அவரவர் வாழ்வு அவரவர் வாழிய
அவனியில் ஊண்கொடை பெரும்அறம் என்று
வயிற்றுப் பசிக்கு உணவளிப் போரே
உயிரினும் மேலாம் மானம் காக்க
அனைவர்க்கும் வேலை அளித்திடும் அரசை
முனைந்து அமைக்கும் அறிவையும் உணர்வையும்
வளர்ப்பதே அறவோர் கடனென அறிவீர்

(அவரவர் வாழ்வை அவரவர் வாழட்டும். இவ்வுலகில் அன்ன தானம் பெரிய அறம் என்று வயிற்றுப் பசிக்கு உணவளிப்போரே! உயிரினும் மேலான மானத்தைக் காக்க அனைவர்க்கும் வேலை அளிப்பதே (அன்ன தானத்தை விடச்) சிறந்த அறமாகும். அப்படி அனைவருக்கும் வேலை அளிக்கக் கூடிய (சோஷலிச) அரசை அமைக்க வேண்டும் என்ற அறிவையும் உணர்வையும் (மக்களிடம்) வளர்ப்பதே அறவோர்களின் கடமை என்று அறிந்து கொள்ளுங்கள்)

- இராமியா

Pin It