உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து
உலகெங்கிலும் பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் உயிர் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணியாக கருதப்படுகிறது.
- நம் முப்பாட்டன் வள்ளுவன், உழவுத் தொழிலே உலகிற்கு அச்சானி என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உழவின் அவசியத்தையும், மேன்மையையும் பதிவு செய்துள்ளார்.
வேளாண்மையின் தேவை உணர்ந்ததால் தான் மகாகவி பாரதி கூட “கானிநிலம் வேண்டும் பராசக்தி“ என்று பாடினான். நாடோடிகளாக வாழ்ந்த மனிதன் நாகரீக வளர்ச்சியில், தற்சார்புடன் வாழத் தொடங்கிய போது காடுகள் திருத்தி, ஆறுகள் தடுத்து, பாசன மேளாண்மை செய்து உழவுத் தொழிலை மேற்கொண்டான்.
அதன் அடிப்படையில் தங்களுக்கென்ற நிலையான இருப்பிடம், பண்பாடு, மொழி, கலை என உருவாக்கிக் கொண்டு ஒரு சமூகக் கட்டமைப்புடன் வாழத் தொடங்கியது மனித இனம். இதை சார்ந்து தான் வணிகம் போன்ற பிற தொழில்களும் உருவாகின.
இவ்வாறு தொழில் அடிப்படையில் மனிதன் பல்வேறு குழுக்களாக நிலையாக ஓரிடத்தில் தற்சார்புடன் வாழ அடிப்படையை அமைத்துக் கொடுத்தது உழவுத் தொழில் நடைபெறும் நிலங்களே.
இதற்குச் சான்றுகளாக நம் இலக்கியங்களில் பல பதிவுகள் உள்ளன. உலகிற்கு உழவுத் தொழிலை கற்றுக் கொடுத்து செழிப்புடன் வாழ்ந்த தமிழினம், தனது வாழ்வாதாரத்தை இழந்து இன்று பல்வேறு இன்னல்கள்க்கு ஆளாகியுள்ளது.
மானாவரி நிலங்கள் பருவ மழையின்மையால் காய்ந்துக் கொண்டிருக்க, நிலத்தடிநீரும் கண்ணுக்கெட்டாத ஆழத்தில் சென்று விட்டன. மேட்டுநில வேளாண்மையின் நிலை இப்படி இருக்க, ஆறுகள் அனைத்தும் அண்டை மாநிலங்களின் கையில் தடுத்து நிருத்தப் படுவதால் ஆற்றுப்பாசனப் பகுதிகளிலும் வேளாண்மை பெறுமளவில் பாதிக்கப்பட்டு, உணவு உற்பத்தியில் பெறும் பின்னடைவை சந்தித்து வருகிறோம்.
ஆண்டிற்கு ஆண்டு உணவு உற்பத்தியும் ,பயிரிடும் நிலப்பரப்பும் அசுர வேகத்தில் குறுகிக் கொண்டே வருகிறது. இந்நிலை நீடிக்குமேயானால் உணவு பஞ்சம் என்பது தலைவிரித்தாடும் என்பதை அரசு உள்பட அனைவரும் அறிவர்.
நிலை இப்படி இருக்க, வேளாண்மை செய்யும் நிலப்பரப்பு படு வேகமாக குறைந்துக் கொண்டே வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. அரசு ஒருபுறம் தொழில் வளர்ச்சி என்று பன்னாட்டு நிருவனங்களுக்கு நிலங்களை கையகப்படுத்திக் கொடுத்து கொண்டெ இருக்கிறது. மற்றொரு புறம் ரியல் எஸ்டேட் எனப்படும் மனை வணிக நிலத்தரகர்களால் பிடுங்கப்படுகிறது மிகுந்த வேதனையளிக்கிறது.
இவைகள் ஏதோ சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், ஓசூர் போன்ற தொழில்சாலை நகரங்களை சுற்றியுள்ள பகுதியில் நடைபெருகிறது என்று நம் நினைப்போமேயானால் மிகத் தவறாகும்.
திருச்சி, தஞ்சை, திருவாரூர்,நாகை போன்ற காவிரி பாயும் ,முப்போகம் நெல் விளைந்த நிலங்களும் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது யாராலும் செரித்துக் கொள்ள முடியாத அவலமாக உள்ளது.உழவர்களை ஓர் திட்டமிட்ட பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி அவர்களின் உடைமைகள் பிடுங்கப்படுகிறது.
இதை விலை கொடுத்து வாங்குவது பெரும்ப்பாலும் நம்மில் ஒருவர் அல்லர் வேற்று மாநிலங்களில் இருந்து குடியேரி இங்கு வாழ்பவர்களே, இன்று பட்டி தொட்டி எங்கும் அயல் மாநிலத்தவர்களே தம் ஓவ்வொரு ஊரிளும் உள்ள வணிக நிருவனங்களை கணக்கெடுபோமேயானல் வணிக நிருவணங்கள் அயலாரிடம் உள்ளது.
எற்கனவே தொடர் மின்வெட்டு, ஆள் பற்றாக்குறை, உரத் தட்டுப்பாடு மற்றும் வாங்கிய கடனுக்கு வட்டிகட்ட முடியாத சூழல் போன்ற பல நெருக்கடிகளுக்கு இடையில் காவிரி டெல்டா உழவர்கள் உழவுத் தொழிலை நடத்தி வந்த சூழலில் இந்திய, கர்நாடக அரசுகளின் வஞ்சகத்தால் காவிரி நீர் தொடர்ந்து முடக்கப்படுவதால், இப்பிரச்சனைகளை தாக்குப் பிடிக்க முடியாத உழவர்கள் கடன் தொல்லையால் இனியும் உயிர் வாழ முடியாது என்ற அவ நம்பிக்கை எற்பட்டு உயிரையும் மாய்த்துக் கொள்கிற துயரம் தொடந்து கொண்டே உள்ளது.
சிலர் தங்கள் நிலங்களை விற்று கடன்கள் அடைக்கின்றனர். அண்மையில் உயிரிழந்த நான்கு காவிரி டெல்டா உழவர்களின் உழவர்களின் குடும்பங்களே நிலையே இதற்கு சான்று. இந்நிலங்கள் பெரு முதளாலிகளிடத்திலும், அரசியல் கட்சி பிரமுகர்களிடத்திலும் சென்று விடுகிறது.
இங்கு தொடந்து வேளாண்மை நடந்தாலாவது கூலி செய்தாவது உழவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியும். ஆனால் அவர்கள் நிலங்களை வாங்கியவுடன் கற்களை நடவு செய்து பணத்தை அறுவடை செய்கின்றனர் இப் பண முதலைகள்.
தினம்தோரும் தொலைக்காட்சிகளில் நடிகர்களை வைத்து விளம்பரம் செய்து இந்நிலங்களை வீட்டு மனைகளாக விற்கிற அவலம் தினமும் அரங்கேறுகிறது. இப்படி நடைபெறும் நிலத் தரகு வியாபாரத்தில் தான் பெரிய பெரிய கட்சிகள் இயங்குகின்றன.
வட்டம், சதுரம், முக்கோணம், மாவட்டம் என அனைத்து ஓட்டுக் கட்சி பொருபாளர்களின் கட்டப் பஞ்சாயத்துக்கு உட்பட்டே இந்நில வணிகம் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் இவர்களே பெருப்பாலும் இவ்வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதே உண்மையான உண்மை.
சரி,இப்படி விற்கப்படும் நிலங்களை வாங்குபவர்கள் யார் என்று பார்த்தால், எற்கனவே சென்னை, கோவை, காஞ்சிபுரம், ஈரோடு, திருப்பூர் போன்ற ஊர்களில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் அல்லது வணிகம் செய்யும் மார்வாடி, குசராதி செட்டுகளும் ,பீகாரி, வங்காளி போன்ற வட நாட்டவரும், இன்ன பிற மாநிலத்தவரும் வந்து நிலம் வாங்கி வீடு கட்டுகின்றனர்.
இவர்கள் இம்மன்னன் மக்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுகிறார்கள், மேலும் இது போன்று அயலார் குடியேற்றம் நடைபெறும் அப்பகுதி ஒரு கலப்பின சமூகம் வளர்வதற்கு வழிவகுக்கிறது. இதனால் மக்கள் மனதில் ஒரு பதற்றமும், குற்ற செயல்கள் அதிகம் நடக்கும் பகுதியாகவும் மாற வழி செய்கிறது.
இதற்குச் சான்றாகத் தான் தற்போது தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் கொலை கொள்ளை குற்றங்களில் வட மாநிலத்தவர் ஈடுபடுவதாக காவல்துறையினர் மீண்டும் மீண்டும் வெளியிடும் அறிக்கைகளில் வெளிப்படுகின்றன.
கடந்த இரண்டாடுகளுக்கு முன் மே மாதம் தருமபுரி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பீகாரி, இராசஸ்தான், டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை ஆந்திர மாநிலத்தில் கைது செய்தது.
இக்குற்றவாளிகலுக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைக்க தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். அண்மைக் காலமாக தமிழகத்தின் குக்கிராமங்களில் செல்லும் சிற்றுந்துகளிலும் கூட ஒரு வட மாநிலத்தவர் நம்முடன் பயணிப்பதை காணுகிறோம். அவர்கள் சிற்றூர்களில் உள்ள வணிகத்தையும் தன் வசப்படுதியுள்ளனர் என்பது புலனாகிறது.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் இன்று நிலத் தரகர்களால் கற்களஞ்சியமாக மாறி வருகிற, இவ்வேலையில் இப்படி தொடந்து வேளாண் விளைநிலங்கள் பல்வேறு காரணங்களால் பறிக்கப்படுவதால், ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனும் பாதிக்கப்படுகிறான்.
எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் இப்பிரச்சனைகளை என்று சிந்தித்து, திட்டமிட்டு போராடினாலும், அப்படியே நீதி கிடைப்பதை எடுத்துக் கொண்டாலும், அந்த நேரத்தில் நம் மண்ணில் ஒரு பகுதி வெளியாரிடமே கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுமோ என்ற அச்சமும் நம்மில் இருக்கிறது.
இந்திய அரசு திட்டமிட்டே தமிழ்நாட்டு வேளாணையை சீர்குலைக்கவே நமக்கு தற்போது இருக்கும் ஆற்று நீர் உரிமைகளை நடைமுறைப்படுத்த தொடர்ந்து மறுக்கிறது. எனினும் வேளாண் நிலங்களை காக்க அரசு நினைத்தால் மட்டுமே உடனடி தீர்வு என்பது சாத்தியம்.
கேரள,கர்நாடக, மராட்டிய மாநிலங்களில் உள்ளது போல் வெளி மாநிலத்தவர்கள் விளைநிலங்கள் வாங்குவதை தடை செய்ய அரசு ஆணயிட வேண்டும். தொழில் மற்றும் இதர தேவைகளுக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்துவதை தவிர்த்து தரிசு நிலங்களை பயன்படுத்த முன்வர வேண்டும் அரசு இதை உறுதிப்படுத்த வேண்டும்.
இது போன்ற செயல்கள் தான் பிழைப்புத் தேடி அகதிகளாக இடம் பெயராமல், சொந்த நிலத்தில் தன் மக்களை தன்மானத்துடன் வாழவும், வேளாண் உற்பத்தி பாதிக்காமலும், வெளியாரின் ஆதிக்கம் குறைந்து குற்றச் செயல்கள் குறையவும் வழிசெய்யும்.
உழவுத் தொழிலில் தொய்வு ஏற்படால் இருக்க, நாடெங்கிலும் நீர்நிலைகளை எற்படுத்தவேண்டும். உழவுத் தொழிலுக்கு அரசு அதிமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .
இப்படி பல நிலைகளை கையாண்டால் தான் நம் உழவர்களின் வாழ்வையும் அவர்களால் நம் வாழ்வையும், இம்மண்ணையும் காக்க முடியும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக தமிழ்நாடு விளங்கும். உழவர்களின் வாழ்வும் ஒளி பெறும்..
- மு.வேலாயுதம்