இருந்து தொலை
வேறு வழி இல்லை
மறந்து தொலைக்கிறேன் என்னை
*
ஆயுட்கால இலையுதிர் காலத்தை
அனுமதிக்கிறேன்
அது உன்னையும் சேர்த்தே உதிர்க்கிறது
*
காக்கைக்குத் தெரிகிறது
உன் பாதம் பட்ட இடத்தில் எல்லாம்
தாகம் தீர்க்கலாம் என்று
*
நீ நடைப் பயிற்சி செய்கிறாய்
கரை தொடும் அலையெல்லாம்
நடனப் பயிற்சி செய்கிறது
*
சீக்கிரம் என் தவம் களை
அது தான் வரமென்று
எல்லாரிடமும் சொல்ல வேண்டும்
*
மஞ்சள் பூசி அமர்ந்திருக்கிறாய்
மற்ற வண்ணங்கள்
உன்னைப் பூசி அமர்ந்திருக்கின்றன
*
மறுபிறவியிலும்
உன்னைத்தான் தேடுவேன்
மடாலயக் காதலுக்கு மாற்றி யோசிக்கத் தெரியாது
*
- கவிஜி