கீற்றில் தேட...

love failure 300யாரோ போல் என்னைப் பார்த்த நொடியில்
அறுந்துவிழுந்தது
உயிர் நரம்பின் வீணைத் தந்தி

மெளனம்
பெரும் மெளனம்
ஆட்டிவைக்கின்ற நம்மிடம்
அபத்த தாளங்கள் அரங்கேறிக்கொண்டிருக்க
கவனிப்பின் வாசலில்
யார் யாரோ பார்வையாளர்கள்

வழக்கம் போல்
நீயே மீட்டுகின்றாய்
இசைக்குறிப்புகள் பற்றிய பிரக்ஞையற்று

மீட்டலின் லாகவம் வாய்த்துவிட்ட
கரங்களுக்கு
அறுந்துவிட்ட கம்பி
வெட்டப்பட்ட கைநரம்பு

பிழைத்தலில் பிறந்திடும்
இசைக்குள்
சுருள் சுருளாய் ரத்தவாடை

- ரேவா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.