கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வள்ளலாரைச் சூத்திரர் என்று கோயிலுக்குள் நுழைய விடாமல் தில்லைக் கோயிலுக்கு வெளியே நிறுத்தினார்கள், தீட்சிதர்கள். அதனால் தில்லைக்கு எதிராக ‘சத்திய ஞான சபை’யை நிறுவினார் அவர்.

 நந்தனைச் சூத்திரன் என்று, நடராசரை வணங்க கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்ததால் இன்றுவரை அந்தத் தீண்டாமைக் கதவு மூடியே இருக்கிறது.chidambaram natarajar templeகனகசபையேறி தேவாரம் பாடச் சென்ற சிவனடியார் தீட்சிதர்களால் தாக்கப்பட்டுள்ளார். பெண்கள் அவமதிக்கப் படுகிறார்கள், தீட்சிதர்களால்.

தொடர்ந்து கனகசபை மீதேறி தமிழ் பாடத் தடை செய்வதும், பதாகை வைப்பதும் தீட்சிதர்கள் தாம். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. வரிந்து கட்டிக் கொண்டு வந்து நிற்கிறது.

பழனி மலையிலும் ‘இந்துக்கள்... ‘ என்று பதாகை வைத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது கோயிலின் பார்ப்பன நிர்வாகம். இங்கேயும் எச்.ராஜா போன்ற இந்து அடையாளவாத அரசியல் சக்தி முகத்தை நீட்டுகிறது.

2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நெருங்குவதால் மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை மக்களிடம் இருந்து திசை திருப்ப ஒரே சிவில் சட்டம் என்று மோடி பேசுகிறார்.

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிமீது குறை சொல்ல முடியாததால், கோயில்களின் பின்னால் பா.ஜ.க வின் அரசியல் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சட்டத்தை மதிக்காமலும், காவல் துறையை மதிக்காமலும், அறங்காவல் அதிகாரிகள் அனைவருக்கும் எதிராக நிற்பவர்கள் தீட்சிதர்கள் என்றும், தமிழ்நாடு அரசு சிதம்பரம் கோயிலை அறங்காவல் துறையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு சொல்லியிருக்கிறார்.

இதற்கான சட்டத்தை இயற்றினால் அதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல் கிடப்பில் போட்டு விடுவார்.

அதனால் ஆளுநரைப் பதவி விலகச் செய்து விட்டு, தில்லை நடராசர் கோயிலை அறங்காவல் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

அதற்கான, பலமான கருவி 2024 பொதுத் தேர்தல். அத்தேர்தலில் மதத்தின் போர்வையிலுள்ள பா.ஜ.க.வை மக்கள் தோற்கடித்தே ஆக வேண்டும்!

- கருஞ்சட்டைத் தமிழர்