ஆறு வயதிருக்கும் அவளுக்கு 

அடிக்கும்

தாளத்தை

நடனப்படுத்திக்கொண்டிருந்தாள்

கயிற்றில்

 

இறங்கட்டும் கேட்போமென்று

சாப்பிட்டாயா

உன்னிடம் எத்தனை

பாவாடை சட்டை உள்ளது

படிக்க போகலியா?

என கேள்விகளும்...

மிட்டாய்க்கென்று

சில்லறையும் சேர்த்து வைத்தேன்...

 

பேருந்து வந்திருந்தது...

 

காட்சிகள்

விரிந்தும்

அந்தப் பெண்

சுருங்கியும்...

 

எனக்கான நிறுத்தம் வருவதற்குள்

சற்று தூங்கியும் போயிருந்தேன்.

 

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி