குற்றம் வைத்திருப்பவர்களின் ராஜ்ஜியம் இது.

பிறந்து மடியும் வரை எல்லோரும் குற்றங்களை சுமக்கிறார்கள்.

வலியானால் இன்னொர்வர் தலையில் ஏற்றி விட்டுவிடுவார்கள்

அப்படியே சூதுக்களை வென்றவர்களும் எங்கள் இராஜ்ஜியத்தவர்களே.

நாங்கள் காலத்துள் அடிமைபட்ட பழைய பழக்கவாதிகள்.

அப்போது புண்பட்டாலும் பண்பட்டு மீட்டவர்களால்

கூட குற்ற சுமப்பவர்களை திருத்த முடிய வில்லை.

வேண்டாக் கனியிலிருந்து விடுப்பட்ட குற்றம்

மிகுந்து ஆறாம் அறிவின் கண்களை

எங்கள் எல்லோர்க்கும் எரித்து விட்டது.

நாங்கள் குற்றங்களைத் தேடுவது போலவே

இறக்கி வைக்க தலைகளையும் தேடுவோம்.

இதில் திறமையானவர்களுக்கு தேர்தலிங்குண்டு

வென்றவர்களில் யாருக்கேனும், எமக்கு சித்தமுண்டு நீ சுத்தமாகு

என தெளிவு தர யாருமில்லை.

இரத்தமோ, கண்ணீரோ, ஊதா மையோ, லஞ்ச மதுவோ

எங்கள் விரல்களில் குற்ற வடிவாய் திரவமெந்திதான் பழக்கம்

குற்றஞ்சுமக்கவைத்தவர்களுக்கு எதிராக அது

ஒரு நாளும் திடமானதொரு பொருளைத் தொடாது…

Pin It