ஒரு நீள் அசௌகரியங்களுக்குப் பின்னால்
திறக்கப்பட்டிருந்த வாயிற் கதவு வழியாய்
ஓசையின்றி கசிந்து செல்கிறது
சிறைப்பட்டிருந்த காற்றொன்று
புழுதியடைந்திருந்த நிலைக் கண்ணாடி வழியான
என் பிரசன்னம்
ஒரு பேய்க்கதையில் படித்த
அகோரியை ஒத்திருந்தது
நான் பிரமையுற்றுக் கிடந்த
சில மௌனக் கூப்பாட்டுகளுக்கு நடுவே
பாத்திரங்களிலிருந்து பதறிச் சென்ற
பூனையின் பரபரப்பில்
பதைத்துக் கொண்டது மனம்
சுவரெங்கும் படர்ந்திருந்த
சுண்ணாம்புத் திட்டுக்களினூடாய்
வெவ்வேறான உருவங்களுடைத்த பிசாசுகளின்
அகோர வதனங்கள் பல்லிளித்துக் கிடந்தன
திடுமென கீழே விழந்த
என் ராட்சத நிழலின் வாயிலாய்
அனைத்து ஜந்துக்களுக்கும்
ஒரு ராட்சதனாகி விட்டிருந்தேன் நான்
சில கணங்கள் வரை.
கீற்றில் தேட...
விடுமுறைக்குப் பின்னாலான வீடு
- விவரங்கள்
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
- பிரிவு: கவிதைகள்
More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
- ஜெயகாந்தன் (16 செப் 2017)
- தண்ணீர் (30 ஆக 2017)
- விமானம் (22 ஆக 2017)
- வெளிநாட்டு அப்பன் (08 ஆக 2017)
- இயற்பெயர் (27 ஜூலை 2017)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.