1925ஆம் ஆண்டு கையயழுத்தான மகேந்திரா ஒப்பந்தம் தொடங்கி, இன்றுவரை பத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் இலங்கை அரசு கையயாப்பம் இட்டுள்ளது.ஆனால் ராஜீவ்காந்தி - ஜெயவர் தனே ஒப்பந்தம் தவிர மற்ற அனைத்தையும் சிங்களர்கள் முறித்துப் போட்டு விட்டனர். 1987 ஆம் ஆண்டு ஜுலை 29 அன்று கையயாப்பம் இடப்பட்ட ராஜீவ் - ஜெயவர்தனே ஒப்பந்தமும் இப்போது கவலைக் கிடமான நிலையில் உள்ளது.

அந்த ஒப்பந்தத்தையயாட்டி 1988 செப்டம்பர் மாதம், சிறீலங்கா அரசமைப்புச் சட்டத்தில் 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகள், தமிழீழ மக்களின் மரபுவழித் தாயகம் என்பதை இந்திய -இலங்கை அரசுகள் அந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டன.

அதன்படி அவ்விரு பகுதிகளையும் ஒரே அலகாக (One Unit) ஏற்று,அதற்கான மாகாணத் தேர்தலை நடத்திட ஜெயவர்தனே ஒப்புதல் அளித்தார்.அம்மாகாணத்துக்கு ஓர் ஆளுநர், ஒரு முதலமைச்சர்,அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அவர் அறிவித்தார். வரதராஜப்பெருமாள் தலைமையில் ஒரு பொம்மை அரசு அமைக்கப்பட்டதையும் நாம் அறிவோம்.எனினும் அதற்குப்பின் அந்நடைமுறை தொடரவே இல்லை.

2006ஆம் ஆண்டு இன்னொரு திருப்பம் நிகழ்ந்தது. இலங்கையின் ஜே.வி.பி. கட்சியினர், 2006 ஜுலையில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மூன்று வழக்குகளைத் தொடர்ந்தனர். அவற்றுள் ஒன்று வடக்கு -கிழக்குப் பகுதிகளைத் தனித்தனி அலகுகளாக அறிவிக்க வேண்டும் என்பது.அந்தக் கோரிக்கையை ஏற்று,மூன்றே மாதங்களில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதன்படி அவை இரண்டும் தனித்தனி அலகுகள் என ராஜபக்சே 2007 சனவரியில் அறிவித்தார்.இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதி முறியடிக்கப்பட்டு விட்டது.

அந்த 13ஆவது திருத்தத்தை முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சிகள் இப்போது அங்கு நடந்து கொண்டுள்ளன.கடந்த ஆறாம் தேதி, ஜாதிக யஹல உறுமய அமைப்பின் அழைப்பை ஏற்றுக் கூடிய பல்வேறு புத்த பிக்கு அமைப்புகள் 13ஆவது திருத்தத்தை நீக்காவிடில் பெரும் போராட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளன. ராஜ பக்சேயும் முழுக்க முழுக்க அவர்களுக்கு இணக்கமாகவே உள்ளார்.

இந்தக் கட்டத்தில்தான் ஆறு முகத்தொண்டைமான் மலையக மக்கள் அமைப்பின் சார்பில், சோனியா காந்தியைச் சந்தித்து 13ஆவது பிரிவை நீக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களும் இது தொடர்பான இந்தியத் தலையீட்டை வலியுறுத்திப் பிரதமர் மன்மோ கன்சிங்கிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.இப்போதும் கூட அடுத்த நாட்டின் பிரச்சினையில் நாம் எப்படித் தலையிட முடியும் என்று கேட்கக் கூடிய ‘புத்திசாலிகள்’ இருக்கவே செய்கின்றனர்.

இதுஒன்றும் அடுத்த நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதன்று.இதில் தலையிடுவதற்கான எல்லா உரிமையும் இந்தியாவிற்கு உள்ளது. 87 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, அந்த உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில், “...the government of india will underwrite and guarantee the resolutions” என்னும் வரி இடம் பெற்றுள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டு,கையயாப்பங்களை இட்டுள்ளன.எனவே அதனை இலங்கை அரசு மீறுமானால், தட்டிக் கேட்கிற கடமை இந்திய அரசுக்கும், அரசை வலியுறுத்துகிற உரிமை இந்தியக் குடிமக்களுக்கும் உண்டு.

மேலும் இரண்டு அரசுகள் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தை,ஓர் அரசு தன்னிச்சை யாக முறிக்க முடியாது.அப்படி முறிக்கலாம் என்று இலங்கை அரசு பிடிவாதம் பிடிக்குமானால்,கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் தன்னிச்சையாக நாங்கள் முறித்துக் கொள்வோம் என்று இந்திய அரசு அறிவிக்க வேண்டும். அல்லது, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும். தவறினால், இந்திய அரசின் மீது பொதுநல வழக்கை நாம் தொடுக்க முடியும்.

13ஆவது திருத்தம் நீக்கப்படுவதை, இலங்கை ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ளவர்களான டக்ளஸ் தேவானந்தா,வாசுதேவ நானாயாக்காரா,குணசேகரா போன்றவர்களே எதிர்த்துள்ளனர்.அவர்கள் எதிர்ப்பை நாம் முழுமையாக நம்ப முடியாது என்றாலும்,அவற்றையும் கணக்கில் கொள்வதில் பிழையில்லை.

ஈழத்தமிழர்களுக்குச் செய்திருக்க வேண்டிய எத்தனையோ உதவிகளை இந்தியா செய்யத் தவறிவிட்டது.இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி,ஈழ மக்களின் அழிவுக்குத் துணையும் போய்விட்டது.இப்போதேனும் இச்சிறு முயற்சியையாவது மேற் கொண்டு, அம்மக்க ளுக்குச் சில சனநாயக உரிமைகளையாவது பெற்றுத்தர வேண்டும்.

பொது வாக்கெடுப்பின் மூலம் அம்மக்கள் தனித்தமிழ் ஈழம் பெற,ஐக்கிய நாடுகள் அவை தன் கடமையை ஆற்ற வேண்டும் என்பதுதான் டெசோ போன்ற அமைப்புகளின் அடிப்படைக் கோரிக்கை.

எனினும் அத்தொலைதூரக் கோரிக்கை நிறைவேறும் வரையில்,இருக்கும் சனநாயக உரிமைகளையும் அம்மக்கள் இழந்து விடக்கூடாது எனில்,13ஆவது சட்டத் திருத்தம் நீக்கப்படுவதை அனைவரும் இணைந்து தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

Pin It