நிலத்திலுள்ள மேல்மண்ணைக் கீழ்மண் ணோடு

                நீண்டுள்ள கூர்முனையால் ஒன்று கூட்டிக்

கலப்புதனை உண்டாக்கும் கார ணத்தால்

                கலப்பையயன்று பெயரிட்டார். கலப்பை மூலம்

நிலத்தில்நாம் உண்டாக்கும் கலப்பை; மாந்தர்

                நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோ மாயின்

கலப்புமணம் உருவாக வழியுண் டாகும்

                கலப்புமணத் தால்சாதி செத்தே போகும்!

 

(உவமைக் கவிஞர் சுரதா கவிதைகள் முதல் தொகுதியிலிருந்து )

சூன் 20 - கவிஞர் சுரதா நினைவு நாள்

Pin It