Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கருஞ்சட்டைத் தமிழர்

உலகம் உருண்டை என்று முதன் முதலில் அறிவியல் எடுத்துரைக்க எத்தனித்தது. மதவாதிகள் மருண்டனர். வெகுண்டெழுந்து எதிர்த்தனர். தங்களது மேதாவிலாசத்தின் மீது மிகை மதிப்புக் கொண்டு, அறிவியல் அறிஞர்களை முட்டாள்களாகப் பாவித்து எள்ளி நகையாடினர். அவர்கள் வீசிய வினாக் கணைகளுள் ஒன்று பின்வருமாறு:

உலகம் உருண்டையானால் நியாயத் தீர்ப்பு வழங்கும் நாளில், எல்லோரையும் கடவுள் ஒரே நேரத்தில் எப்படிப் பார்க்க முடியும்? அப்படி வசதியில்லாத ஒரு வடிவத்திலா கடவுள் உலகத்தைப் படைத்திருப்பார்? எனவே உலகம் தட்டையானதுதான்.

இதனை இன்று வாசிக்கும் நமக்கு என்ன தோன்றுகிறது? ‘அடடா, மனிதர்கள் இப்படியெல்லாம் விசித்திரமாக சிந்தித்தார்களா!’ என்று வியக்கவும் நகைக்கவும் தோன்றுகிறது இல்லையா? ஆனால் இவர்கள் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையை மனிதர்கள். நமக்கு இப்போதெல்லாம் சமகாலத்திலேயே இது போன்ற அறிவு முதிர்ச்சியான விவாதங்களையெல்லாம் இப்போது அதிகமாகக் கேட்க முடிகிறது. உதாரணம் தேவையா? இதோ பாருங்கள், ‘நாம் தமிழர் கட்சி’யின் ஆவணம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆவணத்தைப் படித்து முடிக்கும் போது நாம் மேலே குறிப்பிட்டிருப்பவர்களைவிட, நம்மில் சிலர் பெரிதாக ஒன்றும் வளர்ந்து விடவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.

இந்த ஆவணத்தைப் படிப்பதற்கு முன் அதன் கலைச் சொல்லகராதியைப் புரிந்து கொள்வது அவசியம் என்று அந்த ஆவணம் சொல்கிறது. எனவே நாமும் அதிலிருந்தே தொடங்குவோம்.

periyar_28தமிழ்:- தமிழ் மொழிக்கான விளக்கமே இவர்களின் இன அடிப்படையிலான பாராளும் ஆசையைப் பதிவு செய்கிறது. இதே கலைச் சொல்லகராதியில் அரசு என்பது வன்முறைக் கருவி என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. அரசு என்ற அமைப்பையே வன்முறைக் கருவியாகப் பார்க்கும் ஓர் அமைப்பு, அதுதான் நாளை உலகை ஆளப்போகும் மொழி என்று எப்படி விளக்கம் தரமுடியும் என்று நமக்குப் புரியவில்லை.

யார் தமிழர்?:- இதற்கான விளக்கம் தமிழியத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்டவர்கள் தமிழர் நலன் நாடுவோர் வாழும் தமிழர் என்றும், பிறப்பு வழித்தமிழர் என்பவர் மரபு வழியாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றும் குறிப்பிடுகிறது. தாய்மொழி என்றால் நமக்குத் தெரிகிறது. மரபு வழித் தாய் மொழி என்றால் என்ன என்று தெரியவில்லை. இதற்கான விளக்கமும் அதில் இல்லை. ஆனால் தமிழ் நிலப்பரப்புக்கும் தமிழர் அடையாளத்திற்கும் யாதொரு தொடர்பும் சுட்டப்படவில்லை.

தமிழியம்:- யார் தமிழர் என்ற கேள்விக்கு தமிழியத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்டவர் என்று ஏற்கனவே பார்த்தோம். இங்கு தமிழியத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் அய்ந்திணை சார்ந்த இயற்கை நெறி என்பதுவே முதலாவதாகச் சுட்டப்படுகிறது. நமக்குத் தெரிந்து தமிழ் இலக்கியங்கள் பேசுகிற அய்ந்திணை நெறி என்பது, நிலத்தை அடிப்படையாக வைத்து ஆண் பெண் களவு சார்ந்த ஒழுக்கங்களை வரையறை செய்கிறது. இந்த வரையறையை இவர்கள் யாராவது இன்றைய வாழ்க்கைச் சூழலில் நிலத்துக்கும் குறிப்பாக பெண்கள் ஒழுக்கத்துக்குமான தொடர்பை மீள் வாசிப்பு செய்து எழுதியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அப்படியிருக்க பொத்தாம் பொதுவாக இந்த அய்ந்திணை ஒழுக்கத்தைத் தமிழியம் என்பதற்கான அடிப்படையாக வைத்து அந்த தமிழியத்தை யார் தமிழர் என்ற விளக்கத்தோடு இணைத்து விட்டிருக்கிறார்களே....??????

மனுவியம்:- பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழிலிருந்தும் தமிழியத்திலிருந்தும் பிரிந்து பல்வேறு மொழிகளாய்ப் பிறப்பு வழி உயர்வு தாழ்வாய் - உடல் வண்ணத்து வழி, உயர்வு தாழ்வாய் - ஒரு குலத்துக்கொரு நீதியாய்த் திரிந்து தமிழர்க்கு மூலப்பகையாய் மூண்டு நிற்கும் கோட்பாடு. அதாவது இந்த விளக்கம் என்ன சொல்ல வருகிறது என்பதைச் சொல்ல வேண்டுமென்றால், நமக்கு ஏற்கனவே உள்ள புரிதலை முதலில் வைக்க வேண்டும். இந்த விளக்கத்தின் வழி மனு நீதிதான் சுட்டப்படுகிறது என்றால் அது ஆரியர்கள் தங்களால் அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர்களை காலந்தோறும் அடிமைப்படுத்தி ஆள மன்னர்களுக்கு வகுத்துத் தந்த சட்ட மறை என்பதே இதுகாறும் திராவிட இயக்கங்களாலும் தமிழியக்கங்களாலும் தனித்தமிழ் இயக்கங்களாலும் இந்த மண்ணில் செய்யப்பட்டு வந்த பரப்புரையாகும். எதிர் முகாம்களில் நேரு போன்றோரும் இந்தக் கோட்பாட்டை மறுத்தவர்களில்லை.

இந்தக் கோட்பாடானது கால்டுவெல் போன்ற வரலாற்று அறிஞர்களால் நிறுவப்பெற்று, அக்காலப் பார்ப்பனரல்லாத கல்விமான்களால், தங்கள் சமூகம் தாழ்வு நிலையை எதிர்த்துப் போராடும் பொருட்டு மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகும். பெரியார் இந்தக் கோட்பாட்டை எடுத்தாண்டபோது அவர் தனது சுயசிந்தனையின் பாற்பட்டு அதற்கு அளித்த விளக்கம் தனித்தன்மையானது. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக, ஆரியர்கள் இரத்தக் கலப்பின்றி ஆரியர்களாக இருந்து வருகிறார்கள் என்றோ, திராவிடர்கள் தனித்த திராவிடர்களாக இருந்து வருகிறார்கள் என்றோ அவர் வாதிடவில்லை. மாறாக அந்த ஆரியர்களின் இரத்தம்தான் தங்களுடையது என்று இந்நாட்டின் பார்ப்பனர்கள் நம்புவதாலேயே அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அவர்களை எதிர்க்கும் இயக்கத்தைத்தான் நடத்துவதாக அவர் பல்வேறு இடங்களில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

எனவே ஆரிய திராவிட கோட்பாட்டை அடிப்படையாக வைத்து, தாங்கள் ஆரியர், தங்கள் இரத்தம் உயர்வானது என்று பார்ப்பனர்கள் 19ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்தச் சமூகத்தை வழி நடத்தி வந்த காரணத்தினாலேயே அந்த வேறுபாடு நமக்கும் களமாயிற்று என்பதுதான் வரலாறு. ஆனால் ஒரு நூற்றாண்டு காலத் திராவிட இயக்க போராட்டத்தின் விளைவாக இனி இந்த மண்ணில், நான் ஆரியன் - உன்னைவிட உயர்ந்தவன் என்று எவரும் பொது வெளியில் வாயைத் திறக்கக் கூட முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்ட பிறகு, இன்று அவர்கள் வேறு ஒரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். அதுதான் ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல நம்மிலிருந்து உருவானவர்களே என்ற பரப்புரையாகும். சரி அப்படியே இருக்கட்டும். நாம் பெரியாரியல்வாதிகளாகவே அவர்களை எதிர்கொள்வோம். நோய் வெளியிலிருந்து உருவாகி உள்ளே வந்தால் என்ன? உள்ளே இருந்து வெளிப்பட்டால் என்ன நோயை ஒழித்துத்தானே ஆக வேண்டும்? ஆனால் இங்கு பிரச்சினை அதுவன்று. கருப்புச் சட்டையைப் போட்டுக்கொண்டு, பெரியார் தொண்டர்களால் வளர்க்கப்பட்ட சீமான் தலைமையில் இயங்குகின்ற ஒரு கட்சி ஆவணம் ஏன் இப்படி அவர்களின் தமிழ் மண்ணுரிமைக்காக வரிந்து கட்டிக் கொண்டு வர வேண்டும் என்பதுதான்.

திராவிடம்:- பல காலகட்டங்களில் தமிழிலிருந்து பிரிந்து சென்று மனுவியம் சார்ந்துப் பல்வேறு மொழிகளாய்த் திரிந்து போன கோட்பாடு. திராவிடர் என்பது ஓர் இனத்தை அந்த மக்களைக் குறிக்கும் ஒரு சொல். திராவிடம் என்றால் அம்மக்கள் வாழும் நிலப்பரப்பைக் குறிக்க வேண்டும். ஆனால் இந்த ஆவணத்தில் அது கோட்பாடாகிறது. அது எப்படி? சரி, மனுவியம் சார்ந்து பல்வேறு மொழிகளாய்த் திரிந்து போனது என்கிறார்கள். மனுவியம் என்பதை ஒரு கோட்பாடென்றார்கள் முதலில், தமிழ் என்பது மொழி என்பதில் அவர்களுக்குச் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் ஒரு கோட்பாடும், ஒரு மொழியும் கலந்து பல்வேறு மொழிகள் தோன்றியதா? மனிதர்கள் குதிரைகளைப் புணர்ந்து ரிஷிகள் தோன்றினார்கள் என்று சிந்திப்பவர்களால்தான் இப்படியும் புனைய முடியும். தமிழ் வடமொழியுடன் கலந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் தோன்றியது என்று எளிமையாக எழுத வேண்டியதற்கு ஏன் இப்படி ஒரு திணறல்?

அந்தணன், பார்ப்பான், ஆரியன், பிராமணர்:- இந்த சொற்களுக்கு முறையே ஈவு இரக்கங்கொண்ட அறநெறியாளன், ஆய்வாளன், இளைஞன், சீரியன், உயர்ந்தவன், பேரமணன் என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் இந்தக் கட்டுரையில் சுட்டியிருக்கும் பல்வேறு செய்திகளுக்கு வேறு எந்தச் சான்றும் தேவையில்லையென்பதை இந்த விளக்கம் போதுமான அளவில் நிரூபித்து விட்டதாகவே கருதுகிறோம். சரி. இந்த விளக்கங்களை நாம் ஏற்றுக் கொள்வதாக வைத்துக்கொள்வோம். அதன் பின் சில வினாக்கள்! நம் நாட்டில் பார்ப்பனர்கள், பிராமணர்கள் என்று ஒரு சாதியார் இருக்கிறார்கள் அல்லவா, அவர்களைப் பற்றிதான் நீங்கள் எழுதியிருக்கிறீர்களா இல்லை, பொதுவாக அறநெறியாளர்கள், ஆய்வாளர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் என்ற பொருளில் எழுதியிருக்கிறீர்களா? இவ்வினாவிற்கு முதலாவது விடைதான் உங்களுடையது என்றால் இந்தக் கட்டுரையை இங்கேயே முடித்து விடலாம். இல்லை இரண்டாவது தான் உங்கள் விடை என்றால், நண்பர் சீமான் நிச்சயம் ஒரு அறநெறியாளர் என்ற நம்பிக்கையில் கேட்கிறோம், உங்கள் பார்ப்பன நண்பர்கள் யார் வீட்டுத் திருமணத்திற்காவது நீங்கள் புரோகிதராக இருந்து ஒரு திருமணத்தை நடத்தி வைத்துக் காண்பிப்பீர்களா?

மொழி விடுதலை, பெண் விடுதலை, சாதியொழிப்புப் பணிகளை ‘பகுதித் தமிழ்த் தேசியப் பணிகள்’ என்றும் இதில் பெண்விடுதலை, சாதியொழிப்புப் பணிகளை ‘மேற்கட்டுமானப் பணிகள்’ என்றும் வரையறை செய்கிறது. அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என்ற மார்க்சிய சொற்றொடர்கள் அவை பிறந்த இடத்திலேயே ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் இப்படியொரு புதிய அரைகுறைப் பிரசவம்.

கட்சித் திட்டம்:- கட்சித் திட்டம் முதலில் வரலாறு மற்றும் தோற்றுவாய் பற்றிப் பேசுகிறது. இதில் கலைச் சொல்லகராதி தந்த விளக்கங்களுக்கு மாறாக ஆரியப் பார்ப்பனர் ஈரானியப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று பதிவு செய்கிறது. ஆனால் அவர்கள் வருகையின் போது, இங்கிருந்தவர்கள் திராவிடர்கள் என்ற வரையறையை மறுத்து, அவர்களின் கலப்பினால் உருவானவர்களே திராவிடர்கள் என்று கூறுகிறது. இங்கு கலப்பு என்பது மொழிக்கலப்பா, இரத்தக் கலப்பா என்ற வினா விடையின்றி நிற்கிறது. பொதுவாகவே இரத்தக் கலப்பு தடுக்க முடியாமல் நடந்துதான் இருக்கும் என்பது வேறு.

அங்கீகரிக்கப்பட்ட இரத்தக் கலப்பினால் ஆங்கிலோ இந்தியர் போன்று புதிய பிரிவு உண்டாவது வேறு. இவர்கள் எந்தக் கலப்புக் கூட்டு இனம் இங்கு உருவாகியதாகக் கூறுகிறார்கள் என்பது தெளிவாக இல்லை.

நாம் தமிழ் மொழியில் வடமொழி கலந்ததால், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் பிறந்து, அந்த மொழி பேசும் மக்கள் முறையே மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் என ஆனார்கள் என்றே கூறி வருகிறோம். ஏன் இத்தனை தெளிவின்மை? குழப்பம்? இவை திராவிட இயக்கத்தை வலிந்து தாக்குவதையே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டதால் எழுந்தவையே தவிர வேறல்ல.

அதன்பின் இந்த ஆவணம் திராவிடர்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் கலைச் சொல் விளக்கத்தில் திராவிடர் என்ற சொல்லுக்கு விளக்கம் இல்லை. இந்த ஆவணம் சுட்டும் திராவிடர் என்போர் யார்? நம்மைப் பொறுத்தவரையில் திராவிடர் என்ற சொல் இன்றைய நிலையில் தமிழர்களை மட்டுமே குறிக்கிறது. ஏனெனில் இந்தச் சொல்லுக்கு இன்று மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ உரிமை கொண்டாடவில்லை. வரலாற்றில் இவர்களையும் உள்ளடக்கி நம்மையும் (தமிழர்களையும்) உள்ளடக்கி இந்தச் சொல் ஒலித்து வந்தது. மொழிவாரி மாகாணம் பிரிந்தவுடன் இச்சொல் பெருவாரியாக நம்மால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் திராவிடர் இயக்கங்களால் ஆரிய இன எதிர்ப்புச் சொல்லாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறதேயல்லாமல், இந்தப் பெயரால் எந்த தமிழரல்லாதோருக்கும் சலுகை வழங்கப்படவில்லை. தமிழ் நாட்டில் பிற மாநிலத்தவர்க்கான சலுகைகள் மொழிச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதாக இருக்கிறதேயொழிய, திராவிடர் என்ற பெயரில் அல்ல.

இந்த ஆவணமும் பிறமொழியாளர் நலன் காக்கும் என்றுதானே உறுதியளிக்கிறது? தமிழ் நாட்டில் பிற மொழியாளர்கள் ஆட்சியாளர்களாக வருவதற்கு வழி செய்வது இந்திய அரசியல் சட்டம்தானே தவிர, திராவிட அரசியல் சட்டம் என்று எதுவும் தமிழ் நாட்டில் நடப்பில் இல்லை. சென்னை மாகாணத்தில் அரசியல் மேலாண்மை செய்யும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும் என்ற உத்தரவாதம் இருக்கும் பட்சத்தில் தெலுங்கர்கள் ஏன் ஆளுக்கு முந்தி 1920லேயே ஆந்திர மாநிலம் வேண்டும் என்று கேட்க வேண்டும்? தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் இம்மூன்றையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் என்று அறிவிக்க நேரு திட்டமிட்ட போது, அதனை எதிர்த்து முறியடித்த இயக்கம் எது? எந்த அடிப்படையில் எந்த ஆதாரத்தில் திராவிட இயக்கத்தை நீங்கள் தமிழர்களுக்கு எதிராக நிறுத்துவீர்கள்? திராவிடர் கழகங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில், கட்டப்பட்ட சாதியடிப்படையில்லாமல் தமிழர்களைத் திரட்டிய ஒரே ஒரு கட்சியை உங்களால் காட்ட முடியுமா? அந்த இயக்கத்தை முதற் பகை என்று சொல்கிற ஓர் ஆவணத்திற்கு நம்மால் என்ன மரியாதையைத் தர முடியும்?

இட ஒதுக்கீடு:- ஆவணத்தில் குழப்பம் தொடர்கிறது. இட ஒதுக்கீடு என்ற சூழ்ச்சியை திராவிடர் எடுத்துத் தமிழருக்குத் தருவது போல் நாடகமாடித் தெலுங்கர்களுக்குத் தந்து விட்டார்களாம். ஆதாரம் தெலுங்கர்கள் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்குத் தலைமை தாங்குவதிலிருந்தும், அமைச்சரவையில் பேரளவில் இடம் பெறுவதிலிருந்தும் சரி பார்த்துக் கொள்ளலாம் என்கிறது. கல்வி வேலை வாய்ப்பில் பெற்ற இட ஒதுக்கீட்டிற்கும், தமிழக அரசியல் கட்சிகளில் தெலுங்கர்கள் இருப்பதற்கும் என்ன தொடர்பு? அதே போல் சாதிவாரி ஒதுக்கீட்டினால் சாதிகளுக்குள் முரண்பாடுகள் முற்றி வருகின்றன என்கின்றனர். சாதி அடிப்படையில் ஒதுக்கீடே தவறு என்று சொல்லி விட்டு, அதே கையோடு ஆளுமைச் சாதியார் பறித்த நிலங்களை மீட்கும் பணியைப் பற்றிப் பேசுகிறது ஆவணம்.

இந்தி எதிர்ப்பு:- இட ஒதுக்கீடாக இருக்கட்டும், இந்தி எதிர்ப்பாக இருக்கட்டும் திராவிடர் கழகத்தின் பங்களிப்பெல்லாம் இவர்கள் அகராதியில் நடிப்பாக மாற்றப்பட்டு விடுகிறது. அது எப்படி என்று தெரியவில்லை.

அண்ணல் தங்கோ முயற்சியால் நிறுவப்பட இருந்த தமிழர்க் கழகத்தை முறியடித்து திராவிடர் கழகம் நிறுவப்பட்டதாகச் சொல்கிறது இந்த ஆவணம். சாதியொழிப்பை இலக்காக வைத்துச் செயல்பட்ட அதே நேரத்தில் அந்தந்தச் சாதிகள் தங்களுக்கென இயக்கம் கட்டித் தங்கள் சமூகத்தை முன்னேற்றுவதற்காக இயங்க வேண்டும் என்று வழிகாட்டியவர் பெரியார். பெண்கள் தங்களுக்குள் சிறு சிறு அமைப்புகளை நிறுவிக் கூடியிருக்கப் பழக வேண்டும் என்று ஊக்குவித்தவர் பெரியார். தன்னுடைய இயக்கம் மட்டும்தான் இருக்க வேண்டும் வேறு இயக்கங்கள் கூடாது என்று நினைத்தவர் இல்லை அவர். அவர் எதற்காகத் தமிழர் கழகத்தை முறியடிக்க வேண்டும் என்றே நமக்குப் புரியவில்லை. 1944இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்ட சுயமரியாதை இயக்கம் 1925லிருந்தே செயல்பட்டு வந்து ஒன்றுதானே தவிர திடீரென தோன்றிய இயக்கம் அன்று.

தமிழ் மொழியும் பெரியாரும்:- தனித் தலைப்பில் எழுதப்பட வேண்டிய பகுதி இது. நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். பெரியார் தன் நாட்டு மக்களை நேசித்தார். அவர்கள் அறிவும் மானமும் பெற்ற சமூகமாக வாழ வேண்டும் என்று அரும்பாடுபட்டார். அதற்கெனவே சிந்தித்தார். அதற்கெனவே வாழ்ந்தார். அந்த மக்கள் நல்வாழ்வுக்கு மொழி உரிமை தேவைப்படும்போது, அதற்காகக் குரல் கொடுத்தார். அந்த மொழிப்பற்றினால் அதே தமிழர் மடமையிலும், சாதிச் சேற்றினுள்ளும் பெண்ணடிமையினுள்ளும் தள்ளப்படும்போது அந்த மொழியிலிருந்து விடுபட்டு வா என்று அழைத்தார். அவருடைய அந்த அழைப்பை அவரது காலத்திய தமிழகம் உரிய முறையிலேயே புரிந்து கொண்டது. ஏனெனில் அன்றைய தமிழகத்தின் தேவை பெரியார். இன்று இவர்களின் தேவைகள் வேறு வேறு. இவர்களை மறுப்பதற்குப் பெரியாரின் உரைகளிலிருந்து ஆயிரம் சான்றுகளை நம்மால் தூக்கிப்போட முடியும். ஆனால் பத்து வயதுக் குழந்தை புரிந்து கொள்வதைக் கூட இவர்கள் புரிந்து கொள்ளமாட்டேன் என்று சாதிப்பார்கள். பாவாணரிலிருந்து எத்தனையோ தமிழறிஞர்கள் தமிழை வளர்த்திருக்கலாம் ஆனால் தமிழுக்குத் தன்மானத்தை மீட்டுத் தந்தது திராவிடர் இயக்கம் மட்டும்தான். அந்தப் பெருமையும் பெரியாருக்குரியதுதான்.

ஈழத் தந்தை செல்வாவும் தமிழர் தலைவர் பெரியாரும்:- செல்வா பெரியாரைச் சந்தித்தபோது, பெரியார் நானே ஓர் அடிமை. இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி என்று கேட்டார் என்ற செய்தியை இந்த ஆவணத்தின் கற்பனைத் தேர், அவர் சிங்களத்திற்கு ஆதராவாக நின்றார் என்று இழுத்துச் செல்கிறது. திரைப்படத்திற்குக் கதை வசனம் எழுத இந்த ஆற்றல் பயன்படலாம். ஆனால் வரலாற்றை எழுதுவதற்குப் பயன்படாது என்பது நம் கருத்து. மேலும் பெரியாருக்கும், தந்தை செல்வாவுக்கும் நடந்த உரையாடல் என்பது இந்த ஒற்றை வரியாக இருந்திருக்காது. அந்த முழு உரையாடல் நமக்குத் தெரியவில்லை. ஆனால் பெரியார் உடனடியாக ஓர் ஆயுதப் போராட்டத்தைப் பரிந்துரைத்திருக்க மாட்டார்.

‘ஜின்னாவுக்குப் பிரிந்து போகும் ஆலோசனையை வழங்கியதே நான்தான். ஆனால் ஜின்னா பெற்ற வெற்றியை நான் எனது மக்களுக்குப் பெற முடியவில்லை. காரணம் ஜின்னாவால் மதத்தைச் சொல்லி தனது மக்களை ஒன்றுதிரட்ட முடிந்தது. ஆனால் சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் இந்த மக்களை அது போல் ஒன்று திரட்ட முடியவில்லை’ என்று பெரியார் பதிவு செய்கிறார்.

இதில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. ஒன்று பெரியாரால் ஓர் அடிப்படைவாதக் கருத்தியலில் மக்களை ஒன்றிணைக்க முடியாது. ஏனெனில் அவர் அதைச் செய்ய மாட்டார். மற்றொன்று சாதிப் பிரிவினைகளை வென்றெடுக்காமல் தமிழர் ஒற்றுமை சாத்தியமில்லை என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் அவர் வளர்த்தெடுத்த தமிழர் என்னும் உணர்வுதான், 1983களில், சிங்கள வன்முறையில் தப்பி ஓடி வந்த தமிழ் இளைஞர்களை இந்த மண்ணில் தாங்கிப் பிடித்தது. அவர்களுக்கு தஞ்சமளித்த தொன்னூறு விழுக்காடு குடும்பங்கள் திராவிடர் கழக, திராவிடர் முன்னேற்றக் கழகக் குடும்பங்கள்தான். அந்த இளைஞர்கள்தாம் போராட்டக் குழுக்களை உருவாக்கினார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் ஒரு பேரவலம்தான். நெஞ்சு கனக்கும் சோகம்தான். ஆனால் ஈழப் போராட்ட வரலாற்றை அதிலிருந்து மட்டுமே பார்க்க முடியாது.

முடிவுரை:- தமிழ்நாட்டில் அதிகாரத்தைப் பிற மாநிலத்தவர் அதிகம் பெற்றிருந்தால், அதனை எடுத்துரைத்து ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது எந்தவொரு தமிழர் இயக்கத்திற்கும் கடமையேயாகும். ஆனால் அவற்றிற்கெல்லாம் மேலாகத் தென் மாநிலங்களைப் பகையிலேயே வைத்திருக்கும் மத்திய அரசு இருக்கிறது என்பதே உடனடி கவலைக்குரியதாகும். இவ்வளவு பேசிய இந்த ஆவணத்தில், மானுடம், மனித நேயம் என்ற சொற்கள் இடம் பெறவேயில்லை. ஆனால் உலகப் பார்வையோடு தமிழினத்தின் உயர்வைப் பற்றிக் கவலைப்பட்ட, சிந்தித்த ஒரு பேரியக்கத்தைக் கொச்சைப்படுத்தியிருப்பதை வரலாறு மன்னிக்காது.

திராவிடம் என்ற சொல்லால் தமிழ் என்ற முன்னெடுப்புகளையே தடுத்தார்கள் என்று இந்த ஆவணம் சொல்கிறது. பகுத்தறிவாளர் கழகம், சிந்தனையாளர் மன்றம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, தமிழினப் பெண்கள் விடுதலை இயக்கம் இவையெல்லாம் பெரியாரியக்கத்தின் அமைப்புகள்தாம். விடுதலை, குடி அரசு, உண்மை, புரட்சி, இதோ இந்தக் கட்டுரையைத் தாங்கி வரும் கருஞ்சட்டைத் தமிழர் - இவையெல்லாம் அவர்தம் இதழ்களின் பெயர்கள். இதிலெல்லாம் திராவிட என்ற முன்னொட்டு எங்கே இருக்கிறது? தமிழ் நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்ததே அந்த இயக்கத்தின் சாதனையில்லையா? தமிழகம் ஒருபோதும் ‘நாம் தமிழர்’களின் இந்த நன்றிகெட்டதனத்தை ஏற்றுக் கொள்ளாது.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 dumiil tamil 2012-06-19 06:39
ஒவியாக்கள் சீமானை விமர்சிப்பார்கள ்,ஆ.ராசாவை ஆதரிப்பார்கள்.ஆ .ராசாவை ஏன் இவர்களால் எதிர்க்க முடியவில்லை.திம ுகவில் உள்ள குடும்பங்கள் ஆதிக்கத்தை எதிர்த்து வீரமணி வாய் திறக்கவில்லையே.ஏனென்றாக்
திகவில் அன்புராஜிற்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்ட பின்
கலைஞரை எப்படி குறை சொல்ல முடியும்.திராவி டர் கழகமும்,பெரியார ் திராவிடர் கழகமும் ஊழல் உட்பட பல
விவகாரங்களில் யாரை ஆதரிக்கின்றன.ஏன ் அவர்களால் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறு செய்தவர்களை கண்டிக்க முடியவில்லை,நீர ா ரடியாவிடம் பதவிக்காக பேரம் பேசியவர்களை விமர்சித்து எழுத முடியவில்லை.சீம ான் இயக்கத்தின் ஆவணம் இவர்களை இப்படி எழுத வைக்கிறது.
ஏனென்றால் நாளை அதன் தொண்டர்கள் தங்களையும் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சம்
Report to administrator
0 #2 R Chandrasekaran 2012-06-19 20:44
அண்ணா டூமீல் சார்... அவிங்க பேஸ்மெண்ட்ட எங்க தகர்த்துற போறர்ங்கன்னு பயத்தில அப்படி பேசறாங்க...நீங் க ஆயிரம கேள்வி கேட்டா என்னப் பண்றதாம்...?
Report to administrator
0 #3 சிவக்குமார் 2012-06-19 20:45
வரலாற்றுத் தகவல்களுடனும் தர்க்கங்களுடனும ் கூடிய அருமையான கட்டுரை
Report to administrator
0 #4 Dhurairajan Senthilnathan 2012-06-19 22:22
//வரலாறு மன்னிக்காது - தமிழகம் ஏற்காது -ஓவியா //

ஆம் உண்மைதான் திராவிடம் எங்கள் இனத்திற்கு செய்த கொடுமையை இன வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. எங்களை ஏமாற்றியே காலம் தள்ளும் திராவிட திருடர்களை ஒரு போதும் தமிழகம் ஏற்காது.

வரலாற்றையே படைக்கும் சரித்திர புருஷர் கீற்றுக்கும் வரலாற்றை விரல் நுனியில் தெரிந்து
வைத்திருக்கும் கீற்றுவின் கட்டுரையாளருக்க ும் எனது ஒரு பதில்.

திராவிடம் என்பது பெரியார் மட்டுமே என்று நினைத்தால் அது உங்கள் அறிவின்மையையே காட்டுகிறது.
திராவிடம் என்ற சொல்லாடல் பெரியாருக்கு முன்னமே இருக்கின்றது. ஆனால் பெரியார் அதை கையிலேந்தி பயணித்தார் அவளவுதான்.

உலக உயிரியல் ஆராய்ச்சியாளர்க ள் ஒரு சமுதாய இனம் எது என்பதற்கு முக்கியமான வரையறைகளை வைத்து இருக்கின்றனர். அதன் படி ஒரு இனம் என்பது தனக்கென்று ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு பண்பாடு கொண்டிருக்கவேண் டும்.

அப்படி பார்த்தால் திராவிடம் என்ற சொல் நம்மினைத்தை குறிப்பது அல்ல...
இதை முதலில் மேதாவிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

>>>
தமிழ்:- தமிழ் மொழிக்கான விளக்கமே இவர்களின் இன அடிப்படையிலான பாராளும் ஆசையைப் பதிவு செய்கிறது.
>>>
தமிழ் மொழிபெசுகின்ற இனம் தமிழ் இனம்... அந்த தமிழ் இனத்தை தமிழனே ஆளவேண்டும்.
தமிழர் நிலத்தை தமிழர் ஆளுவது உங்கள் பார்வையில் ஆசை என்று சொன்னால் அன்னியர்கள்
ஆள்வது பேராசை அல்லவா ?

>>>>
தமிழியம்:- யார் தமிழர் என்ற கேள்விக்கு தமிழியத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்டவர் என்று ஏற்கனவே பார்த்தோம். இங்கு தமிழியத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் அய்ந்திணை சார்ந்த இயற்கை நெறி என்பதுவே முதலாவதாகச் சுட்டப்படுகிறது . நமக்குத் தெரிந்து தமிழ் இலக்கியங்கள் பேசுகிற அய்ந்திணை நெறி என்பது,
>>>>
பண்டை தமிழனின் பண்புகளை சொல்லுகின்ற தொன்மை நூல்களை வரலாற்று ஆசிரியர்களே கொஞ்சம்
புரட்டுங்கள். தமிழர் நிலத்தின் வகைகள், தமிழர் திணையின் வியாகைகள், தமிழர் ஒழுக்கநெறிகளை சொல்லும் எந்த நூலிலாவது திராவிடம் என்ற ஒரு சொல் இருக்குமா ? அப்படி இல்லை எனும் போது தமிழர் நிலத்தை ஆள இடையில் வந்ததுதானே இந்த திராவிடம் ?

>>>
மனுவியம்:- பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழிலிருந்தும் தமிழியத்திலிருந ்தும் பிரிந்து பல்வேறு மொழிகளாய்ப் பிறப்பு வழி உயர்வு தாழ்வாய் - உடல் வண்ணத்து வழி, உயர்வு தாழ்வாய் - ஒரு குலத்துக்கொரு நீதியாய்த் திரிந்து தமிழர்க்கு மூலப்பகையாய் மூண்டு நிற்கும் கோட்பாடு. இந்த விளக்கத்தின் வழி மனு நீதிதான் சுட்டப்படுகிறது என்றால் அது ஆரியர்கள் தங்களால் அடிமைப்படுத்தப் பட்ட திராவிடர்களை காலந்தோறும் அடிமைப்படுத்தி ஆள மன்னர்களுக்கு வகுத்துத் தந்த சட்ட மறை என்பதே இதுகாறும் திராவிட இயக்கங்களாலும் தமிழியக்கங்களால ும் தனித்தமிழ் இயக்கங்களாலும் இந்த மண்ணில் செய்யப்பட்டு வந்த பரப்புரையாகும்.
>>>

என்ன ஒரு நளினமா தமிழர்கள் மீது குதிரை ஓட்டுறீங்க.... மனுவியம் பற்றி சொல்லுகின்ற பண்டைய தமிழ் நூலில் திராவிடம் என்ற ஒன்றை சொல்லை உங்களால் காட்ட முடியுமா ?. பண்டைய தமிழ் மொழியில் ஆரியர்களின் சமஸ்கிருதம் கலப்பால் திரிந்து போன மொழிகளே கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்பதே வரலாற்று.

இங்கே திராவிடம் எங்கே இருக்கு ?. திராவிட இனத்தின் மொழி என்ன ?. திராவிட இனத்தின் மொழி தெலுங்காக இல்லாதபோது, மலையாளமாக இல்லாதபோது, கன்னடமாக இல்லாதபோது...
தமிழாக மட்டும் எப்படி இருக்கும் ? நீங்கள் திராவிட மிளகாய் அரைக்க தமிழன் தலைதான்
கிடைத்ததா ?

திராவிடம் - இனி எங்கள் தமிழ் மண்ணுக்கு தேவையற்ற வார்த்தை

ஆயிரம் விளக்கௌரை கண்ட எங்கள் தமிழ் பாட்டன் வள்ளுவன் எழுதிய திருக்குறள் போல எங்கள் ஆவணமும் ஆயிரம் விளக்கங்களையும் விமர்சனங்களையும ் தாங்கி இன்று நிற்கின்றது. ஆவணம் வெளிவந்து சரியாக ஒருமாத காலம் முடிந்த நிலையில் ஒரு மாபெரும் கருத்துமோதலை சுமந்து நிற்கின்றது. கருத்துமோதல்கள் கருத்தோடு நிகழ்தால் கூட பொருத்துகொள்ளலா ம் ஆனால் இவர்கள் பெரியார் தடியை தூக்கிக்கொண்டு வந்து நின்று அழிந்து போவாய்... வீழ்துவிடுவாய் என்று அதிகார மிரட்டல்களை வைக்கின்றது.

பெரியாரின் கருத்தியலை சுமந்துநிற்கும் எங்களை
பெரியாரின் கைத்தடியை மட்டுமே சுமந்து நிற்ப்பார்கள் விமர்சிப்பதுதான ் கேலி கூத்து....

ஏறக்குறைய எழுபதாண்டுகாலம் திராவிடம் என்ற முகமூடி சுமந்து கொண்டு சொந்த நிலத்தின் பிள்ளைகளை அடிமைகளை போல் நடத்தி கொண்டு இன்று கூட தமிழர்... நிலம் தமிழர்....

ஏற்று பேசுவதை கூட குற்றம் என கூறும் உங்களை மன்னித்த வரலாற்று சொந்த பிள்ளைகளை மன்னிக்காதா ?
அன்னியர்களுக்கா க அரசியல் உரிமையை கொடுத்து ஏற்று கொண்ட எங்கள் தமிழ்த்தாய்
சொந்தபிள்ளைகளின ் அரசியலை ஏற்று கொள்ளாதா ?

எங்கள் அரசியலை எங்கள் தாய் நிலம் என்று கொள்வதும் வேண்டாம் என்பதும் ஒரு தாயிக்கும் மகனுக்கும் உள்ள பிரச்சனை. இதில் அந்நிய திராவிடர்களின் தலையீட்டை அனுமதியோம்..

எங்கள் தமிழ் தாயின் மடி எங்களை என்று கொள்வதற்கும்... . எங்கள் தமிழ்த்தாயின் வரலாறு எங்களை மன்னிப்பதற்கும் வருத்தபடுகின்ற எங்கள் மீது அன்பு கொண்ட அந்நிய திராவிடர்களே... . திராவிட குள்ளநரிகள் தமிழர் ஆட்டின் மீது கொண்டிருக்கும் அளவற்ற பாசத்தின் அர்த்தத்தினை அறிந்துகொண்டோம்.

திராவிட குள்ளநரிகள் இருக்கவேண்டிய இடம் காடு.... எங்கள் நாடல்ல....

நாங்கள் உங்களை மன்னிக்கிறோம்.. .. இத்தோடு ஓடிவிடுங்கள்...
Report to administrator
0 #5 Kenaiyan 2012-06-20 02:52
திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்பது தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகம் (மராட்டிய மாநிலத்தையும் சிலர் சேர்த்துக்கொள்வ ார்கள்) ஆகிய பகுதிகளை ஒட்டுமொத்தமாக குறிக்கும் சொல். திராவிடர் என்பவர்கள் இந்த நிலப்பரப்பில் வாழும் பார்ப்பனர் அல்லாத மக்கள் என்று சொல்லப்படுகிறது . மேற்கண்ட கூற்று உண்மையெனில், திராவிட அல்லது திராவிடர் கட்சி என்று சொல்லிக்கொள்ளும ் அமைப்பின் உண்மையான இலக்கணம் என்னவாக இருக்க வேண்டும்?. தமிழகம் மட்டுமல்லாது மேற்கண்ட மற்ற மாநிலங்களிலும் அரசியலில் ஈடுபட வேண்டும். தேர்தலில் போட்டியிட்டு தொகுதிகளை வெல்ல வேண்டும். முடிந்தால் மாநில ஆட்சியையும் பிடிக்க வேண்டும். இது தான் இலக்கணம். ஆனால் உண்மையில் நடப்பதென்ன? இந்த திராவிட கட்சிகளுக்கு தமிழ்நாடு தவிர்த்த மற்ற தென்னிந்திய மாநிலங்களில் செல்வாக்கு என்று பார்த்தால் ஒரு புண்ணாக்கும் கிடையாது. தமிழகத்தின் எல்லையை தாண்டினால் இந்த கட்சிகளின் தலைவர்களுக்கு நாய்க்கு இருக்கும் மரியாதை கூட இல்லை. கர்நாடகத்தில் கன்னடர்களும் ஆந்திரத்தில் தெலுங்கர்களும் தங்களை திராவிடர்களாக கருதுவதில்லை. கேரளத்தில் போய் திராவிடம் பேசினால் அடிக்க வந்து விடுவார்கள். மொழி வழி மாநிலங்கள் அமைவதற்கு முன்பே மேற்கண்ட மக்களிடம் மொழி சார்ந்த இன உணர்வே இருந்தது. இப்போதும் அப்படியே. பின் எதற்காக தமிழகத்தில் மட்டும் திராவிட மாய்மாலம்?. மேலும் தமிழ்நாடு என்பது மொழிவாரி அடிப்படையில் அமைந்த மாநிலம். காவிரி பிரச்சினை, ஒகெனக்கல் எல்லை பிரச்சினை, முல்லைப்பெரியாற ு அணை பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, ஈழத்தமிழரின் பேரழிவு ஆகிய எல்லா பிரச்சினைகளும் இந்த திராவிட இயக்கத்தினரின் கொடுப்பினை. சுற்றியுள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களை எட்டி எட்டி உதைப்பதற்கும் ஏளனப்படுத்துவதற ்கும் இந்த திராவிட இயக்கத்தினரின் அறுபது ஆண்டு கால அரசியலே காரணம். “திராவிடம்” , “திராவிடர்”, “சமூக நீதி”, “இட ஒதுக்கீடு”, “பார்ப்பனர் சூழ்ச்சி”, “ஆரியர் ஆதிக்கம்” ஆகிய வார்த்தை ஜாலங்களை வைத்து கடந்த ஐம்பது அறுபது ஆண்டு காலமாக தமிழ் பேசும் மக்களை காட்டியும் கூட்டியும் கொடுத்து அவர்களின் வாழ்வு, வளம் ஆகியவற்றை சூறையாடிய கும்பல் இந்த திராவிட கும்பல். எங்கள் தலையில் இன்னும் எத்தனை காலத்துக்கு மிளகாய் அரைப்பீர்கள்?
Report to administrator
0 #6 நல்லன் குன்றத்தூரில் இருந்து 2012-06-20 02:53
ஒவியா வரைந்த அசீங்கமான கட்டுரை..
Report to administrator
0 #7 Kenaiyan 2012-06-20 02:54
அது சரி! ஓனம் பண்டிகைக்கு தமிழகத்தில் விடுமுறை கொடுக்க இவர்கள் யார்?. தமிழ் நாடு என்பது மொழிவாரி அடிப்படையில் அமைந்த ஒரு மாநிலம். கேரளத்தில் பொங்கல் பண்டிகைக்கு அவர்கள் வாழ்த்து கூட சொல்வதில்லை. அவர்களுக்கு தமிழ் மக்கள் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி யை சொல்லில் வடிக்க முடியாது. மேலும் ஒரே மாநிலத்தில் இரு அறுவடை திருநாள்கள் இருக்க முடியாது. தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்பதால் இந்த திராவிட இயக்கத்தினர் நன்றாக மிளகாய் அரைக்கிறார்கள்.
Report to administrator
0 #8 selvan 2012-06-20 02:54
********

திராவிட குள்ளநரிகள் தமிழர் ஆட்டின் மீது கொண்டிருக்கும் அளவற்ற பாசத்தின் அர்த்தத்தினை அறிந்துகொண்டோம் . திராவிட குள்ளநரிகள் இருக்கவேண்டிய இடம் காடு.... எங்கள் நாடல்ல.... நாங்கள் உங்களை மன்னிக்கிறோம்.. .. இத்தோடு ஓடிவிடுங்கள்..

**************

நல்லா சொன்னீங்க. நான் இன்னும் நாம் தமிழர் ஆவணத்தை படிக்கல. ஆனால் இந்த திராவிட கூத்தாடிங்க மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதறத பாத்தா நல்லா பத்த வச்ச மாதிரி இருக்கு. தமிழ் நாட்ட தமிழன் ஆளனும்நு சொன்னா வானுக்கும் மண்ணுக்குமா குதிக்கறாங்க. :-)

எத்தன நாளைக்கு இந்த "திராவிட" கட்டு கதைய வச்சு பொழப்ப நடத்த உத்தேசம்நு தெரியலே.
Report to administrator
0 #9 Tamizhan 2012-06-20 15:38
ஒவியா மிகவும் அருமையன விலக்கம். ஒவியா தொடர்க உஙகள் பனி...இங்கு குரைப்பவர்கள் பற்றீ கவாலை படவேண்டாம்
Report to administrator
0 #10 murali 2012-06-20 17:34
நீங்கள் என்னதான் கூப்பாடு போட்டாலும் இனிமேல் திராவிடம் என்பது தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது. இளம் தலைமுறையினருக்க ு திராவிடம் அந்நியப் பட்டுவிட்டது. 'தமிழன்' என்ற பதமே தமிழர்களை ஒன்று சேர்க்கும். மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அதனுடன் பயணிப்பதே சாலச் சிறந்தது. இல்லையெனில் காலச் சக்கரத்தில் காணமல் போய்விடுவீர்கள் .
Report to administrator
0 #11 பெரியார் குயில் 2012-06-20 23:18
எல்லாம் சரி உறவுகளே! தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு, தமிழனின் பக்தி பைத்தியத்தை உசுப்பிக்கொண்டு , ”தமிழ் நீஷ பாஷை” என்கிறானே காஞ்சி சங்கராச்சாரி. அவாளுக்கு நாம் தமிழர் ஆவணத்தின் படி தமிழர் என்ற பட்டியலில் வருகிறாளா..? அவாளையும் நாம் தமிழரில் இணைக்க உள்ளீர்களா?

மனுவியம், பார்ப்பான் என்றால் உயர்ந்தோன் எல்லாம் சரி என்றால் பார்ப்பானுக்கு அதாவது தமிழ் நீஷ பாஷை என்கிறானே அவனுக்கு நாம் தமிழரில் உறுப்பினராக தகுதியுண்டா? இல்லையா? (இந்தக் கேள்வியை இரண்டாவது முறையாக கேட்கிறேன் நாம் தமிழர் உறவுகள் பதில் வேண்டும்)

நாம் தமிழரில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அய்யநாதன் தனது பேஸ்புக் இணைப்பி்ல் அய்யநாதன் காசித்தேவர் என பதிந்துள்ளாரே! அவர் தமிழரா? தேவரா? அல்லது தமிழர்தேவரா?

தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ தமிழர் மத்தியில் உள்ள இனக்குழுக்குள் (தேவர், பறையர்,வன்னியர் , பள்ளர், கவுண்டர், செட்டியார் இன்னபிற) இனக்குழு மறுப்பு திருமணம் (அதாவது ஜாதி மறுப்பு திருமணம்) செய்ய நாம் தமிழர் முன்வருமா???

அது நாம் தமிழர் ஆவணத்தில் இடமுள்ளதா? ஏனெனில் புலிகள் தமது ஆட்சி காலத்தில் ஜாதி மறுப்பு திருமணங்களை செய்தனர். மாபெரும் புரட்சி செய்தனர் ஈழமண்ணில்! நீங்கள்தான் பிரபாகரன் மன்னிக்கவும் பெரும்பாகரன் தம்பிகள் ஆயிற்றே! முன்வருவீர்களா? ?

ஜாதி அடையாளத்தோடு வலம்வரும் நாம்தமிழர் பொறுப்பாளர்களுக ்கு ஏதாவது குறைந்தபட்ச நடவடிக்கையாவது செய்வீர்களா?? (எ-கா. அய்யநாதன் காசித்தேவர் பேஸ்புக் கணக்கு).

திராவிடத்தின் நோக்கம் சரியான திசையில் செல்லவில்லை. உண்மை! வியாபாரிகளின் கையில் சிக்கி சீரழிகிறது!

மாற்றாக வந்த நீங்கள் என்ன செய்யப்போகிறீர் கள்! முதலில் சீமான், ரமேஷ், முகேஷ் என்ற வடசொல்லையாவது மாற்றுங்கள் பார்போம்! இதையெல்லாம் மிகச்சாதாரணமாக திராவிடம் கடந்து வந்துள்ளது உறவுகளே!
Report to administrator
0 #12 சம்பூகன் 2012-06-20 23:18
மிக நல்ல கட்டுரை.தமிழன் என்றால் கடைசியில் ஜாதி மட்டுமே எஞ்சி நிற்கும்.தமிழன் ஜாதியை மறக்கவும்,இன்றை க்கு இந்த நாம் தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளவு ம் காரணம் பெரியாரும் திராவிடமுமே.நன் றி என்பது பயன் பெற்றவன் காட்டவேண்டிய பண்பே தவிர பயன் அடைந்தவர் எதிர்பார்ப்பதல் ல என்பது தலைவர் பெரியாரின் பொன்மொழி.ஆகவே,ஜ ாதித்தலைவர்களை வழிகாடிகளாகக் கொண்ட இந்த தமிழர்களின்(?)அ வதூறுகளைப் பொருட்படுத்தவேண ்டியதில்லை.மத்த ிய அரசு கொண்டு வரவுள்ள நுழைவுத்தேர்வுக ்கு எதிராக முதல் குரலை தி.க.தான் எழுப்பியுள்ளது. நாம் தமிழர்களோ அல்லது தமிழ்,தமிழன் என்று பேசும் தமிழ்தேசியங்களோ வாய் திறக்கவே இல்லை.தமிழர்களி ன் வளர்ச்சி மீதான உண்மையான அக்கறை திராவிட இயக்கங்களுக்கே உரியது என்பதற்கு அண்மை உதாரணம் இது.அலட்சியப்பட ுத்திவிட்டு இலக்கை நோக்கி நடப்போம்.
Report to administrator
0 #13 ஷாலி 2012-06-21 15:19
ஐயா, தமிழ் சீமான்களே ! ‘திராவிடர்’ என்ற பதத்தை வைத்து வளச்சு வளச்சு நல்லா பந்து விளையாடியது சரிதான்,

ஆனால் உங்கள் ஆவணம் அந்தணர்,பார்ப்ப ான்,ஆரியன்,பிரா மணருக்கு கொடுக்கின்ற விளக்கத்தப்பற்ற ி (அறநெறியாளன்,ஆய ்வாளன்,இளைஞன்,ச ீரியன்,உயர்ந்தோ ன்,பேரமணன்)
ஓவியா கேட்ட கேள்விக்கு ஒரு பதிலும் உங்களிடம் இல்லையே ஏன்?

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பூணூலிஸ்ட்கள் உட்புகுந்து அதை உருக்குலைத்ததுப ோல் சீமான் இயக்கத்திலும் கோமான்கள்
– உங்க ஆவண பாஷையில் “அறநெறியாளர்கள் ” மடம் கட்டிவிட்டார்களோ?

எம்ஜியார் கட்சி ஆரம்பிக்கும்பொழ ுது அண்ணாயிசத்தை அறிமுகப்படித்தி னார். கம்யூனிசம்,கேப் பிடலிசம்,சோசலிச ம் இம்மூன்றும் சேர்ந்ததே அண்ணாயிசம் என்ற அவியல் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இப்ப உங்க பங்குக்கு திராவிடத்தை வைத்து கம்பெனி ஆரம்பியுங்க!

மலையாளி,கன்னட,தெலுங்கு,ஆந்திரா, ஆணும்,பெண்ணும் தமிழ்நாட்டை ஆளும்போது,பச்சை த்தமிழன் சீமான் ஆசைப்படுவதில் தவறு இல்லே,

பதினாறு வயதினிலே படத்திலே ஒரு பாடல் வரும்,
மஞ்ச குளிச்சு...அள்ள ி முடிச்சு..சப்பா னிக்கு சபலம் பாரடி!
Report to administrator
0 #14 kathir 2012-06-21 15:22
எந்த ஒருதனுக்கும் தமிலர் நு சொல்லி "கொல்ல" அருகதை இல்லை....... இவஙக தமிலர்னு கட்சி பெயரை வைததை மாட்றட்டூம்
Report to administrator
0 #15 selvan 2012-06-21 15:25
******
தமிழன் என்றால் கடைசியில் ஜாதி மட்டுமே எஞ்சி நிற்கும்
******

அது சரி. திராவிடன் என்றால் கடைசியில் தெலுங்கன், மலையாளி மற்றும் கன்னடன் மட்டுமே எஞ்சி நிற்பான். அதானே உங்க எண்ணம்.
Report to administrator
0 #16 முருகேசன் 2012-06-22 13:32
திராவிடதை அழிக்காமல் தமிழ் தேசியம் வளராது....இந்தி யாவை வளர்த்தது....சா திகளை வளர்த்தது திராவிட கருத்தியலே.... தமிழனின் பண்பாட்டை....மொ ழியை.....இன உணர்வை அழித்ததில் பெரும்பங்கு திராவிட தீய சக்திகளையே சேரும்....இவ்வள வு நடந்தும் கருங்காலி கருணாநிதியை ஆதரிக்கும் தி.க்களின் நிலை அயோகியதனமனது... .இவர்களின் தெலுங்கு மொழிப் பற்றே கயவாளி தனங்களுக்கு ஒத்து ஊத காரணம்...விஜயகா ந்தை விமர்சிக்காமல் சீமானின் மீது பாய்வது ஏன்? தெலுங்கனும் தெலுங்கனும் ஒன்று சேர்வார்கள்...த மிழன் ஆளக் கூடாது என்பது தானே இவர்களின் நோக்கம்....பார் பானை சைவ மதமும்....சித்த ர்களும் எதிர்த்து இருகிறார்கள்... .பெரியார் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்...எனின ும் வெளியில் கன்னடன் எனச் சொல்லி வந்தார்....ஏன்? தமிழனை ஏமாற்ற...ராஜாஜி யோடு என்ன உறவு...? அது மொழி...வைணவ உறவு இல்லாமல் வேறு என்ன...? தமிழ்நாட்டை ஆரியன் அளித்ததை விட திராவிட வந்தேறிகள் அழித்ததே அதிகம்....
Report to administrator
-1 #17 viyasan 2012-06-22 13:44
தம்மைத் தமிழராக அடையாளப்படுத்தா த, எவரும் தமிழரல்ல. அது தமிழை நீசபாசையென்ற காஞ்சிக் காமகேடிக்கு மட்டுமல்ல தமிழைக் காட்டுமிராண்டிப ் பாசையென்ற, பிறப்பால் கன்னடராகிய பெரியாருக்கும் பொருந்தும். :-)))

பெரியார் விட்ட பெரும்பிழையைத் தான் பெரியாரின் குயில்களும் மீண்டும் மீண்டும் விடுகிறார்கள் போல் தெரிகிறது. சாதி சண்டைகள் ஒழிக்கப்பட வேண்டியவை, அதில் எந்த தமிழனுக்கும் கருத்து வேறுபாடிருக்க முடியாது. தமிழர்களின் சமூக பொருளாதார வேறுபாடுகளைக் களைவதற்கு முன்னால், தமிழர்களின் நாடும், அதன் பொருளாதார பலமும் தமிழர்களின் கைகளில் இருக்க வேண்டும். சுவரிருந்தால் தான் சித்திரம் கீறலாம். அரசியல், பொருளாதார பலம் தமிழர்களின் கைகளிலிருப்பதை முதலில் உறுதிப்படுத்திய பின்பு சமூக, சாதி வேறுபாடுகளைக் களைய முனைந்திருந்தால ் இன்று தமிழர்களிடம் சாதி வேறுபாடுகளிருந் திருக்காது. பெரியார் திராவிட நாட்டுக்குப் பதிலாக தமிழ்நாட்டுக் கோரிக்கையை முன்னெடுத்து தமிழ்நாட்டைத் தனிநாடாக்கியிரு ந்தால், இன்று தமிழர்கள் யாரின் தயவுக்காகவும், அனுமதிக்காகவும் காத்திருக்காமல் , ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்க லாம், முழுக்கவனத்தையு ம் சாதி வேறுபாடுகளைக் கலையச் செலுத்தியிருக்க லாம், ஆனால் பெரியார் ஒரு முந்திரிக்கொட்ட ை மாதிரி, வீட்டைக் கட்ட முதல், வீட்டுக்காரர்கள ின் வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி ஆளுக்காள் அடிபடச் செய்து விட்டார், அதிலும் அந்த வேளையில் கல்வியிலும், அரசியல், பொருளாதார, பலத்துடனிருந்த தமிழர்களாகத் தம்மை அடையாளப்படுத்தி ய பார்ப்பான்களைத் தமிழர்களின் எதிரிகளாக மாற்றியது மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்று எதிரிகளான கன்னடர்களையும், தமிழர்களை வெறுக்கும் மலையாளிகளையும், விஜயநகர ஆட்சி தொடக்கம் தமிழர்களைச் சுரண்டி உருசி கண்ட தெலுங்கர்களையும ், தமிழர்களின் தலையில் கட்டி, திராவிடன் என்ற பெயரையும் சூட்டிக் காதில் ஒரு பெரிய செவ்வரத்தம் பூவையும் வைத்து விட்டார், அன்றைக்குப் பிடித்தது தான் சனியன். அந்த சனியனை விட்டொழிக்கத் தான் இன்றைக்குச் சீமானின் அருள் தேவைப்படுகிறது.

பெரியாரைப் போல் அவசரப்படாமல், திராவிடச் சனியனை விட்டொழித்த பின்னர் சாதிச்சனியனை நீக்க சீமானும் நாம் தமிழர் கட்சியும் பாடுபடுமென, உலகமெலாம் வாழும் தமிழர்கள் எல்லோரும் நம்புவோம். பிறந்தவுடனேயே, இடவொதுக்கீட்டை எதிர்பார்த்துச் சாதிச்சான்றிதழை குழந்தைக்குப் பால்மணம் மாற முதலே வாங்கி வைத்து, சாதிப்பெயரையும் பள்ளியில் சேர்க்கும் முன்பே சொல்லிக் கொடுக்கும் பழக்கத்தைத் தமிழ்நாட்டில் இன்றும் வைத்துக் கொண்டு, நாம் தமிழர் கட்சி, "ஜாதி மறுப்பு" செய்தாலென்ன, செய்யாது விட்டாலென்ன? அதனால் தான் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, சாதிப்பாகுபாட்ட ை மேலும் வளர்த்து, சாதி ஒழிப்புக்கே மிகுந்த சவாலாக இருக்கிறதாக நாம் தமிழர் கட்சி கருதுகிறது. ஜாதி மறுப்பின் அடையாளமாக, முதலில் பெரியார் குயிலும், பெரியாரின் சீடர்களும் தங்களது சாதிச்சான்றிதழ் களை தீயில் போட்டு விட்டு, சாதியைக் காட்டி எந்தச்சலுகையும் பெறோம் என சபதம் பூணுவார்களா? :-)))
Report to administrator
0 #18 neerodai 2012-06-25 22:13
அண்ணே, வாங்கண்ணே, பார்ப்பான் சொல்ற விசயத்தை அப்படியே சொல்றீங்களே, " நாம் தமிழர் கட்சி, "ஜாதி மறுப்பு" செய்தாலென்ன, செய்யாது விட்டாலென்ன? அதனால் தான் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, சாதிப்பாகுபாட்ட ை மேலும் வளர்த்து, சாதி ஒழிப்புக்கே மிகுந்த சவாலாக இருக்கிறதாக நாம் தமிழர் கட்சி கருதுகிறது. ஜாதி மறுப்பின் அடையாளமாக, முதலில் பெரியார் குயிலும், பெரியாரின் சீடர்களும் தங்களது சாதிச்சான்றிதழ் களை தீயில் போட்டு விட்டு, சாதியைக் காட்டி எந்தச்சலுகையும் பெறோம் என சபதம் பூணுவார்களா? :-)))" இட ஒதுக்கீட்டால் சாதி வளர்கிறதா, அட சமூக நீதியில் அ,ஆ வண்ணா தெரியாத ஆள் எல்லாம் வந்துட்டான்னய்ய ா, வந்துட்டான்னய்ய ா, நாம் தமிழர் அப்படின்னு சொல்லிக்கிட்டு. சாதிச் சான்றிதழ் இல்லைன்னா, வெள்ளாளர் பறையருக்கு தமிழரன்னு பொண்ணு கொடுத்துருவாரு, மறவர் பள்ளருக்கு பொண்ணு கொடுத்துருவாரு, நாம் தமிழர் குறைந்த பட்சம், செத்து போற தமிழருக்கு எல்லாம் ஒரே சுடுகாடுன்னு ஆக்கி காட்டுங்கப்பா, .... இப்பயாவது நீங்க யாருன்னு அடையாளம் காட்டிடீங்க, பரவாயில்லை,போங் கப்பா, போங்க . நல்ல கருத்தாழமிக்க கட்டுரை தந்த ஓவியாவிற்கு வாழ்த்துக்கள் ..நீரோடை
Report to administrator

Add comment


Security code
Refresh