கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

   இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் எதை செய்தாவது தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மெனக்கெடுகின்றார்கள். பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றி தன்னுடைய அல்லக்கைகளை வைத்து விளம்பரம் செய்ய வைப்பது, ஊர் பூராவும் கட்அவுட்டர்களை வைப்பது, ஒரு இடம் பாக்கியில்லாமல் போஸ்டர்கள் ஒட்டுவது என்று தன்னுடைய சக்திக்கு ஏற்றவாறு விளம்பரம் தேடிக் கொள்கின்றார்கள். ஆனால் இன்னும் சில பேர் தன்னுடைய நாற வாயைப் பயன்படுத்தியே அரசியல் களத்தில் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்கின்றார்கள். அவர்களில் முதன்மையானவர் அரசியல் தரகன் சு.சாமி. அடுத்து பார்ப்பன கருங்காலி எச்.ராஜா.

 h raja 244சு.சாமி எப்படி தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ள அவ்வபோது எதையாவது சொல்லி ஒட்டுமொத்த ஊடகங்களும் அவரைப் பற்றியே பேச வைக்க முயற்சிக்கின்றாரோ அதே போல இந்த எச்.ராஜாவுக்கும் அவ்வபோது எதையாவது வாய்க்கொழுப்பாக பேசி தன்னைப் பற்றியே அனைவரையும் பேச வைப்பதென்றால் அலாதி ஆர்வம். இவன் பேசிய பல வீடியோக்கள் சாட்சியங்களாக யூடியுப்பில் இருக்கின்றன. கிருஸ்தவர்களைப் பற்றியும், முஸ்லீம்களைப் பற்றியும், பெரியாரியக்கத் தோழர்களைப் பற்றியும், கம்யூனிஸ்ட் தோழர்களைப் பற்றியும் நஞ்சைக் கக்கும் விஷமப் பிரச்சாரங்களைத் திட்டமிட்டே இந்தக் கருங்காலி தமிழகம் முழுவதும் பரப்பி வருகின்றான்.

 பல ஆதாரங்கள் இவனுக்கு எதிராக இருந்தும் சாதிவெறியர்களுக்கும், மதவெறியர்களுக்கும் ஜால்ரா அடிக்கும் தமிழக காவல்துறை இந்த நாயை கைது செய்யாமல் இன்னும் சுதந்திரமாக பேசித் திரிவதற்கு அனுமதித்து இருக்கின்றது. அந்த தைரியத்தில் தான் இவன் தொடர்ச்சியாக வெறிபிடித்த நாயாக குரைத்துக் கொண்டு இருக்கின்றான். முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து வருவதால் தேர்வுகளில் காப்பி மற்றும் பிட் அடிக்கின்றார்கள் என்றான். முஸ்லீம்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்றான். மோடியைப் பற்றியும், ராஜ்நாத் சிங்கைப் பற்றியும் பேசிவிட்டு வைகோ பத்திரமாக ஊர் திரும்ப முடியாது என்று சவால் விட்டான். தனி ஈழம் எல்லாம் கிடைக்காது என்றும், ராஜபக்சேவை வரவேற்பதில் தவறில்லை என்றும் பேசினான். இப்படி எல்லாம் பேசியபோதே இந்த நாயின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது டி. ராஜா அவர்களின் மகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பேசியிருக்க மாட்டான்.

  ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் மாணவர்கள் கோசம் போட்டார்கள் என்று வெளியான வீடியோ பதிவுகள் போலியானவை என நிரூபிக்கப்பட்டிருந்த போதிலும் எச்.ராஜா போன்ற இந்துத்துவப் பொறுக்கிகள் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப அந்தப் பொய்யையே சொல்லி அதை உண்மையாக மாற்றப் பார்க்கின்றார்கள். இது போன்றவர்களுக்கு ஆதரவாக பார்ப்பன பாசிசத்தின் ஊதுகுழலாக செயல்படும் ஜீ டீவி போன்றவை தொடர்ச்சியாக இடதுசாரிகளுக்கு எதிராக கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்துகொண்டு இருக்கின்றன.

 இந்தப் பார்ப்பன பாசிஸ்ட்டுகளின் ஒரே நோக்கம் தன்னுடைய சித்தாந்த மேலாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் இடதுசாரி அரசியலையே இல்லாமல் ஒழிக்கச் செய்ய வேண்டும் என்பதுவே. கடுமையான பொருளாதார நெருக்கடியால், வேலைவாய்ப்பு இழப்புகளும், விலைவாசி உயர்வும் அதிகமாகி வரும் இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் இடதுசாரி சித்தாந்தத்தை நோக்கி இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வலதுசாரி அரசியல் என்பது ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கே எதிரான கொள்ளைக்கூட்டத்தின் ஆதரவு பெற்ற அரசியல் என்பதை மாணவர்களும் இளைஞர்களும் தங்களுடைய நடைமுறை மூலம் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் தான் பார்ப்பன இந்துமதவெறி கூட்டமும் அவர்களின் ஊதுகுழலான பார்ப்பன ஊடகங்களும், தங்களால் முடிந்த அனைத்துச் சதி வேலைகளிலும் ஈடுபடுகின்றன.

  எச். ராஜா போன்ற பார்ப்பன ரவுடிகள் இது போன்று பேசுவதற்குத் தைரியத்தையும் உத்வேகத்தையும் கொடுப்பது அவர்கள் சார்ந்து இயங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே ஆகும். தமிழ்நாட்டில் டி.ராஜாவின் மகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பேசிய அதே பார்ப்பனத் திமிர்தான், டெல்லியில் உமர் காலித்தின் சகோதரியை வன்புணர்ச்சி செய்வோம் என்றும், முகத்தில் அமிலத்தை வீசுவோம் என்றும் மிரட்டி இருக்கின்றது. தனக்கு எதிரான கருத்துகளை நசுக்க இந்த பாரத மாதாவின் புதல்வர்கள் முதலில் எடுக்கும் ஆயுதம் பெண்களுக்கு எதிரானதுதான். குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தின் போதும், ஒரிசாவில் கந்தமாலில் கிருஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தின் போதும் பார்ப்பன பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு முதலில் இலக்கானது பெண்கள் தான் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

 டி.ராஜாவின் மகள் தேசத்துக்கு எதிராக கோசம் போட்டார்; எனவே அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும், சீதாராம் யெச்சூரியை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்றும் சொல்கின்றானே இந்த மானங்கேட்ட பயல் எச். ராஜா, இந்தியா என்ன இவனின் அப்பன் வீட்டு சொத்தா? மாட்டுக்கறி தின்றால் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என்றும், ராமனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எல்லாம் விபச்சார விடுதியில் பிறந்தவர்கள் என்றும் சொல்லும் இவனுடைய கட்சியைச் சேர்ந்த பார்ப்பன பொறுக்கிகளையும், அவர்களை நக்கிப் பிழைக்கும் மேல்சாதி மானங்கெட்ட பயல்களையும் சுட்டுக் கொல்வதா இல்லை இந்தியாவில் இருந்து செருப்பாலேயே அடித்து மனிதர்களே இல்லாத தேசத்துக்கு துரத்துவதா என்பதை இந்தப் புறம்போக்குத்தான் சொல்ல வேண்டும்.

 ஏதோ இவனைப் போன்ற பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு மட்டும் தான் தேசபக்தி இருப்பது போன்றும், அம்பேத்கர், பெரியார், மார்க்சிய கொள்கைகளைக் கடைபிடிப்பவர்களுக்கெல்லாம் தேசபக்தியே கிடையாது என்பது போன்றும்  இந்த பொறுக்கி பேசுகின்றான். நாட்டை பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய தரகு முதலாளிகளுக்கும்  கூட்டிக் கொடுக்கும் போது இவனைப்போன்ற மாமா பயல்களுக்கு முகமெல்லாம் பல்லாய் இருக்கும். அதுவே இவனுக்கும், இவனைப் போன்றவர்களுக்கும் தேசபக்தி. ஆனால் நம்மைப் போன்ற சுயமரியாதை பாரம்பரியத்தில் வந்த அனைவருக்கும் அது ஒரு கீழ்த்தரமான செயலாகும்.

   இவனைப் போன்ற பொறுக்கிகளைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் விடமாட்டேன் என்று சொல்வதும், அவர்களது முன்னேற்றத்தைப் பொருக்காமல் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்வதும், அவர்கள் மாட்டுக்கறியைத் தின்றால் அடித்து கொல்வதும், இஸ்லாமிய மற்றும் கிருஸ்தவர்கள் மீது பார்ப்பன நஞ்சைக் கக்குவதும், இதற்கெல்லாம் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மேல்சாதி இந்துக்களை நக்கிப் பிழைப்பதுமே தேசபக்தி. ஆனால் நம்மைப் போன்றவற்களுக்கு இதுவெல்லாம் வேசித்தனமான செயல்கள்.

 அதனால் நம்மைப் போன்றவர்களின் தேசபக்தியைக் கேள்விக்குள்ளாக்கும் எந்த யோக்கியதையும் இவனுக்கு மட்டும் அல்ல, இவன் பரம்பரைக்கே கிடையாது. இவன் அடங்காமல் திரும்ப திரும்ப இப்படியே பேசிக் கொண்டு இருந்தான் என்றால் இவனுக்கும் இவனை ஏவிவிட்ட ஆர்.எஸ்.எஸ் காலிகளுக்கும் சரியான பாடம் தமிழ்நாட்டு மக்களால் புகட்டப்படும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

- செ.கார்கி