பேருந்துகளால் கைவிடப்பட்ட
பயணியர் நிழற்குடை ஒன்றின் கீழ்
அவளைக் காண்கிறேன்
நான்காவது நாளில்...
நீர் விளிம்பிட்ட கண்களில்
எதிர்பார்ப்பும் ஏக்கமும்...
நிறைந்திருந்த அவநம்பிக்கைகளுக்கிடையே
துளி நம்பிக்கை மொட்டு கண்கள்...
இரு சக்கர வாகனத் தேடல்
தொடங்கிவிடுகிறது தூரத்திலேயே
அவள் செவி வழியே...
கடந்து சென்ற வாகனப் புகையில்
கரைகிறது எதிர்பார்ப்பூக்கள்...
உறுதியான நேசக் கூற்றொன்றுக்கு
இரையாகி இருக்கலாம்
அவளின் திண்மை...
பருந்தொன்றின் தேகப் பசிக்கு
இரையாயிருக்குமோ பெண்மை...
சூழல் மறந்த தேடல் அவளிடம்...
தேடல் தராத விலாசங்கள்
விடை தேடி அவள் காலடியில்...
ஆதாரம் அறிந்திருந்தால்
பதில்கள் அனுப்பியிருப்பேன் காலடிக்கு
விதையும் தெரியாது
விளைவுகளும் அறியாது
நாளைய விடியலில்
கண்ணில் படக் கூடாது
என்ற வேண்டுதல் மட்டும்
என் வசம்...
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
தேடல் தராத விலாசங்கள்
- விவரங்கள்
- பத்மாகிரஹம்
- பிரிவு: கவிதைகள்
More articles by பத்மாகிரஹம்
- எனை தயாரிக்கிறேன் (18 டிச 2014)
- சுழலும் பிரபஞ்சம் (20 நவ 2014)
- உயிரின் வேர்கள் (13 நவ 2014)
- முதல் முத்தம் (06 நவ 2014)
- அநிருத்தன் கை குழல் (28 அக் 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.