கஜா பேரழிவு புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து தவிக்கும் காவிரி டெல்டா மக்களின் துயர் துடைப்புப் பணிகளில் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்கள் ஈடுபட்டனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை,  வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி,

ஆகிய 23 மாவட்டங்களில் நிவாரண நிதியும், நிவாரணப் பொருட்களும் திரட்டப்பட்டன.

18-11-2018 முதல் 29-11-2018 வரை 12 நாட்களுக்கு நிதி, பொருள் சேகரிப்புப் பணி நடைபெற்றன.

நூற்றுக்கணக்கான தோழர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

விநியோகிக்கப்பட்ட பொருட்கள்

அரசி, பருப்பு, உப்பு, பூண்டு, நல்லெண்ணெய், கடலெண்ணய், விளக்கெண்ணெய், தேங்காயெண்ணெய், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, பிஸ்கெட், பால் பொருட்கள், மருந்துகள்,  தின்பண்டம், உடைகள், நாப்கின், தார்பாலின், சோலார் விளக்கு, போர்வை, துண்டு, பாய், கொசுவலை, கொசுவர்த்தி.

வினியோகிக்கப்பட்ட பகுதிகள்:

தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் திரட்டப்பட்ட மேற் கண்ட நிவாரணப் பொருட்கள்,

நாகை மாவட்டம்

வேதாரண்யம் ஒன்றியம் :

தகட்டூர், தெற்குத்தகட்டூர், ஆரியங்காடு, அதியன்காடு, கல்யாண்சேரி

மருதூர் ஒன்றியம் :

ராஜாபுரம் வடக்கு, ராஜாபுரம் தெற்கு

ஆயக்காரன்புலம் ஒன்றியம் :

சேத்தி 1, 2, 3, 4

பழையகரம் எட்டாம் வார்டு

கத்தரிப்புலம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வீடு வாரியாக வினியோகம் செய்யப்பட்டன.

மேலும்,  வீடுகளை இழந்த மக்களுக்கு தார்பாயைக் கொண்டு கூரைகள் அமைத்துக் கொடுக்கும் பணியும் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க நிவாரணப் பொருட்களையும், நிதியையும் வாரி வழங்கிய மக்களுக்கும்

உதவிய சனநாயக, முன்னணி ஆற்றல்களுக்கும் நன்றி!!

செய்தி: புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.

 

Pin It