கவிஞர் வரத.ராஜமாணிக்கம் பழனி நகரைச் சார்ந்த வழக்கறிஞர். கடந்த 5 ஆண்டுகாலம் பழனி நகராட்சி தலைவராக இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் பணி ஆற்றியவர். தற்போது சிறுகதை ஆசிரியராக தன் முதல் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார்.

திண்டுக்கல் ஆர். எஸ்.மணி பெருமிதத்துடன் அறிமுகம் செய்துள்ள இந்நூலில் 11 சிறுகதைகள் உள்ளன. தனது தெருவிலும், நகரிலும், கிராமத்திலும் தான் பார்த்த, பழகிய நபர்களை மையமாக வைத்து இந்த சிறுகதைகளை ராஜமாணிக்கம் எழுதியுள்ளதால் எளிமையாக, யதார்த்தமாக உள்ளன.

முஸ்லீம் குடும்பங்களை பற்றி எழுதியுள்ள கதைகள் உணர்வுபூர்வமாக உள்ளன. கவிஞர் கந்தர்வன் நினைவு கதை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற முதல் கதை, தன் தாய் கருவுற்று இருப்பதை எதிர்கொள்ளும், டீக்கடையில் வேலை பார்க்கும் சிறுவனை பொறுப்புள்ள மனிதனாக சித்தரிக்கின்றது. தாய் விவாகரத்து செய்யப்பட்டதால் அரவணைப்பு இல்லாமல் கல்வியை இழக்கும் சிறுமி அஸ்மிதா. காவல்துறையால் தீவிரவாதியாக்கப்பட்டு ஊரைவிட்டு செல்லும் ரஜாக் அத்தா நல்ல சித்தரிப்புகள்.

பாட்டியின் மூலம் சொல்லப்பட்டுள்ள நீளமான கதையில் மயிலா பாட்டியின் சோக வாழ்வு பேரக் குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் உள்ளது.சிறிய, சிறிய கதைகள். சமூகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகள்.

Pin It