கீற்றில் தேட...

people 243ஆதவனும் நுழைய அஞ்சும்
ஆளரவமற்ற அடர்ந்த காடு
மனித சஞ்சாரம் மருட்டுவதாய்
காற்றோடு ஒரு சேதி
செவி வழி செய்தி மீது அவரவர்
தன்மைக்கேற்ற தீர்மானங்கள் சில
ஊரைக் கொள்ளையிடும்
கொள்ளைக் கும்பலென சிலர்
திருமகள் பெட்டகத்திற்குள்
அடைக்கப்பட்டாள்
நாட்டை சீரழிக்கும்
தீவிரவாதமென சிலர்
ரத்தம் குடிக்க பூமாதேவி
தயாரானாள்
ஊர் விட்டு வந்து ஆதரவு நாடும்
ஜோடிக் கிளிகள் என்க
மருதாணி மணத்துடன்
மல்லிகை பூக்கின்றது
அச்சமூட்டும் பூச்சாண்டி ஆகையில்
போராடும் குழந்தையும்
பூவிதழ் திறக்கிறது
அவரவர் தீர்மானம்
அவரவர் எண்ணங்களின் மீது
சீந்துவதற்கு ஆளின்றி
சிதறிக் கிடக்கும் சருகுகளை
சுழல வைக்கிறது சூறைக்காற்று
வனத்தினுள்

- பத்மாகிரஹ‌ம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.