ஊதிப் பெருத்த உடலுடன்
முகச் சதை தொங்க
அடவியில் புகும்
வினோதக் கிழட்டு மிருகம்
நாவை கூர்மையாய் குவித்து
இலைகளின் பச்சையங்களை உறிஞ்சுகிறது.
மரங்களின் பழுப்பு நிறம்
மெல்ல இலைகளைக் கவ்வுகிறது.
புணர்வுப் பித்து தலைக்கேறிய
சூரியனின் அழுத்தமான இதழ் பதிப்பில்
பற்றி எரிகிறது உணர்ச்சி மிகுந்த அடவி.

***

முதல்முறையாகக்
கொலை செய்பவனின் நடுங்கும் கைகள்
ஏதேனும் ஒரு நாளின்
ஏதேனும் ஓர் கணத்தில்
எனதாய் மாறும்.

Pin It