பிக்கையற்ற காக்கைகள்
என் தலைமறைவுக்குப் பின்
உண்ணத் தொடங்குகின்றன

நாள் தவறாமல்
உணவு வைத்ததில்
இப்போதெல்லாம்
என்னோடு பேசியபடி
உண்கின்றன

மகளின் திருமணத்திற்கு
பிறகும்
நம்பிக்கை இல்லாமல்
கண்காணித்துக் கொண்டிருக்கிறது
தாலிக்கயிறு!

- சி.ஆர். மஞ்சுளா

Pin It