1) கடந்த ஆண்டு (2022) ஏலம் விடப்பட்ட 5 ஜி அலைக்கற்றை 4 இலட்சத்து 30 ஆயிரம் கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 1 இலட்சத்தி 50 ஆயிரம் என மிக குறைந்த விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. 2010 ஆம் ஆண்டு 2 ஜி ஏலத்தில் 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறினார்கள். ஆனால் 5 ஜி ஏலத்தில் கிடைத்ததே 1.50 இலட்சம் கோடி தான்.

2) ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் 40000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. மோடி அரசு 36 விமானங்களுக்கு 66,650 கோடி என விலையாக நிர்ணயித்தது. ஆனால் இதே 42 விமானங்களை 66,000 கோடிக்கு இந்தோனேசியா அரசு 2022 ஆம் ஆண்டு வாங்கியுள்ளது. 2007 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் 126 விமானங்கள் 55,000 கோடிக்கு செய்து தர ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

3) கடந்த 2020 கொரானா காலத்தில் மருத்துவ அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் எடியூரப்பா அரசு சுமார் 2200 கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளது. மருத்துவ உபகரணங்களை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது என்று காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

4) 2016 மற்றும் 2017- ஆம் ஆண்டுக்கான சத்தீஷ்கர் மாநில பட்ஜெட் நிதி 80,200 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படவே இல்லை. இதை கண்டுபிடித்த பொதுக்கணக்கு தணிக்கைத்துறை அரசாங்கம் பொதுமக்கள் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியாக கண்டித்தது.

5) 2016-இல் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் ஏக்நாத் காட்சே, தனது மனைவி பெயரிலும் மருமகன் பெயரிலும் மஹாராஷ்டிராவின் போஷாரி பகுதியில் சட்ட விரோதமான முறையில் நிலத்தை வாங்கியிருக்கிறார். அந்த நிலம் மஹாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டு நிறுனத்துக்கு சொந்தமானது. அன்றைய மார்கெட் விலை ரூ.40 கோடி என்று இருக்கும்போது வெறும் ரூ.3.75 கோடிக்கு இந்த நிலத்தை சட்ட விரோதமாக வாங்கியிருக்கிறார். அதை இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அறிக்கையாக பதிவு செய்திருக்கிறார்கள்.

6) 2017 பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, அமித் ஷா இயக்குனராக இருந்த, அஹமதாபாத் கூட்டுறவு வங்கியில் 5 நாட்களுக்குள் ரூ745.59 கோடி அளவிற்கு பணம் போடப்பட்டது. இதனால் பண மதிப்பிழப்பு விவகாரம் பாஜகவினருக்கு முன்கூட்டியே தெரிந்திருப்பதாக குற்றச் சாடட்டுக்கள் எழுந்தன.

7) பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத் மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் 3118.51 கோடி சேமிப்பாக வைக்கப்பட்டது. மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் மொத்தமாக 14293.71 கோடி கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பாக போடப்பட்டது. இது பாஜக தனது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற கொண்டு வரப்பட்ட திட்டமாகவே பார்க்கப்பட்டது.

8) 2017 இல், விஐபி-கள் பயணிக்கும் விமானம் வாங்கியதில் 30 சதவீத கமிஷன் அதாவது 1.57 மில்லியன் டாலர் பணம் கொடுக்கப்பட்டதாக, சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் மற்றும் அவரது மகன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அரசுக்கு 65 கோடி இழப்பீடு ஏற்ப்பட்டது.

9) சத்திஸ்கர் மாநிலத்தில் ராமன் சிங் (பா.ஜ.க.) தலைமையிலான அரசின் கீழ் ஏப்ரல் 2016 - மார்ச் 2017 வரை மட்டும், 74 கம்ப்யூட்டர்களை உபயோகித்து அரசின் 17 துறைகளுக்கு 1971 டெண்டர்களுக்கான 477 மனுக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இதில் அரசு விதிகளை மீறியிருக்கிறது, 15.44 கோடிக்கான ஐந்து டெண்டர்கள் தகுதியில்லாத நபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டது.

10) இராஜஸ்தானில் உள்ள பா.ஜ.க.வை சேர்ந்த வசுந்தரா ராஜே அரசு ஆகஸ்ட் 2014ஆம் ஆண்டு 17000 அரசு பள்ளிகளை ஒரேயடியாக மூடியது. இதனால் அதிகளவில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகமானது.

11) 2014-2015 இல் வருடத்திற்கு வெறும் 50,000 இலாபம் பெற்ற ஜெய்ஷாவின் நிறுவனம், மோடி ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடத்திற்குப் பிறகு ஜெய்ஷாவின் நிறுவனம் 2015-16ஆம் ஆண்டில் 80 கோடிக்கு மேல் இலாபம், பெறும் நிறுவனமாக வளர்ந்தது.

12) மோடி பதவியேற்ற 2014 இல் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜ்ஜு, 600 மெகா வாட் ஹைட்ரோ மின் திட்டம் கொண்ட இரண்டு அணைகளை கட்டுவதில் 450 கோடி ஊழல் நடைபெற்றது. ஊழல் செய்த நிறுவனம் கிரண் ரீஜ்ஜூவின் உறவினர். இதற்கு கிரண் ரிஜ்ஜு உதவியுள்ளார்.

- மனோஜ்

Pin It