.............................................................................................................................................................
1.மறந்து விடாதே எனச்சொல்லி
டிக்கெட்டின் பின்புறம்
நீ குறித்து தந்த உன் தசமப் பெயர்.

2.இரவு முழுவதும் இலவச அழைப்பு
தூங்காமல் இருந்த
இருந்த இரவுகள்

3. பிறர் எண்ணிலிருந்து குரல்மாற்றி
வம்பிழுத்தாய். நம்பிவிட்டேன்.
நீ மட்டுமே எண்ணை அறிவாய்.

4. ஒரு முறை ஒலித்து விட்டு
நிறுத்தினால் என்ன அர்த்தம்..?
மிஸ்டு கால் என்று வருகிறது.

5.என் குரல் கேட்கும் வரை
நீ பேச வில்லை
சோதித்தேன் ஒரு முறை.
இருபது மௌன நிமிடங்கள்.

6.நேற்றிரவு மூன்றரை மணிக்கு
ஏன் அணைத்தாய் உன் பேசியை
என்பது எனக்குத் தெரியும்.

7.குறுந்தகவல் அறிமுகம்.
நம்மிருவர் பெயரைச் சேர்த்து
எழுதிய முதல் கல்வெட்டு.

8. பேசிய படியே துண்டித்தாய்.
நான் பதைத்த பொழுதே
முன் நின்றாய்.

9.புரியாதது, என் அன்றைய
அழைப்பு உனக்கு வரவேயில்லை
என நீ சாதித்தது.

10. ஒரு குறுந்தகவல்
போதுமானதாயிருந்தது.
சொல்வதற்கு..

11.ஒரு செல் பேசி எவ்வாறுதான்
போதுமெனக்கு.
நீ போதுமென்ற போதும் கூட.

Pin It